Mittwoch, 29. Juni 2011

தீபம் தோலைக்காட்சியில் புலிகளின் கொடியை ...

மாற்றுக் கருத்தாளர்களின் கருத்துக்களில் இருந்து சுயலாபம் Njடும் ............

கருத்தை கருத்தல் வெல்ல முடியாதவர்களின் சர்ந்தர்ப்பவாத அரசியலை தோலுரித்துக் காட்டும் வண்ணம் அண்மையில் எனக்கு நடந்த தாக்குதலை மையாமாக வைத்து ஒரு சில இணயங்கள் தமக்கு வேண்டிய அரசியலை எனது பெயரை பாவித்து செய்கின்றனர். இவ்வாறான அரசியல் போக்கையும் அனாகரீகனமான செய்றபாட்டையும் நான் கண்டிப்பதுடன் அவர்களது செய்திகள் அறிக்கைகள் மீதான மறுப்பறிக்கையை முன்வைக்கின்றேன்.

எனக்கு என்ன நடந்தது என்பதை முதலில் நான் கூறியாகவேண்டும். தீபம் தோலைக்காட்சியில் புலிகளின் கொடியை ஊhவலங்களில் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்தில் கலந்து கொண்ட நான் எதோட்சையாக தேசம் நெற் ஆசிரியரில் ஒருவரும் இலங்கை அரசு சார்பாளருமான கொன்சன்ரைனுக்கு அருகாமையில் அமர்ந்தோன். உண்மையில் அவ்விவாதத்தை அவதானிப்பீர்கள் ஆனால் ஆதில் ஓருவர் இந்தியா சார்புதன்மை கொண்டவரும் மற்றவர் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியவரும் ஒருவர் இலங்கை சார்பு அரசில் கொண்டவரும் நான்காவதாக நான் மாற்றுக்கருத்தை கொன்டவனாகவும் இருந்தோம். இதில் இலங்கை சார்பு தன்மை கொண்டவரின் அருகாமையில் இருந்ததால் நான் இலங்கை சார்பானவன் என்ற பார்வை முட்டாள் தனமானது. அத்தகைய பார்வையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

புலம் பெயர்ந்த காலத்தில் இருந்தே மற்றுக் கருத்துக்காக புலம் பெயர் நாடுகளில் குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருவன் இக்காலத்தில் ஈழபூமி என்ற பத்திரிகையை வெளியிட்டும் அதன் பின் உயிர்ப்பு, தமிழீழ மக்கள் கட்சி,........... இயங்கிவரும் என்னை அரச ஆதரவாளர் என்று தேசம் நெற்றில் 'புலிகளின் வால்கள் நியூமோல்டன் பகுதியில் சண்டித்தனம்' என்ற கட்டுரையில் விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து சிறீலங்கா அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் உரிமைகளுக்குப் பரிகாரம் தேட வேண்டும் என்ற கருத்துப்பட ரி கொன்ஸ்ரன்ரைன்இ எஸ் வாசுதேவன்இ வி சிவலிங்கம்இ என் கங்காதரன்இ ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்இ சஞ்சீவ்ராஜ் (குட்டி) ஆகியோர் மாறிமாறி கலந்து கொள்கிறார்கள். எனக் குறிப்பிட்டதன் மூலம் என்னை இலங்கை அரசு சார்பானவர் என்று கருதப்படுவதை வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வசனத்தை நீக்குமாறு தேசம் நெற்றுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அதையும் அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. கொன்சன்ரைனும் ஜெயபாலனும் தமது அரசியலை எனது பெயரில் திட்டமிட்டு தினிக்கிறார் மாற்றுக் கருத்தாளர்களை சிதைக்கும் முயற்சியாகவே நான் கருதுகின்றேன்.

நட்புடன்
குட்டி

(தயவுசெய்து இதை உங்கள் இணையங்களில் பிரசுரிக்கவும்)

Mittwoch, 19. Januar 2011

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை

ப்போதும் போலவே வானத்து விண்மீன்கள் பொருதுகின்றன, தகர்கின்றன-பிறக்கின்றன.இன்னதிலிருந்து இன்னதுதாம் வருமென எல்லாக்காலத்துக்கும் பொதுவாகக் கூவிச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை.

உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணமும் என்னைப் புரிவதற்குள் எனது காலமே தொலைந்து போகிறது.நீண்ட,உணர்வு சிதைந்த இந்த வாழ்வின் ஏதோவொரு புள்ளியில் நான் ஊசலாடுகிறேன்.




இந்த"நான்"அழிவதிலிருந்து அந்த ஊசலாட்டம் தொடர்ந்து என்னைப் பின் தொடர்கிறது.காலத்தின் பதியத்தில் இத்தகைய அனைத்தும் பிரதிகொண்ட வாழ்வையேதாம் நாம் வாழ்ந்து முடிக்கும்போது,தனித்துவமான"நான்"சிதிலமடைந்து காலிப் பெருங்காய டப்பாவாகவே கிடக்கின்றது.எனினும்,அதற்கும் ஒரு இருப்பைத் தேடி இப்படியும் அநுபவமாவது முடிகிறது ஆயுள்.

"அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா
அடடா மழைடா ஆடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ளே குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு எதாச்சு ஏதேதோ ஆயாச்சு..."

இப்பிடித்தான் இப்போதைய இலக்கியமென்றால் இப்பிடித்தான்,கவிதையென்றால்,கத்தரிக்காய் என்றால்...

புத்தம் புதிய முகங்களாக உலாவரும் சிறுசுகளது முகத்துள் நம்மைப் புதைத்துவிட்டுக் என் "..."பின்னால் கடந்த காலத்தை நோக்கிப் பின் நகர்வதும்,அடிபட்ட நாயாகக் கல்லடி கொடுப்பதற்கே காலத்தில் சில தடைகள் மெல்லப் புதிய உறவுகளாகவும்,சொந்த பந்தங்களாகவும்.

எல்லாந்தொலைந்து,உருச் சிதைந்து மெல்லப் பொசுக்கெனப் போகும் உயிரைப் பிடித்துவைத்திருக்க இன்னும் ஏதோ இருந்துகொண்டே இருக்கு.

"சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம் ..."





பொங்கலிட்டுப் போட்ட கோலமும், புயலடித்து ஓய்ந்த பெரு மழைகாணும்வரையென்றால் உயிர்த்திருப்பதும் எதுவரை?

விரிந்து,இருட்டு வெளியாய் நீண்டுசெல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் "தொலைந்துபோதல்" எந்தக் கோட்பாட்டில் அமிழ்கிறது?

"ஓராமாய் அரும்பிய ஆசையில்
துப்பட்டா செல்விகளது சின்னப் பாதம் கண்டதும்
சிரித்திருக்கும்போது மேரிகளது விழிகளுக்குள்
வந்துபோன கனவுகளில்
நாங்களும் இருந்திருக்கிறோம்"-அன்று!


எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இள நங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது-மேற்காணும் பையப படப்பாடல்கள்.எனது இளைய பருவத்தை தந்தை ஆண்டு காதலரும்புக் கரும்பிட்டான்,தளையனோ எனது முதுமைக்குமுன் கோலமிட்டபடி குமரியைத் துரத்தக் கற்பிக்கிறான்.

"தந்தனத் தந்தனத் தாளஞ்"சொன்ன தந்தைக்கும்,

"அடடா மழைடா அடை மழைடா
அழகா சிரிச்ச புயல் மழைடா..."


என்று முரசுகொட்டும் தனையனுக்கும் நடுவில் சிக்கிய நானோ...

நான் தவிப்போடு இருக்கிறேன்!

எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.

எனது காதலின் மொத்தவடிவவுமே
காமத்தால் கட்டிப்போடப்பட்டது.


இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.


அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.


"மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!"



அடிமைப்பட்டுக் கிடப்பவர் விடுதலைபெறுவதற்குப் போராடித்தான் விடுதலைபெற வேண்டுமென்றால், பிறகு நீ எதற்கு அந்த அடிமையைக் கொல்வதற்கு முனைந்தாய்?


உன் இருப்புக்கு இடுப்புடைய அவன்(ள்) காரணமென்றா?ஞாபகத்தின் கோட்டையில் கொலுவுற்றப் பால்யப்பருவத்துக் கடந்துபோன அநுபங்களைச் சுவைப்பதற்கு ஊர்விட்டுப்பிரிந்த வலியுஞ் சுவை அதிகமாக்க...

இதுவரை,இலங்கையினது போர் வெற்றிக்கும்,அதன் பாரிய அரசியல் வெற்றிக்கும்பின்னால் நிற்கின்ற உண்மைகள் மலைபோன்றவை.

வெட்டவெட்டப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குள் நிகழ்ந்ததும்,நிகழ்தப்படுவதுமான அரசியல்-சமூகச் செயற்பாட்டில் இலங்கை அரசினது கைகள் எங்கெல்லாம் வீழ்ந்திருக்கிறதோ அவையெல்லாம் நம்மிடம் மனித நேயம்-மதப்பிரச்சாரமென்று உலாவந்திருக்கின்றன.

இன்று, இவைகளது அகண்ட கால்கள் "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரை அப்பாவி இளைஞர்களை-யுவதிகளைப் பிடித்துத் தலையில் ஸ்ரீலங்காத்தேசிய எண்ணைவைப்பதுவரை போயிருக்கிறது.


மக்களுக்கு,மக்களுக்கென புனையும் "மாற்றுக் கருத்து"ஜேர்னலிசத்துக்கும் இலங்கைச் சம்பளப்பட்டியலின்படி எமது மக்களை வேவு பார்ப்பதுவரை சமூகச் செயற்பாடு இருக்கிறது.

இப்படியாக எல்லாப் பகுதிகளிலும் கால்களைப் புதைத்த இலங்கையை, வெறுமனவே சிங்கள அரசாக இனங்கண்ட நமது மடமை எல்லையிட்டுக்கொண்டு "துரோகி"சொல்லி மண்டையில் போட்டதைவிட, வேறெதையும் இலங்கைக்கு எதிராகச்செய்ததாகக் கொள்ள முடியுமா?

உருபடியற்ற உணர்வுக்குள் உந்துகிற மனிதர்களாக நாம், ஒவ்வொரு நிலையிலும் அது அப்படியிருக்கவேணுமென்றும்,இது இப்படியிருக்க வேண்டுமென்றும் இரைமீட்கும் சந்தர்ப்பத்தில்,நம் இயலாமையை வெளிப்படுத்தியபோது,அந்நியர்களே நம்மைக் காவுகொண்டு வருவதைத்தானும் உணரவில்லை!



"எல்லாந்தெரிந்தவர்கள்"தமக்குத் தெரிந்தை எழுதிவைத்துக்கொண்டு, வாழ்த்துப்பா பாடுவதற்கு அலைந்த பொழுதுகளைத்தவிர நம்மிடமிருந்து உருப்படியாக எதுவுமே வரவில்லை.

"ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கல் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு"


இவற்றைத் தவிர
நாம் எதையும் கண்டதுமில்லை-பிடித்ததுமில்லை!

உலகத்தின் உண்மை தேடி அலைந்து ஆட்கொண்டதுமென்ற சரித்திரமெல்லாம் நமக்கு இருப்பதான சித்திரம் பொருளோடு சம்பத்தப்பட்டதெனினும்,நாம்,தேசத்துள் சிறகுவிரித்த காலத்துள் பல கற்பிதங்களைத்தவிர வேறு விஷேசமாக எதுவும் இருப்பதாக நான் உணரவில்லை.

வேளைக்கு, எல்லைச் சண்டையில் மண்டை உடைபடும் மனிதர்களைத்தவிர உலகவுய்க்காக உருகுலைந்தவர்களெனும் நாமம் நமது தலைமுறைக்குமுன் இருந்ததாகவும் ஞாபகம் இல்லை!

இப்படியாக எல்லாம் அழிந்து,தடையங்களற்ற கொலைகளாக விரிந்த எமது வாழ்வுப் பள்ளியில், ஒரு கருமையம் இப்பவும் இருந்தே வருகிறது.

அது, உண்மையென ஒப்புவிக்கும் ஏதோவொன்று உண்மையைத் தேடிவதற்கும், புறத்தே ஒதுக்குவதற்கும் இன்னுமொரு வழியைத் திறந்துவிடுவதால் உருக்கொள்ளும் நம்பிக்கை-வாழ்வுக்கான தெரிவாக வினையுறும்.



"நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தரவந்தேன்"


"சித்திரை நிலவுக்குச்
சேர்த்து வைத்த பனித்துளிகளோடு
மினுங்கும் புற்களும் பழுத்த ஆலம் பழங்கண்டு
பதுங்கும் காக்கைகளும் பனிகொட்டும் பொழுதினிலும்
பக்கத்தில் படுத்துறங்கும் பூனையும்
சின்னமடுக் கோயிலது எச்சங்களாகவாது மிஞ்சும்?" என்றேங்கிய பொழுதுகள் பல.


நமது கைகளில் ஏந்திய கனவுகளுக்குத் தாரைவார்த்த அராஜப் புள்ளி, மீள்வதை இனிமேலும் வளரவிடாதவொரு கனவு எங்கும் விருட்ஷமாகட்டும்.நமது எல்லா வலிகளையும்குறித்துச் சிந்திப்பது அனைத்துக்குமான முதற்படியெனில் நாம் தொடுவதற்கும் வானம் அருகிலென்பேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்



Mittwoch, 6. Oktober 2010

அவ்கான் அமெரிக்காவால் வளர்கிறது!

அவ்கான் அமெரிக்காவால் வளர்கிறது!

மெரிக்க-நேட்டோத் துருப்புகள் அவ்கானில் ஜனநாயகத்தைக் கட்டி வளர்க்கிறார்கள்:

இதோ சாட்சி; இந்த வீடியோ அவர்களது சமூக சேவையைச் சொல்கிறது.

அவ்கானிஸ்த்தானில் நேட்டோ சமாதானத்தையும்,பொருளாதார முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகிறது.அது தலிபான் "பயங்கரவாதிகளிடமிருந்து" அவ்கானிஸ்த்தானைக் காத்து வருகிறது.

அந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தையும்,பொருளாதார சுபீட்சத்தையும்,மீள் கட்டுமானத்தையுஞ் செய்வதென்று ஒரே கத்துக்கத்தும் ஜேர்மனி,பிரான்ஸ்சு-அமெரிக்கா இங்கே அம்மணமாகிறது.



1990-2000 ஆண்டுகள்வரை அவ்கானில் 90.000.கெக்டரில் போதைப் பயிர் பயிரடப்பட்டது.

2001 ஆம் ஆண்டு, தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தப் போதைப் பயிர் வெறும் 7500 கெக்டரில்தாம் பயிரிடப்பட்டது.

அனைத்தையும் அழித்து அவ்வகானைப் போதைப் பயிரிலிருந்து அவர்கள்(தலிபான்கள்) காத்தார்களாம்.

அந்த 7500 கெக்டர் பயிரும் அமெரிக்கா காலூன்றிய இடத்திலேயே பயிரடப்பட்டிருக்கு.

நேட்டோ தலிபான்களை மலையடிவாரத்துக்குத் துரத்தியபின் 2004 ஆம் ஆண்டு அப் போதைப் பயிர் செய்கை 131.000.ஹெக்டரில் செய்பட்டும்-2007 ஆண்டு 193.000. ஹெக்டரில் பயிரிடப்பட்டு பெருமளவு உலக மக்களைக் கொல்ல, அமெரிக்கா தனது இராணுவத்துக் கூடாக இவ் வியாபாரத்தைத் தொடர்ந்தது-இன்றும் அமோகமாகத் தொடர்கிறது!

இன்று, இது பல இலட்சம் ஏக்கரில் அமெரிக்க இராணுவத்தால் பயிரடப்படுகிறதாம்.செய்ப்படும் போதைப் பயிர் உஸ்பிஸ்த்தானுக் கூடாக அமெரிக்க இராணுவத்தால்கடத்தப் பட்டு, இருஷ்சியாவை வேட்டையாடுவது எதனால்?எந்த மக்களைத கருவறுக்க? அமெரிக்காவுக்கு இதுவுமொரு ஆயுதம்!கவனிக்கப்பட வேண்டியது இது...

இந்த வீடியோவைப் பாருங்கள்-கேளுங்கள்.இதன் மொழி புரியாதவர்களுக்காக இதை வேறொரு தினத்தில் முழுமையாக மொழிமாற்றிச் சொல்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.10.2010

Dienstag, 5. Oktober 2010

நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

வினவுவில் நிலா:



>> ஸ்ரீ ரங்க, நீ அங்காலையும் பாடுவாய், இங்காலையும் படுவாய், திங்கிற சோத்தில பங்கும் கேட்பாய்.எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கு. இப்போ நாவலன் கை உயர்கிற மாதிரி தெரியுது…. பானையில சோறு இருந்தால்…பூனைகளும் சொந்தம் …பாவம் மக்கள் <<

nila Posted on 05-Oct-10 at 10:29 pm


http://www.vinavu.com/2010/10/02/raya-thesam-inioru/#comment-30768



நிலா என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?;



என் வீட்டு முகவரி தெரியுமா?;



அல்லது என்னோடு எப்பவாவது உரையாடியுள்ளீரா?



அங்கேயும்,இங்கேயும் பாடுவதென்பது நியாயம் எங்கே-அங்கே!



சும்மா இரயாவுக்குக் கொம்பு சீவுவது எனது நோக்கமில்லை!



நான்,எவரையும் சந்தேகம் கொள்கிறேன்.



இரயாவைப் புலியின் இன்போமர் என்று, கடந்த இரு ஆண்டுகள் முன் கூறியவன்.

http://srisagajan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF



அதுபோல் இன்று பலரைக் குறித்துச் சந்தேகம் கொள்கிறேன்.



அதிகார வர்க்கத்தோடிணைந்து புரட்சியைக் காட்டுபவர்கள் எல்லோரும் தம்மைப் "புரட்சி "வாதிகளாகவே காட்டுகின்றார்கள்.



இப்படி ஜேர்மனியில் எத்தனையோ புரட்சிக்காரர்களை-அமைப்பை பார்த்தவன் நான்.



சும்மா வீம்பு பேசமால் நியாயமாகச் சிந்திக்கப் பழகினால் அது தோழமைக்கும்-மக்கள்சார் அரசியலுக்கும் நல்லது.இல்லை "இப்படித்தாம் செய்வேன் "என நீங்கள் முனைந்தால் அது உங்கள் வர்க்க நிலையைப் பொருத்தது.



நான் எப்பவும்"சோத்துக்கு"அலைபவன் இல்லை!



அவ்வளவு போக்கிரியாகப் பணத்துக்குப் பந்தாவுக்கு ஓடுபவன் நான் இல்லை!என்னை உரைத்துப் பார்க்கும்"தகுதி"எவருக்கு இருக்கிறது.முடிந்தால் செய்யுங்கள்!



நான் இரயாகரன் இல்லை!



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

05.10.2010

Mittwoch, 29. September 2010

இலங்கை மாநகரில் ப.வி.ஸ்ரீரங்கனின் எங்கப்பன் குதிருக்குள் இல்லை....

இலங்கைப் பெரு நகர் கண்டிப் பேராதனைப் பல்கலைக் கழக அனுசாரணையுடன்,

பிரபல புல-நில, வலை-அலை,முக நூல் பதிவாளரும்,சர்வதேச-அண்ட அகிலச்சார்"ஆய்வு-ஓய்வாளரும்,தோலரும்,மேல் புலப் வரண்ட வர்ணனையாரும்,பொருள்-ஆதாரத்துக்கான புனைவுப் பெருமகனும்,கல்லாநிதியுமான Prof.Dr.Dr. ப.வி.ஸ்ரீரங்கனின்

"எங்கப்பன் குதிருக்குள் இல்லை"

நூல் பற்றியதும்,அவரது வலை-உலை பற்றியதுமானதுமான அறிவார்ந்த-ஆழ்ந்த கலந்து உரைசெய்து ஊரைக்கெடுத்தேய்கும் வானர வர்ணைனைகளைப் பற்றி ஒரு தெருகூத்து நிகழக் காத்திருக்கிறது.

இடம்: அலரி மாளிகை.

காலம்:01.10.2010

நேரம்:அதிசாமம் 12 மணியிலிருந்து இருளகலும்வரை

ஆர்வமுள்ள அனைத்துப் பெருங்குடிகளையும் அன்புடன் அழைக்கிறார் கோத்தபாய அன்ட மகிந்த இராஜ பக்ஷ

பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்:இந்தியப் பிரதமர் மான் மோகன் சிங்
நன்றியுரைக்காக அமெரிக்க அதிபர் துணைவி மிகேலா ஒபா வருவதெனச் சொல்லப்படுகிறது.

ஏற்புரையை கல்லாநிதி ப.வி.ஸ்ரீரங்கனும் ஏற்று வழங்குவர்.

மறவாது கலந்து சி(...)றுப்பிக்கவும்.

Sonntag, 29. August 2010

நித்தியமெனச் சொல்வதால்

மரணம்தோழனென...

மிக அழகானது.ஏற்றுக்கொள்வதும்,அழகைத் தரிசிப்பதுமாக இருக்கும் இந்த நிலையுள் எதையோ தேடவேண்டுமென நான் அலைகிறேன்.ஒரு பொழுதேனும் அழுதுவிடத் தேவையற்ற வாழ்வின் நிச்சியம் நித்தியத்தோடு நெருங்குகிறது.பொழுது இருண்டும்,விடிந்தும் நாட்களை எண்ணிக்கொள்கிறது!

எத்தனையோ முறைகள் வாழ்வின் திசைநோக்கி நித்தியமெனக்கொள்ளும் இந்த நிலைநோக்கிய நினைவுகள் என்னை வருத்தியிருப்பினும், அதன் உளமார்ந்த உண்மையை மறுத்தொதுக்குவது நிந்திக்கத் தக்கது.நிலவு விறைத்துக்கொண்டு முகில் விலத்தும் தெருவோரம் சருகாகச் செல்லும் எனது உணர்வுள் நிலைத்திருப்பது என்ன?

மௌனித்த தியான வெளியுள் நீந்துகிற எந்தச் சலனமும் அதைத் தொந்தரவு செய்துவிடுமானால் தியான நிலையெனக்கொள்ளும் கணம் பொய்த்துப்போனதெனக்கொள்வதும்,மீளவும், அதை அடைந்துவிட வேண்டுமென முனைதலுமாக நாளிகை செல்வதில் நித்தியம் என்னவென்பதைத் தேடிப்போன நாட்கள் எந்தவொரு நிழலையும் தரிசிக்கவில்லை.



பொழுதுகள் உருண்டு செல்கின்றன.நெஞ்சில் கனத்த நினைவாகத் துரத்தும் மரணம் மகிழ்ந்து குலாவும் நினைவெனப்படருமா?

நெருப்போடு நித்தியமாகும் உடல் விலத்தி எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கென எதுவும் கொள்ளாத திசை நோக்கே இதுவரை எனது துன்பத்தை விலத்தி இருப்புறுத்தும் பொருள்சொல்கிறது. எதற்காகவும்,எதையும் தேடுவதில் என்ன பெரும் பயன்கொள்வினையூக்கப் பயன் நிலைகொள்ளும்?

பொருள்வகைக் காரணந்தாம் வாழ்வதின் ஊக்கமெனக் பகல்வதில் எந்தப் புதருள்ளும் நித்தியமெனச் சுவைக்க வைக்கும் எல்லாத் தேவையும் மரணத்தைக் குறித்து மௌனித்த கணங்களில் தேவதூதன் துணைக்கழைக்கப்படுவது இறுதி இலட்சியமெனப் பூண்டவர்கள் மரணதுக்காகக் காத்திருப்பவர்களை ஏமாற்றுகிறார்கள்!

பொய்யுரைத்து,ஒரு நிழலுலகத்தை நித்தியமெனச் சொல்வதால் மரணமறியா இறுதியாத்திரைக்கான கட்டிலில் தவமிருக்க நான் எப்போதோ பழகிவிட்டேன்.காலமெனக் கருக்கொண்ட இந்தவுலகம் எனக்கு முன்னும்,பின்னும் இருந்துவிடப்போகிறது.நானெனத் தோன்றியவுணர்வில் தென்பட்டதும்-புலப்பட்டதுமான இந்த வெளி என்னை-நானெக்கொள்ளத் தூண்டுவதில் தோற்றுக்கொண்டே வருகிறது.



கனவு கலைகிறதெனக் கனாக்கண்டவொரு இரவில் தூக்கங்கலைத்த அதிசாமப் பொழுதே அழகெனக்கொண்ட மரணத்தை ப் புரியவைத்தெனக்கொண்டபோது, அந்த அழகே புறத்தையொதுக்கி அகத்துள் தவிக்கின்ற நித்தியத்தின்இருப்பைத் தேடிச் செல்கிறது.போராடுவதன் அழகில் புதைந்திருந்த இந்த நித்தியம் நினைவை வருத்தவில்லை!

எனக்காகச் சந்திக்கும் மரணத்தைத் துரத்திவிட்டு தூரவிலத்தும் இந்தவுணர்வு இதுவரை தொலைக்கப்பட்ட-விதைக்கப்பட்ட-விரையமாக்கப்பட்ட எல்லா வினைகளிலும் மரணம் மகத்தானதாக இருப்பு நோக்கும் அழகு போராடுவதெனக்கொண்டேன். அப்படி விலத்திப் போனவர்களை விதந்துருகுவதில் ஒளியைவிட வேகமாக நித்தியத்தின் வினையோடு நெருங்குகிறேன்.

நிழலாக நீண்டுவருதும்,தொடர்ந்து துணையாக இருப்பதும் நீ மட்டுந்தானே?; நினைக்கவே நெஞ்சைக் கனக்க வைக்கும் தேவனும்-நித்தியமும் நீயெனக்கொண்டேன்.நெருப்பில் வெந்துவிடும் ஒரு தூசுக்கும் நிகரற்ற "நான்"நொருங்கி வீழ்கிறது.

நல்லதெனக்கொண்டதும்- நஞ்செனப்படர்வதும்-உணர்வதும், மறந்தொதுக்க விரும்பும் நல்ல நிலையுள் மௌனித்துத் தியான வெளியை நெருங்கும்போது நெஞ்சில் போராட்டம் அழகாய்த் துள்ளி விளையாடுகிறது.

ஓடு,ஓடு!




தூரத்தே துரத்திவரும் துணைவனோடு தள்ளியே நிற்காதேயெனக் கட்டளையிட்ட காலத்துள் கண்ணீரை மட்டும் இனங்காணத் தவிக்காதேயெனச் சொல்லும் இந்த நிமிஷத்தில், என் உலகம் இருண்டுவிடாது ஒளி விரித்துப் பகலெனப் பகரும் உணர்வோடு விடை பெறுதல் எவ்வளவு அழகானதோ அவ்வளவு அழகு நிறைந்தது போராடுவது.

அஃது, மரணத்தைத் துதிப்பதாகச் சொன்ன திசையிலிருந்து உலகை மீளப்படைதாகவும்,அதுள் என்னையும் இருத்துவதாகவும் கனவாக நீளும் நினைவுகள், நெஞ்சுக் கூட்டுக்குள் குஞ்சு பொரிக்கும் நித்தியமும்,தேவனும் போராட்மென்பதாய்... அது,நட்புக்கும்-தோழமைக்கும் உண்மையான தியானத்தைத் தேடித் துரத்தியபடியேதாம் எல்லாவற்றுள்ளும் நெருங்கிப் பார்க்கும் உண்மை நித்தியம், மறுத்தொதுக்கத் தக்கதா?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.08.2010

Sonntag, 1. August 2010

தங்கத் தேரோடும் அழகினிலே...

தங்கத் தேரோடும் சரவணை வீதியிலே ஒரு ராஜாவுந் தவமிருந்தான்...

னக்குள் ஓடுகின்ற காலவோட்டம் எப்போதும்போல வாழ்ந்த காலத்தைத் தவறவிட்ட-தொலைத்த பொழுதிலிருந்து ஊற்றெடுப்பது!நான் தேடுகின்ற திசையெல்லாம், எனது தொலைந்த பதின்மப்பொழுதிலிருந்து இன்றுவரை என்னை உருவாக்கும் ஒரு "உந்துதலோடு"சம்பந்தப்பட்டது.

அதுவொரு சோழகம் வீசும் வருடம்:1978

என்னமாதிரியான காலம்!இளமை ததும்பி ஆயிரம் கனவுகளை விழிகள் முன் நகர்த்தும் எனது அகத்துள், பெண்ணை-பெண்களைச் சுற்றிக் கற்பனைகளை அவிழ்த்துவிட்ட இந்த வருடத்தில், என்னைத் தொலைத்த அவளது அகத்துள் மெல்லத் தேடிய எனது முகத்தை இந்தப் பாடலோடு பொருத்தியிருந்தேன்.
என்மீது,காதலென்று நானே உணர்ந்திருந்த அவளது முகத்தில் ஆயிரம் வர்ண ஜாலத்தைக் கொட்டிப் புரட்டியெடுத்த இந்தச் சோழகக் காற்றில் எட்டு மூலைப் பட்டங்கட்டி அவளது சிரிப்பைச் சுமந்து பறக்கவிட்ட எனது கனவுகளே பட்டத்தின் நூலாகவிரியும் அன்று.

விண்கட்டி, குஞ்சங்கட்டி ஏற்றிய பட்டத்தோடு அவளைச் சுமந்த காலத்தின் ஏதோவொரு வெளியில், எல்லாமே வெற்றித் தாலாட்டாய் என்னைத் தாலாட்டியது.அப்போது இனித்திருந்த பாடல் இன்றும் இனித்தே இருக்கிறது.

"தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தால் ஆஆஆஆ..."

SPB Mani - Thanga Therodum-Ragupathi Ragava Rajaram - eSnips

என்று பாடுகின்ற பாலசுப்பிரமணியம் அவர்களது குரலில் தொலைத்திருந்த எனது முகத்துள் எப்போதும் கனவுகளே குடியிருந்தது.சோழகத்தின் சுழல் வீச்சில் இருப்பிழந்து பறந்துவரும் அவளது முற்றத்து மணலுக்கு முடிச்சு போடவிளைந்த எனது தவிப்பில், தப்பித்துப் போகும் மணலுக்கு இழை தந்தது இந்தப் பாடல்.


கனவுகளையும் அத்தோடு இணைத்து இதயத்தில் காதல்வெறிகொள்ளும் உணர்வுக்கு வடிகாலமைத்த அந்தக் கோடைகாலத்துச் சோழகத்தில்சுவை அதிகமிருந்தது.எல்லா வீடுகளிலும் காதலும், களியாட்டமும் நிலைத்திருந்தது. பெற்றோருக்கு தெரியாத காதலுறவில் பிறந்த குழந்தையையும் கொன்று குளத்திலும் போட்டிருந்தது இந்ததக் காலம்.

அப்போதும்,கிராமத்தின் முருகன் கோவிலில் அதிகமாக உடுக்கை ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.

இதன் ஒலிக்குப் பின்னால் காதலர்களது தோல்வியும்,பெண்ணினிது காதலுக்கான தடைகளும், பேய் துரத்தலுமாக இருந்திருக்கிறது.பொன்னியம்மாள் உடுக்கை அடிக்கு முன்னாள் முருகனுக்கு அபேஷகம் செய்யுந் தருணத்தில் அவரது முகத்தில் ஆயிரம் சூரியப் பிரகாசம் இருந்திருக்கிறது.அதை எவருமே அன்று அறிந்துகொள்ள முனையவில்லை-அல்லது சாதியத் தடிப்பில் அதைக் காணாதிருந்திருப்பார்கள்!எனினும்,நான் அதை உணர்ந்தவன்.

எத்தனையோ காதலர்களது பித்தம் தெளிவித்தவர் அவர்.பேய் பிடித்தவர்களென ஊர் ஒதுக்கியவர்களை,"இல்லை"-இவர்கள் மீளவும் மனிதராவாரெனப் பொன்னி சாத்திரமுரைத்துக் குணமாற்றியவர்.அவரது முருகன் கோவிலுக்குள் நான் பாடல்களோடு உலாவிக் கொள்வேன்.எனது எட்டு மூலைப் பட்டத்தை வானில் ஏற்றி, முருகன் கோவின் மரத்தில் கட்டிவைத்து அந்த வயல் வெளியெல்லாம் ஓடித் திரிவேன்.அப்போதும், இந்தப் பாடல்களது சுவையோடு காதலைப் பகிர்வதற்குப் பெண்களைத் தேடிச் செல்வேன்.அப்படித் தேடியபோது கிடைத்தவளே கவிதாஞ்சலி.

எழுபதுகளின் இறுதிப்பகுதி ,எங்கள் கிராமத்தின் அதியுயர்வான வளர்ச்சியின் காலமென்பது உண்மை!எங்கும் வானொலிப்பெட்டிகளும்,மின்சார விளக்குகளும் ஒலிக்கும்-மினுங்குங் காலம்.மாணவர்கள் அதிகமாகப் பல்கலைக் கழகங்களுக்கு எடுபட்ட காலமும் அதுதாம்.

அந்த வருடத்தில் பல்லாயிரம் ரூபாய்க்கு மிளகாய் காய்த்துக் குலுங்கியது எமது தோட்டத்தில்.எல்லாமும்-எங்கும், மகிழ்வைத் தவிர வேறெந்த மொழியும் எமக்குத் தெரியாது.சோழகக் காற்றில் வானமெங்கும் பட்டங்கள் பறந்திருந்தன.வீண்ணோலம் மயக்கும் பொழுதினில் பாலசுப்பிரமணியம் அவர்களது இந்த மயக்கும் குரல் கிரமத்தின் வாழ்வைக் குதூகலிக்க வைத்தது.
"இது,இளையராசா பாடல்-இது விஸ்வநாதன் பாடல்-இல்லை இது சங்கர் கணேஸ் பாடலென"ப் பையங்களோடு மல்லுக் கட்டுவதிலிருந்து மங்கையரது மௌனப் புன்னகையுள் பொலிந்திருந்த உலகத்தைத் தரிசிக்க முனைந்த காலத்தின் எச்சமாக இருப்பது, இந்தப் பாடலும்,இசையும்-வரியும்.
கிராமத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஏதோவொரு வருகைக்கு இடம் கொடுத்த அத்தியாயமாகவிருந்தது.எங்களது ஊருக்கு கமலகாசனது மீசையையும்,மோட்டார் சையிக்கிள்களை-கார்களை கப்பலில் வேலை செய்த அண்ணன்மார்கள் கொணர்ந்தார்கள். அவர்களே எங்கள் கிராமத்துக்கு முதன் முதலாகத் தொலைக்காட்சிப்பெட்டிகளையும் கொணர்ந்தார்கள்.அவர்கள் கொணர்ந்த பொருட்களோடு நாகரீகத்தையும் கொணர்ந்தார்கள்.காது மூடிய தலைமுடி வளர்ப்பும்,சிகரட்டு ஊதுதலும் அவர்களிடமிருந்துதாம் முதன் முதலாக நிசமாக நாம் உணர்ந்தது.

சினிமாப் பாடல் கேட்கும் உரிமையோடு எமது சினிமா மோகம் அப்போது முடிந்திருந்தது.தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பது முடியாத காரியமாகவே கிடக்க, நாம் பாடல்களுடன் பெண்களது பின்னால் நடைபயிலக் கற்றுக்கொண்டோம்.

சோழகம்,இதற்கு வழிவிட்டு எம்மை அள்ளிச் சென்றது வானுக்கு.நாம் வாழ்ந்திருந்த பொழுதுகளில் சோழகத்தின் சுகமே அதிகம்.அந்தச் சுகத்துக்கு மெட்டமைத்தது இந்தப் பாடல்கள்தாம்.

பதின்ம வயதின் பள்ளி ,காதற் பள்ளியெனக்கொண்டது ஒரு காலம்.அது,மீளத் திரும்பாததில் மேனி வலிக்கும் நோவு அதிகமாகிறது.
நான் இப்பாடலோடு கடந்தகாலத்தை விட்டுத் துரத்துகிறேன்.துரத்திக்கொண்டே இருப்பேன்,எனது காலம் முடியும்வரை.


" தங்கத் தேரோடும் சரவணை வீதியிலே
ஒரு ராஜாவும் தவமிருந்தான்-அவன்
சின்னராசாவாக மலர்ந்திருக்க..."

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
01.08.2010