நெல்லுக்கு இறைத்த நீர் வாய்கால் வழிலோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம.!; இங்கே கொண்டுவரப்பட்டுள்ள விவாதத்தை யாருடைய வாய்கால் வழிக்கும் திசைதிருப்பி விரும்பியபடி அனுபவித்துப்பார்க்கலாம.; இலக்கியமென்பது காலத்தின் கண்ணாடியென கட்டுரை மட்டும்தான் எங்களுக்கு எழுத் தெரியும். ஆனால் காலத்தையும் காலத்தின் வாழ்ந் மனிதர்களையும் கணக்கிலெடுக்கத் தவறிவிடுகின்றோம். காலத்தின் கண்ணடியாகவும் தான் வாழ்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பாகவும்; அடையாளமாகவும் விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் சொல்லிவிடுகிறது
கசகறணம் என்பதை யார் எப்படி வேண்டமானாலும் புரிந்து கொள்ளலாம்.//
விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா? நாவல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன? மதுவந்தி, யாழ்ப்பாணம்.
'ஷோபா சக்தி படித்துவிட்டேன். அது பயங்கரமான கசகறண அனுபவமாயிருந்தது.
ஒரு நாவலில் அல்லது கதையில் கதைசொல்லி வட்டார வழக்கைக் கையாள்வது கதைசொல்லிக்கு ஒரு வகையில் வசதிதான். அந்த வசதியை நான் பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன். கதையின் மடிப்புகள் அறுபடும் போதும், தாவிச் செல்லவும், முன்னே பின்னே கதையில் காலங்களில் ஊடாடவும் வட்டார வழக்கு வசதியானதுதான். முக்கியமாக வட்டார வழக்கு கதைக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழக்குகிறது. ஆனால் வட்டார வழக்கில் கதை சொல்வதில் ஒரு எல்லையுமுண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும்.
வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா.
வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால். வட்டார வழக்கால் நாவலுக்கு உருவாகும் ஒருவித நம்பகத்தன்மை நாவலை இறுக்கமாகக் கட்டியமைப்பதாலேயே சாத்தியமாகும். நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது. - ஷோபா சக்தி
P/S :ஏல்லா நாடுகளிலுமுள்ள மொழியை கற்றுக்கொள்ளவும் வட்டாரவழக்குகளைப் புரிந்துகொள்ளவும் முடிகின்ற யாழ்பாணத்தாருக்கு கிழக்குமக்களின் மொழியை புரிந்து கொள்ளமுடியவில்லை என்பது எவ்வளவு பொரிய புலுடா?
இந்த விமரிசனத்தை விமல் பேளினில் நடந்த உரையாடல் அரங்கில் 27.11 2011 மிகத்தெளிவாக முன்வைத்தார் இதுக்குள்ள வடக்கும் கிழக்கம் மீள இணையவேணும் என்கிறகோசம் வேற! - By Annam Sinthu Jeevamuraly
**
நெல்லு+புல்லு:
ஒரு தேசியவினத்தின்மீதான சிங்கள அரசினது திட்டமிடப்பட்ட இனவொடுக்குமுறையின் வெளிப்பாடுகளினூடாகப் பாதிக்கப்பட்டது முழுத் தமிழ்பேசும் மக்களும்தாம்.அது மலையகத்தவர்களாகவிருந்தாலென்ன,இல்லை இஸ்லாமியர்களாகவிருந்தாலென்ன சிங்கள அரசினதும்,அதன் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தினதும் திட்டமிடப்பட்ட இனவழிப்பின் உச்சம்தாம்.இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குள்ளே நியாயமுறும் எதிர்ப்புப் போராட்டங்களது தேவையானது அவர்களது இருத்தலுக்குரியதான வெளியுள்,அந்தச் சிறுபான்மை இனங்களுக்குள் நசுக்கப்படும் விளிம்பு நிலை மானுடரது குரல்கள் இன்னொரு தரமாக இருமுனைப்பட்ட அதிகாரகங்களைத் தமது வாழ்வுக்குள் சந்திக்கும் திசைகளை,ஒன்றுடனொன்று பொருத்திவிடுவதால் அகவொடுக்குமுறையானது புற ஒடுக்குமுறையைவிடக் காத்திரம்தாம்.
தரப்படுத்தல்,என்பதும் அதைக் காரணங்காட்டித்தாம் யுத்தம் எழுந்ததென்பதும் ஒரு ஓரத்திலிருக்கும் நிலைமைகளுக்கு(...)லொபியாகும் தகுதிகள் உருப்பெற்றதன் பார்வைகளாகத் திசை திருப்புதலும் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை நீர்த்துப்போக வைக்கும் பெருங்கதையாடலாக்கச் சாதியத்தைக் கைலெடுத்த இலங்கைப் பாசிச அரசினது வியூகமாக இனங்காணும்போது,இவற்றை வைத்துப் பொதுப்படையான யாழ்ப்பாணத்து மேலாதிக்கமென(தமிழ்ச் சமுதாயத்தின்அக ஒடுக்குமுறை) வர்ணிக்கப்பட்டு ,அரசியல் கருத்தாக்கமாக உள்வாங்கப்படும் செயற்பாட்டுக்கு வலுச் சேர்பதில் பல புரட்டுக்கள் தமிழ்பேசும் மக்களது தன்னுரிமைக் கேள்விகளுக்குள் மலிந்திருக்கிறது.இப்போதைய நிலவரப்படி தமிழ்பேசும் மக்களது பாரம்பரியமான ஐதீக நிலப்பரப்புகளைத் திட்டமிட்டுத் தட்டிப் பறிக்கும் குடியேற்றங்கள் நாளொருவண்ணம் நிகழ்ந்தே வருகிறது.
இதுள்,யாழ்மைய வாதம்-யாழ்ப்பாண மேலாதிக்கம் என்பதன் தொடரில் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் வலுவைச் சிதைப்பதிலும் மையங்கொண்டியங்குகிறது!.தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறும் இடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களது வாழ்வாதாரத்துக்குப் பயன்படும் கடலும் சம்பந்தப்பட்டது என்பதையுங் கவனமாகப் பரிசீலித்தோமானால், அத்தகைய போராட்டங்கள் அந்த மக்களிடமிருந்து எழாது தடுப்பதற்கும்,இஃதொரு நல்ல வியூகமாகவே யாழ்ப்பாண மேலாதிக்கம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதைக்கடந்து, இன்றைய பிரச்சனைகளை மேலோட்டமாகப் பார்க்கும் கருத்து நிலைகளைத் தாழ்த்தப்பட்ட மக்களது அரசிலுக்குள் திணிப்பதில் தற்காலிக"அபிவிருத்திகள்-சமூக மேம்பாடுகள்"என அவர்களை அணைத்தபடி இனவாத அரசு வெற்றிகரமாகத் தன் இலக்கை எட்டும்போது,சோபாசக்தியினது கூற்றை அப்படியே யாழ்ப்பாண மேலாதிக்கமென வகுப்பெடுக்கும் ஜீவ முரளியிடமிருந்து சோபாசக்தி சொன்னதான கருத்தைப் புரிந்துகொண்டோமானால்,அஃது ஒரு தனிப்பட்ட மனிதரது இலக்கிய அழகியற் பார்வையாகிறது.அந்தக் கருத்தைச் சொன்ன நபர் யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் உறுப்பிராகவும்,அதைப் பிரதிநிதிப்படுத்துபவராகவும் இவர்கள் பார்ப்பதுங்கூட ஒருவகையான பிரபலப்படுத்தலுக்கான வியூகம்தாம்.இதை பிறதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
இப்போது சோபாசக்தி சொன்னதைவிட மிக மோசமாக வெங்கட் சாமிநாதன் தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சொன்னதையும் ஞாபகப்படுத்திக்கொண்டமோனால்(தமிழுக்கு இலக்கியம் இல்லை.அது சகாரப்பாலை வனத்தின் உணர்வுகளைச் சொல்லும் நிலையில் இருப்பதென...)இந்த யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் அண்ணன் பார்ப்பனியமென வகுப்பெடுக்கப்படலாம்.
நமது நிலைப்பாடு,தமிழ் இலக்கியத்தின்மீதான சமகால அழகியற் கொள்கைகள்,தத்துவார்த்தப்புரிதல்கள்.இலக்கியமென்பது மனித வாழ்வில் இரண்டாவது இயற்கையெனச் சொல்லப்பட்டபின் வரலாற்றின்-சமுதாயத்தின் கண்ணாடி அடியுண்டு போய்விட்டது. இதுதாம், இயற்கை வாதச் சொல்விளையாட்டை வேறுறொரு பாணியில் முறியடிக்க விரும்பியது.டி.எஸ்எலியாட்டையும்,அவரது கோட்பாட்டுருவாக்கத்துக்குத்(இலக்கியக்கொள்கை) துணை நிற்பதான"மனிதர்கள் தமது அனுபவத்துக்குட்பட்ட புரிதல்களின்வழி தொடர்ந்து சிந்திப்பதன் வாயிலாக சமகாலப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து எழுதுவது படைப்போ-கத்தரிக்காயோ" என்பதையுந்தாண்டி , நான் பீட்டர்.வி.சிமா [Peter V.Zima]குறித்த புரிதலின்வழி [ http://www.amazon.de/Literarische-%C3%84sthetik-Methoden-Literaturwissenschaft-Uni-Taschenb%C3%BCcher/dp/3825215903/ref=sr_1_4?s=books&ie=UTF8&qid=1322951270&sr=1-4 ]படைப்பிலக்கியமானது அகவயப்பட்ட அனுபவத்தின்வழியே புறநிலையுள் உருவாகின்ற தன்மைக்கொப்பான சிந்தனைப்பயனுள் மீளவும் அகவயப்படுத்தப்பட்ட புரிதல்களை நிகழ்காலத்துள்புரிய மீட்டெடுப்பது,அதன் தற்காலித் தர்ப்பாரான நிறுவனப்பட்ட அதிகாரத்தினது மொழியை, ஆயுதமாக எடுப்பதில் அந்த அனுபவத்துக்கானவொரு அழகயிற்றேவையை நுகர்வுமட்டத்தில் சந்தை விடாப்பிடியாக வலிந்துருவாக்கிக்கொள்கிறது. எனவே,இலக்கியமென வரிந்துணர முற்படும் போக்குகளுக்கு இந்த அநுபவத்தின்மீதான(கசகறணம்- நான் இன்னும் வாசிக்கவே இல்லை.எங்காவது சந்தித்தால் வேண்டலாம்) இலாடன்கள் அவசியமான உணர்வாக்கப்பட்டபின், அது உருவாக்கி வைத்த அழிகியல் மனதானது தனக்கானவொரு இலக்கிய வடிவத்தை உருவாக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெற்றுவிடுகிறது.
அந்த மனதின்வழி, வெற்றுப் பேப்பர்களாக அநுபவங்களைக் குவித்து, அதை எழுத்தாக்க முனையும் தருணங்களில் சம்பந்தப்பட்டவரது அநுபவம் ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் அழிகியலை நெருங்காதுபோனால் அது மட்டரமாக உணரப்படும்.இதைச் சோபாசக்தி உணரும்போது,அது யாழ் மேலாதிக்கமாக முரளிக்கு அனுபவமாகும்போது,அவர் மீள,மீளச் சொல்லும்"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்காற் வழியாக ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"என்பதில்,புல்லு யாழ்ப்பாண மேலாதிக்கமாகவும் நெல்லு தலித்து மக்களுமாக உணரத் தலைப்படலாம்.
எது,எப்படியோ போயினும்,சோபாசக்தியின் இலக்கியக் கொள்கை என்பது அவரது சக்திக்குட்பட்ட புரிதலின் அனுபவமென்பதை யாழ்ப்பாணிய மேலாதிக்கமென வகுப்பெடுப்பதிலிருந்து விடைகாண முற்படும் முரளிக்கு இருப்பது சம்பந்தப்பட்ட அனுபவத்தின் மீதானவொரு நுகர்வறிமுக யுக்திதாம்.எந்தப் பெரிய முரண்பாடென வகுத்துச் சொல்லினும் இவர்களுக்குள் உலாவரும் நானும் இவர்களது இலக்கியக் கொள்கைகள் குறித்து நிறையவே அனுபவப்பட்டதிலிருந்து, இதை இப்படித்தாம் சொல்லிக்கொண்டு, "உண்மையத் தரிசிப்பதும் மொழியினது அடிப்படைகளை நிலவுகின்ற அமைப்பாண்மைக்குள் புரிந்துகொள்ள முனைதலென்பதால் மொழி என்ன செய்யும் என்பதிலிருந்து மொழியை விடுதலைப்படுத்த லென்பது அதன் தார்மீகமான உழைப்பின் வினையை மறுத்துவிட்டு, என்னால் அனுபவத்தை முதன்மைப்படுத்தி மகிமைப்படுத்த முடியவில்லை"என்றாக முடிக்கிறேன்.
ப.வி.ஸ்ரீரங்கன்
03.12.11