Mittwoch, 4. Dezember 2013

“புரட்சி,விடுதலை” குறித்த ,மாயைகள் தகர்க்கப்படவேண்டும்!!!

முன்னிலைச் சோசலிசக் கட்சியின் "முன்னணி " உறுப்பினர் பழ ரிச்சாட்டின் உரையாடல்கள் மூலம்  சில மாதங்களுக்குமுன் புலம் பெயர்"புரட்சிக் காரர்கள்" தமக்குத் தோதானவொரு சாதகமான சூழலைப் புலத்தில் பதியம்போட்டனர்.அதற்காகப் பழ ரிச்சாட்டைப் பயன்படுத்தி முன்னிலைச் சோசலிசக் கட்சியுடனான  தமது கூட்டுக்குப் பற்பல விளக்கம் கொடுத்தனர். அப்போதெல்லாம்  பழ ரிச்சார்ட்   இலங்கையில் "பெரும்  புரட்சிகரமான"  இளைஞர் என்ற பாணியுள்  வைத்துத் தமக்கான அரசியலைப் "புலத்துப் புரட்டுப் புரட்சி"க் காரர்கள் தகவமைத்தனர்.

இதைப் பல கட்டுரையில் நாம் ஏலவே  விளக்கி எழுதியிருக்கின்றோம்.சமீபத்தில்  முன்னிலைச் சோசலிசக் கட்சியிலிருந்து பழ ரிச்சார்ட் பகிரங்கமான விமர்சனத்தோடு விலகியது அறியக் கிடக்கிறது ,அவரது அறிக்கைகளென.

பலதரப்பட்ட குழறுபடிகளுக்குள் சிக்க வைக்கப்பட்ட  இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியலானது மீளவும் ,இலங்கை -இந்திய நலன்களுக்கான அரசியல் -அணிக் கட்டல்களுக்கொப்பவே பலதும் பத்துமாகப் பிளவுகள்-பிணைப்புகளெனவொரு தீங்கான அரசியற் சூழலை எமக்காக்கிய வரலாறு தமிழ் ஆயுத -  இயக்க மாபியாக்களது வருகையோடும்-இருப்போடும் சாத்தியமாச்சு!




இனியென்ன?

முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியற் சூத்திரத்தைப் பக்கம் பக்கமாக நாம் எழுதியிருப்பதால் அதன் மீது குற்றம் சுமத்தி வெளியேறிய பழ ரிச்சார்ட்டின் கூற்றுக்கள் குறித்து பெரிதான எந்த முரண்பாடுகளும் எழுவில்லை!ஏனெனில் ,அதுதாம் உண்மையானது.முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியல் வருகையுள் இதை  ஏலவே இனங் கண்டவர்கள் நாம்.

ஆனால் ,வழைமயாகப் புலத்துப் "புரட்சி மாபியாக்கள்"தம்மால் தோழரெனத் தோளிற் தூக்கிவைத்துக் கொண்டாடிய ஒரு சில மாதங்களிலேயே பழ ரிச்சார்ட்டைத் தூற்றுவதில் "முன்னிலைச் சோசலிசக் கட்சியின்  அரசியலை நியாயப்படுத்துவதென்பது" அக் கட்சியின் எசமானர்களது நலனைக் குறித்து இயங்குவதென்றே பொருள்.

இத்தகைய நடாத்தையிற்றாம் ஆயுதக் குழக்கள் இந்திய இராணுவத்தோடு கப்பலேறி, இந்தியாவில் பதுங்கியதும் பின் முள்ளி வாய்க் கால் அழிப்புக்குடந்தையான கையோடு இந்தியாவின் நலனைப் புறந் தள்ளாத அரசியலை வகுப்பெடுப்பதெனவும் ஒரு அரசியலை  நமக்குள் பரப்பும்போது, அதே திசையில் இந்திய -இலங்கை ஆளும் வர்க்கங்களால் தகவமைக்கப்படும் "புட்சி-புரட்சிகரக் கட்சி" யாவும் ஒரே திசையில் வெவ்வேறு தரப்பை உள்வாங்கிச் சிதைப்பதில் உச்சம் பெற்ற காலந்தாம் இது!

இதற்குத்  தோதாக்  கலையரசன்கள்- இரயாகரன்கள்  தமக்கான  கரச் சேவையாக எவரையும் அநுமதிக்காத "புரட்டு மாபியாக்களாகவே" புலத்தில் "அரசியல்  புரட்டுப் புரட்சி"ப் படங்களைக் காட்டுகின்றனர்.

இதுள் ,வேடிக்கை என்னவென்றால் கலையரசனோ முள்ளிவாய்க்கால் முடிவுவரை இலங்கைப் பிரச்சனை குறித்து ஒரு துரும்பைக்கூட எழுத முடியாத  பெருஞ் சந்தர்ப்பவாதியும் , போலிப் புனைவுக் காரனுமாய் இருந்தார்.

இப்போது புலியழிவுக்குப் பின்  "புரட்டுப் புரட்சி"பேசுவதுதாம் நமது காலத்தின் அதிக நகைச் சுவை!

இதைக் கடந்து போனோமானால் சில வற்றை இப்படிப் புரிந்தே தீரவேண்டும்:




முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் “புரட்சி” வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்”புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்”, இதுவரை தொடர்ந்த “தமிழீழ”ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.

இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை, புரட்சி, விடுதலை யெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் “புரட்சி”க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும், மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்.

”தமிழீழப்” போராட்டத்தின் அதே சுத்துமாத்து, சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.


எனவே “புரட்சி,விடுதலை” குறித்த மாயைகளை" அகற்நவேண்டிய பணியே இப்போது பிரதான பணியாகும்-நாம்  அந்நிய ஆர்வங்களுக்காக இந்த மாபியாக்கள் போடும் சதிப் புரட்சி வலையுள் மாட்டப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது உயிரை அவர்கள் மாய்துக்கொண்டே இருப்பர்!

இக் காலமானது ஒடுக்குமுறையாளர்களது நலனுக்கான அரசியலாகவும்-போராட்டங்களாகவும்-புரட்சிகர முன்னெடுப்பாகவும்"ஆளும் வர்க்கங்களது அடியாட் படைகளே கட்சி-குழுக்கள்-அமைப்புகளை"அமைத்து வைத்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துவகை அரசியற் பரிணாமத்துள்ளும் புகுந்து விளையாடுகின்றனர்.

இவர்களை நம்பிச் செல்லும் இளைஞர்கள்  தொடர்ந்து பழரிச்சார்ட்டைப் போல் பழி வாங்கப்படுவினர்.

பழ ரிச்சார்ட்டின்  இன்றைய தெரிவுகூட ஆளும் வர்க்கத்தின் நிகழ்சிக்குட்பட்ட  அரசியல் தெரிவாகவே சமூகத்தில் பொது அரசியல் பின்னப்பட்டுள்ளது.

எனவே-

அந்நியச் சக்திகளுக்கு-அவர்களது நலனுக்காகத் தெரிவாக்கப்படும் எந்த அரசியல் முன்னெடுப்பும் மக்களுக்கானதல்ல!

பெரும் பகுதி மக்களை வேட்டையாடும் இந்த சூழலில் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு ஒடுக்கப்படுவதை அடுத்த பல ஆண்டுகளுக்கு  எவராலும் -ஏன் அந்த மக்களாலேயே முடியாத காரியமாகவிருக்கும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
04.12.2013

Sonntag, 21. April 2013

டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள்...

திரு. மனோக் கணேசன்மீதான தாக்குதலைக் கண்டிப்பதென்பது...


லங்கையானது சட்டத்துக்குட்பட்ட ஆட்சியை முற்று முழுதாக இழக்கும் அபாயத்தைக் கட்டியங் கூறும்  தாக்குதல்கள் ,சனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதன் தொடரில் பலதரப்பாக நடாத்தப்படுகிறது.பத்திரிகைகள்-மாற்று எண்ணங்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் உரிமைக்கான குரல்கள் மீதான தாக்குதலாக விரிகிறது, இது.

சமீபத்தில் உதயன் பத்திரிகைமீதான தாக்குதலுக்கு விளக்கமளித்த டக்ளஸ் தேவாந்த "உதயன் பத்திரிகைக் காரர்கள் அகதி அந்தஸ்துக் கோருவதற்காக இத்தகைய தாக்குதலைத் தாமே நடாத்துகின்றனர்"என்றார்.ஆக, இலங்கையிலிருந்து சனநாயகத்துக்கான குரல்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டியவொரு நிலையில் இருப்பதையும் ,அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதையும் அவர் ,குறிப்பாலுணர்த்துவதுவரை டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள் பலியாவதும் நடக்கவே போகிறது!


அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களுக்கான "மக்கள் மன்றங்கள்-அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் மீதான இத்தகைய தாக்குதலைக் கண்டிப்பதென்பது இலங்கை அரசின் இராணுவவாதத்துக்கெதிரானதென்பதைவிட ,மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்துள் மனோக் கணேசன் போன்றவர்களை இல்லாதாக்கும் முயற்சிக்கு எதிரானதென்று நாம் அறை கூவுவோம்!..




இலங்கையின் இன்றைய போக்கு மிகவும் வன்மம் நிறைந்தது.சட்டரீதியான அரசென்பது சட்டரீதியான  குடும்பச் சர்வதிகாரமாகவும், அதைத் தூக்கி நிறுத்தும் இராணுவக்  காட்டுத்  தார்ப்பாருமாச்சு.இது ,பாகிஸ்த்தானில் முஷ்ரப் போன்றே மகிந்தாவையும்-சீனாவினது தயவில் இயங்க அனுமதித்திருப்பினும் -இலங்கை அரசானது பெரும் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதென்பது  தமிழ்பேசும் மக்களைத் தோற்கடித்த பெருமிதத்தின் ஆட்சியாக இருப்பதால் -அது பலதரப்பட்ட முறையில் மக்களுக்கெதிரான திசையில் சட்டத்துக்குப் புறம்பானவொரு சர்வதிகாரியின் ஆட்சியாக முன்னேறுகிறது.

இஃது,படுமோசமான அரசியல் பின் விளைவுகளை மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தும்போது இலங்கையானது இராணுவச் சர்வதிகாரத் தலைமைக்குள் வீழ்ந்தே போயிருக்கும்.இத்தகைய இலங்கைக்கு வெளியிலிருந்து இந்தச் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து சட்டரீதியான ஆட்சியையும்,மக்களுக்கான அரசியல் கட்சிகளையும்,தலைமைகளையும் மீள, இயங்க வைப்பது மிக அவசியமானது.ஆனால்,இன்றைய உலகவொழுங்கில் இது, இல்லாதவொரு அரசியல் வெளியையே தாராளமயப் பொருளாதார வினை ஏற்படுத்தியுள்ளது.இங்கேதாம் பெரும்  தொழிற் சங்க வலுவுடைய தலைவர்கள் கூடத் தாக்கப்படுவதும்,அரசியலிலிருந்து தொலைத்துக் கட்டப்படுவதும் நடக்கிறது!

நாளை ,இதன் முனைப்பு,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்வரை பாய்ந்து அவர்களையெல்லாம் கொன்றே முடிக்கும்.இதுதாம்,இத்தகைய இயக்கவாதிகளால் முண்டுகொடுக்கப்பட்ட குடும்பச் சர்வதிகாரத்தின் தலைவிதி.இதன் பின்னே பெரும் வலுவுடையவொரு இராணுவம் முன்னைய இலங்கைக்குள் நிலவாத வலுவுடன் ஒரு சர்வதிகாரக் குடும்பத்தையும்,அவர்களது கட்சியாதிக்கத்தையும் காக்கிறது.இது,அரச முதலாளியத்தைக் குடும்பச் சொத்தாக்கியதிலிருந்து ஆயுதம் தாங்கியவொரு குழுவினது கையில் இலங்கையின் அனைத்து அதிகாரமும்-பொருளாதார முனைப்புகளும் குவிந்து போயுள்ளதென்பதையும் நாம் உணரவேண்டும்.


ப.வி.ஶ்ரீரங்கன்
21.04.2013

Sonntag, 31. März 2013

40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து...

40 வது இலக்கியச் சந்திப்பை முன்வைத்து...

யோசித்துப் பார்க்கிறேன்.1988 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு அன்று,தட்டச்சு செய்த வெறும் காகிதங்கள்தாம் அழைப்பிதழ். கையெழுத்துப் பத்திரிகைகள்,தட்டச்சில் எழுதிப் போட்டோப் பிரதி செய்த பத்திரிகைகளைத் தவிர நாம் ஒன்று கூடுவதற்கான அறிவிப்பை எதிலுஞ் செய்யவில்லை! எனினும்,கணிசமானவர்கள் பங்குபற்றியதும்,கருத்துப் பரிமாறியதும்,அடிபட்டதும்-குத்துப்பட்டதும் கருத்துக்களறாற்றாம்.அத்தகைய சந்திப்பு ஒரு கட்டத்தில் பிழைப்பு வாதிகளது கைகளில் ஏதோவொரு காரணத்துக்காகச் சென்றபோது அதைத் தட்டிக் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பாய் பொண் [Bonn-Germany] சோமசுந்தரம் அத்தகைய பிழைப்புவாதிகளில் ஒருவர்.இது குறித்துச் சிந்தனை ஆசிரியரோடு உரையாடினேன்.அவர்,வழமையான புன்னகையோடு மௌனித்தார்.இதே சோமசுந்தரம் நமக்கு இந்தியாவிலிருந்து ஒரு தமிழ்த் தட்டச்சைக் கொணர்ந்து தந்துவிட்டு (1989 ஆம் ஆண்டு), 1200 டொச்சு மார்க்கைப் பணமாக வேண்டினார்.துடிக்கத்துடிக்கப் பணத்துக்காய் அனைத்தையும் தப்பாகவே செய்பவர்கள் இலக்கியச் சந்திப்பை ஒரு கருவியாகப் பயன் படுத்தியது உண்டு.





இன்று,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்புக் குறித்து பௌசர் தீபம் தொலைக் காட்சியில் நிகழ்வு குறித்து நேரடியாக உரையாடி விளம்பரஞ் செய்யுமளவுக்கு நமக்குள் வசதிகள் பெருகிவிட்டன.இத்தகைய வசதிகளின்வழி, இந்த இலக்கியச் சந்திப்பில் தமிழ்பேசும் மக்கள்மீது நடாத்தப்பட்ட இனவழிப்புக்குறித்து ஒருமித்து முடிவொன்றை இலங்கைப் பாசிச அரசுக்கெதிராகத் தீர்மானமாக இச் சந்திபுக்குழு வெளியிட்டு , இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துச் சிறுபான்மை இனங்கள்மீது இனித் தொடரப்போகும் அராஜக அரசியலைக் குறித்து எச்சரித்து, அவர்களை அநாதவர்கள் எனும் தரப்பிலிருந்து அரசியல் உரிமை கோரும் விவேகமான மக்கள் கூட்டமாக மாற்றும் முன் நிபந்தனைகளாக இந்தத் தீர்மானம் அமையவேண்டும் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகும்.இதுதாம் ஒரு கூட்டு முயற்சிக்கான அரசியலை நமக்குள் தொடர முடியும்.இதுள் உடன்பாடுகாண முடியாதுபோயின் இச்சந்திப்பு ஒடுக்குமுறையாளர்களது நிகழ்ச்சிக்கேற்பவே பயணிக்க முடியும்.இதுதாம் இன்றைய அரசியலாகவும் நமக்குள் நிகழ்த்தப்படுகிறது.இதைக் கடக்கவே இலக்கியச் சந்திப்பு அன்று தோன்றியதும் அதை முன்வைத்த தெரிவுகளோடு பயணித்துக்கொண்டதும்"மாற்றுக் கருத்து-அரசியலை"தொடரவே!

சிங்கள இனவாத அரச யுத்த வன்முறையாலும்-பாசிசப் புலிகளது அராஜகப் போராட்டத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பல வடிவினில் பல தளத்தில் இன்றும் இலங்கை அரசால் தண்டிக்கப்படுவது நாம் அறிந்தது!

தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தமானது வரலாற்றில் மன்னிக்க முடியாதது.இன்றைய இலங்கைக்குள் இராணுவவாத அரசியல் வியூகத்தின்வழி தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய வாழ்விடங்கள், அவர்களது ஐதீகத் தேசமானது சிங்கள இராணுவச் சுற்றி வளைப்பு-மற்றும், அதுசார்ந்த இலங்கை அரச ஆதிக்கத்துள் கட்டுப்படுத்தப்பட்டு மெல்லத் தமிழ்பேசும் மக்களது வாழ்வாதாரங்களும் மனித வளமும் சுரண்டப்படுகிறது.இதுவொரு புதிய குட்டி முதலாளியப் போக்காக, இராணுவப் பொருளாதார அசைவியக்கமாகத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் அரசியலானது மிகப் பயங்கரமானவொரு அரசியல் வாழ்வைத் தமிழ்பேசும் மக்கள்மீது இனவாதஞ்சார்ந்து சட்டபூர்வமாக ஏவியுள்ளது.





இந்த நிலையுள்,இலண்டன் 40 வது இலக்கியச் சந்திப்பானது கணிசமாகப் புலம் பெயர் அரசியல்-இலக்கியச் செயற்பாட்டாளர்களை இணைத்துச் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள நிலையில் இவர்களது, இந்தச் சந்திப்பு-இலக்கியச் சந்திப்பின் ஆரம்பகால நோக்கை இன்னும் கடைப்பிடிப்பதாகவிருந்தால்- இலங்கையின் இராணுவ ஆட்சி குறித்தும், தமிழ்பேசும் மக்கள்மீது சட்டவாத அரசின் விழுமியங்களைத் தட்டிக் கழித்தும்-வன்முறையைப் பல தளத்தில் குறிப்பாக பௌதிக இருத்தலில் ஏவியுள்ளதென்பதையும், ஒரு குழுவினது சர்வதிகாரமாக இராணுவத் தலைமையைக்கொண்டு தமிழ்பேசும் மக்களையும் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களையும் கண்காணித்து, வன்முறை ஜந்திரத்தின்வழி ஒடுக்கும் இன்றைய அரசியலை இல்லாதாக்கும் ஆரம்பப் புள்ளிகள் குறித்து இச் சந்திப்பு தீர்மானகரமான உரையாடலையும், அது குறித்த பகிரங்கமான தீர்மானத்தை (இனவழிப்பு நிகழ்த்திய இலங்கை அரசைக் கண்டித்தும்) உலகுக்குக்குச் செய்யவேண்டும்.






இத்தகைய அரசியல் நோக்கில்-விடுதலையின் தெரிவில் அதைப் பிரகடனப்படுத்தியும் தீர்மானம் வெளியிடப்பட்டு,எதிர்கால இலக்குகளும்,இலங்கைத் தேசத்தில் ஜனநாயக ரீதியாக அனைத்து மக்களையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் ஒரு சட்ட பூர்வ அரசை மீள மலர வைக்கும் முயற்சிக்கு இந்த இலக்கியச் சந்திப்பு பணியாற்ற வேண்டும்.

இதைச் செய்யாது 41 வது இலக்கியச்சந்திப்பை இலங்கைக்கு நகர்த்துபவர்கள் இலங்கை அரச நிகழ்சிக்குடந்தையாகவே பயணிப்பர்.இதுதாம்,இன்றைய இலங்கை அரசியலின் தலைவிதி.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

31.03.2013

Samstag, 30. März 2013

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!

புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் , யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!

சிங்கள இனவாத அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட இனவாத அரசியலானது தமிழ்த் தேசிய வாதப் பிழைப்பு வாதிகளுக்குள் பல்வேறு இனவாத-சாதிய வொடுக்குமுறை-பெண்ணடிமைத்தனம்-பிரதேசவாதமெனக் கோலாச்சிய இந்த மானுடவிரோதமானது பௌத்த சிங்களப் பெருந்தேசிய உச்சத்துள், தமிழ்த் தேசியவினத்தின் மீதான வொடுக்குமுறையாகவும்,அதற்கு முன்னமே சிங்கள-முஸ்லீம் வார்த்தகர்களது முரண்பாடாகவும், ஒடுக்குமுறையாகவும் எழுந்து, இறுதியில் இந்த இனவாதமானது "தமிழீழப் போராட்டத்துள்"அதீத உச்சமான மனித அவமானகரமான புலிப் பாசிசமாக உச்சம் பெற்றது!

இதன் முகங்கள் பல்வேறு வகையானவை.

இந்திய உளவுப் படையினது நேரடியான ஆலோசனையின் பெயரில் இந்தப் பாசிசமானது அநுராதபுரத்துள் (1988 இல்) சிங்கள மக்களை வேட்டையாடியது.பின். இஸ்லாமிய மக்களை வேட்டையாடியது.இதன் முகத்தைத் தமிழ்பேசும் மக்களே தரிசித்த காலமானது புலிகளது வதை முகாமிலிருந்தும்,முள்ளிவாய்க்காலிலிருந்தும் மட்டுமல்ல.கூடவே,தமிழ் மக்கள் தமது குழந்தைகளை,கல்வியாளர்களை,மாற்று அமைப்புப் போராளிகளைப் பல்லாயிரக்கணக்காகப் புலிப் பாசிசத்தால் இழந்தபோதுதாம் அதன் உச்சம் புலப்பட்டது.

இந்த அந்நிய அடியாட்படைச் சேவையுள் பாசிசப் புலிகளது பாத்திரம் தேசிய விடுதலையாகப் பின்னப்பட்ட கருத்தாடல்களால்-சிங்கள இனவாத ஒடுக்குமுறையால் ஒரு தேசிய இனம் தன்மீதானவொரு வரலாற்றுப் பழியைச் சுமக்கிறது, இன்று!

இந்த வரலாற்றைத் தந்த புலிப் பினாமிகள் இன்றும் அஃதே, வகை அந்நியச் சேவையில் மக்களிடம் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களுடன் பாரிய முதலாளிகளாகிவிட்டு எமது மக்களுக்காக மீளவும், கொலை அரசியலையே செய்கின்றனர்.

புலிப் பாசிசத்தின் பெயரால் மொட்டையடிக்கப்பட்ட            " தமிழினத்துக்கு வெளியிலான பிற-இனங்கள் " தமது அனைந்து நியாயத்தையும் தொடர்ந்து ஒடுக்குமுறைக்குள் தள்ளப்பட்ட தமிழ்த் தேசியவினத்தின்மீது சுமத்திவிடும்போது அந்தத் தேசியவினமானது அதை நிராகரிக்க முடியாது.இஃது,இந்த உலகத்தால் வஞ்சிக்கப்பட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு இரட்டிப்பான ஒடுக்குமுறையாக மேலெழுகிறது.ஒன்று ,உளவியலொடுக்குமுறை மற்றது, பௌதிக ஒடுக்குமுறை!புலிப்பாசிசத்தின் உச்சத்தின் அறுவடை இதுதாம்!

ஆனால்,இது குறித்து நாம் பேசியாக வேண்டும்.

புலிப் பாசிசத்தை, இவ்வளவு மனித அவமானகர ஒடுக்குமுறைகளுக்குப் பின்னும்-பாசிசத்தின் புதிய மாதிரிகளுக்குப் பாத்திராமாகவும்,அந்நியச் சக்திகளது அடியாளாகப் போன பின்பும் அந்தப் பாசிசப் புலிகளைத் தேசிய இராணுவமாகவும்,அதனால் தமிழீழம் விடுதலையாவதாகவும் அப்பட்டமான பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை இவ்வளவு அழிவுக்குள் தள்ளிய பயங்கரமான " புரட்சிகரச் சிந்தனையாளர்களும்" நமக்குள் "இப்போது" புரட்சி வகுப் பெடுக்கின்றனர்தாம்.இவர்களைத் தண்டிக்கவென ஒரு இனங்கடந்த நீதி மன்றைத் தோற்றுவிக்க முடியாதளவுக்கு உலகம் மனிதக் குருதியில் நீந்திக்கொண்டிருக்கிறது.எனவே,இலங்கை மக்களாகிய அனைவரும் தமக்குள் இணைவுறவேண்டியது இந்த யுத்தக் கிரிமனல்களைக் குறித்த விசாரணையுள் இனவாதப் பேதமின்றி நீதி-விசாரணைக்கானதாக இருக்க வேண்டும்.


இதுவொரு புதிய நூரன்பேர்க் நீதிவிசாரணை மன்றாக அமைய வேண்டும்.தென் கிழக்காசியாவின் விடிவுக்கு இது அவசியமானவொரு பணி.இதன் வாயிலாகவொரு நீதியை இந்த இஸ்லாமிய மற்றும் தமிழ்தேசியவினத்துக்கானவொரு மாண்பான நீதியும்-நிலைத்த ஜனநாயக வழித் தீர்வும் எட்டாதா?நிச்சியம் எட்டும்!மக்களே வரலாற்றைப்படைப்பவர்கள்.அந்த மக்கள் தம்மைத்தாமே தலைமையாக்கும்போது இது சாத்தியமானதே!

இன்று, இஸ்லாமிய மக்களது இந்த வடூவுக்காகப் புலிப்பாசிசத்தை ஊக்குவித்த புரட்சிக்காரர்களே ஆதரவாகவும்,பக்கப்பலமாகவும் இருந்து அநுதாபம் தெரிவிப்பது வேடிக்கையானதல்ல-வினையானது.

புலிகளுக்குக் கருத்தியல்-பரப்புரை செய்து, பிழையானவொரு அழிவுச் சக்தியைத் தேசிய இராணுவமெனச் சொன்னவர்கள்,அதற்காகக் கட்சி கட்டி எமது மக்களை ஏமாற்றியவர்கள், புலம் பெயர் தமிழ் குழுமத்தில் உலகு தழுவி வாழ்கின்றனர்.அவர்கள் எங்கெங்கு எப்படியெல்லாம் இப்போது அரசியல் பண்ணுகின்றனரென்பதை இந்தப் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் அறியார்கள்.அவர்களை நிர்க்கதியாக்கிய இந்தப் பாசிஸ்டுக்களே இப்போது, புரட்சியின் புரவலர்களென்றும்-முன்னேறிய பிரிவினரென்றும் ஐரோப்பாவெங்கும் தமது அரசியலை தொடர்கின்றனர்.

எப்போதும்,முகமூடி அரசியல் செய்தவர்கள்-புலிப்பாசிசத்தை மிக மூர்க்கமாக ஆதரித்தவர்கள்,அதைத் தேசியச் சக்தியாக வரையறை செய்து முள்ளி வாய்க்கால்வரை மனித வதை செய்தவர்கள் முஸ்லீம்-சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் எதிரானவர்களே!

இவர்கள்தாம் இப்போது, இந்த வீடியோவுக்கும் "ஆதாரித்து அரசியல் " செய்கின்றனர்.இவர்களிடம் ஏமாறாது, பாதிக்கப்பட்ட இஸ்லாம்-தமிழ்த் தேசியவினங்கள் தமக்குள் நீதி காணும் முயற்சியில் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

அது,பாசிச அரசாகத் தோன்ற முனையும் இலங்கை அரசை மக்களுக்கான சட்டத்துக்குட்பட்ட-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,ஜனநாயக விழுமியத்துள் தள்ளி அதன் வாயிலாகவொரு நீதிகான அமைப்புகளைத் தோற்றுவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்வதாகவிருக்கவேண்டும்.இதன் முகிழ்ப்பில்தாம் இலங்கையில் யுத்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் விமோசனம் பெற முடியும்.

இதைத் தவிர்த்துவிட்டுப் பாசிசக் கூறுகளை மேலும் அரசியல் வாழ்வாக நிலை நிறுத்தும் அரசியல் பிழைப்புவாதிகளின்பின் நம்பிக்கை தரிப்பது கானல் நீரான எதிர்ப்பார்ப்பையே இந்த மக்களுக்கிட்டுச் செல்லும்.

புலிப்பினாமிகளான இந்த மேற்சொன்ன சிந்தனையாளர்கள் சொல்லும் அநுதாபமும்,அதுசார்ந்த இஸ்லாமிய மக்களுக்கான ஆதரவும் "புலிகளால் காத்தான் குடிப் பள்ளிவாசற் தாக்குதற்குள்ளாகியதும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீங்கள் துரத்தியடிக்கப்பட்டதும் சரியானதே!" என்பது போன்றதே!ஏனெனில்,முள்ளி வாய்க்கால் வரைப் புலிகளைத் தேசியச் சக்திகளாக வர்ணித்து அதை வளர்த்துவிட்டுப் பாசிச ஒடுக்குமுறையை அப்பாவிகள்மீது செலுத்தியவர்கள் இவர்கள்தாம்.

இவர்களைக் குறித்து கவனத்தைக் குவிப்பதே முதற்கட்ட விடுதலைக்கு-விமோசனத்துக்கான முகிழ்ப்பாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
30.03.2013

Freitag, 29. März 2013

ஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை


 நான் மனிதனென
உறவு வெளிக்களுக்குள் இதயத்தை
எல்லா "விலைக்கும் "வைத்தேன்
வேண்டுவாரில்லை

தெரு ஓராமாய்
எனது இரகசியங்களையும்
வலியையும் குவித்து வைத்திருக்கும்
உள்ளாடைக்குள் மெல்லப் புதைத்து வைத்தேன்
ஒவ்வொன்றாக அள்ளிச் சென்றனர்



 எடுத்துப் போட்ட இரகசியமோ
எனது இதயத்தைத் துடிக்கத் துடிக்க  அறுத்துப்போட்டு
அப்பனுக்குக் கஞ்சிக்கு அடுப்பு எரிக்க
நெருப் பூட்டும் போது
என் உணர்வுகளுக்குக் கச்சை கட்டி
விற்கப்படும் சந்தில் என்னைப் புணர்ந்த வியாபாரிகள்
எனக்கான சவப் பெட்டியை வண்ணங்கொண்ட
வகைகளில் செய்துகொண்டனர்




என் வலிக்கும்
வடுவுக்கும் ஒரு தலிபான் துப்பாக்கிக் குண்டின்
விலை மூன்று மில்லியன் டொலரென
நிர்ணயித்த  ஐரோப்பிய மனித நேயவாதிகள்
அள்ளிக் கொட்டும் வானேவிக் குண்டுகளுக்கு
அடுக்கடுக்காய் டசின் கணக்கில்
சிரசு தெறிக்கும் என்னைப் போன்றோருக்கு
அவ்கானில் மனித நேயம்-சனநாயகம் விலையென நிர்ணயித்த
அரசியலை எவரெனக்குச் சொல்வார்?
எல்லாவற்றையும்
அள்ளி வைத்து
ஐரோப்பா உரம் போட்டு வளர்ந்த கதை
 எப்போதும் போல சனநாயகமெனவும்
அவர்களது குண்டுகளுக்குச்  சாவீடாகும் தேசத்தின்
முற்றத்துள்  வளர்க்கப்படும் முள் முருக்கில்
கட்டப்படும் அரசியல் மனித முன்னேற்றமுமென
ஐ.நா. அடுக்கி வைக்கும்-பிறகென்ன?

அவர்களுக்காய் சாவோம்
அவர்களுக்காய்க் குருதி சிந்துவோம்
அல்லாவின் துணையோடும் 
அரவணைத்த மொழிகளோடும் மதங்களோடும்!

 29.03.2013

Samstag, 16. März 2013

புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச...

வன்னியில் கொத்துக் கொத்தாக மக்களை அழித்த    இலங்கையைக் கேட்டுவைத்த சுகனார்: தூ...

=======================
Sugan Kanagasabai:
=======================
ஈழத்தமிழர்களே இப்படியான காட்டுமிராண்டித்தனமான முட்டாள்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைதானா ! உங்களுடைய எல்லாவகையான இழப்புகளையும் ,துன்பங்களையும் இப்படியான ஒரு செயல் எதுவுமில்லாமல் செய்துவிடும் ,அனைவரும் கண்டிக்கவும் அவரிடம் மன்னிப்புக் கேட்கவும் வேண்டும் நாம் தயாரா ? தமிழக புத்தியீவிகள் இந்த தமிழ் பாசிசத்தை கண்டிக்க முன்வரவேண்டும் !
(தமிழகம் வந்த புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி தமிழர்கள் .... )






Sugan Kanagasabai : பாரீர் இதுதான் தமிழர் நாகரீகம் தூ ! தூ !

==============================================
முட்டையில் மசிர் :1
==============================================
இலங்கையில் புத்த சியோனிசவாதமானது இனவழிப்பைச் செய்யுமளவுக்கு உயர்ந்து, இலங்கையின் சிறுபான்மை இனங்களை அச்சப்படுத்திச் சமுதாயக் கொலையைச் செய்யுமொரு குறியீட்டு அரசியலாகவும் இருக்கிறது.புத்த மதப் பிக்குகள் இலங்கையின் இனவாத அரசின் மிகக் கடுமையான இனவாதப்போக்கின் வடிவமாகவும்-உந்துசக்தியாகவும் இருக்கின்றனர்.இலங்கைச் சிங்கள இனத்தின் வரலாறே புத்த மதவாதச் சியோனிசத்துள் மாண்டு போய்ப் புத்தமதமென்பது இனவொடுக்குமுறையின் குறியீடாகவும்,புத்த பிக்குகள்  இனவாதிகளாகவும், ஒடுக்குமுறையாளர்களாகவுமே புரியும் சூழலுக்குள் தம்மை வளர்த்தெடுத்துத்  தமிழ்பேசும் மற்றும் , சிறுபான்மை இனங்களது மிக முன்னேறிய எதிரிகளாகத் தம்மை இலங்கையில் வடிவமைத்ததன் பயனே தமிழகத்தில் இத்தகைய தாக்குதல்கள் உணர்வு வழிப்பட்ட எதிர்ப்பாக இருக்கிறது.

இதையொட்டிக் கண்டிப்பதைவிட  முற்பகல் செய்தால் பிற்பகல் விடியுமென்பதையும் நினைவிலிருத்தும்போது வினைவிதைத்தவர்கள் அறுக்கிறார்களென்பதும் உண்மையாகிறது.

இதை, இலங்கைப் புத்தமத சபை புரிந்துவிட்டடால் இலங்கையில் பிரச்சனைகளது புள்ளி மதங்கடந்து, அரசியல் ரீதியாகத் தீரும் சந்தர்ப்பம் வாய்க்கும்.

இதைப் புரியாமல் தமிழர்கள்கள் மீது காறி உமிழ்வது,  அரசியல் புரியாதமாதிரி நடிக்கும் பிழைப்புவாதிகளுக்கே உரியது.

எது எப்படியிருப்பினும் ,இத்தகைய தாக்குதலை செய்யத் தூண்டும் உளவியலைத் தோற்றுவித்தவர்களே இலங்கைப் புத்த பிக்குகள்தாம்.எனினும்,புத்தபிக்குகள் என்பதே இனவாதிகள் எனும் குறியீடாகிய இலங்கை வரலாற்றிலிருந்து மனிதர்களாக நாம் முன்வைப்பது :"இத்தகைய தாக்குதல்கள் அநாகரீகமானது.இதைச் செய்யும் உணர்வு அரசியலை விட்டொழியுங்கள் மக்களே!;கட்சிசார் அரசியல் இலாபங்களுக்குப் பலியாகதீர்கள் இளைஞர்களே!".

==================================
முட்டைக்குள் குஞ்சு :2
==================================

தமிழக மாணவர் கலகம் திறக்கும்   அரசியல் இலக்கு:உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை உள் நுழைக்கும் தந்திரம்!

இன்று ,உலகமெல்லாம் பிரச்சனைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பொருள்வளத்தைச் சமாந்தரமாக மேலிருந்து கீழ் பங்கீடு செய்யாமால் கீழிருந்து மேலே குவிக்கப்படும் செல்வத்தால் மையங்கொள்கிறது.இது, பலதரப்பட்ட பிரச்சனைகளையும் பகுதி, பகுதியாகவும் தொட்டுச் செல்கிறது.இதைத் தடுப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் பொலிசைப் பயன்படுத்துவதும் அதை அராஜகக் கும்பலாக்குவதும் தெரிந்ததே.எனினும் ,பொலிசின்மீது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பாத ஆளும் வர்க்கங்கள் , மெல்லச்  சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை நுழைக்க விரும்புகிறது.

இது, மேற்குலக உயர்ந்த  ஜனநாயகத் தேசங்களிலேயே இப்போது விவாதத்துக்கு வருகிறது.இதைத் தொடர்வதற்காக உள் நாட்டில் கலவரங்களைச் செயற்கையாகச் செய்யத் தூண்டும் ஆளும் வர்க்கமானது ,இதற்காகக் கணிசமான மக்களையும் பலியாக்கி வருகிறது.அவர்களது உண்மையான பிரச்சனைகளை மையமாக வைத்து இத்தகைய தகவமைப்பைச் செய்கிறது.




தமிழ்நாட்டு மாணவர்களது கலகத்தின் வழி ,இத்தகையவொரு ஆபத்தை நாம் உணருகிறோம்.இது,தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் தொடரும் கதைதாம்.இத்தகைய கலகத்தின்வழி இராணுவம் உள்ளகக் குடிசார் நிர்வாகத்துள் மெல்ல நுழையும்.

நிரந்தரமாகவே, மக்களைக் கண்காணிக்கும் காவலரங்குகளை ஆங்காங்கே நிறுவிக்கொள்ளும்.இது,மக்களது இயல்பான வாழ்வைச் சிதைக்கும் பல புள்ளிகளைத் தொடும்.

சட்டரீதியாக இராணுவத்தை, உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் நுழைத்துப் பொலிசினது செயற்பாடுகளைத் தனி இராணுவ நிலைக்கு உயர்த்தும் பொறியைப் புரிவதென்பதுதாம் இனிமேலான சனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்கும்.

-ஶ்ரீரங்கன்
16.03.2013

Dienstag, 12. März 2013

ஈரத்தை மறைத்த நெஞ்சு

ஈனப் பாம்பு

குருதி நினைந்த இலையான்களின் கால்களில்
வலிய யுகத்தின் தடமொன்று சிக்கியது
உயிர் கொண்டு அலையும்  பிணங்களையும்
அவை விட்ட பாடில்லை!

எச்சங்கள்
அழிந்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை
நிச்சயிக்கச் சில முனைப்புகள் 
கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு
எவருரிமை கொள்வார்?

வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகின்றன
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள் என்பதையும் மறுத்து!

ஊழி முதல்வனும்
உயிர் தந்த ஆழியும் எனக்குள் உறங்க
உச்சியின் மத்தியில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த  நெஞ்சு
இதயத்தைக் கீறிக் கிடப்பிலிட





நம்பிக்கை நலிந்த  என் விழிகள்
என் கால்களுக்குப்  பாதைகளைக் காட்டுகின்றன
நினைவையொடுக்கும் மண்டையோடு
மரணத்துக்கு முன்னைய காலத்தை விரும்பினும்

குருதியுள் முளைத்த ஈக்களோ
வாழ்ந்து பார்த்து
நித்தியம் குறித்துத் தும்மிக்கொண்டன!

மெல்லிய காற்றுள்
உந்தப்படும் தூசியின் இருப்பைச்
சுட்டெரித்த காலம் கொடியதே என்று நீ புலம்புகிறாய் இன்று!!

எதிர் காலமோ
அன்றி நிகழ் காலமோ
கடந்த காலமோ இதுவரை எனக்குள்ளோ
வெளியுள்ளோ  உணரத்தக்கதாக அறியேன்

மீண்டுவிட்ட வினாவுக்குள்
கருத்தரித்த நித்தியம்
ஒடுங்கி விரியும் உயிரின் இருப்போ
காலத்தைக் கிழித்துக் கடாசியது எனக்குள்

மெல்ல உதிரக் காத்துக் கிடக்கும்
நரை அரித்த விதையோ
முளைப்பதற்குள் மரணித்தாக வேண்டும்
ஆசையின் இருட்டில்
ஒன்றுபட்டுக் கிடக்கிறது ஊழ்!

பிரித்தெறி
தூரத்துக்குத் துரத்திவிடு !

எட்டப் போவதற்குள்
எதற்குள்ளோ
பிணைந்துவிடப் போகும் ஈனப் பாம்பு
மண்டையோடுகளுக்குள்
சிறைப்படுவதற்கு விருப்பற்றது.

-ஶ்ரீரங்கன்
12.03.2013

Montag, 11. März 2013

கொடு நிலவு முறித்த இரவு

தா வார்த்தைகளைத் தறித்து
வாய் பிளக்க முனையும் காலம் இஃது
மூட்டைகளாய்க் கொட்டப்பட்ட ஊனத்துள்
ஊழிக் காலமாய் உணர்வுகள் உதிர

மெல்லத் துரத்தும் எல்லை
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்
உருவமிழந்த சில நட்பு வெளிகள்
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில்  உயிர்

முகமிழந்த காலங்களைக்
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு
மூச்சு முட்டும் நாயோட்டம்
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும்  உளைச்சல்



கோலமிட்ட முற்றம்
கொடு நிலவு முறித்த இரவு
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்
காலங்கள் தொலையக் காத்திருந்த
தாயவளின் தலை வீழ்வு

எல்லாம் தொலைய
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி
காணாத மனிதரைக் கண்டு
கட்டிய வழி உறவென்றெண்ணி
காணிக்கைகேட்டு
கட்டிய புடவைக்கும்  மாற்றெடுத்தோம்

எச்சில் இலையாய்
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு
தெருக்களில் எடுத்த பிச்சை
குத்தியது கள்ளத் தோணியென்று!

நட இப்படி
கிட அப்படி
எடு இப்படி
எல்லா ஏவல்களும்
முகத்தில் எழுதும் இரவல் நாடென

பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைத்தது

காடுகளின்  மத்தியில்
கருக்கொண்ட சிசுவுக்கு தேசத்தின்
எந்த நிறமும் நிரந்தரமன்று



கொட்டிய இரவைகளின் நாட்டியத்துள்
எத்தனையோ ஆசைகளும்
ஊழிக் காலத்தின் உறவுக் கோலங்களும்
உவர் மண்ணின் புதை சேற்றில் உருவந் தேட

நாடு கடந்தும் காடுகடந்தும்
அரசமைத்து  நகலெடுத்தே
தமிழருக்குத் தேசம் செய்யும்
நடுத் தெருவில் தலை வீழ்த்தும்  சூனியம்!

இதயம் பிடுங்கப்பட்ட
சதைக் குவியலுள் கனவு தறிக்க
வேசம் தொலைத்தறியாத தலைகளும்
"சிரச் சேதம் செய்விக்கும் " விருப்பொன்று
வினைப் பொருத்தம் பார்த்திருக்கும் உலகெங்கும்!

ஶ்ரீரங்கன்
11.03.2013

Mittwoch, 6. März 2013

கொடுங் காலத்தின் கொள்ளை இது?

கொடுங் காலத்தின் கொள்ளை இது?

நெஞ்சில் கீறும் உனது சாவு,
உன் தோழமை நினைவு மக்கள் வெள்ளமாய்
அஞ்சலிக்கும்  தேசம்-உலகம்!

உன்னிழப்பையிட்டு
மௌனித்திருக்கவும் முடியவில்லை;
மனதும் கேட்கிறதாயில்லை -எமக்கு,
எத்தனை கனவுகளை உன் மேல் செலுத்தி
உயிர்ப் பேத்திய சமவாழ்வு இத்துடன் முடிவுரையா?



சி.ஐ.ஏ.கண்ட கனவுக்கு-முயற்சிக்கு
வழி திறந்த புற்றே ,உனக்கொரு நாள் சாவு மணி ஒலிக்காதா?;
எங்கள் தோழன்  சாவேசின் உயிருக்கு,
புரட்சிக்கு முற்று வைத்த வினையே
வெனிசூலா மக்கட்கு விடிவைத் தள்ளி வைத்தாயா?

மீளவும் ,சோற்றைக் கொள்ளும்
பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை
தோழமை உறவுக்கான இரை மீட்பில்
வேதனையைப் பகிர்வதற்கென்றே
வேளைகள் நெருங்குகிறது!மக்களது நலன் அறுக்கும்
கொடுங் காலத்தின் கொள்ளை இது?

உலகெல்லாம்,
 உயிர்க் கொள்ளையிடுபவர்கள்
உயிரோடிருக்க,
 எங்கள் கனவுச் செடிக்குத் தேர் தந்த
வெனிசூலாத் தேச மகனைக் கொன்றாயே கொடிய காலம்!

தென் அமெரிக்கத் தெரிந்த சில
"முந்தைய பொழுதின் " சோசலிசக் கரைந்த தடயம்
நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில்
வெறுமைப் பொழுதாய் வேளைகள் செல்ல
வேதனை சொல்லும் வேளையுள் நீ வீழ்ந்தாயோ  தோழா?





நொந்துலர்ந்த இதயங்களோடு
 துயர்படும் என் கேள்வியெல்லாம்
"கொடிய சாவுக்குள் குலைந்துவிடுமோ நீ,
கட்டிய கோட்டையெல்லாம்?;வெனிசூலாவைக் குதறுமோ
அமெரிக்கக் கழுகு?"

நாடற்றும் ,வீடற்றும்
இழப்பதற்கு எதுவும் அற்ற எம் வாழ்வில்
ஒரு பிடிமானம் நீயாய் இருந்தாய்
இதயம் நோக ,எம் விழிபனிக்க வைத்தாயே தோழா!

தென் அமெரிக்கத் தேசமெல்லாம் கட்டிய
சோஷசலிசக் கோட்டை மெல்ல எழும்போது
"எண்ணை மிதந்துவரச் சாடி கவிழ்ந்த கதையாய் " ஆகுமா தோழா?

என்னதான் எவருரைப்பினும் நீ,
சொன்னதைச் செய்தாய்-செய்ததைச் சிறப்பித்தாய்!
திரண்டெழுந்த மக்கள் மனங்களெல்லாம் உன் வெற்றியின்
கட்டியத்தைச் சொல்லி வைத்தனரே!சோகந்தாம் நீ,
சொல்லாமற் போன செய்தி சோகந்தாம்!

செல்லக் கரந் தந்து,
செவ் வணக்கமிட்டு உன்னைச் சிறப்பிக்க
மனதுக்கு எந்தத் தடுப்புமில்லை -தூரமுமில்லை!;
சென்று வா தோழனே-உனக்கு என் செவ் வணக்கம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
06.03.2013

Sonntag, 3. März 2013

அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி

அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி
-சில எதிர்க் குறிப்புகள்!

ந்தத் தருணம் வரை,பெரும்பாலும் ஒரு விஷச் சூழலுக்குள் நாம் மூழ்கிச் செல்கிறோம்.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கொப்பத் "தமிழீழ"ப்போராட்டஞ் செய்தபோது அஃது,மக்கள் விரோதமாகவே நகர்ந்தது.

அதைத் தட்டிக்கேட்ட நம்மையெல்லாம் எட்டப்பர்கள் என்றார்கள்.எச்சரித்தார்கள்-நேரடியாக ஜேர்மனியப் பொலிசுக்கு முன்பாகவே கைத் தகராறுக்கும் வந்தார்கள்.எமது படத்தோடு அவதூறு விதைத்தார்கள்.இதுவே,இரயாகரன் மீதான எமது விமர்சனம்(புலிப்பினாமி-அந்நிய ஏஜென்டு)-கற்றன் நசனல் வங்கிப்பணம் குறித்த குற்றச்சாட்டு,மற்றும், அவர்களது முன்னணிக்கான அறிக்கையில் குறித்த சுய நிர்ணயஞ்சார் சரியான கருத்தையொட்டித் (" 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) "  ) தற்போதைய திரிப்பையும் இனங்காட்டி விவாதத்தை-பழியை நாம் கட்டுரைகளாக எழுதியதற்கு அவர்கள் தந்த எதிர்க் கருத்தாடல் "சரவணை ரங்கனின் கொலைக் குடந்தையான கதை" எனும் அவதூறு.பின்பு, அதை அவர்களது இணையத்திலிருந்து(இனியொரு டம்மி) கழற்றி எனக்கு ஆலோசனை இப்போது!.இவர்களது முதல் அவதூறைக் ஸ்க்கிறீன் சொட்டிலும்,அச்சிலிலும் சட்ட நடவடிக்கைக்காக ஏலவே எடுத்துவிட்டேன்.





இனி, இந்த நிகழ்வூக்கத்துள் இனியொரு இணையத்துள் தோழர் அசோக்கிடம் வருகிறேன்.

சோபாசக்தி குறித்து, 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிதர்சனம்.கொம் அவதூறு பரப்பியது. சோபா சக்தியை வரதராஜப் பெருமாளோடிணைத்து அவதூறுதெழுதித்(சோபா சக்தி இந்தியா சென்று, வரதராஜப் பெருமாளைச் சந்தித்தது,என்பதானதன் அர்த்தம்: வரதராஜப் பெருமாள் இந்திய அரசியல்-பொருளியல் நலனை இலங்கையில் நிலைப்படுத்தும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரென்பதும்,அவரது தலைமையில் தமிழ்பேசும் மக்களது நலனைக் காயடித்து இந்தியா தனக்கான பொம்மை அரசை நிறுவியதும் வரலாறு.இதன் தொடர்ச்சியாகச் சோபாசக்தியும்,ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தலைவர் வரதாரஜப் பெருமாளும் மீள,இந்திய நலனது அரசியலை இலங்கையிற் தகவமைப்பாதான குற்றச்சாட்டை நிதர்சனம் வைத்தபோது) துரோகியென்றபோதும் நாம் அதை எதிர்த்து அகதிப் பதிவில் மறுத்து (அவதூறை) எழுதிக்கொண்டோம் (18.02.2007).இன்றும்,எமது பதிவு[ http://srisagajan.blogspot.de/2007/02/blog-post_18.html  ] இருக்கிறது.பாசிசப் புலிகளது மனித விரோத ஊடகமான நிதர்சனத்தை வரலாற்றிலிருந்து அவர்கள் அழித்துவிட்டனர்.இதை, பாசிஸ்டுக்களது நடைமுறையென்று வரலாற்றில் நாம் கிட்லர்,முசோலினி வழியில் மட்டுமல்ல புலிகள் வழியாகவும் புரிய வேண்டும்!

அரசியல்ரீதியான செயற்பாட்டை,அதுசார்ந்த கருத்துக்களை முகங்கொடுக்க முடியாத புலிகளும்,இயக்கவாத மாயையும் இத்தகைய "அவதூறு அரசியலுக்கு" விதையிட்டது. இதன் முன்னோடிகளாக நாம் எஸ்.பொன்னுதுரையின் "நற்போக்கு இலக்கிய" முகாமுக்குள் இணைப்பையிட முடியும் கருத்தியற்றளத்தில்!

தமிழ்ச் சமுதாயத்துக்கே இருக்கக்கூடிய பிரத்தியேகமான குணாம்சங்கள் சில இத்தகைய வகையாறாவுக்குள் நமது "ஆச்சிகள்" வகை அரசியலாகத் தனிப்பட்ட உறவுகள் வட்டத்துள் பல் நூறு ஆண்டுகளுக்கு முன்பே  உருப்பெற்றுக் கொண்டதைச் சமூகவுளவியலாளர்கள் இலகுவாக இனங்காணமுடியும்.இஃது,ஆண்டான் அடிமை-நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் என்பதை நாம் புரிந்தாகவும் வேண்டும்.

இதன் வளர்ந்த கிளைபரப்பிய விருட்ஷத்தின் நிழலோ சுயமுரண்பாட்டை விலக்கிய அந்நிய முதலாளிய இறக்குமதிக்குட்பட்ட இலங்கைச் சமூக அசைவியக்கத்துள் நமது எதிர்கால அரசியலது வெளியையே மூடி இருட்டாக்கிவிடுமோவென அச்சப்படவேண்டியிருக்கிறது.

இந்தச் சமுதாயத்துள் இலட்சக்கணக்கான உயிர்களை இந்தப்போக்கால் நாமெல்லோரும் கொலைசெய்தோம்.

"துரோகி - எட்டப்பவன்" என்பதையுந்தாண்டிச் சமூகவிரோதி என்று கோழி,வாழைக்குலை,மண்வெட்டி,கடகம்,கோடாலி,விறகு,தேங்காய் திருடியவர்களையெல்லாம் லைட்போஸ்ட்டில் கட்டிவைத்து நெற்றியில் பொட்டுவைத்தோம்.

நாலுபேரைக் காதலித்து ஏமாற்றிய மனி பஸ் கொண்டக்டரைக் கம்பத்தில் கட்டிப் பொட்டிட முனைந்த நாம் சார்ந்தவொரு இயக்கத்தின் நட்பு இயக்கத் தோழர்களுக்கு அது குறித்து வகுப்பெடுத்த எமது அரசியல்(1983 ஆம்வருட இறுதி) கண்முன் வருகிறது.அதை,இப்போது சிந்திக்கிறோம். நாம்,ஆரம்பத்து அவசரத்தைவிட இப்போது மிக மோசமான கட்டத்துள் இருக்கிறோம். அதைவிடப் பல் பத்து வீதம் நாம் பின் தள்ளப்பட்டுவிட்டோம். இஃது,விவேகமான அரசியல் இல்லை!

எதன் பெயராலும் இதை நியாயப்படுத்த முடியாது!

இரயாகரன் பாணியே புலம்பெயர்வுச் சூழலில் மிக மோசமான நடாத்தையாக இதைச் சாதித்துக்கொண்டது.கலைச் செல்வனது மரணத்தின் பின்புகூட அந்தத் தோழன்மீது விதைத்த அவதூறைக் குறித்து நாம் வருந்தியுள்ளோம். இது குறித்து இராயவோடு பேசியிருக்கிறோம். எமது குரலொலிப் பதிவுகள் அவரிடம் இன்னும் இருக்கிறது.

இப்படியாக, நமது கால அரசியற் சாக்கடையுள் நாம் புழுவானோம்.இது,இயக்கவாத மாயையின் பொருட்டு எல்லோருக்கும் தலை சீவியபோது நாம் "பொடியள் ஏதோ செய்கிறாங்கள்" என்று தட்டிக் கொடுத்தோம்.பின்,இதன் நீட்சியுள் உயிர் நீத்தவர்கள் இலட்சக்கணக்கானபோது நமது உரிமைகளையே நாம் இழந்தோம்.இந்த அரசியலானது ஒரு பெரும் அமைப்புக்குள்ளேயே கூட அதற்கெதிரான எதிரிகளை உருவாக்கி வைத்து, இலங்கை அரச இராணுவ வாதத்துக்கு வெற்றியளித்தது.இவர்கள்தாம் இன்று, இந்த அரசியலுக்கான நன்றிக்குட்பட்ட இலங்கைக்குள் இலங்கை இராணுவவாதத்தின் பிதா மக்களால் கவனிக்கப்பட்டு,வீடு,வளவு வழங்கப்பட்டுப்"புலிகளுக்கு மறுவாழ்வு"அளிக்கின்றோமென உலகுக்குப் பறைசாற்றப்படுகிறது.இந்த அரசியலது தெரிவு மேற் சொன்ன உளவியலது எதிர் திசையூக்க நகர்வென்பதை எவரும் மறுத்தொதுக்க முடியுமா?

இந்த அரசியலது தெரிவின் மீளுருவாக்கத்தை நாம் தொடருவோமா அசோக்?

இது,இப்படியே தொடருவதற்கான புள்ளிகளே தனிநபர்கள் மீதான தீராத பகையாகவல்லவா தொடர்கிறது?

இதன் புள்ளியை அழித்துவிட்டு, மக்களது நலத்தின்மீதான கரிசனையான அரசியலுள் மக்களுக்கெதிரான சக்திகள்மீது கவனத்தை திருப்பி விவேகமான அரசியலைப் புரியுஞ் சந்தர்ப்பத்தை இல்லாதாக்கலாமா?அந்நிய நலன்களுக்காக அவர்களிடம் பணம் வேண்டிவிட்டுப் அவர்களது முகவர்களாக-பிழைப்பவர்களாக நாம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விவாதிப்பது வேறு.இந்தப் பாணியில்(பாலியல்நடாத்தை) தனிநபர் சார்ந்த "தூயவாத" அரசியல் வேறானது!சோபாசக்தியோ,இல்லைச் ஸ்ரீரங்கனோ,அசோக்கோ என்.ஜீ.ஓ.க்களிடம் காசுவேண்டிக்கொண்டு அவர்களது லொபிகளாக இயங்கினால் அதை மக்களது நல்வாழ்வு சார்ந்தும்,அவர்களது விடுதலை சார்ந்தும் அம்பலப்படுத்துவது அவசியமானது.இந்த ஆபத்தைக் குறித்து அசோக் பேசும்போது அதுள் முரண்பட எமக்கெதுவுமில்லை!.

சோபாசக்தி மீதான இந்த விமாசனம் நியாயமான அரசியலாக எமக்குப்படவில்லை!

நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.நாம் எவருமே "தூயவர்கள்" இல்லை.அத்தகயை தூய்மை வாதமானது மக்களது சமூக விடுதலைக்கெதிரான சீரழிவு அரசியலின் இருப்பை மீளக் கட்டியம் கூறவதென்றே நாமுரைப்போம்.இது, குறித்து மேலும் விபரிக்க வேண்டியதில்லை!





எனவே,சோபாசக்தி குறித்து எழுதப்பட்ட இந்த குறிப்பின் உச்சமான வெளிப்பாடானதன் அரசியலை நாம் மறுக்கிறோம்.நாம் தோழமை சார்ந்து இயங்கும் புள்ளியையை மெல்ல அழித்துவிட்டு தனித்தவில் அடிக்க முனையும் சூழல்தாம் எதிரிவர்க்கத்துக்கு அவசியமானது.அதைத் திட்டமிட்டு நகர்த்திய இயக்கவாதமானது இறுதில் நமது விலங்கை எவரெவரோ செய்து நமக்குப் பூட்டிவிடும் அரசியலைத் தந்துவிட்டுத் தொடரும் இத்தகைய "அவதூறு அரசியல்" இலக்கில் இன்னுமெத்தனை  தலைகளையுருட்டுவோம்? தலித்துவ முன்னணி,எதிரிகளோடு தமது நலத்தை இணைத்திருப்பவர்கள்,தனிநபர்கள் பலர் இலங்கைப் பாசிசப் போக்கைத் தாம் கொண்ட "கொம்யூனிச"ப் பார்வையின்வழி மெல்ல ஆதரிப்பவர்கள்,இத்தகையவர்களோடு என்றும் தோழமைகொள்ள முடியாது.ஆனால்,சோபாசக்திக்கு இது பொருந்துமா?அவர்,எந்த எதிரி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்?வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.எனவே,எதிரி வர்க்கத்தோடிணையும் அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது.எனவேதாம், டக்ளஸ் கூறும் "விடுதலை-சமத்துவம்" குறித்துக் காறியுமிழ்ந்து அவரது வர்க்க நலனையும் அவரே ஆளும் வர்க்கமாக மாறிப் பல்லாயிரம் கோடி மக்கள் சொத்தைப் பதுக்கிய புதிய ஆளும் வர்கத்தோடிணைந்தைதக் குறித்துப் பேசுகிறோம்.இவரோடிணையும் சுகனைக்கூட இதன் பொருட்டே அம்பலப்படுத்துகிறோம்.ஆனால்,சோபா சக்தியை இத்தகைய போக்குக்குள் இனங்காண முடியுமா?

அரவிந்தன்,அப்பாத்துரையோ,சோபசக்தியோ அல்ல ஸ்ரீரங்கனோ பாலியல் ரீதியான நடாத்தையில் தூய்மை வாதப் பொதுப்புத்திக்கு எதிரான திசையிற்றாம் பிராயாணிக்க முடியும்.அது,எமக்கு மட்டுமனாதல்ல இப்புவிப்பரப்பிலுள்ள அனைத்து மகான்களுக்குமே பொருந்தும்.இதன்வழியாக "அரசியல்"புரிவதைவிட சமகால அணிச்சேர்க்கை-கட்சி கட்டும் அரசியலெனத் தொடரப்படும் மக்கள் விரோத அரசியற் புள்ளிகளை இலக்கு வைத்து அரசியல் புரிவது அவசியம்.இது,தோழர் அசோக்குக்கு நன்றாகவே புரியும்.அவர்,மிகப் பெரும் அமைப்பின் மத்திய குழுவுறுப்பினராகவிருந்தவர்.அவருக்கு நாம் வகுப்பெடுப்பது எமது நோக்கமல்ல!மாறாக, இந்த வகைக் குறிப்பை மறுப்பதே எமது இலக்கு!


இஃது,மக்கள் நல அரசியலறதுக்கு அப்பாற்பட்ட"தூய்மைவாதப் பொதுப் புத்தியின்" தெரிவு. இதை,அமைப்பாண்மையை எதிர்பார்த்தியங்கும் எவரும் ஏற்க முடியாது.

அசோக் இக் குறிப்பை "மனசாட்சியின்படி" நீக்காதுபோயினும்,நமது தார்மீக அரசியல் இலக்கின் அடிப்படையில் நீக்கியாகவேண்டும். இதுவே, தனிநபர் உரிமையின் மிகவுயர்ந்த அறமும் கூட.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.03.2013

Sonntag, 24. Februar 2013

கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் ...

கணையாழீ,தீபச்செல்வன்,அ.மார்க்ஸ் மறுக்கப்படும் அரசியல்-கருத்துக்கள்.


முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பிரபாகரன் குடும்பம் பலவாறாகச் சிதைக்கப்பட்டும்,பிரபாகரன் சித்திரவதைக்குட்பட்டும்,மண்டை பிளவுண்டும் செத்துப் போயினர்.இந்தத் துன்பியல் நிகழ்வு 2009 மே 16-17-18 ஆம் தேதிகளில் நடைபெற்றிருக்க முடியும்.

மேற்சொன்ன தேதிதிகள், புலித் தலைவர் பிரபாகரன் குடும்பத்தின் உண்மையான இறுதி முடிவின் தேதிகளாகும்.

இதைக் குறித்துப் புலிகளே இதுவரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுமில்லை-எற்கவுமில்லை.தலைவர்கள் உயிரோடிருப்பதாகச் சொல்லி இலங்கை-இந்திய,சீனக் கூட்டுக் கொலைகளைச் சட்டரீதியாகச் செல்லாக்காசாக்கினர், இன்றுவரையும்!

இது குறித்துப் பல ஆவணத்தோடு புலம்பெயர் தளத்தில் செய்திகளும்-ஆவணப்படங்களையும் தேடித் தேடிப் போட்டவர்கள் எல்லோரும் புலிப் பினாமிகளால் தூற்றப்பட்டனர்.புலி அநுதாபிகள் அன்றுஞ்சரி,இன்றுஞ்சரி நியாயமாகக் கவனத்தை "இது குறித்து"ச் செய்யவில்லை.இயக்க நலன்,"தமிழீழம்" என்ற அகக்கனவுகள் அவர்கள்தம் கண்களைக் கட்டிப்போட்டது.

இந்தச் சதிகுறித்த தமிழரங்கக் கட்டுரை-ஆவணப்படங்கள் அடங்கியவொரு சுட்டியானது பல பத்தாயிரம் தடவைகள் பார்க்கப்பட்டிருக்கிறது.என்றபோதும், அதையெல்லாம் மறைப்பு அரசியலுக்குள் முடக்கியவர்கள் இப்போது பாலச்சந்திரனது படங்களைப்பார்த்துவிட்டு அரசியல் செய்யும் புள்ளி என்னவாகவிருக்கும்?





நான்காண்டுகளாகவிதைக் கண்டுகொள்ளாது, இலங்கைப் பாசிச அரசியலைக் குறித்து இயங்க மறுத்தவர்கள்-புலிகளது சதி அரசியலால் தமிழ்பேசும் மக்களது விடுதலை காட்டிக்கொடுக்கப்பட்டதைப் பார்க்க மறுத்தவர்கள். இப்போது, பாலச் சந்திரனை முதன்மைப்படுத்தி, அவிழ்க்கும் அரசியல் ஒரு செல்லாக் காசாகும்.இதைத்தாண்டிச் சில வற்றைக் குறித்துக் கவனத்தைக் குவித்தால்,இவையெல்லாம் ஒரு கொசிப்பு அரசியலாகவே மாறிவிட்டதென்றவொரு புள்ளியைக் குவித்துக்கொள்ள முடியும்.

இந்தக் குறையுடைய விட்டேந்தி அரசியலது தெரிவில்,"தமிழ்பேசும் மக்களை முள்ளி வாய்க்காலில் இனப்படுகொலை செய்த சிங்களவரசுக்கும் அதற்குத் துணைபோன தென்னாசியப் பிராந்திய வல்லரசுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை" யென நாம் குறிப்பிட்ட சிலரைத் தொடர்ந்து சிலுவைசுமக்கக் கூப்பிடுகிறோம்.

இத்தகைய இனவழிப்பை இலங்கையில் செய்யத்தக்க பொருளாதாரவுறவுகள் வளர்ந்து வருவதையும்,அதன் வாயிலாக மாறி வருஞ் சூழலைக் கவனத்தில் எடுத்து, மக்களை ஜனநாயக ரீதியாக இயங்க அனுமதித்துப் புலிகளது இயக்கவாத அராஜகத்தையும் அது சார்ந்த இருப்பு அரசியலையும் கைவிட்டு அரசியல் ரீதியாகப் பிரச்சனையை அணுகுவதற்குப் பல தளத்திலான செயற்பாட்டுக்காக மாற்றுச் சக்திகளை இயங்க அனுமதிக்கும்படி நாம் 2007 இன் ஆரம்பத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டோம். இந்தச் சந்தர்ப்பத்தில் புலிக்குக் காவடி தூக்கியவர்கள், அந்த அமைப்பின் பாசிசத்துக்குமுன் மண்டியிட்டுக் கிடந்து,மௌனித்து அதைப் புரட்சிகரமானவொரு சக்தியாகவும்,விடுதலை அமைப்பாகவும் படம் காட்டியவர்கள்,முள்ளி வாய்க்காலின் கடைசி நிமிடம்வரை "புலிகள் வெல்வார்கள்" என மார் தட்டினார்கள்.இது,இனவழிப்புக்கான ஒத்தூதலுக்குள் வரமுடியாதென எவருரைப்பார்?

சிங்கள அரசு,உலக ஏகாதிபத்தியங்களை ஆதரித்தவர்கள் மட்டுமல்ல புலிகளையும் கண்ணை மூடி ஆதரித்தவர்களுமேதாம் தமிழினவழிப்புக்கு உடந்தையானவர்கள்.நெஞ்சில் நேர்மையுள்ளவர்கள் இது குறித்துப் பேச வரட்டும்.

அதே போல்,இன்றும் இத்தகைய புலி அநுதாபிகளால் ஆதரிக்கப்பட்டுத் தொகுப்புகள் போடப்படும் "கவிஞர்-கட்டுரையாளர்-கதாசிரியர்-செய்தியாளர்" என்ற அடை மொழிக்குள் தன்னை நிறுவிக்கொண்டு, அப்பாவி மக்களைப் புலிப்பாசிசமும்,இலங்கை அரச பாசிசமும் இணைந்து யுத்தத்துள் கொன்று போட்டதை வைத்துப் புனைந்து, அதையே தமிழகவூடகங்களுக்குக் கச்சாப்பொருளாகவிற்கும் தீபச் செல்வனுக்குப் பார்பன ஏடுகளே இன்று பரிசுகள்-கேடயங்கள் வழங்கும்போது அதையே மௌனித்து வரவேற்கும் நியாயவாதிகளுக்குப் பார்பன ஏடுகளது தந்திரம் புரியாத என்ன?

பார்ப்பன நிறுவன ஏடான கணையாழியின் அரசியல் தெரியாத என்ன?

சும்மா விசும்புக்கு வேட்டையாடுவதில்,முள்ளி வாய்க்கால் படுகொலையைக் கண்டிக்கவில்லையென்பவர்கள் முதலில் 2009 இல் வன்னியுத்த  அழிவுகள் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் வாளாதிருந்த யாழ்ப்பாணத்தார் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்து மகிழ்ந்த கபோதித்தனமான அரசியலை விளங்க முற்படுங்கோ!

நாமே,நமது மக்களைப்பலியெடுக்கப் புலிக்கு வக்காலத்துவேண்டி அழிவுக்குக் காரணமாக நின்றோம்.மாறிவரும் சூழலையெல்லாம் தானைத் தலைவரது கவட்டுக்குள் திணித்துவிட்டுத் "தலைவர் காலத்தில் தமிழீழம் மலரும்"என்ற மமதைக்கு என்ன பெயர்?

போதாதற்கு,தமிழ்நாட்டரசியலுள் இணைக்கப்பட்ட இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு எந்த மார்க்சும் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது!அது பலதரப்பட்ட அதிகார அடுக்குகளது நலனோடு சம்பந்தப்பட்டது.அது மட்டுமன்றி இந்தியப் பிராந்தியத்தின் இறைமைக்குட்பட்ட முற்றுமுழுதான அரசியல் சட்டரீதியான செல்வாக்குக்குட்பட்ட இலங்கைக்குள் இந்தியாவென்பது எதையும் செய்யும்-எப்படியும் நடக்கும்.அதைத் தட்டிக்கேட்கும் உரிமையென்பதைக்கூட மக்களுக்கு வழங்காது புலிகள் இந்தியாவின் அரசியலில் எத்தனை மோசடியான நிகழ்வுகளைச் செய்தார்கள்?அதை நொண்டிக் காரணமாக வைத்துத் தமிழ்பேசும் இனத்தையே கருவறுத்த இந்திய ஆளும் வர்க்கத்தின் பிராந்திய ஆதிக்கத் திமிரை வெறுமனவே அ.மார்க்சுக்குள் திணித்துவிட்டு ஒற்றை வரி இலக்கணமெழுதுவது மீளவும், நம்மை அழிப்புக்கிடவே செய்யும்.



[கணையாழி விருது நிகழ்வு:

பேராசிரியர் பஞ்சாங்கம், தசரா, நீதிபதி சந்துரு, ஜெயகாந்தன், கனிமொழி]


முதலில் தீபச் செல்வனை வைத்துப் பிழைக்கும் அரசியலையும்,அதன்வழி நம்மை மொட்டையடிக்க முனையும் இந்திய லொபிகளையும் மார்ச்சையும்தாண்டி நமக்குள் தேடுங்கோ.அப்போது,மார்சின் பாத்திரமும்,தீபச் செல்வன்,மற்றும் இன்னபிறப் பேராளர்களதும் பாத்திரமும் தெரிந்துவிடப்போகிறது.இதைவிட்டு ஒரு தனிநபர்மீது குவிக்கும் அரசியலானது உண்மையான குற்றவாளிகளைக் காப்பதில் முடிந்துபோகிறது.

இதைத்தாம் புலிகளது தமிழீழப்போராட்டத்துள் நாம் செய்துகொண்டோம்.

தமிழ்பேசும் மக்களது உண்மையான குற்றவாளிகளே புலிகள் வடிவத்துள் மக்களைச் சிதைத்துப் பிழைத்துக்கொண்டவின்றைய பெரு வர்த்தகர்களாக மக்களது பணத்தில் மீளவும் தேசியவிடுதலை வியாபாரஞ் செய்யும் பினாமிப் புலிகளென்பதையெவர் பேச முனைகிறார்?

இன்றுவரை,புலிகளது பெருந் தலைவர்களெல்லாம் இலங்கை-இந்திய-சீன நலன்களுக்கிசைவான அரசியலோடு நகரும்போது அந்தப் புலிகளது கலை இலக்கிய கர்த்தாக்களே இந்தியப் பார்ப்பனிய ஊடாகங்களுக்குச் சோரம்போய் மக்களின் அவலங்களை வித்துப் பிழைக்கும்போது அ.மார்ச்சிடமும்,மார்க்சியர்களிடமும் இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு விளக்கம் கேட்கும் அரசியல் அறம் புலி அநுதாபிகளுக்குண்டா? இந்தியப் போலி மார்க்சியர்களை வைத்து முழுமொத்த மார்க்சியப் போக்கையும் சிதைக்க முனையும் திரு விளையாடல் ஆருக்கான அரசியலை முதன்மைப்படுத்தும்?

"ஏன்-எதற்கு" என்ற கேள்வியையே புலிக்கு முன் சமாதி கட்டிவைத்துவிட்டுப் புலிகளது எல்லா நியாயங்களையும் தமிழீழத்துக்காகச் சரியென்ற அரசியலது அறுவடைதாம் முள்ளி வாய்க்கால்.

புலி அழிவின் இறுதி நிமிடம்வரை புலிகளோடு மக்கள் அழிவதையும்,அதே மக்களை இயக்க இருப்புக்காகப் புலிகள் தம்மோடழிக்க வியூகமமைத்ததையும் தட்டிக் கேட்க துப்பற்ற அரசியல் அறத்தின்மீது ஆணி அடித்தபோதெல்லாம் நம்மைத் துரோகிகளாக்கிய இந்த அரசியலே இப்போதும் புலிகளது மிச்ச சொச்சங்களைக் கள்ள மௌனம் சாதித்துக் காத்துக்கொண்டு,மார்க்சியர்கள்மீது பாய்வது வர்க்க அரசியலின் வர்க்க நலனைக் காவுவதென்பதற்கப்பால் இது பிழையான தெரிவுகளை உணர்ச்சி வழி நிகழ்த்தும் கொசிப்பு அரசியலாகும் என்பதைத்தாம் சொல்வதென்று புரிக.

"உலகத் தமிழர் பேரவை" என்றும்,"நாடுகடந்த தமிழீழ அரசு" வென்றும்,இன்னபிற முக மூடிகளது தார்ப்பாரில் மையங்கொள்ளும் மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்கும்,அதையே தென்னாசியப் பிராந்திய நலனைக் காவும் மேற்சொன்ன பிழைப்பு வாதப் புலமைக்கும் நடுவே எமது மக்களது தலைவிதி வியாபாரமாக்கப்படுகிறது.

மக்களது அவலத்தை வைத்து இலக்கிய வியாபாரம் முதல்,முதலீடு செய்யும் நிதி ஆதாரம்வரை நகரும் இந்தக் குருதிக்கறைபடிந்த அரசியலைக் குறித்துக் கேள்வி கேட்பதும்,நியாயமாகப் புலிகளதும்,ஏகாதிபத்தியங்களதும் அரசியலையும்,இந்திய-சீனா லொபிகளையும் தோலுரித்து வைக்கும் அரசியலை முன் வைக்கத் திரணியின்றி நாம் விட்டேந்தித் தனமான அரசியலைக் குழுவாத நெருக்கடிக்கொப்பத் தகவைக்கின்றோம்.

அந்நிய நலனில் எந்தெந்தக் குழுக்கள் தம்மைத் தகவமைத்தனவென்பதற்கு இயக்கவாத மாயைக்கு-தமிழீழக் கனவுக்கு வெளியிற்றாம் பதிலுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
24.02.2013

Dienstag, 19. Februar 2013

இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது!

இன்றைக்கு ,மகிந்தாவின் ஆட்சியே மகத்துவமானது!


ங்கு பார்த்தாலும் இந்திய-சீனா-மேற்குலக அரசுகளதும்,அதன் உளவு நிறுவனங்களதும் முகவர்கள் செய்யும் அரசியல் நாடகமே இப்போது நிலத்திலும்-புலத்திலும் "விடுதலை, சுதந்திரம், சோசலிசம்-புரட்சி,இன ஐக்கியம்-சமவுரிமை" என்று பேசிக்கொள்கிறது.

இவர்களைக் குறித்து மௌனித்திருப்பதென்பது சமீபகாலமாகப் புலிக்குமுன் மண்டியிட்டதற்கு ஒப்பானது.

அப்பாவி மக்களது இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடிய இந்தக் கேடுகெட்ட அரசியல் இப்போது"இன ஐக்கியம்-ஒருமைப்பாடு,இலங்கைத் தேசியம்"என்று கட்சிகட்டி வகுப்பெடுக்கிறது.இதையும் பலர் 80 களில் இயக்கங்களை நம்பிய விட்டில் பூச்சிகளாய் மீள அண்மித்துப் பறக்கிறார்கள்.ஒவ்வொருவரும் தத் தமது விசுவாச அரசியலில் தமக்குள் ஒன்றிணைகிறனர்.

சதிகாரர்களும்,எதிர்ப் புரட்சிக்காரர்களும் சமுதாயத்தில் எந்தத்  தப்பையையும் செய்யத் தயங்காதவர்கள்.தப்பையே மக்களது நலனாகக் கருத்துக் கட்டி மக்களை ஏமாற்றுபவர்களென்பதற்கு வரலாற்றில் மட்டுமல்ல சமீபத்தில் புலிவழியான எமது "விடுதலை"ப்போராட்டமே நல்ல உதாரணமாகவிருக்கிறது.

இந்தப் போராட்டத்தால் உந்தப் பட்ட பல்வேறு குழுக்கள் தொடர்ந்து தம்மை ஊக்குவித்த அந்நியச் சக்திகளுக்கு லொபிக் குழுவாகவே இருக்க முனைகிறது.இதை அம்பலப்படுத்தி மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்லும்போதோ,அந்தவுண்மைகளையும் தம்மைப்போலவே  மாற்றியமைக்கமுனையும் இந்தத் தமிழ்க் குழுக்களது இயக்கவாத அராஜகமானது, மற்றவர்களது தப்பாகத் தமது கடந்த காலத்தை அவர்களது தோளில் சுமத்திவிட்டுப் புரட்சி பேசுகிறது.

குருதிக்கறைபடிந்த மாபியாக்கள் எப்படித்தான் உண்மைகள்மீது சேறடிப்பினும் அது புஷ்வாணமாகிக்கொண்டே வரும்.ஏனெனில்,நாம் மக்களை அண்மித்த அரசியலோடு நகர்பவர்கள்.மக்களை ,இனியும் அந்நியருக்காகச் சாகவிடுவதைத் தடுப்பவர்கள் ,நாம்.




"நம்மிடம்,புரட்சி-புடலங்காயெல்லாம் " கிடையாது.மக்களைப் பலியிடுவதைத் தடுப்பதைத்தவிர நாம் புரட்சி-போராட்டம்,யுத்தமென்று அவர்களது எதிர்காலத்தை நாசஞ் செய்யும் துரோகத்தனமான அந்நிய நலன்சார் அரசியலை மக்கள்மீது செலுத்தும் இயக்கவாத கயமை எம்மிடம் இல்லை!

எனவே,தொடர்ந்தும் இத்தகைய மாபியாக்களையும் அதன் கபட அரசியலையும் கேள்விக்குள்ளாக்குகிறோம்.

இதைவிட்டுப் புலிகளது அராஜகத்தின்முன் மௌனித்திருந்து அவர்களுக்கு கருத்தியல் வலுவும்,அவர்களது அராஜகத்தையும் வளர்த்துவிட்டதைப்போலவே இப்போதும் இருக்க முனைபவர்கள் நம்மைப்பார்த்து"நாப் பிளக்கப் பொய்யுரைத்து" என்று கூறுகின்றனர்.

இங்கே",எதுபொய்-எதுவுண்மை"என்பதைப் புலிகள்மீது   நாம் வைத்த கருத்துக்கள்-ஆய்வுகளிலிருந்து உரைக்கும்போது அனைத்துமே தெரிந்துவிடும்.

இங்கே பேசப்படுவது நமக்குள் இருக்கும்,இப்போதைய சதிக் குழுவான-இரயாகரன் குழு!இது, ,புலிகளது கடந்தகால ஆட்காட்டிகள்,புரட்சியைச் சிதைத்த புலிகளது கைக்கூலிகளென்பதை அவர்களது இன்றைய அரசியலிலிருந்து புரிய முடியும்.தம்மீது வைக்கப்படும் விமர்சனம் மற்றும் தம்மைப்பார்த்துக் கேட்கப்படும் உண்மைசார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்காது மற்றவர்களையும் தம்மைப்போல் புரட்டுக்காரரென நிறுவ எந்தக்  கீழ்மையான வேலைக்கும் போகத்தக்கவர்கள் இவர்கள்.இதனாற்றாம் இந்தக் குழுவானது முகமூடியோடும்,முகமூடியற்றும் எங்கும் அலைந்து திரிகிறது.இக் குழுவுக்குத் தீனிபோடும் அந்நியச் சக்திகள் நமது மக்களை இன்னும் மொட்டையடிப்பதற்கு நாம் துணைபோக முடியுமா?

இவர்கள் புதிது, புதிதாக ஆரம்பிக்கும் குழுக்களைக் கட்சிகளை சந்தேகிக்காது"மக்கள் நலத்துக்கான"அணித்திரட்சியென நம்பும் முட்டாள்த்தனமே இதுவரை எமைப் புலிவழியாலும்,மற்றைய குழுக்கள்வழியாலும் அழித்து, அடிமையாக்கியதென்பதைப் புரிந்தும் நாம் இவர்களது கபட அரசியலுக்கும் மௌனித்து, வாளாதிருப்பது மேலும் ஒரு அராஜகக் குழவின் கையில் மக்களின் தலைவிதியைத் தாரவார்ப்பதாகவே அமையப்போகிறது.

தற்போது நிகழும் அணிச்சேர்க்கைகளை உற்று நோக்குபவர்களது புரிதலில் பல உண்மைகள், எதிர்காலம் குறித்தும் ஓரளவு இனங்காணத்தக்க அரசியல் புரிதல்கள் சாத்தியமாகிறது.இன்று,மக்களைப் பல கூறுகளாக, இனங்கண்ட புலிவழிக் கருத்தியல் தன்னளவில் இலங்கையில் உடைவு காணுந்தறுவாயில் புலத்தில் பிழைப்புக்கான இருப்பாக இது நிலைப்படுத்த முனையும் அரசியலை இந்த அணிச் சேர்க்கை வற்புறுத்துகிறது.படுகொலை அரசியலுக்குள் உந்தப்பட்ட இயக்கவாத மாயை குறித்து எவரும் மீளாய்வு செய்ய வக்கில்லை.இந்த நிலையிற்றாம் நாம் இன்றைய திடீர் புரட்சிகரர்களை மதிப்பீடு செய்ய முனைகிறோம்.இது அவசியமான பணி.

புலிகள் செய்த மக்கள் விரோத அழிவுயுத்த அரசியல் அனைத்தையும் தேசியத்துக்குள்போட்டுத் திணித்து ஏப்பம்விட்டபடி-புலிகளை விமர்சித்தும்-ஆதரித்தும் தம்மைத் தொடர்ந்தும் “புரட்சிக்கரர்” என நியாப்படுத்திக்கொண்டு, இப்போது உலகத்தில் தமிழ் மக்களின் மனங்களோடு இயக்கவாத அரசியலை மீளக் கட்டுவதென்பது கடைந்தெடுத்த துரோகத்தனமானதாகும்.இது,அரசியல் மோசடி!எமது மக்களின் வருங்காலத்தோடு விளையாடும் இந்த அந்நியச் சேவைக்கான “அதிகாரப் போட்டி அரசியலை-புலியினது அழிவு யுத்தத்துக்குப் பின்பான இன்றைய இலங்கைச் சூழலில்-“எந்தச் சூழலிலும் மக்களால் அங்கீரிக்கக்கூடியவொரு மக்கள் கூட்டமாகவே" நமது மக்களது வாழ் நிலையிருப்பது இத்தகைய குழுக்களுக்கு நல்ல தருணமாகவும்-சகுனமாகவும் இருக்கிறது.

இதை நழுவவிட அவர்கள் விரும்பவே இல்லை.எனவே,திடீர் சந்திப்புக்கள் தேசங் கடந்து,கண்டங் கடந்து நடந்தேறுகிறது.அங்கே,மாற்றுக் கருத்தாளர்கள் முதல்" புரட்சிக்காரர்கள் " வரை கூடுகிறார்கள்.இவர்களுக்குள் இடம் பெறுகின்ற மோதல்கள் தமிழ் மக்களது பிரச்சனைகளைச் சொல்லியே நடாத்தப்படுகிறது.அதுவே,இவர்களது எஜமானர்களது இன்றைய வியூகம்.இதன் பயனாக மக்களது பிரச்சனைகளை இவர்களே கையிலெடுத்துத் தாம் அணிதிரள்வதாலும்-கட்சிகட்டுவதாலும் மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டிட முடியுமென உரைப்பதில் மக்களைக் கையாலாகாத கூட்டமாக மறுமுனையில் உரைத்தும் விடுகிறார்கள்!

இஃது, முற்று முழுதாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களையும் அவர்களது உரிமைகளையும் சொல்லி அணிதிரளும் அந்நியக் கைக்கூலிகளது காலமாக இன்றைய பின் போராட்டச் சூழல் நிலவுகிறது.

கடந்த முப்பதாண்டுகளாகப் புலி அரசியல்-போராட்ட முறைமைகளால் தமிழ்பேசும் மக்கள் பெரும்பாலும் இனவாதம் ஊட்டப்பட்ட பொம்மைகளாகவே இருத்தி வைக்கப்பட்டார்கள். இந்தப் பொம்மை விளையாட்டில் பலிகொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் புதைகுழிக்குள் மக்கிய எலும்புகளோடு தமது உறவுகளுக்கு வலியைக் கொடுக்கும்போது,எஞ்சியிருக்கும் மக்களோ தமது வாழ்வுக்கான புதிய மதிப்பீடுகளைப் புலியழிப்புக்குப் பின்பான இலங்கை அரசியலில் கண்டடைய முனையும் இன்றைய தருணத்தில்தாம் மேற்குலக அரசுகள்,இந்திய-சீன அரசுகள் மிக உயர்ந்த அறிவார்ந்த முறையில் அரசியல் செய்கின்றன.

இது,கணிசமான தமிழ் மக்களிடம் ஏற்புடைய உளவியலைப் பலத்தகாரமாகத் திணித்து, உருவாக்கி வருகிறது.இந்தத் தருணத்தில் இதை மக்களது பெயரால் நியாயப்படுத்துவதற்குக் கட்சிகள்,குழுக்களெனப் பன்னூறு வடிவங்களில்”புரட்சி-விடுதலை”குறித்து மீளவும் அறைகூவலிடப்படுகிறது.இது,ஒரு கெடுதியான காலம்தாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2013

2:
===========================================
என்னை மீளவும் பெரிய மனுஷனாக்கும் இரயாகரன் குழு!
============================================
அப்பு,இப்படிக் கடந்த காலத்துள் புலிகள்கூட எட்டப்பர் .கொம் மூலம் "வைகைச் சிறியெனக் கட்டுரை போட்டு" என்னைச் சேறடிக்க முனைந்தனர்.

இப்போது, இரயாகரன் குழுவைத்தொடர்ந்து கேள்விக்குட்படுத்தும் எனக்கு,அந்தக் குழுவினது உறுப்பினனும்,எனது ஊரவனான,நான் பார்க்க அரை ரவுசருடன் இயக்கத்தை வேடிக்கை பார்த்தவனுமான ஒருத்தன் நோர்வேயிலிருந்து இப்படியெழுதுகிறான்.





இதுவெல்லாம் எனக்குச் சின்ன விஷயம்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள்,இப்படித்தாம் சோடிக்க வேண்டும்.ஏனெனில்,நீங்கள் எதிர்ப்புரட்சிகரச் சக்திகளென்பதை இப்படி நிரூபிக்கின்றீர்கள்.

நன்றி,இரயாகரன் குழுவே!.

நான்,எப்பவும் நன்றி மறவாதவன் இரயா.

நீங்கள் தந்த சுளகும்-என்னை இரயில் நிலையம்வரை வந்து இரையில் ஏற்றிய இரயாவை-சிறியண்ணனை என்றும் நன்றியோடு எண்ணிக்கொண்டாலும்,அரசியல் ரீதியான உங்கள் தவறான நடாத்தையை நானென்றுமே மன்னிக்கேன்.அது பரந்தபட்ட தமிழ்பேசும் மக்களது தலை விதியையே மாற்றுவது.அதை,எதுக்காகவும்-எவருக்காகவும் காவு கொடுப்பது மனித நாகரீகத்துக்கே கேடானது தோழா!

அது குறித்து இன்னுமின்னும் அதிகமாக  எழுதுவேன்.

ஏனெனில், நாம் மூன்று இலட்சம் மக்களது உயிரோடு விளையாடியவர்கள்.அதன் இரத்தக்கறை உலர்வதற்குள் மீளவும், சதி செய்கிறோமே,அதைத் தட்டிக் கேட்பதென்பது புரட்சியின் முன் நிபந்தனை தோழர்களே!நடத்துவோமா புரட்சி?


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.02.2013

Sonntag, 27. Januar 2013

" தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!"

தமிழ்த் தேசியத்தின் கோர முகம் இஃது!

புலிகளால் துரத்தியடித்தல்,வெளியேற்றுதல் தமிழீத்துக்காக.

வட புலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான பரிகாரம் எதுவாக இருக்க வேண்டும்?

புலிவழியாகச் செழித்து வளர்ந்த தமிழ்த் தேசியமானது மிகக்கொடிய பாசிசமாகவுச்சம் பெற்றது 1990 களில்.இதன் தார்ப்பார் சொந்த மண்ணிலிருந்து அப்பாவி முஸ்லீம் மக்களை  அவர்களது வேரோடும்,விழுதோடும் பெயர்த்து தெற்கே வீசியெறிந்து எதிர்காலத்தை அழித்தது,தமிழ்த் தேசியம்.

[  The announcement Liberation Tigers of Tamil Eelam (LTTE - separatist rebels fighting for an independent ethnic Tamil state in the north) made on 29 October 1990: All Muslims in Jaffna Peninsula, which included the capital of the war-hit Northern Province (Jaffna), had 24 hours to leave or face forced expulsion and death.]

இது, நவ மனித நாகரீகத்துக்கே எதிரான மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனம்.நாசிகளுக்கு நிகராகத் தன்னை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியத்தின் மிகப் பெரும் மனிதவதை இது.தமிழ்த் தேசியத்துக்கும் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குமான உறவுப் புள்ளியானது சாரம்சத்துள் இனவழிப்பே!

ஆனால்,தமிழ்த் தேசியமோ சிங்களத் தேசியவாதத்தைவிட மிகவும் கொடியதென்பதற்கு -ஒரு இனத்தை அதனது சொந்த மண்ணிலிருந்து 24 மணி நேரத்துக்குள் குடியெழுப்ப முடியுமென்பதற்கும்-சிங்கள இனவாதமே செய்ய முடியாததை இந்தப் பாசிசப் புலிகள் வழி வளர்ந்து பாசிசமாகவுச்சம் பெற்ற தமிழ்த் தேசியத்தின் கோரமுகமாக இந்த முஸ்லீம் மக்களது அவலம் என்றும் வரலாற்றில் பதியப்படவேண்டும்.


இத்தகைய கொடிய நிகழ்வுக்கான(தமிழ்த் தேசியத்தின்வழி புலிகளால் முல்லீம்களது குடி குலைத்தல்,அழித்தல்,கொலை செய்து அவர்களது தாயகத்திலிருந்து வெளியேற்றித் துரத்தியடித்தல்) சமூகவுளவியலை தமிழ்த் தேசியம் பல் நூறு ஆண்டுகால அநுபவப்பட்ட அதன் சாதியவொடுக்குமுறை பண்பாட்டிலிருந்து பெற்றதென்பதே உண்மையாகும்.



வடபுலத்திலிருந்து  வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள்மீது கணிசமான தமிழ்த் தேசியவாத அநுதாபிகள் அன்று வைத்த பழி சுமத்தல்:" தமிழ்த் தேசியத்தைக் காட்டிக்கொடுத்த முஸ்லீம்கள்!"என்ற உரையாடல்-உணர்வு வழியாகப் புலிப்பாசித்தையும்,தமிழ்த் தேசியத்தின் கோர முகத்தையும் அங்கீகரித்து அதை, வளர விட்டுத் தம்மைத் தாமே அழித்திருப்பினும் இந்தத் தமிழினமானது முஸ்லீம் மக்களிடம் பாரிய மன்னிப்பும் நஷ்ட ஈடும் கட்டியாகவேண்டும்.இது அரசியல்ரீதியான சட்டவாதத்துக்குட்பட்ட பகிரங்கமாக இருக்கவேண்டும்.வரலாற்றில் இது பதியப்பட்ட ஆவணமாக என்றும் நிலைக்க வேண்டும்.

அன்று நாசிகள் செய்த இனவழிப்புக்கு நிகரானது இந்த மக்களைத் துரத்தியடித்து அழித்த புலிகளது பாசிசமாகும்.இது,இன்றைய கங்கேரி விக்டர் ஓர்பானுக்கு நிகரானதுங்கூட.அங்கே, சிந்தி - ரோமா மக்களை அவர்களது குடியிருப்புக்குள் வைத்துக் கொலை செய்து அழித்தெரிக்கும் அவலத்துக்கும்,அந்த வலியை நாம் உணர்வதற்குமான நேரடிச் சாட்சியாக யாழ் முஸ்லீம் இனத்தின் அவலம் வரலாறு பூராகத் தொடரவேண்டுமா?

தமிழ்த் தேசியத்தைப் பேசுபவர்கள்,அதை வைத்து ஆட்சி,அதிகாரத்தைப் பெறும் கட்சிகள்-குழுக்கள்,இவர்களின் பின்னே யாழ்ப்பாணத்தில் பெரு வர்த்தகம் புரிந்து கோடிகோடியாயச் சம்பாதிக்கும் வர்த்தகர்களுட்பட இந்த அவலத்துக்குப் பதிலளிக்கவேண்டும்-நஷ்ட ஈடு கட்டி அவர்களது வாழ்விடங்கள் புனர் நிர்மாணிக்கப்பட்டு அவர்களை வாழ வைக்க வேண்டும்.வடபுலத்தில் மீளக் குடியேறும் முஸ்லீம் மக்களுக்குக் குறிப்பாக இளையவருக்கு அது அவர்களது தாயகமெனும் உணர்வு வரும்வரை வாழ்சூழல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இதற்காக இலங்கை அரசானது தமிழ்த் தேசிய வாதிகள்,கட்சிகள்,தலைவர்கள்,ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் புலித் தலைமைகளுட்பட வடமாகாண வர்த்தகர்கள் மற்றும் தமிழினத்திடமிருந்து நஷ்ட ஈடு பல கோடி அறவிட்டு இந்த மக்களுக்கு வழங்கியாக வேண்டும்.

கூடவே,இவ்வளவு அழிவுக்கும் மூல காரணமான சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையும் அதுசார்ந்த அரசுகளுமென்பதால் இலங்கையை ஆளும் கட்சிகள் தமக்குள் இணைவுகொண்டு ஒரு சட்டம் இயற்றியாக வேண்டும்.அது,சிங்கள,தமிழ்த் தேசியத்தின் கொடியவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இனத்துக்கு அடுத்துவரும் நூற்றாண்டுவரை எந்த இறைவரியும் அறவிடக்கூடாது.

குறிப்பாக அவர்கள் வரிவிலக்களிக்கப்பட்ட இனமாகவே சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.

இதுவே,அவர்களது அழிவுகளுக்கான நீதீயும், அரச நியாயமுமாகும்.

இத்தகைய நிலையை ஏலவே நாசியத்தால் பாதிகப்பட்ட இனங்கள் உலகில் பெற்று வாழ்கின்றனர்.

இலங்கை அரசை இது நோக்கிச் செயற்பட வைக்கும் பாரிய தார்மீகப் போராட்டத்தை இஸ்லாமிய மக்கள் தொடர்வதற்குத் தமிழினம் உறுதுணையாக நின்று, தனது வரலாற்றுத் தப்புக்கான தண்டனையை அவர்களுக்கு நஷ்ட ஈடுகட்டி, உலகில் நாமும் நியாயமானவர்கள்தாமென நிரூபித்தாகவேண்டும்.

இதற்கான அரசியல் ஊக்கத்தை கருத்தியற்றளத்தில் அனைவரும் ஏற்று முன்மொழிவதே முஸ்லீம்களுக்கான உடனடித் தீர்வாகும்!!!

இதைவிட்ட அனைத்தும் ஏமாற்று.அது முற்போக்குச் சக்திகளாற்கூட முன்வைக்கும் நிலையிலும்கூட!

ப.வி.ஸ்ரீரங்கன்
27.01.2013

Samstag, 26. Januar 2013

சபிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் நண்பர்களே?

இலங்கைச் சூழலுக்கும்,முரண்பாட்டுக்குமொப்ப இந்த மாயை வேறுபாடாகிறது.தமிழகத்துக்குச் சினிமா,இலங்கைக்குப் புரட்சி!



"புரட்சி,விடுதலை" குறித்த மாயைகள் தகர்க்கப்படவேண்டும்.



முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் "புரட்சி" வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்"புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்", இதுவரை தொடர்ந்த "தமிழீழ"ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.



இது, சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும்கூடவே புலிகளது போராட்டச் செல்நெறிகளையும் சிறு பிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் மீளவும் இந்திய-மேற்குலக மற்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் முன்னகர்வுக்குக் கட்டுப்பட்டுக்கிடக்கும் நிலைக்குள் உள்வாங்கப்பட்டுச் சிதைக்கப்படும் "இயக்கவாத மாயைக்கு" ஒரு முன்னிலைச் சோஷலிசக் கட்சியும்  இப்போது அறிமுகமாகிறது.அதே போலிகள்,புரட்டுவாதிகள் இத்தகையவொரு சூழலைக் கையகப்படுத்தி அதை, ஆதரிப்பதில் தமது கடந்தகாலச் செயற்ப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைப்பதில்புலத்திலும்-நிலத்திலும் வெற்றியீட்டியுள்ளனர்.




இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை,புரட்சி,விடுதலையெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் "புரட்சி"க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும்,மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்."தமிழீழப்" போராட்டத்தின் அதே சுத்துமாத்து,சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.இந்த மாயைக்குள் தள்ளப்படும் சமூக உணர்வானது நமது கடந்த காலத்தையும்,போராட்டத் தோல்விகளையும் அது குறித்த சரியான மதிப்பீடுகளையும் உருவாக்கும் காலத்தை வெருட்டி,மீளவும் இயக்க வாத மதயைக்குள் திணிப்பதில் வெற்றி கொள்ளப்படும் மனிதவாழ்வு-சமூக அசைவியக்கம் நம் மக்களைத் தொடர்ந்தும் சிதைக்கும்.இது,தமிழ்நாட்டுச் சினிமாவுக்கேற்பத் தயாரிக்கப்பட்ட தமிழகத்து மக்களது மனித மாதிரிகளைக்கொண்டிருக்கும்.இத்தகைய வாழ்வு நிலை மனித மனமானது ,எதைக் குறித்தும் அலட்டிக்காதவொரு மாயைக்குட்பட்ட சமுதாயமாக இருத்திவைக்கப்பட்டுத் தொடர்ந்து சிதைக்கப்படும்.


இலங்கைச் சூழலுக்கும்,முரண்பாட்டுக்குமொப்ப இந்த மாயை வேறுபாடாகிறது.தமிழகத்துக்குச் சினிமா,இலங்கைக்குப் புரட்சி!



இத்தகைய "முன்னிலைச் சோசலிசக்கட்சி,புதிய ஜனநாயகப் புரட்சி" மாயைகொண்டு அடிமைப்படுத்தும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இன்றைய புலம் பெயர் குழுக்களது இயக்க வாத மாயையாகும். இதனால், இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.



எமது நலத்தில் விருப்பமற்ற சக்திகள் இத்தகையவொரு அரசியல் அமுக்கத்தை அன்று திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்து,அது செயலூக்கம் பெறும் காரணியாக முற்றிய நிலையில், ஒரு இனவழிப்பு யுத்தத்தின் மூலம் புலிகளது அழிவைத் துரிதப்படுத்தி மக்களை அடிமைகொண்டது முள்ளி வாய்க்காலில்.


இந்த இராணுவத் தீர்வுக்குப்பின்பான வியூகத்துள் முகிழ்க்கப்பட்ட திடீர் மக்கள் எழுச்சிகள்-மாணவர்கள் கலகமெல்லாம் எமது மக்களுக்குள் ஊதிப் பெருக்கப்பட்டு அதே இயக்கவாத மாயையின்வழியாகப் "புரட்சி", முன்னிலைச் சோசலிசக் கட்சி வழியாகக் கூடிவருமெனக் கருத்தாடி, நம்மைத் நாமே காவு கொள்ளும் பாரிய பழியாக விரிந்து மேவுகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வலுவாகப் பாதித்து, அந்த இனத்தை வேரோடு சாய்த்துவிட முனைவதும்,எதிர்காலத்தில் எமது இனத்தை அரசியல் அங்கவீனர்களாக்குவதற்குமான முன் தயாரிப்பாகவின்று அரசியல் அரங்குக்கு வந்துள்ளது.





இந்த ஆபத்தைப் புரட்சிகரக் கட்சியாக வர்ணித்துப் புலத்து புரட்டு வாதிகள் குறிப்பாக இரயாகரன் குழு, நான் ஏலவே சொன்னதுபோல அபாயகரமான சக்தி-இயக்கவாத அராஜகவாதிகள்.இத்தகைய இயக்கவாதக் கயவர்கள்மக்களைத் தொடர்ந்து மொட்டையடிப்பதில் அவர்களது உரிமையைச் சொல்லியே அந்நியருக்காகச் சாகத் தூண்டுவதை நாம் பார்வையாளர்களாகவிருந்து பார்க்கப்போகிறோமோ அல்லது தடுக்கப் போகிறோமா?



இதை நாம் மிக முக்கியமாக உள்வாங்கி,எமது மக்களின் உரிமைகளுக்கான நியாய வாதங்களைக் கருத்தியல் தளத்தில் விரிவாக ஊன்றியாக வேண்டும்!கடந்தகாலப் போராட்டத்தையும்,அதன் தோல்வியையும்,அந்தத் தோல்விக்கான இயக்கவாத மாயயையும் ஆராயவேண்டும்.



அன்றுமின்றும் சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தத்துக்கு நாம் பல வடிவங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இங்கே,புலிகளதும்,ஏனைய இயக்கக் குழுக்களது இந்திய-அந்நிய அடியாட்ப்படைச் சேவக அரசியல்-போராட்டப்பாதை அதை மிகவும் சாத்தியமாக்கியதென்பதை நாம் அறியாதவரை எமக்கு விமோசனமில்லை.இத்தகைய நிலையிற்றாம்,நமது மக்களைத் தொடர்ந்து காட்டிக்கொடுக்குமொரு சதி அரசியலும்,புரட்டும் தொடர்ந்து அந்நியச் சக்திகளது கைக்கூலி இயக்ககங்களால்-குழுக்களால் "மக்கள் உரிமை,புரட்சி-விடுதலை" யென நமக்குள் அரங்கேற்றப்படுகிறது.இதிலொன்றுதாம் இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சியும், அதன் புரட்டும்!



இது குறித்த ஆரம்பப் புரிதலுக்குத் தன்னும் நம்மைத் தயார்ப்படுத்தாத சூழலைச் சபிப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் நண்பர்களே?




ப.வி.ஸ்ரீரங்கன்

26.01.2013

Blog-Archiv