Dienstag, 19. Februar 2013

இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது!

இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது!


எங்கு பார்த்தாலும் இந்திய-சீனா-மேற்குலக அரசுகளதும்,அதன் உளவு நிறுவனங்களதும் முகவர்கள் செய்யும் அரசியல் நாடகமே இப்போது நிலத்திலும்-புலத்திலும் "விடுதலை, சுதந்திரம், சோசலிசம்-புரட்சி,இன ஐக்கியம்-சமவுரிமை" என்று பேசிக்கொள்கிறது.

இவர்களைக் குறித்து மௌனித்திருப்பதென்பது சமீபகாலமாகப் புலிக்குமுன் மண்டியிட்டதற்கு ஒப்பானது.

அப்பாவி மக்களது இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடிய இந்தக் கேடுகெட்ட அரசியல் இப்போது"இன ஐக்கியம்-ஒருமைப்பாடு,இலங்கைத் தேசியம்"என்று கட்சிகட்டி வகுப்பெடுக்கிறது.இதையும் பலர் 80 களில் இயக்கங்களை நம்பிய விட்டில் பூச்சிகளாய் மீள அண்மித்துப் பறக்கிறார்கள்.ஒவ்வொருவரும் தத் தமது விசுவாச அரசியலில் தமக்குள் ஒன்றிணைகிறனர்.

சதிகாரர்களும்,எதிர்ப் புரட்சிக்காரர்களும் சமுதாயத்தில் எந்தத்  தப்பையையும் செய்யத் தயங்காதவர்கள்.தப்பையே மக்களது நலனாகக் கருத்துக் கட்டி மக்களை ஏமாற்றுபவர்களென்பதற்கு வரலாற்றில் மட்டுமல்ல சமீபத்தில் புலிவழியான எமது "விடுதலை"ப்போராட்டமே நல்ல உதாரணமாகவிருக்கிறது.

இந்தப் போராட்டத்தால் உந்தப் பட்ட பல்வேறு குழுக்கள் தொடர்ந்து தம்மை ஊக்குவித்த அந்நியச் சக்திகளுக்கு லொபிக் குழுவாகவே இருக்க முனைகிறது.இதை அம்பலப்படுத்தி மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்லும்போதோ,அந்தவுண்மைகளையும் தம்மைப்போலவே  மாற்றியமைக்கமுனையும் இந்தத் தமிழ்க் குழுக்களது இயக்கவாத அராஜகமானது, மற்றவர்களது தப்பாகத் தமது கடந்த காலத்தை அவர்களது தோளில் சுமத்திவிட்டுப் புரட்சி பேசுகிறது.

குருதிக்கறைபடிந்த மாபியாக்கள் எப்படித்தான் உண்மைகள்மீது சேறடிப்பினும் அது புஷ்வாணமாகிக்கொண்டே வரும்.ஏனெனில்,நாம் மக்களை அண்மித்த அரசியலோடு நகர்பவர்கள்.மக்களை ,இனியும் அந்நியருக்காகச் சாகவிடுவதைத் தடுப்பவர்கள் ,நாம்.




"நம்மிடம்,புரட்சி-புடலங்காயெல்லாம் " கிடையாது.மக்களைப் பலியிடுவதைத் தடுப்பதைத்தவிர நாம் புரட்சி-போராட்டம்,யுத்தமென்று அவர்களது எதிர்காலத்தை நாசஞ் செய்யும் துரோகத்தனமான அந்நிய நலன்சார் அரசியலை மக்கள்மீது செலுத்தும் இயக்கவாத கயமை எம்மிடம் இல்லை!

எனவே,தொடர்ந்தும் இத்தகைய மாபியாக்களையும் அதன் கபட அரசியலையும் கேள்விக்குள்ளாக்குகிறோம்.

இதைவிட்டுப் புலிகளது அராஜகத்தின்முன் மௌனித்திருந்து அவர்களுக்கு கருத்தியல் வலுவும்,அவர்களது அராஜகத்தையும் வளர்த்துவிட்டதைப்போலவே இப்போதும் இருக்க முனைபவர்கள் நம்மைப்பார்த்து"நாப் பிளக்கப் பொய்யுரைத்து" என்று கூறுகின்றனர்.

இங்கே",எதுபொய்-எதுவுண்மை"என்பதைப் புலிகள்மீது   நாம் வைத்த கருத்துக்கள்-ஆய்வுகளிலிருந்து உரைக்கும்போது அனைத்துமே தெரிந்துவிடும்.

இங்கே பேசப்படுவது நமக்குள் இருக்கும்,இப்போதைய சதிக் குழுவான-இரயாகரன் குழு!இது, ,புலிகளது கடந்தகால ஆட்காட்டிகள்,புரட்சியைச் சிதைத்த புலிகளது கைக்கூலிகளென்பதை அவர்களது இன்றைய அரசியலிலிருந்து புரிய முடியும்.தம்மீது வைக்கப்படும் விமர்சனம் மற்றும் தம்மைப்பார்த்துக் கேட்கப்படும் உண்மைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காது மற்றவர்களையும் தம்மைப்போல் புரட்டுக்காரரென நிறுவ எந்தக்  கீழ்மையான வேலைக்கும் போகத்தக்கவர்கள் இவர்கள்.இதனாற்றாம் இந்தக் குழுவானது முகமூடியோடும்,முகமூடியற்றும் எங்கும் அலைந்து திரிகிறது.இக் குழுவுக்குத் தீனிபோடும் அந்நியச் சக்திகள் நமது மக்களை இன்னும் மொட்டையடிப்பதற்கு நாம் துணைபோக முடியுமா?

இவர்கள் புதிது, புதிதாக ஆரம்பிக்கும் குழுக்களைக் கட்சிகளை சந்தேகிக்காது"மக்கள் நலத்துக்கான"அணித்திரட்சியென நம்பும் முட்டாள்த்தனமே இதுவரை எமைப் புலிவழியாலும்,மற்றைய குழுக்கள்வழியாலும் அழித்து, அடிமையாக்கியதென்பதைப் புரிந்தும் நாம் இவர்களது கபட அரசியலுக்கும் மௌனித்து, வாளாதிருப்பது மேலும் ஒரு அராஜகக் குழவின் கையில் மக்களின் தலைவிதியைத் தாரவார்ப்பதாகவே அமையப்போகிறது.

தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள், எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக, இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.

புலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் “புரட்சிக்கரர்” என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின் மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.இது,அரசியல் மோசடி!எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான “அதிகாரப் போட்டி அரசியலை-புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச் சூழலில்-“எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே" நமது மக்களது வாழ் நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.

இதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங் கடந்து,கண்டங் கடந்து நடந்தேறுகிறது.அங்கே,மாற்றுக் கருத்தாளர்கள் முதல்" புரட்சிக்காரர்கள் " வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்!

இஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது.

கடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன.

இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்”புரட்சி-விடுதலை”குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2013

2:
===========================================
என்னை மீளவும் பெரிய மனுஷனாக்கும் இரயாகரன் குழு!
============================================
அப்பு,இப்படிக் கடந்த காலத்துள் புலிகள்கூட எட்டப்பர் .கொம் மூலம் "வைகைச் சிறியெனக் கட்டுரை போட்டு" என்னைச் சேறடிக்க முனைந்தனர்.

இப்போது, இரயாகரன் குழுவைத்தொடர்ந்து கேள்விக்குட்படுத்தும் எனக்கு,அந்தக் குழுவினது உறுப்பினனும்,எனது ஊரவனான,நான் பார்க்க அரை ரவுசருடன் இயக்கத்தை வேடிக்கை பார்த்தவனுமான ஒருத்தன் நோர்வேயிலிருந்து இப்படியெழுதுகிறான்.





இதுவெல்லாம் எனக்குச் சின்ன விஷயம்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள்,இப்படித்தாம் சோடிக்க வேண்டும்.ஏனெனில்,நீங்கள் எதிர்ப்புரட்சிகரச் சக்திகளென்பதை இப்படி நிரூபிக்கின்றீர்கள்.

நன்றி,இரயாகரன் குழுவே!.

நான்,எப்பவும் நன்றி மறவாதவன் இரயா.

நீங்கள் தந்த சுளகும்-என்னை இரயில் நிலையம்வரை வந்து இரையில் ஏற்றிய இரயாவை-சிறியண்ணனை என்றும் நன்றியோடு எண்ணிக்கொண்டாலும்,அரசியல் ரீதியான உங்கள் தவறான நடாத்தையை நானென்றுமே மன்னிக்கேன்.அது பரந்தபட்ட தமிழ்பேசும் மக்களது தலை விதியையே மாற்றுவது.அதை,எதுக்காகவும்-எவருக்காகவும் காவு கொடுப்பது மனித நாகரீகத்துக்கே கேடானது தோழா!

அது குறித்து இன்னுமின்னும் அதிகமாக  எழுதுவேன்.

ஏனெனில், நாம் மூன்று இலட்சம் மக்களது உயிரோடு விளையாடியவர்கள்.அதன் இரத்தக்கறை உலர்வதற்குள் மீளவும், சதி செய்கிறோமே,அதைத் தட்டிக் கேட்பதென்பது புரட்சியின் முன் நிபந்தனை தோழர்களே!நடத்துவோமா புரட்சி?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.02.2013

Sonntag, 27. Januar 2013

" தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!"

தமிழ்த் தேசியத்தின் கோர முகம் இஃது!

புலிகளால் துரத்தியடித்தல்,வெளியேற்றுதல் தமிழீத்துக்காக.

வட புலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான பரிகாரம் எதுவாக இருக்க வேண்டும்?

புலிவழியாகச் செழித்து வளர்ந்த தமிழ்த் தேசியமானது மிகக்கொடிய பாசிசமாகவுச்சம் பெற்றது 1990 களில்.இதன் தார்ப்பார் சொந்த மண்ணிலிருந்து அப்பாவி முஸ்லீம் மக்களை  அவர்களது வேரோடும்,விழுதோடும் பெயர்த்து தெற்கே வீசியெறிந்து எதிர்காலத்தை அழித்தது,தமிழ்த் தேசியம்.

[  The announcement Liberation Tigers of Tamil Eelam (LTTE - separatist rebels fighting for an independent ethnic Tamil state in the north) made on 29 October 1990: All Muslims in Jaffna Peninsula, which included the capital of the war-hit Northern Province (Jaffna), had 24 hours to leave or face forced expulsion and death.]

இது, நவ மனித நாகரீகத்துக்கே எதிரான மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனம்.நாசிகளுக்கு நிகராகத் தன்னை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் மனிதவதை இது.தமிழ்த் தேசியத்துக்கும் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குமான உறவுப் புள்ளியானது சாரம்சத்துள் இனவழிப்பே!

ஆனால்,தமிழ்த் தேசியமோ சிங்களத் தேசியவாதத்தைவிட மிகவும் கொடியதென்பதற்கு -ஒரு இனத்தை அதனது சொந்த மண்ணிலிருந்து 24 மணி நேரத்துக்குள் குடியெழுப்ப முடியுமென்பதற்கும்-சிங்கள இனவாதமே செய்ய முடியாததை இந்தப் பாசிசப் புலிகள் வழி வளர்ந்து பாசிசமாகவுச்சம் பெற்ற தமிழ்த் தேசியத்தின் கோரமுகமாக இந்த முஸ்லீம் மக்களது அவலம் என்றும் வரலாற்றில் பதியப்படவேண்டும்.


இத்தகைய கொடிய நிகழ்வுக்கான(தமிழ்த் தேசியத்தின்வழி புலிகளால் முல்லீம்களது குடி குலைத்தல்,அழித்தல்,கொலை செய்து அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றித் துரத்தியடித்தல்) சமூகவுளவியலை தமிழ்த் தேசியம் பல் நூறு ஆண்டுகால அநுபவப்பட்ட அதன் சாதியவொடுக்குமுறை பண்பாட்டிலிருந்து பெற்றதென்பதே உண்மையாகும்.



வடபுலத்திலிருந்து  வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள்மீது கணிசமான தமிழ்த் தேசியவாத அநுதாபிகள் அன்று வைத்த பழி சுமத்தல்:" தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!"என்ற உரையாடல்-உணர்வு வழியாகப் புலிப்பாசித்தையும்,தமிழ்த் தேசியத்தின் கோர முகத்தையும் அங்கீகரித்து அதை, வளர விட்டுத் தம்மைத் தாமே அழித்திருப்பினும் இந்தத் தமிழினமானது முஸ்லீம் மக்களிடம் பாரிய மன்னிப்பும் நஷ்ட ஈடும் கட்டியாகவேண்டும்.இது அரசியல்ரீதியான சட்டவாதத்துக்குட்பட்ட பகிரங்கமாக இருக்கவேண்டும்.வரலாற்றில் இது பதியப்பட்ட ஆவணமாக என்றும் நிலைக்க வேண்டும்.

அன்று நாசிகள் செய்த இனவழிப்புக்கு நிகரானது இந்த மக்களைத் துரத்தியடித்து அழித்த புலிகளது பாசிசமாகும்.இது,இன்றைய கங்கேரி விக்டர் ஓர்பானுக்கு நிகரானதுங்கூட.அங்கே, சிந்தி - ரோமா மக்களை அவர்களது குடியிருப்புக்குள் வைத்துக் கொலை செய்து அழித்தெரிக்கும் அவலத்துக்கும்,அந்த வலியை நாம் உணர்வதற்குமான நேரடிச் சாட்சியாக யாழ் முஸ்லீம் இனத்தின் அவலம் வரலாறு பூராகத் தொடரவேண்டுமா?

தமிழ்த் தேசியத்தைப் பேசுபவர்கள்,அதை வைத்து ஆட்சி,அதிகாரத்தைப் பெறும் கட்சிகள்-குழுக்கள்,இவர்களின் பின்னே யாழ்ப்பாணத்தில் பெரு வர்த்தகம் புரிந்து கோடிகோடியாயச் சம்பாதிக்கும் வர்த்தகர்களுட்பட இந்த அவலத்துக்குப் பதிலளிக்கவேண்டும்-நஷ்ட ஈடு கட்டி அவர்களது வாழ்விடங்கள் புனர் நிர்மாணிக்கப்பட்டு அவர்களை வாழ வைக்க வேண்டும்.வடபுலத்தில் மீளக் குடியேறும் முஸ்லீம் மக்களுக்குக் குறிப்பாக இளையவருக்கு அது அவர்களது தாயகமெனும் உணர்வு வரும்வரை வாழ்சூழல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இதற்காக இலங்கை அரசானது தமிழ்த் தேசிய வாதிகள்,கட்சிகள்,தலைவர்கள்,ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் புலித் தலைமைகளுட்பட வடமாகாண வர்த்தகர்கள் மற்றும் தமிழினத்திடமிருந்து நஷ்ட ஈடு பல கோடி அறவிட்டு இந்த மக்களுக்கு வழங்கியாக வேண்டும்.

கூடவே,இவ்வளவு அழிவுக்கும் மூல காரணமான சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையும் அதுசார்ந்த அரசுகளுமென்பதால் இலங்கையை ஆளும் கட்சிகள் தமக்குள் இணைவுகொண்டு ஒரு சட்டம் இயற்றியாக வேண்டும்.அது,சிங்கள,தமிழ்த் தேசியத்தின் கொடியவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இனத்துக்கு அடுத்துவரும் நூற்றாண்டுவரை எந்த இறைவரியும் அறவிடக்கூடாது.

குறிப்பாக அவர்கள் வரிவிலக்களிக்கப்பட்ட இனமாகவே சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.

இதுவே,அவர்களது அழிவுகளுக்கான நீதீயும், அரச நியாயமுமாகும்.

இத்தகைய நிலையை ஏலவே நாசியத்தால் பாதிகப்பட்ட இனங்கள் உலகில் பெற்று வாழ்கின்றனர்.

இலங்கை அரசை இது நோக்கிச் செயற்பட வைக்கும் பாரிய தார்மீகப் போராட்டத்தை இஸ்லாமிய மக்கள் தொடர்வதற்குத் தமிழினம் உறுதுணையாக நின்று, தனது வரலாற்றுத் தப்புக்கான தண்டனையை அவர்களுக்கு நஷ்ட ஈடுகட்டி, உலகில் நாமும் நியாயமானவர்கள்தாமென நிரூபித்தாகவேண்டும்.

இதற்கான அரசியல் ஊக்கத்தை கருத்தியற்றளத்தில் அனைவரும் ஏற்று முன்மொழிவதே முஸ்லீம்களுக்கான உடனடித் தீர்வாகும்!!!

இதைவிட்ட அனைத்தும் ஏமாற்று.அது முற்போக்குச் சக்திகளாற்கூட முன்வைக்கும் நிலையிலும்கூட!

ப.வி.ஸ்ரீரங்கன்
27.01.2013

Samstag, 26. Januar 2013

சபிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் நண்பர்களே?

இலங்கைச் சூழலுக்கும்,முரண்பாட்டுக்குமொப்ப இந்த மாயை வேறுபாடாகிறது.தமிழகத்துக்குச் சினிமா,இலங்கைக்குப் புரட்சி!



"புரட்சி,விடுதலை" குறித்த மாயைகள் தகர்க்கப்படவேண்டும்.



முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் "புரட்சி" வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்"புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்", இதுவரை தொடர்ந்த "தமிழீழ"ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.



இது, சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும்கூடவே புலிகளது போராட்டச் செல்நெறிகளையும் சிறு பிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் மீளவும் இந்திய-மேற்குலக மற்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் முன்னகர்வுக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கும் நிலைக்குள் உள்வாங்கப்பட்டுச் சிதைக்கப்படும் "இயக்கவாத மாயைக்கு" ஒரு முன்னிலைச் சோஷலிசக் கட்சியும்  இப்போது அறிமுகமாகிறது.அதே போலிகள்,புரட்டுவாதிகள் இத்தகையவொரு சூழலைக் கையகப்படுத்தி அதை, ஆதரிப்பதில் தமது கடந்தகாலச் செயற்ப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைப்பதில்புலத்திலும்-நிலத்திலும் வெற்றியீட்டியுள்ளனர்.




இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை,புரட்சி,விடுதலையெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் "புரட்சி"க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும்,மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்."தமிழீழப்" போராட்டத்தின் அதே சுத்துமாத்து,சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.இந்த மாயைக்குள் தள்ளப்படும் சமூக உணர்வானது நமது கடந்த காலத்தையும்,போராட்டத் தோல்விகளையும் அது குறித்த சரியான மதிப்பீடுகளையும் உருவாக்கும் காலத்தை வெருட்டி,மீளவும் இயக்க வாத மதயைக்குள் திணிப்பதில் வெற்றி கொள்ளப்படும் மனிதவாழ்வு-சமூக அசைவியக்கம் நம் மக்களைத் தொடர்ந்தும் சிதைக்கும்.இது,தமிழ்நாட்டுச் சினிமாவுக்கேற்பத் தயாரிக்கப்பட்ட தமிழகத்து மக்களது மனித மாதிரிகளைக்கொண்டிருக்கும்.இத்தகைய வாழ்வு நிலை மனித மனமானது ,எதைக் குறித்தும் அலட்டிக்காதவொரு மாயைக்குட்பட்ட சமுதாயமாக இருத்திவைக்கப்பட்டுத் தொடர்ந்து சிதைக்கப்படும்.


இலங்கைச் சூழலுக்கும்,முரண்பாட்டுக்குமொப்ப இந்த மாயை வேறுபாடாகிறது.தமிழகத்துக்குச் சினிமா,இலங்கைக்குப் புரட்சி!



இத்தகைய "முன்னிலைச் சோசலிசக்கட்சி,புதிய ஜனநாயகப் புரட்சி" மாயைகொண்டு அடிமைப்படுத்தும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இன்றைய புலம் பெயர் குழுக்களது இயக்க வாத மாயையாகும். இதனால், இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.



எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தை அன்று திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில், ஒரு இனவழிப்பு யுத்தத்தின் மூலம் புலிகளது அழிவைத் துரிதப்படுத்தி மக்களை அடிமைகொண்டது முள்ளி வாய்க்காலில்.


இந்த இராணுவத் தீர்வுக்குப்பின்பான வியூகத்துள் முகிழ்க்கப்பட்ட திடீர் மக்கள் எழுச்சிகள்-மாணவர்கள் கலகமெல்லாம் எமது மக்களுக்குள் ஊதிப் பெருக்கப்பட்டு அதே இயக்கவாத மாயையின்வழியாகப் "புரட்சி", முன்னிலைச் சோசலிசக் கட்சி வழியாகக் கூடிவருமெனக் கருத்தாடி, நம்மைத் நாமே காவு கொள்ளும் பாரிய பழியாக விரிந்து மேவுகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுவாகப் பாதித்து, அந்த இனத்தை வேரோடு சாய்த்துவிட முனைவதும்,எதிர்காலத்தில் எமது இனத்தை அரசியல் அங்கவீனர்களாக்குவதற்குமான முன் தயாரிப்பாகவின்று அரசியல் அரங்குக்கு வந்துள்ளது.





இந்த ஆபத்தைப் புரட்சிகரக் கட்சியாக வர்ணித்துப் புலத்து புரட்டு வாதிகள் குறிப்பாக இரயாகரன் குழு, நான் ஏலவே சொன்னதுபோல அபாயகரமான சக்தி-இயக்கவாத அராஜகவாதிகள்.இத்தகைய இயக்கவாதக் கயவர்கள்மக்களைத் தொடர்ந்து மொட்டையடிப்பதில் அவர்களது உரிமையைச் சொல்லியே அந்நியருக்காகச் சாகத் தூண்டுவதை நாம் பார்வையாளர்களாகவிருந்து பார்க்கப்போகிறோமோ அல்லது தடுக்கப் போகிறோமா?



இதை நாம் மிக முக்கியமாக உள்வாங்கி,எமது மக்களின் உரிமைகளுக்கான நியாய வாதங்களைக் கருத்தியல் தளத்தில் விரிவாக ஊன்றியாக வேண்டும்!கடந்தகாலப் போராட்டத்தையும்,அதன் தோல்வியையும்,அந்தத் தோல்விக்கான இயக்கவாத மாயயையும் ஆராயவேண்டும்.



அன்றுமின்றும் சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தத்துக்கு நாம் பல வடிவங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இங்கே,புலிகளதும்,ஏனைய இயக்கக் குழுக்களது இந்திய-அந்நிய அடியாட்ப்படைச் சேவக அரசியல்-போராட்டப்பாதை அதை மிகவும் சாத்தியமாக்கியதென்பதை நாம் அறியாதவரை எமக்கு விமோசனமில்லை.இத்தகைய நிலையிற்றாம்,நமது மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்குமொரு சதி அரசியலும்,புரட்டும் தொடர்ந்து அந்நியச் சக்திகளது கைக்கூலி இயக்ககங்களால்-குழுக்களால் "மக்கள் உரிமை,புரட்சி-விடுதலை" யென நமக்குள் அரங்கேற்றப்படுகிறது.இதிலொன்றுதாம் இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சியும், அதன் புரட்டும்!



இது குறித்த ஆரம்பப் புரிதலுக்குத் தன்னும் நம்மைத் தயார்ப்படுத்தாத சூழலைச் சபிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் நண்பர்களே?




ப.வி.ஸ்ரீரங்கன்

26.01.2013

Sonntag, 13. Januar 2013

ஷரியாவைக் காப்போம்!

>>Prof.Dr. Tariq Ramadan  presents itself as cosmopolitan liked, educated and smart. Young Muslims in Europe suburbs, he is an idol for many intellectuals, it is the flagship Muslim. But in fact, he preaches a regressive Islam.<<

இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.

"இது,ஏன்? "என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, " இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் "இறையச்சம்" செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட "மேன்மை-நியாயம்" என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் டிராக்கோனியின்[draconian] சட்டவரைவின் கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்?" என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்!

எனக்கு இத்திரியாசைவிட பெரும் புலிகளான பாஷான் ரைபியையும்[Dr.Bassam Tibi-      Die islamische Herausforderung. Religion und Politik im Europa des 21. Jahrhunderts. Darmstadt: Primus. 3. Auflage, ISBN 3-534-22034-X Literatur/ Im Schatten Allahs. Der Islam und die Menschenrechte. München: Piper. ISBN 3492222854 ],ராறிக் ராமடானையும்[Prof.Dr. Tariq Ramadan- Radikale Reform: Die Botschaft des Islam für die moderne Welt, Diederichs, ISBN 978-3-424-35000-5  ],நன்றாகவே புரியும்.எனவே,இத்திரியாஸ் கூறும் [ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும் ]கருத்துக் கலவை வடித்தெடுத்த கயமையானது!ஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட    ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்?

யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய புலிகளைப் பாசிசப் புலிகளென்று சொல்லி அதை எதிர்த்து வந்த தமிழ்த் தேசியவினத்துக்குள்ளிருந்த பெரும் பகுதிச் சிந்தனையாளர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

நாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லை!ஆனால்,முற்போக்கு முஸ்லீம் அறிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த "சட்ட" அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்?

2:

திரு.மார்ஸ் அவர்களே,நீங்கள் எனது கருத்துக்களை அழித்துவிடுவதிலுள்ள சூழலைச் [dar asch-schahada ] சொல்வதில் நான் மறுப்பதற்கில்லை.மோடியையும்,குஜராத்தையும் நாம் மறப்பதற்கில்லை-மறுப்பதற்கும் இல்லை.என்றபோதும் ,புரிதலின் அவசியமும்,அதையொட்டிய ஆபத்துக்களைக் குறித்தும் பேசித்தாம் ஆகவேண்டும்.குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் " சிறப்பானது-நேர்மையானதென்பது" இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.

உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லை!இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.

1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as "progressive Islam". ;-) ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கானவொன நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண்ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும்மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறுவிளக்கமளித்துக்காக் முனைவதைச் சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கீழ்வரும் இணைப்பில் ஷரியாவால் எழுத்தப்பட்ட சட்டத்தின் அகோரத்தை இந்த இணைப்பிலுள்ள முகங்களில், அங்கங்களில் வாசித்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!

ப.வி.ஸ்ரீரங்கன்
13.01.2013

http://michael-mannheimer.info/category/scharia/

Freitag, 11. Januar 2013

"இஸ்லாம்-அரேபியர்கள்" எனும் மனித விரோதிகள்.

>> Shariah <<

ஷரியாவின்-அல்லாவின் பெயரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட பெண்ணினது இருப்பை அழிக்கும் சாத்தான்களுக்கு அல்லா ஒரு கேடா?அநியாய வாதிகள்.இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இலாயக்கற்ற அரேபியக் கபோதிகள்-இஸ்லாமியப் பயங்கரவாதிகள்- சல்மான் ருஷ்ட்டியின் மொழியில் சாத்தானின் தூதுவர்கள் இந்த வகை முஸ்லீம்கள்!

ரிசானவென்ற பெண்ணை வைத்துப் புரட்சி-அரசியல் செய்யும் பலருக்குள் நான் இதை எனது அறிதலுக்கும் மானுடப் பெரு நோக்கிலும் வைத்துரைப்பதில் இன்னுஞ் சிலவற்றைச் சொல்வேன்.






இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.

யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!

கொடூவாள்-கழுத்தறுப்பு!

வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!

இஸ்லாத்தின் ஷரியா!

இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபடி, கற்கால நினைவுகளோடும்,அநுபவத்தோடும் இந்த மோசமான அரபு நாடுகள் செய்யும் மனிதவிரோதத் தன்மையிலான கொலைகள்-தண்டனைகள் இந்தவுலகத்துக்கு அச்சத்தைத் தருகிறது.

கடந்த 09.01.2013 அன்று, படுகொலை செய்யப்பட்ட என் தேச மகளது சின்னஞ்சிறு கனவை அரேபிய நாய்களும் அந்த நாய்களது இஸ்லாமிய மத எருமைகளும்,அவர்களது மனித விரோதச் சட்டமான ஷரியாவுஞ் சேர்ந்து, கொடூவாளால் வெட்டிச் சரித்திருக்கிறார்கள்.

இது திறந்த சமுதாயத்துக்கு எதிரானது.






மக்களது இருப்புக்கு அச்சமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பணத் திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளது மதமான இஸ்லாத்தின் அராஜகம் இது.இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் மனிதவிரோதமான கொடுமை இதுவென்பதில் எவருமே முரண்பட முடியாது.

நான்,அரேபியத் தேசத்துள் மேற்குலகஞ் செய்யும் அநியாயத்தை,படுகொலைகளை,ஆளில்லா விமானத்தின் மூலம் அவ்கானிஸ்தான்,பாகிஸ்த்தான்,ஜேமேன் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை,பாலஸ்த்தீனக் குழந்தைகளது மரணத்தையெல்லாம் தாங்க முடியாத வேதனையோடு அது சார்ந்த மாற்றுக் கருத்துக் கட்டுரைகளை முக நூலில் லிங் பண்ணுவது உண்டு.

ஆனால்,எனது தேசத்தின் மகளை வேட்டையாடிய அரேபிய இனவாதச் சகதி முஸ்லீம்களை எப்படிப் புரிவது?

தமிழ்த் "தேசியத்துக்காக" ப் போராடியதெனப் புரியப்பட்ட புலிகளையே பாசிஸ்ட்டுகளெனச் சொல்லி அவர்களது மனித விரோத்துக்கெதிராகக் குரல் கொடுத்து வருபவன் நான்.

யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம்களை வேட்டையாடிய புலிகளை என்றுமே மன்னிக்காதவன் நான்.

அது, போலவேதாம் இந்த ரிசானவின் படுகொலையிலும் நான் இந்த அரேபியர்களை,அவர்களது காட்டுமிராண்டி மதமான இஸ்லாத்தையும் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.உலகத்தில் அனைத்து மதங்களும் வரலாற்றில் மனிதவழிப்பைச் செய்திருக்கிறது.ஆனால், இந்தக் காட்டுமிராண்டி இஸ்லாமானது இந்த நூற்றாண்டிலும் இப்படிக் கொடூவாள் மூலம் ஒரு மனிதரின் கழுத்தை வெட்டிப்போடுமென்றால்- இது,ஏன்-எதற்காக?

இந்தப் படுகொலைக்குப் பின்,நான் அரபுலகத்துள் நடக்கும் கொலைகளையோ அல்லது, அரேபியக் குழந்தைகளது மரணத்தையோ ஒரு பொழுதேனும் மதிக்கப்போவதில்லை!

அரபுத் தேசத்துள் ஐரோப்பியர்கள்,அமெரிக்கர்கள் செய்யும் மனிதவிரோதத்தையும் கண்டுகொள்ளப் போவதுமில்லை.இந்த அரபியவுலகத்து இஸ்லாமியர்கள் வாழ இலாயக்கற்ற மனிதவிரோதிகள்.காட்டமிராண்டிகள்.மனித பெறுமானந்தெரியாத பயங்கரவாதிகள்-மனிதப் புணந் தின்னும் காமகர்கள்.இழி குலத்தோர்-இடிகுலத்தோர்!,மனிதப் பிணந் தின்னிகள்-குருதியருந்தும் தீய குணத்தோர்!!







மனித மகத்துவத்துக்கான திறந்த சமுதாயத்தின் எதிரிகள் இவர்கள்!

கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளனும்,பௌதிகவாதியுமான கார்ல் போப்பரது [Sir Karl Raimund Popper  ]"திறந்த சமூதாயமும் அதன் எதிரிகளும்" The Open Society and Its Enemies எனும் தலை சிறந்த நூலானது இந்த நூற்றாண்டில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளது காட்டுமிராண்டித்தனத்தை உங்வாங்கத் தக்க நூலாகும்.இந்தக் கார்ல் போப்பரே 1935 ஆம் ஆண்டில் மிகப்பெரும் இளஞ் சோசலிஸ்ட்டாகவிருந்து அதைவிட்டே ஓடியவன்.வீன் மாநகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும்,பொலிசுக்கும் ஏற்பட்ட கலகமானது 1935 ஆம் ஆண்டில்  எட்டுப் பொலிசுக்காரர்களைக் கொல்லும் நிலைக்கெட்டியபோது போப்பர் அந்தச் சோசலிச அமைப்பையே விட்டொழித்து விலகியவர்.அவ்வளவு பெரிய மானுட நேசிப்பில் ஒரு பெரும் மக்கள் புரட்சிகரப் போராட்டத்தையே[wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker. In der damals einzigartigen Wiener Atmosphäre begegnete er Menschen wie Ruth Fischer, Hanns Eisler, Paul Lazarsfeld, Oskar Kokoschka, Adolf Loos, Arnold Schönberg und Rudolf Serkin.] நிராகரித்தவர்.மனிதாபிமானம் வர்க்கஞ்சார்ந்ததென வகுப்பெடுப்பதும் அதன்வழி அனைத்து வர்க்கமும் கொலை செய்வதும் எனக்கு உடன்பாடற்றது.இந்தவுலகத்தில் முதலாளிய-ஏகாதிபத்தியங்கள் மட்டும் மக்கள் விரோதிகளல்ல.அனைத்து மதவாதிகளும்தாம் இந்த விரோதக் கூட்டத்துள் இருக்கிறார்கள். உலகுக்கு இதுவொரு புதிய நடவடிக்கை அன்று!

போப்பர் கொலையைக் கண்டித்து அதைவிட்டு வெளியேறிச் சாகும்வரை மார்க்சிய விரோதியாகவே தனது ஆய்வுகளைச் செய்தவர்.இறுதிவரை அவர் மார்க்சியத்தின்மீது வைத்த விவாதத்துக்கு எந்தக்கொம்பனும் பதில் வைத்தே இருக்கவில்லை!

கார்ல் போப்பரைப்போல் ,ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை "முஸ்லீமும்" அந்த மதத்தை விட்டு மனிதராக  வெளியேற வேண்டும்.இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்,மக்கள் விரோதப் பக்கத்தையும் நியாயப்படுத்தும் எந்த மதமும் மக்களுக்குத் தேவையில்லை.இதுவொரு கொடிய மதம்.இஸ்லாம் என்பது மிகப் பெரும் விலங்கு.மனித வளர்ச்சிக்கும்,மனிதப் பெறுமானத்துக்கும் எதிரான இந்த மதம் அரேபிய அணுக்குண்டாகும்.

இதுவரை, அரேபியவுலகத்து மனிதர்களது அழிவுக்காக மனம் வெடித்து வெதும்பிய நான் அது குறித்து இனிக் கவலையுறேன்.மேற்குலகக் கொடியவர்களது குண்டுகளுக்கும்,ஆளில்லா விமானத்துக்கும் பலியாகும் முஸ்லீம் சிறார்களுக்காகக் கண்ணீரே விடேன்.இது,உங்களது ஊழ் வினை.இஸ்லாத்தினதும்,உங்கள் ஷரியாவின் வன் கொடும்மைச் சட்டத்தினதும் அறுவடை.எண்ணை வளத்தைக் கொள்ளையடிக்கும் மேற்குலகத்தவர்கள் உங்களைத் துவசம் செய்வதும்,பூண்டோடழிப்பதும் பொருளாதாரக் காரணம் மட்டுமல்ல!




கவுண்டு போங்கோ-காணமற் துடைக்கப்பட்டு,இவ்வுலகத்தில் இஸ்லாமியச் ஷரிய வன்கொடுமை இல்லாது போகட்டும்.

அதுபோல், அனைத்து மதங்களினதும் கொடுமைகளையும், அவைகளும் அழிந்தே போகட்டும்.

இந்தப் படுகொலைக்குப் பின்னும் எவனொருவன் தன்னை முஸ்லீம் என்கிறானோ(ளோ) அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

உண்மையான மனிதர்கள் கார்ல் போப்பராக இந்த அடிமைத்தனமான இஸ்லாத்தின் பயங்கரவாதத்திலிருந்து வெளியேறியாகவே வேண்டும்.அதைச் செய்யதோர் மனித விரோதிகளே!

இந்துப் பாசிஸ்டுக்களைப்போல்-வற்றிக்கான் மாபியாக்கள் போல் இந்த மெக்கா-மெதினாச் சாபக்கேடுகளும் மனித விரோதிகளே!

கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணினது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

ப.வி.ஸ்ரீரங்கன்
11.01.2013

Donnerstag, 5. April 2012

அடடே,ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலின் ...

அடடே,ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலின் இன்னொரு, டக்ளஸ் ஆகிட்டாரடா!


சா
ர்த்தார்(டான் ரி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளர்) அவர்களே,

எல்லோரும் ஒரு இனமாக எழுவதென்பதை மறுத்துத்தாமே வடக்குக் கிழக்கு மாகாணப்பிரிவு?

பின்பு,என்ன அரசு,புலி பிரித்தாளும் தந்திரமென்கிறீர்கள்?.

கிழக்கின் மீதான வடக்கு யாழ் மேலாதிக்கமோ அல்ல கிழக்கு முஸ்லீம்கள்-சிங்களவர்கள் மீதான கிழக்குத் தமிழரின் மேலாதிக்கமோ இரண்டும், அடிப்படையில் தவறானவை.எனவே,பிரித்தாளும் தந்திரமென்பது இப்போதுதாம் மிக நேர்த்தியாக இயங்குகிறது.இதைத்தாம் ஞானம் வகுப்பெடுக்கிறார்.ஆனால்,யாருக்காக என்பதே கேள்வி?

இலங்கை ஜனாதிபதி மகிந்தா சொல்கிறார்:

"நான் இலங்கையின் அனைத்து மக்களுடைய ஜனாதிபதி.ஒருவரையும் புறக்கணிக்கமாட்டேன்.அனைவருமே இலங்கையின் குடிகள்.நாம் அனைவரும்இலங்கையரே தவிர தமிழர்களோ,சிங்களவர்களோ,முஸ்லீம்களோ அல்ல. மாறாக," இலங்கையாகள்"."


ஞானம் சொல்கிறார்(கவனிக்கவும்: இனிமேல் "அடேய், மச்சான்" போட ஏலாது.அவன் கௌரவ முதலமைச்சர் சந்திர காந்தனது அரசியல் ஆலோசகர்.அரசியற் பலமுடைய அதிகாரத்தோடிருப்பவனை-"அவர்"என விளித்துக்கொண்டு...):




Video streaming by Ustream

"முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்குமாகாண அனைத்து மக்களுக்குமான முதலமைச்சர்,முஸ்லீம்களே அதை ஒப்புக்கொள்வார்கள்."


இங்கே,மகிந்தாவினதும்,ஞானத்தினதும் கோசத்துள் மறைந்திருக்கும் அதிகாரமானது தாம் மையம்.இந்த அதிகாரம் எதிலிருந்து எழுகிறது?

இதுதானே யாழ்ப்பாண மைய வாதத்துக்கும் ஏலவே அடிப்படையானது?

பின்பு,வடக்குக் கிழக்கு இணைவென்பது யாழ்ப்பாணிய மேலாதிக்கமானபோது,கிழக்குக்குள்"முஸ்லீம்கள்"மீது இந்த கிழக்குத் தமிழ் அடையாள மேலாதிக்கம் காலவோட்டத்தில் அழுத்தத்தைதாம் செய்யும்.கிழக்கை வடக்கிலிருந்து பிரிப்புக்குக் கூறும் இந்த அனைத்து மையமான காரணிகளும் அதிகாரத்திலிருந்து எழுவதென்பதில் கிழக்குமாகாண அரச அதிகாரி ஞானம் கவனத்தைக்கொள்ளுவாரெனவும் நம்பிடலாம்.

கிழக்கு மாகாணத்தில் மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் அவரவர் வாழும் பாரம்பரியமான தாயகப் பூமி நிர்வாக ரீதியாகப் பிரிக்கப்பட்டு,அந்தந்த மக்கள் கூட்டமே அதை நிர்வாகிக்கும் மாகணவுரிமை அவசியம்.

எனவே,கிழக்கிலோ அன்றி வடக்கிலோ எம்.ஆர்.ஸ்டாலினது வாதத்துக்கமைய மொழி-மத-சாதி ரீதியாக அவரவர் வாழும் வலயங்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்தச் சாதிகள்,மதங்கள்,மொழிகள் சார்ந்து அவரவர் ஆளுவதே சரி.

யாழ்ப்பாணியச் சைவ வேளாள மேலாதிக்கத்தின் வினை போன்றதே கிழக்குமாகாணத்துக்கு ஒரு தமிழன் முதல்வராவது.இது ஏற்கக் கூடியது அல்ல!அப்பாவி முஸ்லீம்களைத் தொடர்ந்து ஓரங்கட்டும் வடக்குக் கிழக்கு மைய வாதத்தை என்னால் ஏற்க முடியாது.இதை முஸ்லீம்களும் தமக்கான ஆளுமையை-முதலமைச்சரைத் தேடிக்கொண்டு,முஸ்லீம் மாகாணத்தை கிழக்கில் உருவாக்கியே தீரவேண்டும்.இதற்கு இந்தியா-அமெரிக்கா மிக நேர்த்தியாக உதவ முன்வருவார்கள்.

கிழக்கு மாகாண அரச அதிகாரி ஞானத்தின் குரலானது முற்று முழுதாகக் கிழக்கு மைய வாதமாகும்.அஃது, முஸ்லீம்களை ஏமாற்றும்.ஏனெனில்,வடக்குச் சைவ வேள யாழ் மைய வாதமானது ஞானத்தை ஏமாற்றியது.அதுபோல் ஞானத்தின் கிழக்கு மைய வாதம் முஸ்லீம்களுக்குக் " கீல்வாதமாக" மாறும்.ஆகையினால்,முஸ்லீம்களே உங்களை நீங்களே ஆள அநுமதியுங்கள்.

முஸ்லீம் மாகாணம் ஒன்று கிழக்கு மாகாணத்துள் உருவாகவேண்டும்.கிழக்கு மாகணத்தில் கிட்டத்தட்ட 70 வீதமானவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள்.அவர்கள் முஸ்லீம்களாகவும்,சிங்களவர்களுமாக இருப்பதால் கிழக்கு மாகாணத் தமிழ் மேலாதிக்கத்துள் அவர்கள் கட்டுண்டு போவதை ஏற்க முடியாது.

காலவோட்டத்தில் கிழக்கு மேலாதிக்கத்தின் பண்பும் அதே யாழ் மேலாதிகத்தின் பண்பாகவே விரியும்.ஏனெனில்,அதிகாரத்தின் இயல்பே ஆதிக்கத்தைத் தகவமைத்துக்கொண்டு இருப்பைக் காப்பது.எனவே,கிழக்கு மாகாண இனங்கள் யாவருக்கும் ஒரு முதலமைச்சர் என்பது அதே மகிந்தாவின் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதி எனும் அதிகாரத்தின் வடிவமே.

ஆக,அவரவரை அவரவரே ஆ(ள)ட விடவேண்டும் ஞானம்.

கிழக்கையும் "முஸ்லீம்-தமிழ்" மாகாணங்களாகப் பிரித்து விடுங்கோ.அப்போதுதாம்,உங்கள் மேதமையை நம்போன்ற மூடர்கள் அறிந்து பின்தொடர முடியும்!

அங்கே, ஒரு முஸ்லீம் மாகாணம் உருவாகியே தீரவேண்டும். இதுதாம் உங்கள் ஞானத்தினது விருத்திக்குச் சரியானது.

வடக்கையும்-கிழக்கையும் பிரித்த உங்கள் அரசியல் அறிவுக்கு இதுவும் சரியானதாகப்பட வேண்டும்.இல்லையேல் அடிப்படையிலேயே உங்கள் அரசியல் யாருக்கோ உழைப்பதாகவும்,அந்தச் சக்திகளது பிரித்தாளும் தந்திரத்துக்கு நீங்கள் வாய்க்கால் வெட்டும் ஒரு தொண்டாரப் பயல்தாம்.

எதுவெப்படியோ,அமெரிக்காவினதும்,இந்தியாவினதும் நீண்ட காலக் கனவான "வடக்குக் கிழக்கு" இணைவு மறுக்கும் கனவு இப்போது நனவாச்சு!

உங்களைவிட அமெரிக்காவுக்கு இது ரொம்ப மகிழ்ச்சி அன்பரே.

ஏனெனில்,இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் யாவும்,இப்போது நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது.அது இனிமேல் பிரதேசவாரியான உள்ளக முரண்களையும் கூடவே நகர்த்தி இலங்கையில் தேசியவின உருவாக்கத்தையும்,தேசியப் பொருளாதார வளர்ச்சியையும் முளையிலேயே கருக்கி நகரும்.இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் நண்ப!

இதுதாம்,அமெரிக்காவினது பெரு விருப்பு-கூடவே, நம்ம இந்திய வடக்கு ஆதிக்கத்துக்கும் இது மனமுவர்ந்த அரசியலே!!

அன்போடு,
ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.2012

Montag, 2. Januar 2012

என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???

சமீபத்தில் இந்த >> Why this Kolaveri Di << ஆங்கில வார்த்தையூடாகப் பலதரப்பட்ட தொடுப்புகளை எங்கும் காணக் கூடியதாக இருந்தது.முக நூல்வழியாக இந்தத் தொடுப்புகளைக் கண்ணுற்றாலும்,அதைத் தேடிச் செல்ல மனம்வரவில்லை.

இளையவர்கள் ஏதோ ஆர்வக் கோளாறில் ஏதோ பேசிக்கொள்வதாக இருந்துவிட்டேன்.ஆனால்,தமிழ்ச் சினிமாவில்இப்படியொரு பாட்டை தனூஸ் பாடுவதுபோல அமைத்திருப்பதென்றும்,மிகவும் மோசமாகத் தமிழைக் கொலை செய்து பாடல் கட்டப்பட்டிருப்பதென்பதும்,அப்பாடலானது ஒரு மில்லயன் தடவைகளுக்குமேல் கேட்கப் பட்டிருப்பதையும் இன்றுதாம் கண்ணுற்றேன்.

ஏலவே,ரகுமானின் வரவோடு,தமிழ்ப் பாடல்களில் அதிகமாகப் பிறமொழிக் கலப்பும்,அதுசார்ந்து கிளர்ச்சி வெறியூட்டும் இரைச்சல் வகைப்பட்ட ஒலியும் சினிமாவில் புதியதொரு செவிவழி நுகர்வு இசையை உருவாக்கியது.

மெல்லிசைச் சாரலில், நாட்டுப்புறத் தேமாங்கு பாடிய இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து "கொலைப்படாத" தமிழ் வார்த்தைகள் அதிகமாக ரகுமானால் கொல்லப்பட்டு வெறும் இரைச்சலாக செவிகளில் பட்டுத்தெறித்தன- 1990 களில் தமிழின் நிலை இதுவாக உருவாகியபோது,இன்று அதன் பரிணாமம் கொலைவெறிப் பாடலாக நம்மைத் தொடர்ந்து தாக்கி நமது மொழியைக் கொன்றுவிடும் அளவுக்கு வளர்ந்து விருட்ச மாகியுள்ளது!.இது கவனத்துக்குரியது.



கொலைவெறியோடு, புகுந்து விளையாடிய ரகுமான் காலத்தில் இசைப் புயலாவும் போய், நுகர்வுச் சந்தையைக் கைப்பற்றியபோது,அதை முன்னிலைப்படுத்திய சொனி நிறுவனம், அவரை ஓஸ்க்கார் விருதுபெற வைத்துச் சந்தையில் நிரந்தரமானவொரு நுகர்வுப் பொருளாக ரகுமானை மாற்றி வைத்திருக்கும் இன்றைய பொழுதில்தாம், இந்தக் கொலை வெறிப் பாடல்களெல்லாம் இளைஞர்களைப் படாத பாடுபடுத்தியிருக்கவேண்டும்.

இந்தத் திசையில், மக்களது கலையில் அதிகமான பல்வகை உணர்வுகளைத் தகவமைக்கும் நுண்கலை வடிவமானது நிரந்தரமாகவே,மொழியின் வார்த்தைகளைக் கொய்தெறியும் இரைச்சல் ஒலியாக எழுந்து,அதுவே பிரபலமான இசைப் பாணியானது.

இதன் உச்சம் இப்போது தனுஸ்கூட்டணியின் தலைமையில் கொலைவெறிப்பாடல்களாக வந்திருக்கிறது?.

இதை வார்த்தைகொண்டு,கவிஞர்கள் எதிர்த்திருப்பதை நேற்று வாசித்தேன்.தமிழில் மிக அழுத்தமாகத் எழுதத் தெரிந்தவர் கவிஞன் காசி ஆனந்தன்.

அவர்,இத்தகைய பாணியையும்,கவிதை-பாடல் எழுதும் போக்கையும் கண்டித்திருக்கிறார்.அதையும் மீறி ,மிகவும் சிறப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பாடல் வழியாகவே-அவர்களது இசைப்பாணியிலேயே இந்தப் பாடல் நம்மை வந்து சேர்ந்திருக்கிறது.

இது,எடுத்துப்போடும் வார்த்தைகள்-கேள்விகள் தார்மீக அடிப்படையில் ஒரு இனத்தின் மொழிமீதான எதிர்கால இருப்புக் குறித்த பார்வையில், அதிகமாக வரவேற்கத் தக்க நிலைப்பாடுகளை அது முன் வைக்கிறது.இரண்டையும் செய்திருப்பவர்கள் இளைஞர்கள் என்பதே இதன் கவனத்துக்கான முக்கிய புள்ளி.

ஒரு அணி : நிதிவலுவுள்ள தமிழ்நாட்டுத் தமிங்கிலீஸ் நடுத்தரவர்கத்துக் கோடம்பாகத்து இளைஞர்கூட்டம்,

மற்றய அணி : நிதிவலுவற்ற யாழ்ப்பாணத்து இளைஞர் குழாம்,

இதுள்,உலக நடப்பிலுள்ள நுகர்வுச் சந்தையில் பல கோடிகளைக் குவித்துள்ள பாரிய கெடுதி விளைவிக்கக்கூடிய தமிழ் நாட்டுச் சினிமாக் கூட்டத்தின் அதீத வலுவை,எந்தச் சந்தையோ அல்லது நிதிவலுவோ அற்ற யாழ் இளைஞர்களின் பாடல் எதிர்கொள்கிறது!

இந்த யாழ்ப்பாண இளைஞர்களின்பாடலுக்கு, நியாயமான கேள்வியும்,எதிர்காலம் குறித்த ஏக்கமுமே பக்கப்பலமாக இருக்கிறது.இந்த எதிர்ப்புக் குரல், தான் பேசிய மகிழும் மொழியின் நிலைக்காக பலமான வேண்டுதலொடு நம்மை அண்மிக்கிறது.நம்மை அழுதுவிடுமளவுக்குத் தாக்குகிறது-நியாயமாகக் கேள்வி கேட்டு உருகுகிறது.நாமும் உருகிப் போகிறோம்.அந்த மிருக வலுவுள்ள கோடம் பாகத்தை அவ்வளவு இலகுவில் வீழ்த்திவிட முடியுமா?அல்லது, மாற்றிவிட முடியுமா?சிறுதுளி பெரு வெள்ளமாகணும்-யாழ்ப்பாண இளைஞர்கள் முளை போட்டிருக்கிறார்கள்.அதுபோல் பல முளைகள் போடப்பட்டு அவை விருட்சமாகினால்மட்டுமேதாம் இந்தச் சினிமாத்தனமான அழிவுச் சந்தையைத் தோற்கடிக்க முடியும்.

தாய்மொழியென, நமது நினைவிலி மனதில் பதிந்த தமிழ் நமது இருப்பையும்,வாழ்வையும்,அதுசார்ந்த பண்பாட்டையும் நமக்கு உணர்த்தும் ஊடகமும்தாம்.அதுள் பல்வேறு பிற்போக்கு-முற்போக்குத்தனங்கள் எல்லா மொழிகழுக்குமுரியதைப்போல் உண்டுதாம்.என்றபோதும்,தத்தமது தாய்மொழி குறித்த எதிர்கால அவா,அதன் இருப்பு-நிலைப்பு,வளர்ச்சி குறித்த எண்ணத்துக்கொப்ப எதிர்காலக் கனவைக்கொண்டிருக்கும்.

அந்தக் கனவுமீது, தொடர்ந்து சினிமாத்தனத்தாலும்,வர்த்தக நோக்காலும் தமிழ் இனத்தின் இருப்பையே அசைக்கும் இந்த விபரீத இசையையும்-சினிமாவையும் விமரிசனத்துக்குட்படுத்துவதும்,அத்தகைய சினிமாவை நிராகரித்தும், மாற்றுச் சினிமாவின் அவசியமும் உணரப்பட இந்த யாழ்ப்பாண இளைஞர்களின் முயற்சி ஏதுவாக இருக்கின்றது.

தமிழினத்தைப் பல முனைகளில் தாக்கும் வார்த்தகவுலகமானது தொடர்ந்து,தமிழினத்தின் அரசியலையும்,அதன் பாண்பாட்டு வடிவங்களையும் பல்வேறு ஆயுதங்களைக்கொண்டு தாக்கி அழித்துவருகிறது. அதுள்,இந்த ரகுமான் பாணி சினிமா இசைப்பாணியும், அதுசார்ந்தெழுதும் பாடல்களும் ஒருவித நச்சு ஆயுதமாகும்.

இந்த நச்சு ஆயுதத்தை எதிர்க்கும் யாழ்ப்பாண இளைஞர்களது கனவு பலிக்க வாழ்த்திக்கொள்வதென்பது,நமது ரசனையை நாம் திறம்பட அகலிக்க வேண்டுமென்பதும்,அந்த அகலிப்புள் இந்த நச்சு ரசனைக்கு மாற்றான நமது மண்சார்ந்தும்-நவீனப் புதுமை சார்ந்தும் மொழியைக் கொலை செய்யாத பாடல்களை உருவாக்கி இரசிப்பதற்கு மாற்றுச் சினிமாவை வளர்த்தாகவேண்டும்.

இதைவிட வேறு வழி இருக்க்க முடியுமா?

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2012



என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா ???

எழுத்து, இசை : எஸ்.ஜே.ஸ்ரலின்.


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா...

கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா...
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா...


செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்...

கம்பனின் வரிகள்...
வள்ளுவன் குறள்கள்...
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு...
பழமை பாடும்...
தமிழர் பெருமை எங்கே?


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா...? - தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா


யேசுஇ புத்தன்இ
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு -- தினம்

தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!

தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு


தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்...
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்...

பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல -- அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல


என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா - தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா - தமிழா

யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா - தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா. ''