ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் நம்பிக்கை வைப்போம் ;
இலங்கையின் தேசியவின முரண்பாட்டுக்ககான தீர்வுத் திறவுகோல் இந்தியாவிடமேதாம் - நம்புவோம்!
எமது மக்களும் ,மண்ணும் அந்நிய இனங்களிடம் அடிமையாக்கப்பட்டு எதிர்கால அரசியவாழ்வு இருண்டுகிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.நாம் நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் பல்வேறு அகமுரண்படுகள் (பிரதேசவாதம்,சாதி; பெண்ணடிமை ;குறுந்தேசியவாத ஒடுக்குமுறை (இஸ்லாமிய மக்களைப் பூண்டோடு கிள்ளியெறிந்த...) வர்க்க ஒடுக்குமுறை போன்ற பல்வேறு தளைகளே காரணமாகவிருக்கின்றன.இந்த அகமுரண்பாட்டை முழுமையாகக் கையகப்படுத்தி நம்மை ஒடுக்குபவர்கள் தேசிய அரசுகளாக நம்மைச் சுற்றி தம்மை நிறுவியுள்ளனர்.நமது அக முரண்பாட்டை நமக்குள் இருக்கும் அதிருப்பதியாளர்களைப் பயன்படுத்தியே நம்மை வடக்கும்,கிழக்குமாகப் பிளந்த சக்திகள்(இந்திய -இலங்கைக் கூட்டும் மற்றும்,அமெரிக்க ஏகாதிபத்தியம்) நமது மக்களை முழுமையாகத் தமது அடிமைகளாக்கி வைத்துள்ளனர்.நாம் இந் நூற்றாண்டிற்றாம் மிகவும் மோசமானவொரு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்.இதற்கான முழுப்பொறும் புலிவழியான போராட்டச் செல்நெறிக்கே!
இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி நமது மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதில்முள்ளிவாய்க்காலுக்குப்பின்பான ஈழத்தமிழ் மக்களின் அரசியலானது சமீப காலமாக வலுவிழந்து விவேகமற்று நகர்கிறது.இந்த நகர்வானது நமது மக்களை அரசியல் மயப்படுத்தி ,ஐக்கியமாக்கியமாக்கியவொரு வலுவான வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ள மறுத்து எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான எதிர்ப்பு அரசியல் நகர்வை பிழைப்புவாத வியாபார யுக்திகளைக்கொண்டு நசுக்கி வருகிறது.இத்தகைய குழிபறிப்புக் கட்சிவாத ,வர்த்தக நோக்கு நிறைந்த அரசியலானது நம்மை அரசியற்றலமைதாங்க - வழிநடத்தத்தகுதியற்ற கையாலாகாத இனமாக உலகின் முன் நிற்க வைத்திருக்க முனைகிறது.இதன் மூலம் தமது கட்சிசார்ந்த வர்த்தக நலன்களை அந்நிய சக்திகளது சலுகைகளின்வழி அடையமுனைவதில் ஈழத்து மக்களது தேசியவிடுதலையை -உரிமைகளை தமது வர்த்தகப்பண்டமாக அந்நியர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, அது மூலதனச் சுழற்சியில் ஒருவிதக் கச்சாப்பொருளாக -பண்டமாகப்பட்டு பரிவர்த்தனையில் பல தமிழ்ப் பிழைப்புவாதிகளைச் செல்வந்தர்களாக்கி உள்ளதென்றவுண்மை பல தமிழ் அரசியல் வாதிகளால்-ஊடககங்களால் மறைக்கப்பட்டு நாம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளோம்.இன்றைய தமிழர் பேரவை மற்றும் மரபார்ந்த தமிழ்த் தேசியக்கட்சிகள், கூட்டமைப்புகள் மற்றும் இயக்கவாதத் தலைமைகள் இதற்கு வெளியில் இயங்கவே இல்லை!
புரையோடிப்போன எதிரிகள்:
எதிரிகள் பல இரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்த 13வது திருத்தச்சட்ட நிர்வாக அலகு மிக அண்மைய நாட்டின் விருப்பத்தின்-ஆர்வத்தின் வெளிப்பாடாக விரிந்தது.அதைக் கூடத் தமது வர்க்க நலனின் பொருட்டுத் தமிழ் ஆளும் வர்க்கத் தரகு மூலதனம் சிங்கள மூலதனத்தோடு பேரமிட்டுத் தமது வர்த்தக மூலதனமாக்கிய அரசியலானது சிங்களப் பெருந் தேசியவாதத்துக்கும் -பௌத்த மதவாதத்துக்கும், அதன் இருப்புக்கும் பின் கதவு வழியாகப் பச்சைக்கொடி காட்டியதென்பது வரலாறாக நீள்கிறது.
நீண்டகாலமாகத் தமிழ்பேசும் மக்கள், தமிழர் மகாசபை -தமிழ்க் காங்கிரஸ்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியக் கட்சிகளால் சிங்கள இனத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.சிங்களத் தரப்புத் தன்னை அணு, அணுவாக அரசியலிலும்,கலாச்சாரத் தளத்திலும் பின்பு பொருளாதாரத்திலும் வளர்த்தெடுத்து வரும்போது, இவர்கள் தமிழர்களை வெறும் உணர்ச்சிவழி சிந்திக்கும் கூட்டமாகச் சீரழித்தார்கள்.பின்ளைய நிலையிலோ ஆயுதக் குழுக்களின் ஈனத்தனமான கொலை அரசியலிலுக்குத் தமிழ் பேசும் மக்களின் அற்ப சொற்ப அரசியலுரிமையும் பலியாக்கப்பட்டு, அது ஆயுத தாரிகளின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டபின்முள்ளி வாய்க்காலில் பிரபாகரனோடு பல்லாயிரம் தேச பக்த இளைஞர்கள் பலியெடுக்கப்பட்டு இன்றுவரை ஈழத்துத் தமிழினம் ஏமாற்றப்பட்டுவருகிறது.இத்தகைய ஏமாற்று அரசியலுக்கு இதுவரை எமது மக்களின் பல இலட்சம் உயிர்கள் இரையாக்கப்பட்டுள்ளது! இதுதாம் இலங்கைத் தேசத்தின் தமிழர் அரசியலது இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் வடு!
இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது கட்சிவாத நலன்களை முதன்மைப்படுத்தியும்,கட்சிகளது இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால் நமது மக்கள் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு முன்னாள்ஆயுதக் குழுக்கள்மற்றும் புதுப்புதுக் கூட்டணிகள் யாவும் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் சமர்பிக்கும் தீர்வு ஆலோசனைகள் அதுசார்ந்த நிர்வாக அலுகுகள்,கோரிக்கைகள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.
எமது தேசிய அபிலாசைகள்:
நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது பிரதேசப் பிளவுவாத நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது. தமிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் ஒரு அரசால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள். இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.இங்கு பிள்ளையான் குழுவின்வீழ்ச்சி இதுசார்ந்தவொரு சிறு இடைவெளியை நமக்கு இட்டிருக்கிறது.அந்த இடைவெளியில் முதலில் வடக்கும் ,கிழக்கும் அரசியல் ரீதியாக மீளவிணையும் அரசியல் ஐக்கியம் கட்டப்படவேண்டும்.
நம்மை,நமது வாழ்வைக் கேவலமான கும்பல்களாக்க முனையுமிந்த பிரதேசவாதப் பிளவுவாத அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை பன்முகக் கட்சிகள்-அமைப்புகள்,ஜனநாயகமெனும்போர்வையில் செய்து முடித்தனர். இவர்களே தனிநபர் துதிபாடி,கேவலமான பாசிஷ்டுக்களை தமிழரின் பிரமுகர்களாகவும்-தலைவர்களாகவும்,மகாமேதைகளாகவும் ஒளிவட்டம்இப்போதும் கட்டுகிறார்கள். இப்டித்தாம் வரதராஜப்பெருமாள் - பிள்ளையான்போன்ற கொடிய ஆயுதாரிகள்அரசியலில் இந்திய -சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு அடியாளாக மேலெழுந்தனர்.
திரு.சம்ப(ம)ந்தனோ அன்றிச், சங்கரியோ அல்ல டக்ளஸ் தேவாநந்தாவோ பிரபாகரனுக்கு மாற்றான மக்கள் சார்ந்த அரசியலைத் தரப்போவதில்லை! இவர்களும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அந்நியரோடு சேர்ந்து காரியமாற்ற மீளவும் தொடங்கிவிட்டார்கள். இவர்கள், எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் ஜனநாயம்,சுதந்திரம்,இடைக்கால நிர்வாக மாகாணசபை,13வது திருத்துச் சட்டப் பரிந்துரைகள் யாவும் வெறும் பூச்சுற்றலாகும்.
பல்முனை ஒடுக்குமுறையும்,
அவைகளின் அமுக்கம்:
இன்றோ பல்வேறு அரச - பொருளாதார ஜந்திரத்துக்குள் மாட்டப்பட்டிருக்கும் தமிழ்,முஸ்லீம் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து புரட்சிகரமான படையணியாக மேலெழுந்தே தீரும்.அதை வழிநடத்தும் புரட்சிகரமான கட்சியாகப்பரிணாமிக்கத்தக்க புரட்சிகரமானவொரு அரசியற்பாதை காலத்தின் தேவை.நாம் கால் நூற்றாண்டாகப் போராடியவொரு இனம்.தமிழ்சினிமாவுக்குள் தலை புதைத்த விடுபேயர்கள் நாம் இல்லை என்பதை நிருபிக்கும் ஒரு தலைமுறையானது தனது தகமையை உலகெங்குஞ் சென்று வளர்த்துள்ளது.இந்த இளைஞர்கள் அந்நிய வியூகத்துக்குத் தோற்றுப் போனால் நாம் எப்போதுமே விடுதலை அடைவது சாத்தியமே இல்லை.
மாற்றுத் தலைமையின்
அவசியம் உணரப்பட்டதா? :
பண்டுதொட்டு தமிழ் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள்.ஆயுத முனையிலும்,கருத்தியல் முனையிலும் அவர்களின் உரிமைகள் ஏலம் விடப்படுகிறது.இந்த ஈனத்தனத்தை எல்லா இயக்கங்களும் திறம்படச் செய்துமுடித்திருக்கிறார்கள்.தமிழர்களை இராணுவத்தோடு சேர்ந்தழித்த ஈ.பி.ஆர்.எல:எப், ஈ.பி.டி.பி. புளோட் கும்பல்கள் ஒரு புறமாகவும்,மக்களால் அறியப்பட்ட பெரும் இந்தியக்கைக்கூலிபள் மறுபுறமாகவும்எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலிலெமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியது.இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!
ஈழப் போராட்டத்துக்குப் பின்பான அரசியல் மக்களின் இருப்பிடங்களை விட்டுத்துரத்தியடித்தபோது,அவர்களின் வாழ்வாதாரத்தச் சொத்தைத் திருடிக் குவித்துள்ள செல்வங்களும் அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் புலியெதிர்ப்பு முகாமெனக் கூறப்படும் சிங்கள அரசின் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.
இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.
இந்த இழி அiசியல்சூழலுக்குள் சிக்குண்ட மக்கள் தம் உயிரைத்தினம் இராணுவப் பாசிசவொடுக்குமுறைக்கு,ஆயுதக் குழக்களின் அராஜகத்துக்கு இரையாக்கி வருகிறார்கள். மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான போராட்டங்களால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?
மக்களை அணிதிரட்டி இத்தகையச் சதி அரசியல் சாணாக்கியத்தை-இந்தியாவின் அத்துமீறிய ஆதிக்க அரசியல் காய் நகர்த்தலை முறியடிக்கும் எந்த முன்னெடுப்பும் இதுவரைப் நம்மால் செய்து முடிப்பதற்கு மாற்றுச் சக்திகளுக்கும்,மக்களுக்குமான மிக நெருங்கிய உறவு பாழ்பட்ட நிலையில் இருக்கும்போது நமது மக்களின் எதிபார்ப்பு அபிலாசைகளைச் சிதைத்த அரசியலின் இன்றைய விடிவு இதுவா?
இன்றைய இந்தத் தருணத்திலும் மக்களின் நலனை முதன்மைப் படுத்தும் ஜனநாய விழுமியங்களை வென்றெடுப்பதற்கான எந்த முன்னெடுப்பும்மாற்றுச் சக்திகளால் நிகழவில்லை.இதற்கானவொரு "பொதுச் சூழலை"எந்த அதிகார மையங்களும் எமது மக்களுக்குத் தந்துவிடவில்லைத்தாம், எனினும் இன்றைய சூழலில் இத்தகைவொரு மாற்றுத் தலைமை மக்கள் சார்ந்து மக்களால் கட்டப்படவேண்டிய நிலையென்றுமில்லாவாறு அவசியமானது.
எமது பரம எதிரியான சிங்கள அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.மகிந்தாவைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்த அதிகாரவர்க்கமானது அதனிடத்தில் இருத்தப்பட்ட மரபார்ந்த அந்நிய ஏவற் கட்சிதாம் யு.என்.பி. இப்போது மைத்திரி தலைமையில் தமிழ்க் கட்சிகளை ஏமாற்றிய பின்பும் அவர்களை மக்கள் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளியவர்கள் இந்தச் மாற்றுச் சக்திகளுக்குள் இருந்த அந்நிய எடுபிடிகள் இல்லையா?
எனவே, ஒடுக்கப்படும் சிறுபான்மையின மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.மாற்றுச் சக்திகள் தமது கட்டமைப்பை மக்களோடு மக்களாக்க நிற்கும் காலத் தேவையோடு பாரிய எதிப்பு அரசியலைச் செய்தே ஆகவேண்டும். இல்லையேல், தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டு மீளவும் மக்களை ஏமாற்றியழித்து ,நமது போராட்டவுணர்வையும்,ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அரசியலையும் பூரணமாகக் கருத்தியல் ரீதியாக அழித்து அநாதவராக்கப் போகிறது.
அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு, தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத் தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது. இதன் மறுவிளைவாகத் தமிழ்ப் பிழைப்வாதக் கட்சிவாதத் தலைவர்களும் ,கட்சிகளும்,போலிக் குழுக்களும் தமிழ் மக்களை வேட்டையாடும் சூழல் மெல்ல வலுவாக்கப்பட்டு நிரந்தரமாகப்படுகிறது.
இந்தியாவின் அழிவு அரசியலுக்கு முகவர்களாக மாறிய தமிழ் அரசியல் சாக்கடைகள்,ஆயுதப் பயங்கரவாதிகள் மீதமுள்ள அப்பாவி மக்களின் சொத்தை சட்டப்படி கொள்ளையிடவும் தமது ஏவல்-கூலிப்படையளுக்கு நிர்வாகப் பலத்தைத் தேடுவது மக்களின் உரிமையல்லவே.இதற்கு எந்த சட்டச் சீர்திருத்தமும் தேவையில்லை.அப்பாவிச் சிறார்களை போரின் கொடுமையால் அநாதைகளாகி,பெற்றோர்களின்றிச் சிறார்கள் காப்பகங்களில் தமது வாழ்வைப் போக்கும்போதே அவர்களைக் குண்டுபோட்டுக் கொன்ற வன்கொடுமைச் சிங்கள அரசை உலகத்துக்கு நியாயமான அரசாக இனம் காட்டும் அரசியலைத் தமிழ் மக்களின் விரோதிகள் செய்து முடிக்கும் தருணமே வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபையாகும்!
இந்தத் துரோகமானது அன்று மலையகத் தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது.இன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களையும் அதே நிலைமைக்குள் இட்டுச் செல்லும் அரசியலை இந்தியாவின் ஆலோசனையின்படி செய்து முடிக்கும் புலித்தனமான அரசியலாகப் புலி எதிப்புக் கூட்டம் நடாத்தி முடித்தல் நமது சாபக்கேடா அல்லது நமது மக்களை ஒடுக்கிய புலிகளின் பாதகமான அரசியல் நீட்சியின் விளைவா?
"மக்களே!
அந்நிய மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
முன்னிலைச் சோசலிசக் கட்சியின் "முன்னணி " உறுப்பினர் பழ ரிச்சாட்டின் உரையாடல்கள் மூலம் சில மாதங்களுக்குமுன் புலம் பெயர்"புரட்சிக் காரர்கள்" தமக்குத் தோதானவொரு சாதகமான சூழலைப் புலத்தில் பதியம்போட்டனர்.அதற்காகப் பழ ரிச்சாட்டைப் பயன்படுத்தி முன்னிலைச் சோசலிசக் கட்சியுடனான தமது கூட்டுக்குப் பற்பல விளக்கம் கொடுத்தனர். அப்போதெல்லாம் பழ ரிச்சார்ட் இலங்கையில் "பெரும் புரட்சிகரமான" இளைஞர் என்ற பாணியுள் வைத்துத் தமக்கான அரசியலைப் "புலத்துப் புரட்டுப் புரட்சி"க் காரர்கள் தகவமைத்தனர்.
பலதரப்பட்ட குழறுபடிகளுக்குள் சிக்க வைக்கப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியலானது மீளவும் ,இலங்கை -இந்திய நலன்களுக்கான அரசியல் -அணிக் கட்டல்களுக்கொப்பவே பலதும் பத்துமாகப் பிளவுகள்-பிணைப்புகளெனவொரு தீங்கான அரசியற் சூழலை எமக்காக்கிய வரலாறு தமிழ் ஆயுத - இயக்க மாபியாக்களது வருகையோடும்-இருப்போடும் சாத்தியமாச்சு!
இனியென்ன?
முன்னிலைச் சோசலிசக் கட்சியின் அரசியற் சூத்திரத்தைப் பக்கம் பக்கமாக நாம் எழுதியிருப்பதால் அதன் மீது குற்றம் சுமத்தி வெளியேறிய பழ ரிச்சார்ட்டின் கூற்றுக்கள் குறித்து பெரிதான எந்த முரண்பாடுகளும் எழுவில்லை!ஏனெனில் ,அதுதாம் உண்மையானது.முன்னிலைச் சோசலிசக் கட்சியின் அரசியல் வருகையுள் இதை ஏலவே இனங் கண்டவர்கள் நாம்.
ஆனால் ,வழைமயாகப் புலத்துப் "புரட்சி மாபியாக்கள்"தம்மால் தோழரெனத் தோளிற் தூக்கிவைத்துக் கொண்டாடிய ஒரு சில மாதங்களிலேயே பழ ரிச்சார்ட்டைத் தூற்றுவதில் "முன்னிலைச் சோசலிசக் கட்சியின் அரசியலை நியாயப்படுத்துவதென்பது" அக் கட்சியின் எசமானர்களது நலனைக் குறித்து இயங்குவதென்றே பொருள்.
இத்தகைய நடாத்தையிற்றாம் ஆயுதக் குழக்கள் இந்திய இராணுவத்தோடு கப்பலேறி, இந்தியாவில் பதுங்கியதும் பின் முள்ளி வாய்க் கால் அழிப்புக்குடந்தையான கையோடு இந்தியாவின் நலனைப் புறந் தள்ளாத அரசியலை வகுப்பெடுப்பதெனவும் ஒரு அரசியலை நமக்குள் பரப்பும்போது, அதே திசையில் இந்திய -இலங்கை ஆளும் வர்க்கங்களால் தகவமைக்கப்படும் "புட்சி-புரட்சிகரக் கட்சி" யாவும் ஒரே திசையில் வெவ்வேறு தரப்பை உள்வாங்கிச் சிதைப்பதில் உச்சம் பெற்ற காலந்தாம் இது!
இதுள் ,வேடிக்கை என்னவென்றால் கலையரசனோ முள்ளிவாய்க்கால் முடிவுவரை இலங்கைப் பிரச்சனை குறித்து ஒரு துரும்பைக்கூட எழுத முடியாத பெருஞ் சந்தர்ப்பவாதியும் , போலிப் புனைவுக் காரனுமாய் இருந்தார்.
இப்போது புலியழிவுக்குப் பின் "புரட்டுப் புரட்சி"பேசுவதுதாம் நமது காலத்தின் அதிக நகைச் சுவை!
இதைக் கடந்து போனோமானால் சில வற்றை இப்படிப் புரிந்தே தீரவேண்டும்:
முள்ளி வாய்க்காலுக்குப்பின் தமிழ்பேசும் மக்களுக்குத் தீர்வு சொல்லும் சிங்கள அரசினதும்,இந்தியாவினதும் செல்வாக்குக்குட்பட்ட கட்சிகள்-இயக்கங்கள்,அவர்கள் பின்னே நிற்கும் “புரட்சி” வர்த்தகர்களுட்படத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய அந்நியச் சக்திகளை மற்றும் சிங்கள மையவாதத்தைக்கொண்டுதிரியும் சிங்களப் பெரும்பான்மை இனத்தைக் கேள்விக் குட்படுத்தாத இந்தத் திடீர் தமிழர் புரட்சி வாதிகள்”புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகள்”, இதுவரை தொடர்ந்த “தமிழீழ”ப்போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திராணியற்றவர்கள்-போலிப் புரட்சிவாதிகள்!இயக்க வாத மாயயைத் தூண்டியே தமிழ்பேசும் மக்களுக்குள் தமது எஜமானர்களுக்குத் தோதானவொரு அழிப்புச் சூழலையுருவாக்குபவர்கள்.
இந்தப் புரட்டுவாதிகளைக் கவனியுங்கள்.அதே இயக்கவாத அணுகுமுறை,அதே மாயை, புரட்சி, விடுதலை யெனக்கூவிக்கொண்டே நமது மக்களை முள்ளி வாய்க்காலில் காடாத்தியது போதாதென மீண்டும், அந்நியருக்காக வீதிகளில் சாகத் தூண்டும் புலம் பெயர் “புரட்சி”க்காரர்கள் உலகு தழுவிப் புரட்சிப் படங்காட்டிக்கொண்டே ஒரு மாயயையுருவாக்கி மக்களது அடிப்படையுரிமைக்கான கோரிக்கைகளையும், மக்களையும் காலத்துக்குமுன் புரட்சி பேசிக்காட்டிக்கொடுத்துக் குதறுவதிலும்,குருதி குடிப்பதிலும் மிக வேகமாகக் காரியமாற்றுகின்றனர்.
”தமிழீழப்” போராட்டத்தின் அதே சுத்துமாத்து, சூரத்தனம்,அந்நியருக்கான அடிமைப்படுத்தும் சதிப் புரட்டுப் புரட்சி-கோரிக்கைகள்.இந்த முன்னிலை சோசலிசக் கட்சியின்பின் அணிவகுக்கும் சமூகவிரோதிகள் நமது மக்களைத் தொடர்ந்து கருவறுக்கும் காலத்தை நமக்குக் கட்டியும் கூறுகின்னரென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இது மிகக் கெடுதியான இயக்க-புரட்சிகரக் கட்சி மாயையாகும்.
எனவே “புரட்சி,விடுதலை” குறித்த மாயைகளை" அகற்நவேண்டிய பணியே இப்போது பிரதான பணியாகும்-நாம் அந்நிய ஆர்வங்களுக்காக இந்த மாபியாக்கள் போடும் சதிப் புரட்சி வலையுள் மாட்டப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது உயிரை அவர்கள் மாய்துக்கொண்டே இருப்பர்!
இக் காலமானது ஒடுக்குமுறையாளர்களது நலனுக்கான அரசியலாகவும்-போராட்டங்களாகவும்-புரட்சிகர முன்னெடுப்பாகவும்"ஆளும் வர்க்கங்களது அடியாட் படைகளே கட்சி-குழுக்கள்-அமைப்புகளை"அமைத்து வைத்துக்கொண்டு சமூகத்தின் அனைத்துவகை அரசியற் பரிணாமத்துள்ளும் புகுந்து விளையாடுகின்றனர்.
இவர்களை நம்பிச் செல்லும் இளைஞர்கள் தொடர்ந்து பழரிச்சார்ட்டைப் போல் பழி வாங்கப்படுவினர்.
பழ ரிச்சார்ட்டின் இன்றைய தெரிவுகூட ஆளும் வர்க்கத்தின் நிகழ்சிக்குட்பட்ட அரசியல் தெரிவாகவே சமூகத்தில் பொது அரசியல் பின்னப்பட்டுள்ளது.
எனவே-
அந்நியச் சக்திகளுக்கு-அவர்களது நலனுக்காகத் தெரிவாக்கப்படும் எந்த அரசியல் முன்னெடுப்பும் மக்களுக்கானதல்ல!
பெரும் பகுதி மக்களை வேட்டையாடும் இந்த சூழலில் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு ஒடுக்கப்படுவதை அடுத்த பல ஆண்டுகளுக்கு எவராலும் -ஏன் அந்த மக்களாலேயே முடியாத காரியமாகவிருக்கும்.
திரு. மனோக் கணேசன்மீதான தாக்குதலைக் கண்டிப்பதென்பது...
இலங்கையானது சட்டத்துக்குட்பட்ட ஆட்சியை முற்று முழுதாக இழக்கும் அபாயத்தைக் கட்டியங் கூறும் தாக்குதல்கள் ,சனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குவதன் தொடரில் பலதரப்பாக நடாத்தப்படுகிறது.பத்திரிகைகள்-மாற்று எண்ணங்கள், எதிர்க்கட்சிகள் மக்கள் உரிமைக்கான குரல்கள் மீதான தாக்குதலாக விரிகிறது, இது.
சமீபத்தில் உதயன் பத்திரிகைமீதான தாக்குதலுக்கு விளக்கமளித்த டக்ளஸ் தேவாநந்த "உதயன் பத்திரிகைக் காரர்கள் அகதி அந்தஸ்துக் கோருவதற்காக இத்தகைய தாக்குதலைத் தாமே நடாத்துகின்றனர்"என்றார்.ஆக, இலங்கையிலிருந்து சனநாயகத்துக்கான குரல்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டியவொரு நிலையில் இருப்பதையும் ,அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதையும் அவர் ,குறிப்பாலுணர்த்துவதுவரை டக்ளசே இத்தகைய நிலவரத்துக்கு ஒர் நாள் பலியாவதும் நடக்கவே போகிறது!
அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களுக்கான "மக்கள் மன்றங்கள்-அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் மீதான இத்தகைய தாக்குதலைக் கண்டிப்பதென்பது இலங்கை அரசின் இராணுவவாதத்துக்கெதிரானதென்பதைவிட ,மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்துள் மனோக் கணேசன் போன்றவர்களை இல்லாதாக்கும் முயற்சிக்கு எதிரானதென்று நாம் அறை கூவுவோம்!..
இலங்கையின் இன்றைய போக்கு மிகவும் வன்மம் நிறைந்தது.சட்டரீதியான அரசென்பது சட்டரீதியான குடும்பச் சர்வதிகாரமாகவும், அதைத் தூக்கி நிறுத்தும் இராணுவக் காட்டுத் தார்ப்பாருமாச்சு.இது ,பாகிஸ்த்தானில் முஷ்ரப் போன்றே மகிந்தாவையும்-சீனாவினது தயவில் இயங்க அனுமதித்திருப்பினும் -இலங்கை அரசானது பெரும் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதென்பது தமிழ்பேசும் மக்களைத் தோற்கடித்த பெருமிதத்தின் ஆட்சியாக இருப்பதால் -அது பலதரப்பட்ட முறையில் மக்களுக்கெதிரான திசையில் சட்டத்துக்குப் புறம்பானவொரு சர்வதிகாரியின் ஆட்சியாக முன்னேறுகிறது.
இஃது,படுமோசமான அரசியல் பின் விளைவுகளை மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தும்போது இலங்கையானது இராணுவச் சர்வதிகாரத் தலைமைக்குள் வீழ்ந்தே போயிருக்கும்.இத்தகைய இலங்கைக்கு வெளியிலிருந்து இந்தச் சர்வதிகார ஆட்சியை எதிர்த்து சட்டரீதியான ஆட்சியையும்,மக்களுக்கான அரசியல் கட்சிகளையும்,தலைமைகளையும் மீள, இயங்க வைப்பது மிக அவசியமானது.ஆனால்,இன்றைய உலகவொழுங்கில் இது, இல்லாதவொரு அரசியல் வெளியையே தாராளமயப் பொருளாதார வினை ஏற்படுத்தியுள்ளது.இங்கேதாம் பெரும் தொழிற் சங்க வலுவுடைய தலைவர்கள் கூடத் தாக்கப்படுவதும்,அரசியலிலிருந்து தொலைத்துக் கட்டப்படுவதும் நடக்கிறது!
நாளை ,இதன் முனைப்பு,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்வரை பாய்ந்து அவர்களையெல்லாம் கொன்றே முடிக்கும்.இதுதாம்,இத்தகைய இயக்கவாதிகளால் முண்டுகொடுக்கப்பட்ட குடும்பச் சர்வதிகாரத்தின் தலைவிதி.இதன் பின்னே பெரும் வலுவுடையவொரு இராணுவம் முன்னைய இலங்கைக்குள் நிலவாத வலுவுடன் ஒரு சர்வதிகாரக் குடும்பத்தையும்,அவர்களது கட்சியாதிக்கத்தையும் காக்கிறது.இது,அரச முதலாளியத்தைக் குடும்பச் சொத்தாக்கியதிலிருந்து ஆயுதம் தாங்கியவொரு குழுவினது கையில் இலங்கையின் அனைத்து அதிகாரமும்-பொருளாதார முனைப்புகளும் குவிந்து போயுள்ளதென்பதையும் நாம் உணரவேண்டும்.
வன்னியில் கொத்துக் கொத்தாக மக்களை அழித்த இலங்கையைக் கேட்டுவைத்த சுகனார்: தூ...
=======================
Sugan Kanagasabai:
=======================
ஈழத்தமிழர்களே இப்படியான காட்டுமிராண்டித்தனமான முட்டாள்களின் ஆதரவு உங்களுக்குத் தேவைதானா ! உங்களுடைய எல்லாவகையான இழப்புகளையும் ,துன்பங்களையும் இப்படியான ஒரு செயல் எதுவுமில்லாமல் செய்துவிடும் ,அனைவரும் கண்டிக்கவும் அவரிடம் மன்னிப்புக் கேட்கவும் வேண்டும் நாம் தயாரா ? தமிழக புத்தியீவிகள் இந்த தமிழ் பாசிசத்தை கண்டிக்க முன்வரவேண்டும் !
(தமிழகம் வந்த புத்த பிட்சுவை விரட்டியடிக்கும் தமிழ்த்தேச பொதுவுடமைக் கட்சி தமிழர்கள் .... )
Sugan Kanagasabai : பாரீர் இதுதான் தமிழர் நாகரீகம் தூ ! தூ !
==============================================
முட்டையில் மசிர் :1
==============================================
இலங்கையில் புத்த சியோனிசவாதமானது இனவழிப்பைச் செய்யுமளவுக்கு உயர்ந்து, இலங்கையின் சிறுபான்மை இனங்களை அச்சப்படுத்திச் சமுதாயக் கொலையைச் செய்யுமொரு குறியீட்டு அரசியலாகவும் இருக்கிறது.புத்த மதப் பிக்குகள் இலங்கையின் இனவாத அரசின் மிகக் கடுமையான இனவாதப்போக்கின் வடிவமாகவும்-உந்துசக்தியாகவும் இருக்கின்றனர்.இலங்கைச் சிங்கள இனத்தின் வரலாறே புத்த மதவாதச் சியோனிசத்துள் மாண்டு போய்ப் புத்தமதமென்பது இனவொடுக்குமுறையின் குறியீடாகவும்,புத்த பிக்குகள் இனவாதிகளாகவும், ஒடுக்குமுறையாளர்களாகவுமே புரியும் சூழலுக்குள் தம்மை வளர்த்தெடுத்துத் தமிழ்பேசும் மற்றும் , சிறுபான்மை இனங்களது மிக முன்னேறிய எதிரிகளாகத் தம்மை இலங்கையில் வடிவமைத்ததன் பயனே தமிழகத்தில் இத்தகைய தாக்குதல்கள் உணர்வு வழிப்பட்ட எதிர்ப்பாக இருக்கிறது.
இதையொட்டிக் கண்டிப்பதைவிட முற்பகல் செய்தால் பிற்பகல் விடியுமென்பதையும் நினைவிலிருத்தும்போது வினைவிதைத்தவர்கள் அறுக்கிறார்களென்பதும் உண்மையாகிறது.
இதை, இலங்கைப் புத்தமத சபை புரிந்துவிட்டடால் இலங்கையில் பிரச்சனைகளது புள்ளி மதங்கடந்து, அரசியல் ரீதியாகத் தீரும் சந்தர்ப்பம் வாய்க்கும்.
இதைப் புரியாமல் தமிழர்கள்கள் மீது காறி உமிழ்வது, அரசியல் புரியாதமாதிரி நடிக்கும் பிழைப்புவாதிகளுக்கே உரியது.
எது எப்படியிருப்பினும் ,இத்தகைய தாக்குதலை செய்யத் தூண்டும் உளவியலைத் தோற்றுவித்தவர்களே இலங்கைப் புத்த பிக்குகள்தாம்.எனினும்,புத்தபிக்குகள் என்பதே இனவாதிகள் எனும் குறியீடாகிய இலங்கை வரலாற்றிலிருந்து மனிதர்களாக நாம் முன்வைப்பது :"இத்தகைய தாக்குதல்கள் அநாகரீகமானது.இதைச் செய்யும் உணர்வு அரசியலை விட்டொழியுங்கள் மக்களே!;கட்சிசார் அரசியல் இலாபங்களுக்குப் பலியாகதீர்கள் இளைஞர்களே!".
==================================
முட்டைக்குள் குஞ்சு :2
==================================
தமிழக மாணவர் கலகம் திறக்கும் அரசியல் இலக்கு:உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை உள் நுழைக்கும் தந்திரம்!
இன்று ,உலகமெல்லாம் பிரச்சனைகள் பரந்துபட்ட மக்களுக்குப் பொருள்வளத்தைச் சமாந்தரமாக மேலிருந்து கீழ் பங்கீடு செய்யாமால் கீழிருந்து மேலே குவிக்கப்படும் செல்வத்தால் மையங்கொள்கிறது.இது, பலதரப்பட்ட பிரச்சனைகளையும் பகுதி, பகுதியாகவும் தொட்டுச் செல்கிறது.இதைத் தடுப்பதற்காக ஆளும் வர்க்கங்கள் பொலிசைப் பயன்படுத்துவதும் அதை அராஜகக் கும்பலாக்குவதும் தெரிந்ததே.எனினும் ,பொலிசின்மீது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பாத ஆளும் வர்க்கங்கள் , மெல்லச் சிவில் நிர்வாகத்துள் இராணுவத்தை நுழைக்க விரும்புகிறது.
இது, மேற்குலக உயர்ந்த ஜனநாயகத் தேசங்களிலேயே இப்போது விவாதத்துக்கு வருகிறது.இதைத் தொடர்வதற்காக உள் நாட்டில் கலவரங்களைச் செயற்கையாகச் செய்யத் தூண்டும் ஆளும் வர்க்கமானது ,இதற்காகக் கணிசமான மக்களையும் பலியாக்கி வருகிறது.அவர்களது உண்மையான பிரச்சனைகளை மையமாக வைத்து இத்தகைய தகவமைப்பைச் செய்கிறது.
தமிழ்நாட்டு மாணவர்களது கலகத்தின் வழி ,இத்தகையவொரு ஆபத்தை நாம் உணருகிறோம்.இது,தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் தொடரும் கதைதாம்.இத்தகைய கலகத்தின்வழி இராணுவம் உள்ளகக் குடிசார் நிர்வாகத்துள் மெல்ல நுழையும்.
நிரந்தரமாகவே, மக்களைக் கண்காணிக்கும் காவலரங்குகளை ஆங்காங்கே நிறுவிக்கொள்ளும்.இது,மக்களது இயல்பான வாழ்வைச் சிதைக்கும் பல புள்ளிகளைத் தொடும்.
சட்டரீதியாக இராணுவத்தை, உள்ளகச் சிவில் நிர்வாகத்துள் நுழைத்துப் பொலிசினது செயற்பாடுகளைத் தனி இராணுவ நிலைக்கு உயர்த்தும் பொறியைப் புரிவதென்பதுதாம் இனிமேலான சனநாயகத்துக்கான கோரிக்கையாக இருக்கும்.
அசோக்கின் குறிப்பு : ஷோபா சக்தி -சில எதிர்க் குறிப்புகள்!
இந்தத் தருணம் வரை,பெரும்பாலும் ஒரு விஷச் சூழலுக்குள் நாம் மூழ்கிச் செல்கிறோம்.புலிகள் தமது இயக்க-வர்க்க நலனுக்கொப்பத் "தமிழீழ"ப்போராட்டஞ் செய்தபோது அஃது,மக்கள் விரோதமாகவே நகர்ந்தது.
அதைத் தட்டிக்கேட்ட நம்மையெல்லாம் எட்டப்பர்கள் என்றார்கள்.எச்சரித்தார்கள்-நேரடியாக ஜேர்மனியப் பொலிசுக்கு முன்பாகவே கைத் தகராறுக்கும் வந்தார்கள்.எமது படத்தோடு அவதூறு விதைத்தார்கள்.இதுவே,இரயாகரன் மீதான எமது விமர்சனம்(புலிப்பினாமி-அந்நிய ஏஜென்டு)-கற்றன் நசனல் வங்கிப்பணம் குறித்த குற்றச்சாட்டு,மற்றும், அவர்களது முன்னணிக்கான அறிக்கையில் குறித்த சுய நிர்ணயஞ்சார் சரியான கருத்தையொட்டித் (" 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) " ) தற்போதைய திரிப்பையும் இனங்காட்டி விவாதத்தை-பழியை நாம் கட்டுரைகளாக எழுதியதற்கு அவர்கள் தந்த எதிர்க் கருத்தாடல் "சரவணை ரங்கனின் கொலைக் குடந்தையான கதை" எனும் அவதூறு.பின்பு, அதை அவர்களது இணையத்திலிருந்து(இனியொரு டம்மி) கழற்றி எனக்கு ஆலோசனை இப்போது!.இவர்களது முதல் அவதூறைக் ஸ்க்கிறீன் சொட்டிலும்,அச்சிலிலும் சட்ட நடவடிக்கைக்காக ஏலவே எடுத்துவிட்டேன்.
சோபாசக்தி குறித்து, 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிதர்சனம்.கொம் அவதூறு பரப்பியது. சோபா சக்தியை வரதராஜப் பெருமாளோடிணைத்து அவதூறுதெழுதித்(சோபா சக்தி இந்தியா சென்று, வரதராஜப் பெருமாளைச் சந்தித்தது,என்பதானதன் அர்த்தம்: வரதராஜப் பெருமாள் இந்திய அரசியல்-பொருளியல் நலனை இலங்கையில் நிலைப்படுத்தும் ஒரு அரசியல் செயற்பாட்டாளரென்பதும்,அவரது தலைமையில் தமிழ்பேசும் மக்களது நலனைக் காயடித்து இந்தியா தனக்கான பொம்மை அரசை நிறுவியதும் வரலாறு.இதன் தொடர்ச்சியாகச் சோபாசக்தியும்,ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தலைவர் வரதாரஜப் பெருமாளும் மீள,இந்திய நலனது அரசியலை இலங்கையிற் தகவமைப்பாதான குற்றச்சாட்டை நிதர்சனம் வைத்தபோது) துரோகியென்றபோதும் நாம் அதை எதிர்த்து அகதிப் பதிவில் மறுத்து (அவதூறை) எழுதிக்கொண்டோம் (18.02.2007).இன்றும்,எமது பதிவு[ http://srisagajan.blogspot.de/2007/02/blog-post_18.html ] இருக்கிறது.பாசிசப் புலிகளது மனித விரோத ஊடகமான நிதர்சனத்தை வரலாற்றிலிருந்து அவர்கள் அழித்துவிட்டனர்.இதை, பாசிஸ்டுக்களது நடைமுறையென்று வரலாற்றில் நாம் கிட்லர்,முசோலினி வழியில் மட்டுமல்ல புலிகள் வழியாகவும் புரிய வேண்டும்!
அரசியல்ரீதியான செயற்பாட்டை,அதுசார்ந்த கருத்துக்களை முகங்கொடுக்க முடியாத புலிகளும்,இயக்கவாத மாயையும் இத்தகைய "அவதூறு அரசியலுக்கு" விதையிட்டது. இதன் முன்னோடிகளாக நாம் எஸ்.பொன்னுதுரையின் "நற்போக்கு இலக்கிய" முகாமுக்குள் இணைப்பையிட முடியும் கருத்தியற்றளத்தில்!
தமிழ்ச் சமுதாயத்துக்கே இருக்கக்கூடிய பிரத்தியேகமான குணாம்சங்கள் சில இத்தகைய வகையாறாவுக்குள் நமது "ஆச்சிகள்" வகை அரசியலாகத் தனிப்பட்ட உறவுகள் வட்டத்துள் பல் நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருப்பெற்றுக் கொண்டதைச் சமூகவுளவியலாளர்கள் இலகுவாக இனங்காணமுடியும்.இஃது,ஆண்டான் அடிமை-நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்கள் என்பதை நாம் புரிந்தாகவும் வேண்டும்.
இதன் வளர்ந்த கிளைபரப்பிய விருட்ஷத்தின் நிழலோ சுயமுரண்பாட்டை விலக்கிய அந்நிய முதலாளிய இறக்குமதிக்குட்பட்ட இலங்கைச் சமூக அசைவியக்கத்துள் நமது எதிர்கால அரசியலது வெளியையே மூடி இருட்டாக்கிவிடுமோவென அச்சப்படவேண்டியிருக்கிறது.
இந்தச் சமுதாயத்துள் இலட்சக்கணக்கான உயிர்களை இந்தப்போக்கால் நாமெல்லோரும் கொலைசெய்தோம்.
நாலுபேரைக் காதலித்து ஏமாற்றிய மனி பஸ் கொண்டக்டரைக் கம்பத்தில் கட்டிப் பொட்டிட முனைந்த நாம் சார்ந்தவொரு இயக்கத்தின் நட்பு இயக்கத் தோழர்களுக்கு அது குறித்து வகுப்பெடுத்த எமது அரசியல்(1983 ஆம்வருட இறுதி) கண்முன் வருகிறது.அதை,இப்போது சிந்திக்கிறோம். நாம்,ஆரம்பத்து அவசரத்தைவிட இப்போது மிக மோசமான கட்டத்துள் இருக்கிறோம். அதைவிடப் பல் பத்து வீதம் நாம் பின் தள்ளப்பட்டுவிட்டோம். இஃது,விவேகமான அரசியல் இல்லை!
எதன் பெயராலும் இதை நியாயப்படுத்த முடியாது!
இரயாகரன் பாணியே புலம்பெயர்வுச் சூழலில் மிக மோசமான நடாத்தையாக இதைச் சாதித்துக்கொண்டது.கலைச் செல்வனது மரணத்தின் பின்புகூட அந்தத் தோழன்மீது விதைத்த அவதூறைக் குறித்து நாம் வருந்தியுள்ளோம். இது குறித்து இராயவோடு பேசியிருக்கிறோம். எமது குரலொலிப் பதிவுகள் அவரிடம் இன்னும் இருக்கிறது.
இப்படியாக, நமது கால அரசியற் சாக்கடையுள் நாம் புழுவானோம்.இது,இயக்கவாத மாயையின் பொருட்டு எல்லோருக்கும் தலை சீவியபோது நாம் "பொடியள் ஏதோ செய்கிறாங்கள்" என்று தட்டிக் கொடுத்தோம்.பின்,இதன் நீட்சியுள் உயிர் நீத்தவர்கள் இலட்சக்கணக்கானபோது நமது உரிமைகளையே நாம் இழந்தோம்.இந்த அரசியலானது ஒரு பெரும் அமைப்புக்குள்ளேயே கூட அதற்கெதிரான எதிரிகளை உருவாக்கி வைத்து, இலங்கை அரச இராணுவ வாதத்துக்கு வெற்றியளித்தது.இவர்கள்தாம் இன்று, இந்த அரசியலுக்கான நன்றிக்குட்பட்ட இலங்கைக்குள் இலங்கை இராணுவவாதத்தின் பிதா மக்களால் கவனிக்கப்பட்டு,வீடு,வளவு வழங்கப்பட்டுப்"புலிகளுக்கு மறுவாழ்வு"அளிக்கின்றோமென உலகுக்குப் பறைசாற்றப்படுகிறது.இந்த அரசியலது தெரிவு மேற் சொன்ன உளவியலது எதிர் திசையூக்க நகர்வென்பதை எவரும் மறுத்தொதுக்க முடியுமா?
இந்த அரசியலது தெரிவின் மீளுருவாக்கத்தை நாம் தொடருவோமா அசோக்?
இது,இப்படியே தொடருவதற்கான புள்ளிகளே தனிநபர்கள் மீதான தீராத பகையாகவல்லவா தொடர்கிறது?
இதன் புள்ளியை அழித்துவிட்டு, மக்களது நலத்தின்மீதான கரிசனையான அரசியலுள் மக்களுக்கெதிரான சக்திகள்மீது கவனத்தை திருப்பி விவேகமான அரசியலைப் புரியுஞ் சந்தர்ப்பத்தை இல்லாதாக்கலாமா?அந்நிய நலன்களுக்காக அவர்களிடம் பணம் வேண்டிவிட்டுப் அவர்களது முகவர்களாக-பிழைப்பவர்களாக நாம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டி விவாதிப்பது வேறு.இந்தப் பாணியில்(பாலியல்நடாத்தை) தனிநபர் சார்ந்த "தூயவாத" அரசியல் வேறானது!சோபாசக்தியோ,இல்லைச் ஸ்ரீரங்கனோ,அசோக்கோ என்.ஜீ.ஓ.க்களிடம் காசுவேண்டிக்கொண்டு அவர்களது லொபிகளாக இயங்கினால் அதை மக்களது நல்வாழ்வு சார்ந்தும்,அவர்களது விடுதலை சார்ந்தும் அம்பலப்படுத்துவது அவசியமானது.இந்த ஆபத்தைக் குறித்து அசோக் பேசும்போது அதுள் முரண்பட எமக்கெதுவுமில்லை!.
சோபாசக்தி மீதான இந்த விமாசனம் நியாயமான அரசியலாக எமக்குப்படவில்லை!
நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.நாம் எவருமே "தூயவர்கள்" இல்லை.அத்தகயை தூய்மை வாதமானது மக்களது சமூக விடுதலைக்கெதிரான சீரழிவு அரசியலின் இருப்பை மீளக் கட்டியம் கூறவதென்றே நாமுரைப்போம்.இது, குறித்து மேலும் விபரிக்க வேண்டியதில்லை!
எனவே,சோபாசக்தி குறித்து எழுதப்பட்ட இந்த குறிப்பின் உச்சமான வெளிப்பாடானதன் அரசியலை நாம் மறுக்கிறோம்.நாம் தோழமை சார்ந்து இயங்கும் புள்ளியையை மெல்ல அழித்துவிட்டு தனித்தவில் அடிக்க முனையும் சூழல்தாம் எதிரிவர்க்கத்துக்கு அவசியமானது.அதைத் திட்டமிட்டு நகர்த்திய இயக்கவாதமானது இறுதில் நமது விலங்கை எவரெவரோ செய்து நமக்குப் பூட்டிவிடும் அரசியலைத் தந்துவிட்டுத் தொடரும் இத்தகைய "அவதூறு அரசியல்" இலக்கில் இன்னுமெத்தனை தலைகளையுருட்டுவோம்? தலித்துவ முன்னணி,எதிரிகளோடு தமது நலத்தை இணைத்திருப்பவர்கள்,தனிநபர்கள் பலர் இலங்கைப் பாசிசப் போக்கைத் தாம் கொண்ட "கொம்யூனிச"ப் பார்வையின்வழி மெல்ல ஆதரிப்பவர்கள்,இத்தகையவர்களோடு என்றும் தோழமைகொள்ள முடியாது.ஆனால்,சோபாசக்திக்கு இது பொருந்துமா?அவர்,எந்த எதிரி வர்க்கத்தோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்?வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியலே அடிப்படை.எனவே,எதிரி வர்க்கத்தோடிணையும் அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிரானது.எனவேதாம், டக்ளஸ் கூறும் "விடுதலை-சமத்துவம்" குறித்துக் காறியுமிழ்ந்து அவரது வர்க்க நலனையும் அவரே ஆளும் வர்க்கமாக மாறிப் பல்லாயிரம் கோடி மக்கள் சொத்தைப் பதுக்கிய புதிய ஆளும் வர்கத்தோடிணைந்தைதக் குறித்துப் பேசுகிறோம்.இவரோடிணையும் சுகனைக்கூட இதன் பொருட்டே அம்பலப்படுத்துகிறோம்.ஆனால்,சோபா சக்தியை இத்தகைய போக்குக்குள் இனங்காண முடியுமா?
அரவிந்தன்,அப்பாத்துரையோ,சோபசக்தியோ அல்ல ஸ்ரீரங்கனோ பாலியல் ரீதியான நடாத்தையில் தூய்மை வாதப் பொதுப்புத்திக்கு எதிரான திசையிற்றாம் பிராயாணிக்க முடியும்.அது,எமக்கு மட்டுமனாதல்ல இப்புவிப்பரப்பிலுள்ள அனைத்து மகான்களுக்குமே பொருந்தும்.இதன்வழியாக "அரசியல்"புரிவதைவிட சமகால அணிச்சேர்க்கை-கட்சி கட்டும் அரசியலெனத் தொடரப்படும் மக்கள் விரோத அரசியற் புள்ளிகளை இலக்கு வைத்து அரசியல் புரிவது அவசியம்.இது,தோழர் அசோக்குக்கு நன்றாகவே புரியும்.அவர்,மிகப் பெரும் அமைப்பின் மத்திய குழுவுறுப்பினராகவிருந்தவர்.அவருக்கு நாம் வகுப்பெடுப்பது எமது நோக்கமல்ல!மாறாக, இந்த வகைக் குறிப்பை மறுப்பதே எமது இலக்கு!
இஃது,மக்கள் நல அரசியலறதுக்கு அப்பாற்பட்ட"தூய்மைவாதப் பொதுப் புத்தியின்" தெரிவு. இதை,அமைப்பாண்மையை எதிர்பார்த்தியங்கும் எவரும் ஏற்க முடியாது.
அசோக் இக் குறிப்பை "மனசாட்சியின்படி" நீக்காதுபோயினும்,நமது தார்மீக அரசியல் இலக்கின் அடிப்படையில் நீக்கியாகவேண்டும். இதுவே, தனிநபர் உரிமையின் மிகவுயர்ந்த அறமும் கூட.