Samstag, 29. Oktober 2011

இன்னொரு "அலசல்" வீடியோ

"விடுதலை"ப் பு(ளி)லிகள்

( இன்னொரு "அலசல்" வீடியோ )

க்களின் கழுத்தை நெரித்து
நாவைச் சுருக்கிய
புலித் துன்னலர்
துன்பமில்லாக் காலத்தைத்
தூரத் துரத்திய கையோடு,

தேம்பியழுது
பொங்கியெழும் தேசத்தவரை
தேடியழிப்பதும்,
தட்டிப்பறிப்பதும்,
"அன்று" உச்சத்தைத் தாண்டப்
பிள்ளை பிடித்துத்
தேசக்காளிக்கு நரபலியிட்டனரா?

ஓரத்தே மூட்டிய தீயில்
தினம் வேகும்புலத்துத்தேசத்து மனிதர்களுக்கு
தேசத்தின் பெயரால் "மாவீரர் தினப் பஜனை"!
தேசம்,தேசம்,
விடுதலையாச்சு!

ஈழமென்ற கனவின்
நனவாய்"தேசிய-மாவீரர் தினம்"
தெருவெங்கும் "தேசியத் தலைவர்"
உயிருடன் உள்ளார் எனத்தோரணமிடுகிறது!

செத்தவன்,
மண்ணோடு போன பின்னும்
நிணம் புசிக்கும் தந்திரமெனச் சரடுவிடும்
புலத்துப் புலி
கோடம்பாக்கத்துக்
குமரிகளைக் காட்டிக் காசும் பறிக்கிறது.

எந்தப்புரிதலும்
தமிழரை எட்டாத திசைகளைச் செய்து
திரட்டிய நிதியோ
ஒரு சிலரது தேடிய சொத்தாச்சு!

கட்டை விரலை
வெட்டச் சொன்னால்
மறுபேச்சுப் பேசா எகலைவன்போல
மட்டற்ற "தமிழீழ"மயக்கம்
மக்களில் சிலருக்கு.

அற்பர்கள் அழித்தவை
தேசத்து மக்களை
வாழ்வை ,பண்பாட்டை
பொருள் ஆதாரத்தை மட்டுமல்ல
அவர்தம்
ஆன்மாவையும்தான்.

இத்துணை"பொய்மை"இவர் இறைத்திடினும்
எத்துணை"கொலைகள்"இவர் கரஞ்செய்கினும்
இடர் மறந்து "அன்று" இறந்தனர் மக்கள்!

புலத்தில்,
இதயத்தைத் தொலைத்த துன்னலர்
துயரக் கொடூவாள்தாங்கி,
"மாவீரர் பஜனை"ஒலித்தும்,
மக்களின் மனதில்உண்டியில் தூக்கி,
வழிகளில்"தமிழீழ வெடிகளைப்" புதைத்து
பணத்துடன் ஓடப்
பொழுதுகள் பார்த்து...

மீண்டும்,மீண்டும்
பிரபாகரன் "உயிருடன்"
சுகமாய்-சுகமாய் உண்டு
உறங்குவதாக உருவங்கட்ட,
உருண்டவன் தலையும்,
கோத்தபாயக் கோடாரியுமாக
இன்னொரு "அலசல்" வீடியோ
அமெரிக்கப் பாணியில் இங்கே...