Sonntag, 23. November 2008

மௌனிக்க முனையும் பாலுறுப்பு


நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்கு
சமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி



மரத்தில் உதிரக் காத்திருக்கும் ஆப்பிள்
மௌனித்திருக்கும் என் வதைகளிலொன்று
பறித்தெடுத்த ஆப்பிளில் இறங்கும்
தேவதைக் கனவு கூசும் பற்களில்
குதறும் விற்றமீன்களுக்கு பொழுதொரு வதையாய்



அனைத்து நித்தியங்களும் அமிழ்ந்தழிய
அறத்தின் ஓரத்தில் காமக் கலப்பை தாக்கக்
கண்ணீர் வதையுள் கடுப்படக்கும்
காலத்துள் உதிரும் எதிர்ப் பால் வினையும்



ஒரு வழிப் பாதை இருவருக்கும்
காலத்துள் அறபடக் காத்திருக்கும் ஜீவன்
கைப் பிடி மண்ணுள் இவ்வளவு கண்ணீர் பொழிவா?
இதயம் அதிரும் உயிரது கூத்துள்



குறுகும் பொழுதுகளில் உடைபடும் நாணம்
குவியும் கருப்புக்கு ஒதுங்கும் உறவு
மெய்தர மறுக்கும் கருமை மனது
ஈரஅலை இதயத்திலிருக்க உறங்கும் தாம்பாத்யம்



தொப்புள் கொடியுறவொன்றிணைக்கும் குடும்பம்
குட்டையைக் குழப்பும் கோதாரி மனது
கும்மாளமிடும் காழ்ப்புணர்வு
வதைக்கும் நினைவுகள்
வடுவாய் விரியும் நாவினாற் சுட்ட புண்



எனினும்,
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஒரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
மௌனிக்க முனையும் பாலுறுப்பு



ஓலமிடும் ஒலியின் அதிர்வில்
சுவரில் உரசும் இதழ்கள்
இதயத்தின் அடியில் உலர்ந்த சாம்பல்
நாவிற்கடியுள் நலியும் காதல்



வீசியடிக்கும் குளிர்ந்த காற்றுள்
இதழாள் சுவையும்
நெருங்கி வரும் இரவில்
உடலின் மிடுக்கும் உருவந்தர மறுக்கும்
வலியை மென்று மனது ஒடுங்கும்



துயரத்தின் கொடுவாள்
அறுத்தெறியும் காலத்தின் மரிப்பில்
தொலைவதென்னவோ நீயும் நானுமே
தவித்தென்ன தண்ணியடித்தென்ன
தாழ்வது நமது நலமே!


நேரத்தோடு அறியப்படாத
எனது நிறமாற்றம்
தொலைவதில் வியப்பு என்ன?

சேனனோடு நிழலாடும் "உண்மைகள்"மக்கள் நலனானதா?

மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.இதைப் பெரும்பாலும் அன்பன் சேனனின் கட்டுரையுள் விலாவாரியாகக் காணக்கிடைக்கிறது.இதை மையப்படுத்தியே சேனன் கட்டுரையை எழுதியிருக்கிறார்.இந்த வன்மத்தை அவர் சுட்டிச் செல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது.வரவேற்கப்பட்டு,இந்த வன்மம் களையப்பட வேண்டும்.




இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோருக்கும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய நிலையில், இத்தகைய "மாற்றுக் கருத்துக்களை"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச் சென்றுவிடுகிறதென்ற உண்மையில் அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.சேனன் இதைக் குறித்துரைக்கிறார்.இது வரவேற்கப்படவேண்டியது!!




ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களை நண்பர்கள் புனைகின்றார்கள்.இதுள் தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது,அல்லது விற்கப்படுகிறது(இதன் முன்னோடிகளில் ஒருவராகத் திருவாளர் அசோக் என்ற யோகன் கண்ணமுத்து இனம் காட்டப்படுகிறார்).இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத் தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-இயக்கங்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்ககுநிலையிலிருந்து இந்த"மாற்றுக் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல.இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.




மக்களின் விடுதலையிலிருந்து நம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த"தார்ப்பார்களை"உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்கே,சேனின் கருத்துக்கள்-தரவுகளிலிருந்து இத்தகைய போக்குகளின் திசைவழியை நாம் இலகுவாக இனங்காண முடியும்!சேனன் இதை மிகத் தெளிவாக முன்வைக்கிறார்.




தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர்நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல் சேட்டைகள்"கூட்டங்களா-நிகழ்வுகளாக-நினைவுக் கொண்டாட்டாகங்களாக-விழா எடுப்புகளாக"புலம் பெயர் வாழ்சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணகருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, அறிக்கைப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது!இதற்குத் தேசம்நெற்றே முதன்மையான எடுத்துக்காட்டாக இருப்பதென்பதைவிட,அத்தகைய எடுத்துக்காட்டு நம் எல்லோரிடமும் மிக மங்கிய நிலையில்பின் தொடர்வதைச் சுய விமர்சனத்தூடாக இனம் காணவேண்டும்.




இதுவரை கூட்டாக இயங்க முடியாதளவுக்கு-ஒரு கூட்டை உருவாக்குவதற்கு எதிரான கலைப்பு வாதம் தந்த இந்தப் பரிசு, ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.எவரிடமும் புரட்சிகரமான பணியைச் சார்ந்தியங்கும் மனத்தை-நடுத்தரவர்க்க எண்ணங்களை இல்லாதாக்கிய புரட்சிகர மனது உருவாகிவிடவில்லை!இங்கே,தெரிதாவோ அல்லது பூப்காவோ இவர்களுக்கு இதை வகுப்பெடுத்திருக்காலாம்.ஆனால், புரட்சிகரமான பணி இதற்கு மாறாக இயங்கக் கோருகிறது!ஒவ்வொரும் தம்மைத் தாமே முன்னிலைப்படுத்தியபடி மக்களின் நலன்களைத் தமது தனிப்பட்ட விரோதங்களைப் பொதுமைப்படுத்துவதன் தெரிவில் தம்மை இயங்க அனுமதிக்கிறார்கள்.இது, புரட்சிகரமானவொரு அணித் திரட்சிக்கு எப்பவும் குறுக்கே நின்றுகொள்கிறது.இதுதாம் இன்றைய அதிகார நிறுவனங்களுக்கு மிக அவசியம்.இதை நம்ம தோழர்கள் செவ்வனவே செய்வதில் போட்டியிடுகிறார்கள்-அவ்வளவுதாம்.




புரட்சிகரமான நிலைப்பட்டை முன்வைத்து, அதன் வாயிலாக நமது இந்தக் கோலங்களையெல்லாம் சிறிதுசிறிதாக அகற்றி நம்மை சமுதாயத்தில் கால்பதிக்கவைக்கும் வர்க்கவுணர்வைத் தொடர்ந்து இயங்கவைப்பது ஒரு புரட்சிகரமான வேலைத் திட்டமே.அதைப் பூண்டோடு கைகழுவிய இந்த நண்பர்கள் இப்போது தனிநபர்களாகக் குறுகிச் சிதைவுறுவதைக்கூட மக்கள்சார்ந்த மதிப்பீடுகளால் நியாயப்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் கவலையுறவேண்டியிருக்கிறது.




அன்றாடச் சிக்கல்களாக இவர்களுக்குள் உருவாகிய இத்தகைய மனவிருப்புகள்-தெரிவுகள் எப்போதும்போலவே மக்களைக் குதறும் இயக்க-குழுவாதத்தை மறைமுகமாக ஏற்று இயங்குகிறது.இதை இனம்கண்டு தகர்க்காதவரை இவர்களால் எந்த முன்னெடுப்பும் அதிகாரமையங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட முடியாது.மாறாக, அத்தகைய மையங்களை மேன்மேலும் வலுப்படுத்துவதில் தமக்குள் உள்ளவரை வேட்டையாடிக் குலைத்து அதிகாரத்துக்கு உடந்தையான-துணைபோனவர்களாகவே இருப்பார்கள்.




சேனனின் இக்கட்டுரை ஓரளவு முக்கியமான பிரச்சனைகளை அலசுகிறது.




எனினும்,மையமான கருத்துக்களை-தெரிவுகளை வெறும் தனிநபர்வாதச் செயலூக்கமாகப் பார்க்கிறது.இன்றைய மாற்றுக் கருத்தாளர்களின் பின்னே உலாவரும் நீண்ட வலுக்கரங்களைக் குறித்து எதுவுமே பேசமுடியாத இத்தகைய பார்வைகள் "சில விகாரமான அரசியல் நிகழ்வுகளை"தனிநபர்களின் தன்னியல்பால் செயற்பாடாகவும் குறுக்கிவிட முனைகிறது.இதுதாம் சேனின் கட்டுரையிலுள்ள பலவீனம்.




இங்கே,நெடுங்குருதி நிகழ்வினூடாகக் கட்டியமைக்கப்படும் இந்த விவாதம் அத்தகைய புள்ளியைத் தொட்டாக வேண்டும்.எவரெவர் மக்களின் நலனை தத்தமது சுய இலாபங்களுக்காக மக்களின் எதிரிகளோடு ஏலம் போடுகிறார்கள் என்றும்,எத்தகைய முகமூடிகளோடு தமிழ்ச் சமுதாயத்திலுள்ள ஒடுக்கப்பட்டவர்களைச் சிதைத்து இலங்கை ஒருமைப்பாட்டை உருவாக்க முனைகிறார்கள் என்றும் இனம்காணும் நிலைமையில் ஒடுக்கப்படும் குரல்கள் இருக்கின்றன.




சேனின் கட்டுரை இத்தகைய பார்வையை முன்வைக்கத் தவறுவிடுகிறது.




இன்றைய மாற்றுக்குழுக்களுக்குள் உட்புகுந்த இலங்கை-இந்திய அரசியல் வியூகங்கள் ஒருவரையொருவர் வேட்டையாடுவதற்கானவொரு சூழலை மெல்ல உருவாக்கிவிட்டுள்ளதோ என்றும் அஞ்சவேண்டியுள்ளது!




கட்டுரையாகத் தகவல்களைச் சொல்லும் சேனனையும் படியுங்கள் நண்பர்களே!




சேனன் சொல்வதிலிருந்து இன்னொரு முகத்தை அவரது எழுத்துக்குள் நாம் மிக நேர்த்தியாக இனங்காணலாம்.அந்த முகம் ஓரளவாவது இனிவரும் "மாற்றுக் கருத்தாளர்களின்" எதிர்வினையுள் இன்னொரு சிதைவாக வெளிப்படும்.




அதுவரை...




நட்புடன்,


ப.வி.ஸ்ரீரங்கன்


23.11.2008


பிற்குறிப்பு: சேனனின் இக்கட்டுரை தேசம்நெற்றிலிருந்து நன்றியோடு மீள் பதிவாகிறது.அதற்கு நன்றி!



*****************





குருதிப்புனல் - சேனன்


http://thesamnet.co.uk/?p=4802


இளகின இரும்பை கண்டா கொல்லன் தூக்கி தூக்கி அடிப்பானாம’; என்று ‘சாதி’ கலந்த ஒரு பழமொழி போல் எங்க என்று பார்த்திருந்த ‘ஷோபாசக்தி’ சாதி கலந்து அசோக்குக்கு தூக்கி தூக்கி அடிப்பதன் மூலம் ஒரு கல்லில் பல மாங்காயை விழுத்தலாம் என்று பார்க்கிறார். செத்த பாம்பை பாத்து ‘நாங்கள் ரென்சனாக கூடாது’ என்று கற்சுறா இதுக்கு சைட்கிக் வேறு.


அசோக் என்ற யோகன் கண்ணமுத்து, அ.மாக்சை நோக்கி ஒரு வரியில் கேட்கவேண்டிய கேள்வியை முக்கி முக்கி ஏதோ பெரிய கொழுக்கி பிடியில் மார்க்சை விழுத்தி விடுவதுபோல் இழுத்தடித்து கேட்டதை படித்த கையுடன் நமக்கு ‘திக்’ என்றது. அசோக் தேசம்நெற்றின் அன்ரன் பாலசிங்கம் என்பதுபோல் செத்தபாம்பு அடிச்சு தேசம்வசை பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இரும்பை இளக்கி குடுத்திருக்கிறார் அசோக் என்பது எமக்கு படாரென்று விளங்கிவிட்டது. இதை சாக்காய் வைச்சு மீண்டும் தேசம்நெற்றை இழுக்கப்போகிறார்கள் என்பதை தெட்டத்தெளிவாக விளங்கிகொண்ட நாம் ஏற்கனவே நெடுங்குருதி பற்றி பிரசுரிக்க வைத்திருந்த கட்டுரையை திருத்தி வடிவமைக்கும் முயற்சியில் இருக்க நண்பர் ஷோபாசக்தி பாய்ஞ்சு விழுந்து சுத்தியலோடு ஓடிவந்து விட்டார்.


இளகின இரும்பென்று நண்பர் அசோக்கை குறிப்பிடவில்லை –அவர் இளகின இரும்பா உருகின இரும்பா என்பதெல்லாம் எமக்கு தெரியாது. ஆனால் அவர் கேட்ட கேள்வி –வலிந்து இழுக்கும் அரசியல் நியாயத்தின் பலவீனம் பற்றியே நாம் குறிப்பிடுகிறோம். பசுமாட்டை பற்றி எழுதவந்து தென்னைமரத்தை பற்றி எழுதிப் போகும் தேய்ந்துபோன ஷோபாசக்தியின் பலவீனதுண்டு பலபுள்ளிகளை குழப்புகிறது. எலி அடிக்க ஏ.கே எடுத்ததேன்?


நிதர்சனம்.கொம் மை தேசம்நெற் ஓவர்டேக் பண்ணிய கட்டமாக நெடுங்குருதி நிகழ்வை குறித்து தொடங்கும் ஷோபாசக்தி அதைப்பற்றி பிறகு ஒரு வரி விளக்கவில்லை.


1 கூட்டம் நடந்தது பாரிசில்.

2 தீராநதியில் வந்தது பாரிசில் வாழும் அசோக் இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட அ.மார்க்சை நோக்கி கேட்ட கேள்வி.

3 பிரசுரமானது தீராநதியிலும் இனியொரு இனையத்திலும்.

4 அசோக்கின் கேள்வியில் தேசம்நெற் பற்றியோ அதில் வெளியான செய்திகள் பற்றியோ எந்த குறிப்பும் இருக்கவில்லை. சோதிலிங்கத்தின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவர் தேசம்நெற் ஆசிரியர் என்று தேசம்நெற் இழுக்கப்பட்டிருக்கவில்லை.

இப்படியிருக்க தேசம்நெற்றை ‘தேசம்’ இனையத்தளம் என்று விளித்து வலிந்துகட்டி சோபாசக்தி இழுத்திருப்பது ஏன்?

தேசம்நெற் பற்றி மிகுதி கட்டுரையில் எந்த குறிப்பும் இன்றி அசோக்கை மாடாக வர்ணித்து அசோக்கென்ற மாடு தேசம் என்ற தென்னையில் கட்டப்பட்டுள்ளது என்று தென்னைமரம் பற்றி கட்டுரை எழுதி தேசம் வெளியிட்ட செய்திகள் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட சில கருத்துக்களை பேச வேண்டியுள்ள அவசியத்தை ஷோபாசக்தி ஏற்படுத்தியுள்ளார்.


‘நெடுங்குருதி’ கூட்டமும், தேசம்நெற்றும், பாரிஸ் துப்பாக்கி சூடும்.


‘1983 - 2008 நெடுங்குருதி : யூலை 83 வெலிகடைப் படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும்’ (Black July 1983_27july2008) என்ற தலைப்பில் யூலை 27ல் யூலைப் படுகொலைகளை நினைவு கூரும் நினைவு பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. என்ற செய்தியை தேசம்நெற் யூலை 14ல் முதன் முதலாக வெளியிட்டது- ( 1983 - 2008, 25 ஆண்டுகள் ஆறாத துயரம் !!! ( http://thesamnet.co.uk/?p=1745 )இந்த முயற்சிக்கு ஆதரவாகப் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். முக்கியமாக முதன்மை ஏற்பாட்டாளர் குகன் செய்தி வெளியிடப்பட்ட அன்றே சொந்தபெயரில் ஒரு பின்னூட்டம் விட்டிருந்தார். அனைவரும் கலந்துகொள்ள கேட்டு பின் அதன் இறுதிப்பகுதியில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.


‘இன்று இலங்கை இரத்த நிலமாய் மாறியதற்கு பிரதான பங்காளர்கள் இலங்கை அரசும் தமிழ் இயக்கங்களும் மட்டும்தானா? மாற்றுக் கருத்தாளர்கள் எனச் சொல்லப்பபடுபவர்களுக்கும் அறிவுத்துறையினருக்கும் ஊடகங்களுக்கும் இதில் பங்கில்லையா? ஒரு வகையில் அன்றைய நிகழ்வு சுயவிமர்சன நிகழ்வாயும் இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறோம். முடியுமான தோழர்கள் கலந்துகொண்டு நிகழ்வு உருப்படியாய் அமையப் பங்களிக்க வேண்டும்.’- நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவுக்காக குகன


தேசம்நெற்றுடன் தொடர்புகொண்டவர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தேசம்நெற் கேட்டுகொண்டது. அத்தருணம் திரு சோதிலிங்கம் அவர்கள் தான் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மிக்க ஆர்வமாக இருப்பதாகவும், இயக்க அரசியலின் வரலாறு பற்றி பேசவேண்டுமானால் தான் அதுபற்றி பேசத்தயார் என்றும் குகனுக்கு தெரிவித்திருந்தார். 83 நினைவுகூறலை 83 கொலைகளையும் தாண்டி இயக்க அரசியல் மூலம் நிகழ்ந்த கொலைகள் உட்பட அனைத்து கொலைகளுக்கும் வன்முறைக்கும் எதிரான நினைவாக செய்யவேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக செயற்பட்டார். தேசம் ஆசிரியர்கள் வேறுபலரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்திருந்தனர்.


கூட்ட ஏற்பாட்டு கமிட்டிபோட இருந்தவர்கள் மத்தியில் தனிப்பட்ட ஆளுமைகளின் செல்வாக்கு காரணமாக முரண்கள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் ஏற்பாட்டு கமிட்டி போடப்படாமலே விடப்பட்டிருக்கலாம். இதுகள் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது – யாரும் அது பற்றி பெரிதாக கவனத்திற்கெடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமாகவே இருந்தனர்.


இந்நிலையில் ய+லை 23 இரவு முதன்மை ஏற்பாட்டாளர் குகனின் கடையில் வைத்து அங்கு வேலை செய்த தொழிலாளி ஒருவர் சுடப்பட்டார் என்ற செய்தி எமக்குக் கிட்டியது. இது தொடர்பாக உடனடியாக குகனுடன் தொடர்புகொண்ட ஜெயபாலன் சம்பவம் பற்றி அவருடன் தொலைபேசியில் உரையாடியபோது முக்கியமாக இரண்டு விசயங்களை குகன் தெரிவித்தார். ஒன்று இந்த கொலை முயற்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பது. இரண்டாவது நெடுங்குருதி நிகழ்வு நடக்குமா நடக்காதா என்பதை மற்றையவர்களுடன் உரையாடி பின் அறிவிக்கிறோம் என்றது. இதை தொகுத்து யூலை 25 அன்று ‘1983 - 2008 நெடுங்குருதி பாரிஸ் சார்சல் வரை கசிகிறது’ ( http://thesamnet.co.uk/?p=1868 ) என்ற தலைப்பில் ஜெயபாலன் செய்தி வெளியிட்டிருந்தார். இதற்கடுத்தநாள் 26ம் திகதி குகன் பிரெஞ் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். ஏற்கனவே கூட்டம் நடக்குமா இல்லையா என்ற எந்த செய்தியும் தெரிவிக்கப்பட்டிருக்காத நிலையில் ஏற்பாட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த சிலருடன் பேசியபின் 26ம் திகதி ‘இன்று நெடுங்குருதி ஏற்பாட்டாளர் கைது!!! ஞாயிறு நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்!- ஏற்பாட்டாளர்கள்’ [http://thesamnet.co.uk/?p=1893] என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதன்பின் 27ல் கூட்டம் நடந்து முடிந்தபின் கிடைத்த தகவல்களின்படி தயாரிக்கப்பட்ட செய்தி 28ல் வெளியானது. ( http://thesamnet.co.uk/?p=1914 ).


கூட்டம் முடிந்தபின் 28ல் வெளியான 300 சொற்களிலும் குறைந்த சிறு செய்தியே சர்ச்சைக்குரியதாகியுள்ளது. இச்செய்தி வெளியிடும் தருணத்தில் எமக்கு கிடைத்த தகவல்கள் சொற்பமே. பாரிஸ்வரை சென்ற நித்தியானந்தன், சுசீந்திரன் முதலானோர் உட்பட பலர் இக்கூட்டத்தை புறக்கணித்த செய்தி எமக்கு தெரியவந்தது. இக்கூட்டம் ‘சாதாரண பாரிஸ் கூட்டமாக அன்றி வெளிநாடுகளில் இருந்து பலரும் கலந்துகொள்ளும் முக்கிய கூட்டமாக ஒழுங்குபடுத்தபட்டிருந்ததை நாம் அறிவோம். ஷோபாசக்தி சொன்னதன்படி பார்த்தால்கூட வழமைக்கும் மாறான முறையில் (வழமையான காலதாமதத்துக்கும் அதிகமான) காலதாமதமாகவே கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே கூட்டம்
புறக்கணிக்கப்பட்டதை மையமாக வைத்து ஜெயபாலன் செய்தி வெளியிட்டார். அதில் பின்வரும் இரண்டு குறிப்புகள் இனைக்கப்பட்டிருந்தது.


1. சோதிலிங்கம் ”அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகள் காரணமாக தான் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை” எனத் தெரிவித்திருந்தார்.


2. அதற்கு எதிராக நிர்மலா ராஜசிங்கம், மகிந்த அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான காட்டமான விமர்சனத்தை முன்வைத்ததாகவும்


அதனைத் தொடர்ந்து ராஜேஸ் பாலாவுக்கும் நிர்மலா ராஜசிங்கத்துக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு ராஜேஸ் பாலா நிகழ்வை விட்டு வெளியேறியதாகவும் அவர்(கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர்) மேலும் குறிப்பிட்டார்.



இரண்டாவது குறிப்பு பற்றி – ராஜேஸ் பாலாவுடன் நேரடியாக தொடர்புகொண்டு செய்தியை உறுதிப்படுத்திகொண்டோம். தேசம்நெற் ஒழுங்குபடுத்தியிருந்த கூட்டத்தில் கூட ராஜேஸ்பாலா அவர்கள் முதலமைச்சர் பெயரை குறிப்பிடாமல் பிள்ளையான் என்று அழைப்பது பற்றி மிக காரசாரமாக வாதிட்டிருந்தார். முன்பொருகூட்டத்தில் கிழக்கைபற்றி பலரும் குறைத்து கதைக்க மிக உணர்ச்சிவசத்துடன் எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்பாலா அவர்கள் வெளிநடப்பு செய்தபோது நாமும் அவருடன் வெளியேறியது ஞாபகம். தனது கருத்தை யாருக்கும் பயப்பிடாது வைத்து அதற்காக காரசாரமாக வாதாடும் பழக்கமுடையவர் அவர் என்பதை அனைவரும் அறிவர். அதனால் நிர்மலா ராஜசிங்கம் கூறிய கருத்து அரசியல் ரீதியில் எமக்கு சரியாக தெரிந்தாலும், தனது அரசியல் பார்வையின்படி முரண்பட்ட ராஜேஸ் பாலா அவர்கள் கடுமையாக வாதிட்டதில்; எமக்கேதும் வியப்பேற்படவில்லை. இந்த அரசியல் முரண்பாட்டை பதிந்ததால் யார்மேலும் தேசம்நெற் அவதூறு கிளப்பவில்லை. அனைத்தும் சுமுகமாக நிறைவேறியது என்று நிலைநாட்ட விரும்புபவர்கள்தான் அந்தரப்படுகிறார்கள்.


அடுத்து தேசம் ஆசிரியர் சோதிலிங்கத்தின் சொந்த கருத்து பற்றிய விசயம். அவருடனான உரையாடலின் மூலம் நாம் அறிந்துகொண்ட சில புள்ளிகளை இங்கே சுட்டவேண்டும்.


சோதிலிங்கம் இக்கூட்டத்தில் கலந்துகொள்வது ஜனநாயக எதிர்ப்பு என்றோ யாரும் இக்கூட்டத்துக்கு போககூடாது என்றோ எங்கும் தெரிவிக்கவில்லை. சோதிக்கு மற்ற ஏற்பாட்டாளர்கள் யார் யார் என்ற விபரம் எதுவும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் - இக்கூட்டம் சம்மந்தமாக அவர் தொடர்பு வைத்திருந்த ஒருவர் -முதன்மை ஏற்பாட்டாளர்- தனது கடையில் வேலைசெய்த தொழிலாளி ஒருவர் சுடப்பட்ட குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் நிலையில் - மற்றய ஏற்பாட்டாளர்கள் கூட்டம் பற்றியோ நிகழ்வுகள் பற்றியோ வெளிப்படையாக எதுவும் தெரிவித்திருக்காத நிலையில் - எவ்வாறு கூட்டத்திற் கலந்துகொள்வது என்பதே அவரது முக்கிய சிக்கல். வேலை மினக்கெட்டு, காசுசெலவளித்து லண்டனில் இருந்து பாரிஸ்சென்று ஒருபலனுமில்லாமல் திரும்பிவரும் அளவுக்கு அவருக்கு நேரமும் வசதியும் இருக்கவில்லை.


கடைசி நிகழ்ச்சிநிரலை பார்த்துவிட்டு ஜெயபாலன் தொலைபேசியில் அழைத்துக் கேட்டபோதுதான் தான் இக்கூட்டத்தில் பேசவிருந்த செய்தியே சோதிக்கு தெரியவந்தது. இந்நிலையில் ‘அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகள் காரணமாக தான் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை’ என்று சோதிலிங்கலம் சொன்னதில் என்ன ஜனநாயக பிழை இருக்கென்று எனக்கு தெரியவில்லை. ஷோபாசக்தியின் விதண்டாவாதம் சோதி செல்வம் அடைக்கலநாதனை நேர்காணல் செய்ததை இழுக்கிறது. கண்டகண்ட காசுக்காற ஊடகங்களில் எல்லாம் நேர்காணல் கொடுக்கும் நீங்கள் இப்படிஒரு கேள்விகேட்பதை தவிர்த்திருக்கவேண்டும். இருப்பினும் அவசரத்தில் கேட்டுவிட்டீர்கள். ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று இதைத்தான் சொல்வர்.


செல்வம் என்ன பிரபாகரன்- பேட்டி கொடுத்தாலும் தான் எடுப்பேன் என்றுதான் சோதிலிங்கலம் சொல்கிறார். (பிரபாகரனை முன்பு பேட்டி கண்டவர் யாருடனும் நீங்கள் உரையாடியது இல்லையா?) போதாக்குறைக்கு விழுந்தடித்து இந்த செவ்வியை செல்வம் சோதிக்கு வழங்க காரணமான சோதியின் கட்டுரையை ஏன் நீங்கள் படிக்கவில்லை. அதில் வைக்கப்பட்ட கேள்விகளில் ஒன்றையாவது எழுத்தில் வைக்க உங்கள் புதுபுது நண்பர்கள் யாராவது முன்வந்தார்களா? இந்த செவ்வி செல்வத்துக்கு ஏற்படுத்தியிருந்த அதிருப்தியும்; சேர்த்து ஒரு முக்கியமான வரலாற்று பதிவை சோதி துணிச்சலுடன் சாதித்துள்ளார். பின்னிருந்து புறம்பேசும் பழைய டெலோ பலர் உங்களுடனும் செல்வத்துடனும் மிக நட்பாக இருப்பதாகவே நாமறிகிறோம். தனது செவ்வியில் சோதி எவ்வளவுதூரம் ஜனநாயகத்தை விட்டுக்கொடுத்தார் என்பதை நீங்கள்தான் அவர்களிடம் கேட்டு சொல்லவேண்டும். புதுமாதிரி ஜனநாயகம் என்று என்ன கன்றாவியை மனதில் வைத்து கதைக்கிறீர்கள் என்று ஒரு நாசமும் விளங்கவில்லை. மனதை திறந்து எழுத முயலுங்கள்.


‘சோதிலிங்கம் போன்றவர்கள் விலகிக் கொண்டதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்’ என்ற ஒரு வசனம் மட்டுமே அசோக் இணைத்துள்ளார். ஷோபாசக்தி எழுதுகிறார், ‘சோதிலிங்கம் ‘நெடுங்குருதி’ நிகழ்வில் கலந்துகொள்ளாமல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிவிட்டார் என்றொரு பாராட்டையையும் அசோக் தனது எதிர்வினையில் வழங்கியிருக்கிறார்’ என்று. அசோக்குக்கு விளங்காதது உங்களுக்கும் விளங்கவில்லை. நீங்கள் ஆளுக்கால் அடித்துக்கொள்வதற்கு ஏன் சோதிலிங்கத்தை இழுக்கிறீர்கள்? நீங்கள் கிரிக்கட் விளையாட வேறு பந்து கிடைக்கவில்லையா? நிண்ட பாட்டுக்கு சிக்சர்கள் வேறு!


அசோக் அ.மார்க்சை மட்டும் குறித்து கேள்வி எழுப்பியதன் அரசியல் மிகவும் சந்தேகத்துக்குரியது என்பதில் ஷோபாசக்தியுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் அதற்கு பதில்கூறுவதான பாவனையில் அசோக்கை பற்றியும் குகனை பற்றியும் அனாவசியமாக சோதிலிங்கத்தை பற்றியும் எழுதி அ.மார்க்சை அசோக் கேள்விகேட்பது தவறு என்று ஷோபாசக்தி வாதிடுவது பிழை. அசோக் தனது பழைய கறளை பாவிக்க சந்தர்ப்பம் தேடுகிறார் என்ற சந்தேகம் பலருக்கும் வரக்கூடியதே. ஆனால் அந்த ‘ஊகத்தை’ வைத்துக்கொண்டு விசயத்தை விட்டு-அரசியலை துலைத்து வானுக்கும் பூமிக்குமாக துள்ளி தனிநபர் புராணம் பாடுவதில் யாருக்கும் லாபமில்லை. அசோக்கின் வரலாறை சொல்லி இனிமேல் அசோக்கின் வாயில் இருந்து ஒரு சரியான வார்த்தை வராது- அவரது பேனை சரியான வசனம் எழுதாது என்று நிறுவ முயலுகிறீர்களா? முன்னாள் புலிகள் இன்றும் புலிகளாகவே இயங்குகின்றனர் என்ற அசோக்கின் மோட்டுத்தனமான வாதத்தை போன்றதே இதுவும்.


அ.மார்க்சின்மேல் ஏன் பலருக்கு அனாவசியமான கோபம் எழுகிறது – ஏன் சிலருக்கு இனந்தெரியாத காதல் எழுகிறது என்ற மர்மம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை!! நான் உட்பட அவர் ஏற்படுத்திய அசைவுகளில் காதல் வயப்பட்ட பலர் அவருடன் முற்றிலும் உடன்படுபவர்கள் அல்ல. இருந்தபோதும்கூட அ.மார்க்சுக்கு முதுகுசொறிந்து சிலர் இலக்கிய-அரசியல் லாபமீட்டுவதாக அசோக்-யமுனா வைக்கும் வாதம் மிகப்பிழை. முக்கியமாக ஷோபாசக்திக்கு யாருடைய முதுகுசொறிந்தும் தனது எழுத்துக்களை வெளியிடவேண்டிய அவசியமில்லை. யமுனா ராஜேந்திரன் மனுசபுத்திரன் முதுகுசொறிந்து புத்தகம்போடுவதாக பார்ப்பது பிழை என்பது போன்றதுதான் இதுவும். அதுகிடக்க ஷோபாசக்தியில் இருக்கும் காட்டத்தை ஏன் அ.மார்க்சில் கொண்டுபோய் காட்டுகிறீர்கள்?


குகனையோ கொலை முயற்சி பற்றியோ எதுவும் அறிந்திராத அ.மார்க்ஸ் இந்தியாவில் இருந்து எத்தினையோ மைல்கள் தாண்டி இக்கூட்டத்தில் பேச வந்திருந்தார். கூட்டத்தை ஏற்பாடு செய்ததே குகன்தான் என்பதுகூட மார்க்சுக்கு பின்னாலில்தான் தெரியவந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. கூட்டத்திற்குபோன ‘பலதும் அறிந்த’ மண்ணாங்கட்டிகளை விட்டுவிட்டு மார்க்சை பார்த்து அசோக் துள்ளுவதற்கு காரணம் அவர் நீண்டகாலமாக மார்க்சின் கருத்துக்களுடன் முரண்பட்டிருப்பதே. இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி மார்க்சை எதிர்ப்பவர்கள் - முண்படுபவர்கள் அவரது கருத்துக்களை எடுத்து பிளந்து –புத்தகங்களை விமர்சித்து முரண்பட்டது கிடையாது. அவர் அப்பிடி செய்கிறார் இப்பிடிசெய்கிறார் என்று உளறுவதுதான் அவர்கள் விமர்சனமுறையாக உள்ளது. ஏராளமான புத்தகங்களை எழுதி பல போராட்டங்களில் பங்குபற்றிய அ.மார்க்சை ஒரு கேள்வியில் மடக்க நினைக்கிறார் அசோக்.


நெடுங்குருதி கூட்டம் வன்முறைக்கு ஆதரவாக நிகழ்ந்த கூட்டம் இல்லை. இக்கூட்டம் வன்முறைக்கு ஆதரவு தேடவும் இல்லை. இக்கூட்டத்தில் ஆயுதகுழுக்களுக்கு எதிராக நிர்மலா பேசியதை தேசம்நெற் பதிவுசெய்துள்ளது. ஷோபாசக்தி உட்பட இதில் பங்குபற்றிய மற்றயவர்களும் கொலைகளை நியாயப்படுத்துபவர்கள் என்று பார்ப்பது மிக மிக சின்னத்தனமான பார்வையே.


இக்கொலை முயற்சி கூட்டத்தின் பின் நிகழ்ந்திருந்தால் குகனின் தலைமையில் கூட்டம் அமோகமாக நடந்திருக்கும் என்பது உண்மையே. அதில் அசோக்கும் பங்கு பற்றியிருப்பார் அல்லது பங்குபற்றாமல் இருக்க வேறு காரணங்கள் தேடியிருப்பார். இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் முன்பு கொலை முயற்சியில் ஈடுபடாதவர்கள் என்றோ அல்லது எதிர்காலத்தில் கொலை முயற்சியில் ஈடுபடமாட்டார்கள் என்றோ வாதிடும் நோக்கம் நமக்கில்லை. யார்யார் எதை பற்றி பேசலாம் எதைப்பற்றி பேசக்கூடாது என்ற நூதனமான ‘மாற்றுகருத்து’ பற்றியதே எமது கவனம். ஒரு ஆயுதம் தாங்கிய குழுவின் தலைமை உறுப்பினராக இருந்த அசோக் தனது ‘ஆயுத கலாச்சார’ கால கட்டத்தில் எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடவில்லை என்ற அர்த்தத்தில் - ஆயுதம் தாங்கிய முன்னய தற்கால நடைமுறைகளை கேள்விகேட்க அவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அதன்படி எந்தத் தார்மீக அடிப்படையில் நெடுங்குருதி நிகழ்வுக்கு முன்னான ஏற்பாட்டாளரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?’ என்று அசோக் அ.மார்க்சை பார்த்து ஒரு கேள்விகேட்பதில் எந்த தவறும் இல்லை. அது ஒரு சாதாரன கேள்வி. ஒரு போன்போட்டு மார்க்சை கேட்டிருந்தால் மார்கஸ் தெளிவுபடுத்தியிருப்பார். மார்க்ஸ் கூட்டத்தின் ஏற்பாட்டாளரில் ஒருவரில்லை.


அது மட்டுமின்றி குகனுக்கும் கொலை முயற்சிக்குமான தொடர்புகள் பற்றியோ அல்லது ஏற்பாட்டாளர்கள் மாறியிருப்பது பற்றியோ எந்த தகவல்களும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இதன் முழு பிழையும் குகனின் கைதுக்கு பின் கூட்டஏற்பாட்டை கையில் எடுத்தவர்களையே சாரும். எல்லாவிதமான குழப்பங்களுக்கும் அவர்களே காரணம். நாங்களாக ‘ஊகித்து’ அறிந்துவிடுவோம் என்று எம்மில் அபார நம்பிக்கையுடன் அவர்கள் இயங்கியிருக்கிறார்கள் போலும். லண்டனில் இருந்து தேசம்நெற்றில் போட்ட செய்தியை பார்த்துதான் சில விசயங்களை தெரிந்துகொள்ளகூடியதாக இருந்தது என்று கூட்டத்தில் கலந்துகொள்ள பாரிஸ் வந்துநின்றவர்கள் கூறும் அளவுக்கு எல்லாரையும் இருட்டில் வைத்து குழப்பிய பெருமை ஏற்பாட்டாளர்களையே சாரும். இந்த லட்சணத்தில் இக்கூட்டத்துக்கு போனவர்கள் எதிர் போகதவர் என்று கன்னை பிரித்து கதைப்பது நியாயமில்லை.
ஷோபாசக்தி போன்று கூட்ட ஏற்பாட்டை கையில் எடுத்தவர்கள் தமது தவறை மறைக்க –தவறுக்கு ஆதரவுதேட அசோக்கின் சில்லறை வாதம் உதவுகிறதே அன்றி வேறு எதையும் அது சாதிக்கவில்லை.



‘யாரோ யாருக்கோ தண்ணியில சுட்டுப்போட்டான் நாங்கள் என்ன செய்கிறது?’ ‘நாங்களா சுட்டனாங்கள்?’


என்று சில்லறை கேள்விகள் மூலம் குகனின் கைதின் பின் கூட்ட ஏற்பாட்டை கையில் எடுத்தவர்கள் தப்பமுடியாது.



1. முதன்மை ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டபின் கூட்டத்தை பொறுப்பெடுத்து நடத்தியுள்ளீர்கள்.

2. முதன்மை ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டது அவரது கடையில் நடந்த சூட்டு சம்பவம் தொடர்பாக - கூட்டம் ஒழுங்குபடுத்தியிருந்தது கொலைகளுக்கு எதிராக.

3. இந்தியா முதற்கொண்டு பேச்சாளர் அழைக்கப்பட்டிருப்பினும் பேச்சாளர் பட்டியல் கூட்டத்திற்கு முதல்நாள் வரையும் வெளியிடப்படவில்லை.

4. முதன்மை ஏற்பாட்டாளரின் தலைமறைவு பற்றியோ – கைது பற்றியோ – சந்தேகத்திற்கிடமான சூட்டு சம்பவம் பற்றியோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

5. இந்நிலையில் குகனுக்கும் புதிய ஏற்பாட்டாளர்களுக்கும் உள்ள உறவு பற்றி வெளியில் இருப்பவர்கள் என்ன ‘ஊகத்துக்கு’ தாவ முடியும் என்று நினைக்கிறீர்கள்?


இதன் பிறகு சுகன் எழுதியிருந்த கட்டுரையில் மேற்கண்ட கேள்விகள் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. குகன் என்ற பெயரே அவர் கட்டுரையில் இல்லை. நோய்வாய்ப்பட்டு ஒரு கூட்டஏற்பாட்டாளர் கலந்துகொள்ள முடியாமற் போயிருப்பின் அதை தெரிவிக்கும் பழக்கம் உண்டல்லவா? அப்படியிருக்க கொலை முயற்சிக்காக கைதுசெய்யப்பட்ட கூட்ட ஏற்பாட்டாளரை பற்றி எதுவும் சொல்லாமல் கூட்டம் நடத்தியது எதனால். –சட்ட சிக்கலா ? -இங்குதான் தேசம்நெற் போன்ற துணிச்சலான ஊடகத்தின் தேவை உணரப்படுகிறது.


கூட்டத்திற்கு தலைமை தாங்க இருந்தவருக்கே யார்யார் கூட்டத்தில் பேசபோகிறார்கள் என்று கூட்டத்திற்கு முதல்நாள் வரை சொல்லாதது ஏற்பாட்டாளர்கள் பிழை இல்லையா? காசுசெலவுசெய்து நாடுதாண்டி நாடுவந்துதானா அவர்கள் அதை அறிந்துகொள்ள வேண்டும்? சரி யார் தலைமை தாங்கபோகிறார்கள் ? கூட்டம் எப்படி ஒழுங்கமைக்கப்படபோகிறது என்பதுகூட ஏற்பாட்டாளர்களுக்கு கூட்டத்திற்கு முதல்நாள் வரையும் தெரிந்திருக்கவில்லை என்று கூறுகிறீர்களா? அதுவும் ஏற்பாட்டாளர் பிழையே. யார் காதில் பூ சுத்துகிறீர்கள்? பாரிசில் வாழும் ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு வரப்போவதில்லை பேசப்போவதில்லை என்று நினைத்தபடி சுசியும் நித்தியானந்தனும் பாரிஸ் வந்ததாக என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது. அது பற்றி அவர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும்.


‘மாறுபட்ட கருத்துகளை வரவேற்பதும் விவாதிப்பதும்தானே எமது பண்பு, நாம் எவருடன் உரையாடத் தயாராயிருக்க வேண்டும் என்றெல்லாம்’ கூறி கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கெஞ்சிய நீங்கள் ‘வேண்டுமானால் அவரோடு(அசோக்) சேர்ந்து அவரது ‘கோளயாக்கள்’ இரண்டுபேர் நிகழ்வைப் புறக்கணித்திருக்கக் கூடும்’ என்று சாடுவது எதனால்? மாற்று கருத்துக்கு நீங்கள் குடுக்கும் மதிப்பு இதுதானா? அவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்திகொடுத்தவரே நீங்கள்தானே. தேசம்நெற் வெளியிட்ட செய்தியில் ‘புறக்கணிப்பை’ மையப்படுத்தியமை பிழை என்ற உங்கள் ஆதங்கத்தை விளங்கிகொள்ள முடியும் எம்மால் தங்களின் மாற்றுக்கருத்து பற்றி விளங்கிகொள்ள முடியவில்லை.


தனிநபர் தாக்குதல்கள்.


நாடிருக்கும் இன்றய நிலை பற்றி- உலகு எதிர்கொண்டுள்ள நெருக்கடி பற்றி எந்த கவலையுமின்றி ஒரு சில புலம்பெயர் தமிழர்களின் ஆழுமை மோதல்கள் -ஆழுக்காள் பற்றிய தனிநபர் விமர்சனங்களாக விலாவாரியாக எழுதப்பட்டு வருகிறது. நெருப்பு பறக்கும் தனிநபர் வாழ்க்கை வரலாறுகளும் அதன் அரசியல் முக்கியத்துவங்களும் இனையத்தளங்களில் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு நிறைய நேரமும் சக்தியும் தேவை. அதை அரசியல் நடவடிக்கைகளுக்கு – ஆய்வுகளுக்கு தத்துவார்த்த விவாதங்களுக்கு பயன்படுத்தினால் பலருக்கும் பயன் கிடைக்கும். அதற்கு யாருக்கும் வக்கில்லை. கடைசியாக தத்துவார்த்த-அரசியல் கட்டுரையை நீங்கள் எப்போது எழுதினீர்கள் என்று ஒவ்வொருவரும் யோசித்து பாருங்கள்.
குற்றச்சாட்டுகளுக்கு பதில்சொல்வது, அதிருப்தியான தகவல்களை மறுப்பது, தனிநபர் அரசியல்வாழ் நடைமுறைகளை தேவை கருதி விமர்சிப்பது போன்ற எழுத்துக்கள் பதியப்படவேண்டியவையே. ஆனால் ஒரு சிலர் அதையே தொழிலாக கொண்டியங்குகின்றனர். அதனால் குற்றங்கண்டுபிடிப்பதும் முடியாதபொழுது குற்றங்களை இயற்றுவதும் என்று இவர்கள் வாழ்க்கை கழிகிறது. இதன்மூலம் தனிமைப்படும் இவர்கள் வாழ்க்கை சுயத்தில் சுழல்கிறது. மக்களிடம் இருந்தும் விளிம்பு அரசியலிலும் இருந்தும் மட்டுமின்றி தமது நண்பர்களிடம் இருந்தும்கூட அன்னியப்படும் இந்த ‘மா’ மனிதர்கள் இறுதியில் உளறுவதும் ஒப்பாரிவைப்பதுமாக சிதறி சிறுக்கிறார்கள். இந்த ஆக்கினைக்குள் அகப்பட்டு சுழர ஒருசொட்டும் விருப்பமில்லை.


நானுட்பட ‘நண்பர்’ அசோக் பகைத்துக்கொள்ளாத மனிதர் இல்லை என்று சொல்லலாம். அதில் எந்த பகையும் லௌகீக காரனங்களுக்காக எழுந்தது என்று சொல்ல முடியாது. அசோக்கின் முறட்டுத்தனமான அரசியற் கணிப்பீடுகள் - பிடிவாத தனமான கேள்விகள் கதைகள்- அரசியல் நுணுக்கமற்ற கருத்துக்களை சந்தர்ப்பம் தெரியாது விசுக்குதல் - ஆழமற்ற புரிதலுடன் அவசரத்தில் ஆத்திரப்படல் -அதனால் கண்டபாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு கமெண்ட் அடித்து மற்றவர்களை துன்புறுத்தல். என்று என்னநேரம் எதுசெய்வார் எது கதைப்பார் என்று தெரியாது அந்தரத்தில் இருக்கும் கரக்டர் அசோக். அவர் தனக்கு வைத்த துடைப்பான் என்ற பெயருக்கு பதிலாக துன்பம் என்று வைத்திருக்கலாம். அவ்வகையில் பலரையும் தன்னையும் துன்புறுத்தியிருத்தலே தன் கடமையாக கொண்டியங்குகிறார் அவர்.


இதுபோல் ‘மாற்று கருத்தாளர்’; என்ற கும்பலில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை கரக்டர்கள். இருப்பினும் ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்து இயங்கவேண்டும் பேசவேண்டும் என்றே அனைவரும் இயங்குகின்றனர். நன்பர்கள் ஷோபாசக்தி, அசோக், உட்பட நாமறிந்த பலர் அதிகாரத்தின் பக்கம் போய் மக்களுக்கு எதிரான சதியில் இறங்குவார்கள் என்று நான் ஒருபோதும் நம்பபோவதில்லை. காசுசேர்த்து குடும்பம் குட்டி என்று செட்டிலாகி இளைப்பாறியபின் இலக்கியம் அரசியல் என்று பொழுதுபோக்கவரும் பெருந்தகைகளுடன் ஒப்பிடும்போது இவர்கள் பலமடங்கு திறம். ஆனால் ‘அதிகாரத்துக்கு எதிர்’ என்ற ஒரு சிறு அடிப்படையை மட்டும் ஒற்றுமைத்தளமாக வைத்துக்கொண்டு அனைவரும் இயங்குவது சாத்தியமில்லை. இதில் ‘புலி எதிர்ப்பு’ என்ற ஒன்றை மட்டும் மாற்றுக்கருத்தாக வைத்து இயங்க கேட்பது மேலதிக மடமை. எவ்வாறு எதிர்ப்பது என்பதை ஒவ்வொருவரும்; தங்கள் அறிவுக்கு எட்டியபடி வேறு வேறு விதத்தில் சிந்திக்கின்றனர். இந்த வேறுபாடு சுயநலனுடன் கலந்து உக்கிரமாக பல சந்தர்ப்பங்களில் வெடிப்பது ஒரு விதத்தில் ஆரோக்கியமான விசயமே. முரண்பட்ட கருத்துகள் அற்ற ஒற்றை சமுதாயத்தில் நாமில்லை என்பது சந்தோசமான விசயமே. ஆனால் சிறு முண்கள்கூட அடி உதையில் தீர்க்கப்படும் இலங்கை தமிழ் பண்பாடுதான் நமது மனதுக்கு கஸ்டமளிக்கிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமுதாயத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் எமது மன அழுத்தங்களை பல்வேறு வழிகளில் வெளிக்காட்டுகிறோம். வன்முறைசார் தவறுகளை அதிகமாக செய்கிறோம். சுயவன்முறை தற்கொலை முதலானவற்றை இலகுபடுத்தி வைத்துள்ளோம்.


எமது வெளிப்பாடுகள் ஆத்திரம் கலந்த உக்கிரத்தன்மையோடிருப்பது வியப்பில்லை. ஆனால் அது இழுத்துச்செல்லும் வன்முறை தளத்தில் இருந்து தெளிவுடன் விலத்தி நடக்க ஒரு சிலர்தான் பழக்கப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் தங்களை அறியாமலே உணர்வின் உந்தலில் அழுத்தங்களுக்கு எடுபடுகிறார்கள பழசை சரியாக்க முடியாது. பின்பு உணர்ந்து வருந்துவதும் மேலும் மனஉழைச்சலை கூட்டுவதாகவே இருக்கிறது. இந்த சுழற்சியின் சிறையில் வாடும் பலரினதும் சிக்கலான தொடர்பாடலின் விளைவே புலம்பெயர் அடிபாடுகளாக கூர்மையடைகிறது.


யார் யாருக்கு ‘அடி’ போடுவார்கள் என்று தெரிந்துகொள்ள முடியாத இக்கட்டான வாழ்க்கைதான் நம் வாழ்க்கையாக இருக்கிறது. இருப்பினும் ‘மாற்று கருத்து’ என்று இயங்குபவர்களில் பலரும் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதில் ஷோபாசக்தியும் அசோக்கும்கூட அடக்கம். ஷோபாசக்தியும் சுகனும் தேவதாசும் அசோக்குக்கு ஆள்வைத்து அடித்தார்கள் என்ற கதையை நம்புமளவுக்கு நமது ‘நம்பிக்கைகள்’ முற்றாக கருகவில்லை. அசோக் யாருக்காவது ஆள்வைத்து அடித்ததார் என்று எனக்கு யாராவது சொன்னால் அதையும் நான் நம்பபோவதில்லை. பாரிசில் பலர் மிக மிக உணர்ச்சிவசமாக உரையாடல்களில் ஈடுபட்டிருப்பினும் ஆள்வைத்து அடிக்குமளவுக்கு போனதில்லை. ‘என்ன இருந்தாலும் நாங்கள் இடதுசாரிகள்’ என்று அசோக்கையும் இரயாகரனையும் முன்பு ஷோபாசக்தி வக்காலத்து வாங்கி திரிந்தது எனக்கு ஞாபகமுண்டு.


அசோக்குக்கு அ.மார்க்சுடன் ஏதாவது தனிப்பட்ட முரண்பாடுகள் அடிபாடுகள் இருந்தது பற்றி எமக்கு இதுவரையும் தெரியாது. இருப்பினும் அரசியல் முரண்பாடுகளை தனிப்பட்ட விரோதமாக மாற்றுமளவுக்கு பிரச்சினைகள் முத்தியுள்ளது. நீண்டகாலமாக அரசியல் வாழ்க்கை வாழும் சிலர் தொடர்ந்தும் மக்கள் சார்ந்து சிந்திப்பதும் இயங்குவதும் இலங்கை தமிழ் சூழ்நிலையில் ஆச்சரியமானதே. ஆயுத குழு வாழ்வுகளை தாண்டிவந்து மாற்றுக்கருத்து பேசிக்கொண்டிருப்பது பெருமைக்குரிய விசயமே. ஆனால் அதற்காக நாம் தவறுகளை தாண்டி புனிதப்படுத்தப்பட்டுவிட்டோம் - என்று புலிஎதிர்ப்பை ஓதத்தொடங்கினோமோ அன்றே ஜனநாயக ஞானஸ்தானம் பெற்றுவிட்டோம் என்று இயங்குவதை-பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


மேற்கண்டபடி ‘தனிநபர் தாக்குதல்’ செய்வது மிகவும் மனச்சோர்வடைய வைக்கிறது. இதுபோன்ற மனச்சோர்வான எழுத்துக்களை எழுத ஒருசொட்டும் விருப்பமுமில்லை. அதனால் இந்தமாதிரி எழுதுவதில் இருந்து ரிட்டயர் பண்ண முதல் ஒரு பீர்Pஎம்டிவ் ஸ்ரைக் (Preemptive Strike) செய்து அடங்குவோம் என்பதே மேற்படி எழுத்தின் நோக்கம். அதனால் ‘பதிலடிகளை’ எதிர்பார்க்கவேண்டாம்.!! - நன்றி.

Freitag, 21. November 2008

அசோக்கைப் பின் தொடருகிறது "பாசிசம்"!


அன்பு வாசகர்களே,புலம் பெயர் மா(ட்டு)ற்றுக் கருத்தாளர்களுக்குள் மலிந்து மேவும் வன்முறைகளைக் குறித்து,மாறிமாறி அறிக்கையெறியும் யுத்தமொன்று மெல்லவுருவாகி வருகிறது.வாசிப்பதற்குப் பொருத்தமான பல சுவையான நடாத்தைகளைக் கொண்டியங்கும் நமது நண்பர்கள், ஒரு வகையில் பெரும் புண்ணியஞ் செய்தவர்கள்.அதாவது, ஈழத்தில் இருந்திருந்தால் நிச்சியம் இன்னொரு "சவுக்குத் தோப்பை"(உயிர்ப்பலியெடுத்துப் புதைக்கும் காடு) உருவாக்கியிருப்பார்கள்.இதுள் காலம் அவர்களுக்கு நல்லதே பண்ணியுள்ளது!


இத்தகைய(அடிபிடி-ஆட்கடத்தல்-அவதூறு-அண்டிக் கெடுத்தல்-அள்ளிவைத்தல்...)பிழைப்பைச் செய்வதற்கேனும் இவர்களிடம் உயிர் எஞ்சியுள்ளது.இது,அவர்களுக்குப் புலிகளின் போராட்டம் அளித்த நன்கொடை.


மக்கள்தான் பாவஞ் செய்தவர்கள்!


எனினும்,நல்லகாலம் இலங்கையிலுள்ள மக்களுக்கும்தாம்.


இத்தகைய மனிதர்கள் அங்குபோய் மீளவும்,மக்களைக் கொல்வதற்குள், தமக்குள் அம்பலப்பட்டுப் போவதில் மக்களைக் காக்கின்றார்கள்.


அப்பாடா!


இப்படியொரு கொடிய நரமாமிசப் புசிப்புக்கூட்டம் உலகில் "மாற்றுக் கருத்தாளர்கள்"எனும் போர்வையில் ஐரோப்பிய நாடெங்கும் தமிழ்பேசியபடி...


இவர்களையா நாம் நம்பி,ஆரோக்கியமான தோழர்களாக எண்ணிக்கொண்டோம்.



இராகவன்"நாவலனை அயோக்கியன்"என்று அம்பலப்படுத்துகிறார்.



அசோக்"சோபாசக்தி,ஞானம்,சுகன் தேவதாசன்,இராகவன் ஆகியவர்கள் சூழ்ச்சிமிகு அராஜகக் கிரிமினல்கள்"எனச் சொல்கிறார்.


இராகவனும்"அசோக் கபடத்தனமாகத் தனிநபர்களைக் குழப்பும் பேர்வழி"என்கிறார்.



தமிழ்பேசும் மக்களின் குருதியை உறிஞ்சிய இந்தத் தலைமுறை,இனியும் ஒரு விதி செய்கிறது-அது,மக்களின் வாழ்வைக் காடாத்துவதென!


புலிகளின் தலைமை கொய்த தலைகள் மண்ணுள் இற்றுப்போவதற்குள்,இவர்களும் வரலாற்றில் தமது பங்கைப் பதியம்போடுகிறார்கள்?


இன்றைய நமது "மாட்டுக் கருத்தாளர்களை"க் குறித்து தோழர் இராயாகரன் பற்பல கட்டுரைகளில் அம்பலப்படுத்தியபோது,நாம் இரஜாகரன்மீது சிலவேளை விசனப்பட்டதுண்டு-இவர்"எல்லோரையும் குறையுடைய மனிதர்களாக விமர்சிக்கிறாரே,இது சரியாக இருக்குமா"என யோசித்ததுண்டு.


இப்போது,இராயா சொன்வை அனைத்துமே உண்மையென்பது ஈழவிடுதலைப் போராட்டத் தத்துவத்துக்கு மட்டுமல்ல-இவர்களுக்கும் பொருந்துகிறது!


கடந்த கால் நூற்றாண்டாய் தோழர் இரயா சொன்னவை இப்போது ஒவ்வொன்றாக நிஜமாகிவருகிறது.



என்னவொரு விசேஷமெனின்,அது இராயாவின் ஆயுட்காலத்திலேயே சரியென்றும்,நிரூபணமாவதே!


உலகத்தில் பல தத்துவக் கோட்பாட்டாளர்களின் கருத்துக்கள்,அவர்களின் மரணத்துக்குப் பின்பே சரியாதென நிரூபணமாகிறது.இதற்கு மார்க்ஸ் நல்ல உதாரணம்.


ஆனால்,தமிழரங்கத்துள் விரவிக்கிடக்கும் இராயாவின் பல் நூறு கட்டுரைகள்பேசும் தரவுகள்-கருத்துக்கள்-ஆய்வுகள் அனைத்தும் சரியான மதிப்பீடுகளென நிரூபணமாகிறது.இது நமது மக்களுக்கு ஆரோக்கியமானது-புரட்சிக்கு உரம் ஊட்டுவது!


புலம் பெயர் மாற்றுக் கருத்தாளர்களில் பலர் வேடதாரிகள்-மக்கள் விரோதிகளெனச் செய்யப்பட்ட மதிப்பீடுகள் சரியானதாகவே கீழ்காணும் இராகவன்-அசோக் போன்றோரின் கட்டுரைகளின்வழி நிரூபணமாகிறது.


இத்தகைய மக்கள் விரோதிகள் அனைவரும் தம்மாற்றாமே அம்பலமாகும்போது,நாம் மேலும் பல மக்கள் விரோதிகளை இனம் காணத்தக்கதாகவே இருக்கிறது.இங்கே, எத்தனை வடிவத்துள் இந்தத் தீங்குகள் முக மூடிதரித்தியங்குகிறார்கள்!-குருதியுறையுங் கொடுமை வாசகர்களே இது.



தொடர்ந்து,வாசியுங்கள் வாசகர்களே.


இவற்றிலிருந்து தமிழர்களின் சமூ உளவியலைப் புரிந்து,இன்றைய நமது மக்களின் அழிவுகளுக்குக் காரணமானவர்கள் "எவர்கள்-எந்தச் சக்திகள்"என்பதை புரிந்துகொள்ளலாம்.நாளைய நமது தலைமுறைக்கு இவர்களின் வாக்கு மூலங்கள் மிக ஆய்வுக்குரிய பல தகவல்களை-தரவுகளைத் தரமுடியும்!எனவே,இதை மீள் பிரசுரிக்கும்போது,"சத்திய"கடுதாசிக்கும்-இனி ஒரு-வதை செய் தளங்களுக்கு நன்றியெனச் சொல்வது கடமை:நன்றி!


நட்போடு,

ப.வி.ஸ்ரீரங்கன்

21.11.2008


+++++++++++++++++


எம்மைத் தொடரும் பாசீஸம் : அசோக்





சமீப நாட்களாக அநாமதேய மின்னஞ்சல்களும் அநாமதேய இணையத்தளங்களும் என்னையும் ஏனைய சமூக உணர்வுள்ளவர்களையும்   நோக்கிய சேறடிப்புக்களில் இறங்கியுள்ளன. நான் எழுதியதாக இவர்களால் ‘புனையப்பட்ட’ பின்னூட்டங்கள் மின்னஞ்சல் மூலம் பல முகவரிகளுக்கு அனுப்பப்படுவதுடன் , தங்களின் அநாமதேய இணையத்தளத்தில் என் பெயரில் இவ் மின்னூட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நான் அ. மாக்ஸ்சுக்கு தீரா நதியில் எழுதிய ‘திறந்த கடிதத்திற்குப் பிற்பாடு இவ்வாறான செயல்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன . இவற்றிற்கு பின்னால் சோபாசக்தியும், லண்டன் ராகவனும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருகிறார்கள். அவர்களோடு கீரனும் அடக்கம்.

இவர்களால் புனையப்பட்டு, என் பெயரில் விடப்படும் மின்னஞ்சல்கள் பதிவுகள் மிக மோசமான வார்த்தைகளையும் பாலியல் வக்கிரகங்களையும் கொண்டனவாக இருக்கின்றன. இவற்றை எனக்கு மட்டும் அனுப்புவதோடு இல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் திட்டமிட்டு அனுப்பப்படுகின்றன. இவர்களின் வக்கிரமான எழுத்துக்களால் நானும் குடும்ப உறுப்பினர்களும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகின்றோம். இவ்வாறான செயல்பாடுகள் தாக்குதல்கள் புகலிடத்தில் எனக்கு புதியவை அல்ல. 2002ம் ஆண்டில் இவ்வாறு என் மீது மிக மோசமான மனோவிகார சேறடிப்புக்களை ‘பாலியல் மனோவிகார கிரிமினல்’ சோபாசக்தி நிகழ்த்தி இருந்தார்.

அன்று மொட்டைக் கடதாசி என்றும் மின்னஞ்சல் என்றும் இதே பாணியை கைக்கொண்டார். கலைச்செல்வன், லக்சுமி என இவரின் வதந்திகளும் காழ்ப்புணர்ச்சிகளும் புகலிடத்தில் தொடர்ந்தன. (இரயாகரனுக்கு உயிரோடு கல்வெட்டு எழுதிய குரூர மனம் கொண்டவர் அல்லவா இவர் ) புகலிடம் அவற்றை இன்னும் மறக்கவில்லை.

மீண்டும் இப்போது ராகவன் என்ற நபரின் துணையோடு மீண்டும் தன் கிரிமினல் தனத்தை தொடங்கிவிட்டார். இவர்கள் இருவரிடமும் தேங்கியிருக்கும் இந்த கிரிமினல் வகைப்பட்ட செயல்பாடுகள் புலிகளிடமிருந்து இவர்கள் கற்றுத் தேர்ந்த அரசியலில் இருந்து உருவாகியதாகும்.

இலங்கையில் தங்கள் அரசியலுக்கு முரண்பாடான அனைவரையும் துரோகிகள் ஆக்கி அவர்கள் மீது வதந்திகளையும் சேறடிப்புக்களையும் கதை கட்டல்களையும் பரப்பி கொலைகளைப் புரிந்த - புரிந்துகொண்டிருக்கின்ற புலிகளின் வரலாற்று பாரம்பரியத்தை ராகவனும் சோபாசக்தியும் புகலிடத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் செய்யும் சேறடிப்புக்களும் பாலியல் மனோவிகார குரூர எழுத்துக்களும் ஒரு மனிதனை உளவியல் ரீதியில் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். இது பாசிசத்தின் ஒரு வெளிப்பாடாகும் புலியின் பாசறையில் இருந்து வெளிவந்த இந்த பாசிஸ்ட்டுக்கள், தங்கள் குரூர மனோ விகாரங்களை மிக நுட்பமாக இன்றைய மின் இணைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.

இவ்வாறான கேவலம் மிக்க ராகவன், சோபாசக்தியின் நடவடிக்கைக்கான பின்னணியை ஆராய்வோம்.

லண்டனிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ( TBC ) என்னும் ஒலிபரப்பு நிலையம் சில வருடங்களுக்கு முன் இரண்டு தடவைகள் கொள்ளை அடிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. இவ் வானொலி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியலை வன்முறை சார்ந்த செயல்பாடுகளை கடும் கேள்விக் உள்ளாக்கி விமர்சனம் செய்துவந்ததால் இக் கொள்ளைகள் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டதாகவே நம்பப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது. சில காலங்களில் பின் இக் கொள்ளைகள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கசியத் தொடங்கின. இக் கொள்ளைகள் விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களோடு வேறு சில நபர்களும் சேர்ந்தே இக் கொள்ளையை செய்தார்கள் என்பதும் வெளிவந்தது. (முழுமையான விபரங்கள் அறிய தேசம் நெற் இணையத்தை அழுத்தவும்) இந்த நபர்கள் யார் யார் என அறிய வந்தபோது நாங்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். காரணம் அதில் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர் எங்களது நண்பராக இருந்தார்.

அவர்  கீரனாகும், இன்னொருவர் எங்களுக்கு தெரிந்தவாராக இருந்தார். அவர் லணடன் ராகவன் ஆகும், அத்தோடு இவ்விருவரும் லண்டனில் இயங்கும் இலங்கை ஐனநாயக ஒன்றியத்தின் (SLDF)முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தார்கள்.

எனவே இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக எங்களுக்குள் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் வெளிவரும் போது விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தியது பொய்யாகிவிடும் என்பதும் அவை புலிகளுக்கு சாதகமாகிப்போய்விடும் என்ற அபிப்பிராயங்களும் தெரிவிக்கப்பட்டன. இதனால் தெரிந்த எங்களால் இவை மூடிமறைக்கப்பட்டன. ஆனால் இது எப்படியோ ஆங்கில இணைய தளம் ஒன்றின் ஊடாக வெளிவந்துவிட்டது.

இந்த ஆங்கில அறிக்கை உண்மையானதாயின்  ராகவன், கீரன் குழுவிடமிருந்து நியாயத்தையும், பொய்யானதாயின்  மறுப்பையுமே நாம் எதிர்பார்த்தோம். இதில் எந்த வித அநீதியும் அயோக்கியத்தனமும்  இருப்பதாக நான் கருதவில்லை. கேள்வி கேட்டால் துரோகிகள் என்ற புலிகளின் வன்முறைச் சாக்கடைக்குள் ஜனநாயக முத்தெடுக்க முனைபவர்களுக்கு வேண்டுமானால் இது அயோக்கியத்தனமாகத் தெரியலாம்.

இதன் காரணமாக அந்த ஆங்கிலச் செய்தியை தமிழில் மொழியாக்கம் செய்து இனியொருவில் வெளியிட்டோம். இதுவே ராகவன் என் மீது காழ்ப்புணாச்சி கொள்வதற்கு காரணமாயிற்று.

இவ்விடத்தில் இன்னுமொரு சம்பவத்தை கூறவிரும்புகின்றேன். 14.06.2002ல் பரிசில் லாசப்பல் என்னும் இடத்தில் வைத்து நான்கு இளைஞர்களால் நான் தாக்கப்பட்டேன். அதில் ஒரு இளைஞர் புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால் இத்தாக்குதலை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளே செய்ததாக நாம் நினைத்தோம். எங்களது கண்டனங்களும் விமர்சனங்களும் புலிகளை நோக்கியே வைக்கப்பட்டன. 23.06;.2002ல் அன்று ‘அடிப்படை மனித உரிமைகள் மீறலுக்கு எதிரான அமைப்பு’பின் பெயரில் ஒரு கண்டன கூட்டத்தை நடாத்தினோம். புலிகளின் பக்கத்தில் இருந்து பலத்த எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டோம். இது நடந்து சில வாரங்களின் பின் சில உண்மைகள் வெளிவந்தன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இளைஞரே முன் வந்து இத் தகவலை எங்களுக்கு தந்தார். இந்த இளைஞருக்கு இத்தாக்குதலின் பின்னேதான் என்னைப்பற்றிய முழுவிபரமும் தெரிந்தது.

இவரின் அண்ணன் இந்தியாவில் என் நண்பனாக இருந்தவர். நான் தாக்கப்பட்ட செய்தி இந்தியாவிலிருந்த என் நண்பனுக்கு தெரிந்தபோது அதில் தன் தம்பியும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் அவர் தன் தம்பியோடு தொடர்பு கொண்டு விசாரித்தபோது உண்மைகள் வெளிவந்தன. இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு அந்த நான்கு இளைஞர்களையும் பயன்படுத்தியது சோபாசக்தியும் இன்று பிள்ளையானின் ஆலோசகராக இருக்கும் எம். ஆர் ஸ்ராலின் என்ற ஞானமும் என்பதாகும். இவர்களுக்கு துணையாக சுகனும் தேவதாசும் இருந்துள்ளனர். நான் தாக்கப்பட்டு சில நாட்களின் பின் மீண்டும் என்னையும் நண்பன் கலைச்செல்வனையும் தாக்கும்படி இந்த நால்வரும் அந்த இளைஞர்களை அனுகியுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்துவிட்ட விடயமும் அந்த இளைஞர் மூலம் வெளிவந்தது. எனவே இவ்வாறான வன்முறை சார்ந்த செயற்பாடுகள் சோபாசக்தி ராகவன் போன்றோருக்கு புதியவை அல்ல.

சோபாசக்தி, ராகவன் ஆகியோரின்  புகலிட வருகைக்கு பின்பே இங்கு மாற்றுத்தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த புகலிட இலக்கிய அரசியலாளர்களிடம் முரண்பாடுகளும் குழுவாதங்களும் உருவாகத் தொடங்கின. மற்றவர்களின் தனிமனித பலவீனங்களை கண்டறிந்து அதற்கேற்றவாறு ‘தீனிபோடும்’ சோபாசக்தி புலிகளின் பாசறையில் கற்றுத் தேர்ந்த அந்தக்’கலையை’ மிகவும் கட்சிதமாக இங்கும் தமிழ் நாட்டிலும் நடைமுறைப்படுத்துகின்றார்.

தனிநபர் தாக்குதல்கள் எமது நோக்கமல்ல  ஆனால் தனிநபர்கள் வன்முறை அரசியலை பிரதிநிதிதுவப் படுத்தி  மிரட்டும் போது அவர்களை அம்பலப்படுத்துவது ஜனநாயகத்தில் விருப்புள்ள ஒவ்வொரு மனிதனதும் சமூகக் கடமையாகும்.

புலிகள் வன்முறைத் தர்பார் நடாத்திக்கொண்டிருந்த 80 களில்  சிறிலங்கா அரசைக் காரணம் காட்டியே மௌனிகளாக்கப்பட்டோம்.  மீண்டும் ஜனநாயகத்தின் பேரால் அதே வன்முறை தலைவிரித்தாடும் போது புலிகளைக் காரணம்காட்டி புத்தர்களாக தியானிக்கக் கோருவது நியாயமற்றது.

குறிப்பு: தீராநதியில் வெளிவந்த என்னால் எழுதப்பட்ட ‘அ.மார்க்ஸக்கு திறந்த கடிதத்திற்கு’ திருவாளர் சோபாசக்தி அவர்கள் தன்னுடைய வழமையான பாணியில் எழுதிய புனைவுகளுக்கு என் எதிர்வினை விரைவில் வெளிவர இருக்கிறது. அதில் புகலிட இலக்கிய அரசியல் முரண்பாடுகள் சோபாசக்தியின் வன்முறை நடவடிக்கைகள் பற்றி எழுத இருப்பதால் அவற்றை இங்கு 
விபரிப்பதை தவிர்த்துள்ளேன்


***************


ராகவன்:

“ஊகச் சுதந்திரம்”

கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை மலின ‘விலை’க்கு விற்று வேறு இணையங்களில் பதிவுக்குள்ளாக்கி, பின்னர் தமிழாக்கி அதனைச் செய்தியாக்கி, வதந்தி பரப்பும் ‘தேசம் நெற்’றின் இழி நடத்தையை ‘ஊடகச் சுதந்திரமெ’ன்று பெயரிட்டு அதற்கான விளக்க உரை கொடுப்பதாகச் சொல்லி கடந்த 16.11.08 அன்று ‘தேசம்நெற்’ ஏற்பாட்டில் லண்டனில் கூட்டமொன்று நிகழ்ந்தது.


‘தேச’பிதாக்கள் சேனன், ஜெயபாலன், கொன்ஸ்ரன்ரைன், சோதிலிங்கம் வீற்றிருக்க, புதியவன் தலைமை தாங்கக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு போகாமலேயே கூட்டத்தில் நடந்தவையென்று வதந்திகளைக் கசியவிடும் ‘தேசம்’ பாணி ஊத்தைவேலை செய்து எனக்குப் பழக்கமில்லை. அதனை ‘ஊக’ சுதந்திரமாக தேசம் வரித்து ‘ஊடக’ சுதந்திரமாக வசைகளை வாரி இறைக்கும் பாணியும் எனக்கு பழக்கமில்லை.


இந்த விசர் கூத்துப் பார்ப்பதற்கு எனக்கு முதலில் விருப்பம் இருக்கவில்லை. முதல்நாள் குறும்பட விழாவில் கலந்து கொண்டபோது சபேசன், கெங்கா ஆகியோர் ‘நீங்கள் வர வேண்டும்’ என கேட்டபோது எனக்குள் ‘போய் பார்த்து நாலு கேள்வியை கேட்டால் என்ன’ என்று ஒரு சலனம். நண்பர் கீரன் ‘தூங்குகிறவனை எழுப்பலாம் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியாது’ என்ற முதுமொழியில் அபாரநம்பிக்கை வைத்திருந்ததால் அவர் இந்த மலின நாடகத்தை பார்ப்பது வீணே பொழுதைப் பாழடிக்கும் செயல் எனச் சொல்லியிருந்தார்.


எனது சகோதரர்கள் இருவர் என்மீது தேசம்நெற்றால் சுமத்தப்பட்ட பழிகளால் மன அழுத்தங்களுடனிருந்தார்கள். அவர்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து தங்களது கண்டனங்களைத் தெரிவிக்கச் சென்றிருந்தார்கள். அவர்கள் அங்கிருந்தபடியே என்னையும் கூட்டத்திற்கு வருமாறு தொலைபேசியில் வற்புறுத்தினார்கள். முதல் நாளில் தோன்றிய சலனம் இப்போது முற்றி அது என்னையும் அந்தக் கூட்டத்திற்கு அழைத்துப் போயிற்று.
அப்போது ஆறு மணிக்கு மேலாகியிருக்கும். நான் போயிருந்தபோது நாவலன் தனது உரையை முடித்திருந்தார். அவர் என்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. விவாதக்களம் திறக்கப்பட்டது. பலர் தேசத்தின் பின்னூட்டப் பகுதி மோசமானது என்றனர். “தேசம் தனக்கு ஒரு ‘அஜென்டாவை’ வைத்துக்கொண்டு மற்றவர்களை அதனை அங்கீகரிக்க கேடகிறது” என்றார் சந்திரகுமார். “ஒரு ஊடகத்திற்கு அறம், பொறுப்புணர்வு செய்திகளின் நமபகத்தன்மையை உறுதிசெய்தல் ஆகியன அவசியம், அது தேசத்திடம் இல்லை” என்றார் தவராஜா. ஜென்னி “புனை பெயரில் எழுதுவதன் காரணம் மரண ஆபத்தை தடுக்கவே, தேசம் ஒருவருடம் காலடி வைப்பதற்கு வாழ்த்துகள், இணையத்தளம் வீதிநாடகம் நடத்துமளவுக்கு தன்னை விரித்துக்கொண்டது ஆரோக்கியமான நிகழ்வு” என தேசத்தை பற்றிய புகழாரத்தை சூட்டினார்.


ஜென்னி, நாவலன், மற்றும் தேசம் ஆசிரியர்கள் தவிர வந்தவர்களில் பெரும்பாலோர் தேசம் நாசம் செய்வதாகவே அபிப்பிராயப்பட்டனர். 20 -25 பேர்வரை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். “தேசம் பிழை விட்டு வருகிறது, அது திருந்தவேண்டும்” என்ற பழைய பல்லவியே எனது கருத்துகளையும் கேள்விகளையும் நான் முன் வைக்கும் வரை அந்த நாடகத்தின் ‘மெயின் ஸ்கிரிப்டாக’ இருந்தது.


சில மாதங்களிற்கு முன் ‘கலைச்செல்வன் நினைவு ‘ நிகழ்வில் தேசத்தைத் திருத்தலாமென கனவு கண்டவர்கள் சில காத்திரமான விடயங்களை முன்வைக்க, ‘தேசத்திற்கு தடை! தேசத்தை படியாதே! பார்க்க்காதே! எனப் பாரிஸ் கூட்டத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆப்பு’ எனத் திரித்து வெளியிட்ட தேசத்தின் பொறுப்பின்மையும் கயமையும் எனக்கு நினைவுக்கு வந்தது.


நாடக இயக்குனர்கள் பல தயாரிப்புகள், அறிக்கைகள் சகிதமாக வந்திருந்தனர். ‘அவதூறுகளுக்கு பதில்’ என்ற கூட்டறிக்கைக்கு மார்க்கட்டிங் சர்வே பாணியில் புள்ளி விபரங்கள் திரட்டி வந்திருந்தனர். எனக்கு தயாரிப்புகள் தேவையாக இருக்கவில்லை. ஏனெனில் அந்த மலின நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் தேவை எனக்கு இருக்கவில்லை. அங்கு தத்துவ உசாவலோ, அரசியல் கலந்துரையாடலோ சமூக கரிசனை கொண்ட பிரச்சனையோ விவாதிக்கப்படயிருந்தால் அதற்கு நிச்சயம் தயாரிப்பு அவசியம். அந்த தேவை அங்கு இருக்கவில்லை. நான் அங்கு சென்ற பின்பாகக் கூட்டத்தில் நிகழ்ந்தவற்றில் எனது நினைவுகளில் இருப்பதை மட்டும் இங்கு தருகிறேன். விடுபடல்கள், தவறுகள் கூட இருக்கலாம். நாடகத்தின் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினால் திருத்தப்படும்.


தேசத்தின் புனைவுகளுக்கு உறுதுணையாக நின்று உழைத்தவர்களில் நாவலன் குறிப்பிடத்தக்கவர். “இன்டர்நெட் ரவுடி எனத் தன்னைச் சொல்லிப் பெருமை படுபவர் நாவலன்” என ஜெயபாலன் என்னிடம் ஒருமுறை கூறி இருக்கிறார். பெண்கள் பற்றி, தலித்தியல் பற்றி SLDF பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் அதன் பின் தொடர்ந்த மோசமான் பின்னூட்டங்கள் பற்றி அறிவதற்கு கம்ப சூத்திரம் தேவையில்லை. இவர் எழுதிய பின்னூட்டங்களை எந்தப் பெயர்களில் எழுதியிருக்கிறார் என்பதைத் தேசத்தின் ‘தல’ ஜெயபாலன் என்னிடம் முன்னரொரு காலத்தில் தெரிவித்திருக்கிறார். அடுத்தவரோடு பேசுவதையெல்லாம் ‘ரெக்கோர்ட்’ செய்து வைக்கும் கில்லாடிப் பழக்கமெல்லாம் என்னிடம் கிடையாததால் ஜெயபாலன் சொன்னவற்றுக்கு என்னிடம் இப்போது ஆதாரங்களில்லை. அவை காற்றிலே கலந்த சொற்கள். எனினும் “யாரைநோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்” என்ற கட்டுரையை எழுதிய ‘புகழை’ நாவலன் தனக்கு எடுத்திருந்தது அனைவருக்கும் தெரியும்.


நாவலனை முகத்துக்கு நேரே அயோக்கியன் என விளித்துத்தான் நான் எனது கேள்விகளையும் கருத்துகளையும் சொல்லத் தொடங்கினேன். ‘அயோக்கியன்’ என்ற சொல் சபைக்கு பொருத்தமில்லை என்பதால் மலின நாடகமாக இருந்தாலும் சபைக்கு கட்டுப்பட வேண்டுமென்ற ஜனநாயக மரபின்படி அவ்வார்த்தையை நான் மீளப் பெற வேண்டியிருந்தது .


“‘ரமிழ் அபையர்’ என்ற இன்னொரு மலின ஊடகத்தில் ஆங்கிலத்தில் வந்த பொய்ச் செய்தியொன்றை SLDFபினர் தமிழில் அறிக்கை விடுவதில்லை என முதலைக்கண்ணீர் வடிக்கும் கூட்டத்தினர் அவசர அவசரமாக தமிழாக்கம் செய்து ‘இனியொரு.com’ என்ற இன்னொரு வெள்ளை வேட்டி இணையத்தளத்தில் பிரசுரித்து, அதனை மேற்கோள்காட்டி நாவலன் என்ற அயோகியன் ‘யாரைநோவது யார்க்கெடுத்துரைப்பது’ என்ற தலைப்பில் SLDF அமைப்பில் இருந்தவர்கள் மாற்றுக் கருத்தின் சொத்தான TBCயை உடைத்தார்கள் என்ற செய்தி வந்ததற்கு மெளனம் காக்கிறார்கள் எனறும், ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் வன்முறைக் கும்பல் என்றும் நெடுங்குருதி வழிகிறதென்றும் பல்வேறு விடயங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் பாணியில் செய்து பின்னர் பின்னூட்ட சாக்கடையை திறந்து விட்டு என்னையும் எனது நண்பர்கள் கீரனையும், நீதியையும் திருடர்கள் என்றும் நட்டஈடு கொடு! என்றும் அவதூறு கிளப்பியதற்கு காரணகர்த்தா நாவலன். அதற்குச் சந்தோசமாகச் சாமரம் வீசியது தேசம். இது நிகழ்ந்த காலகட்டம் முக்கியமானது: கீரனின் தாயாரின் மரணச்சடங்கில் இதற்கான அடித்தளம் இடப்பட்டு, ஜெயதேவனுக்கு தகவல் சொல்லப்பட்டு ‘ரமிழ் அபையரில்’ வரப்பண்ணி, பின்னர் மொழி பெயர்த்து தமிழாக்கி ‘யாரைநோவோம்’ என அழகு படுத்தி அரங்குக்கு விடப்பட்டது. இது ஒரு திட்டமிட்ட செயல். தேசம் தவறுதலாக செய்த விடயமில்லை” என்றேன் நான்.


கூட்டத்தில் அமர்ந்திருந்த TBC வானொலியின் பணப்பாளர் ராம்ராஜிடம் நான் பகிரங்கமாக இவ்வாறு கேட்டேன்: “TBC” உடைக்கப்பட்டபோது TBC க்கு கீரன் உட்பட நாங்கள் பண உதவி செய்திருக்கிறோம். சுவிற்சர்லாண்டில் TBC பணிப்பாளர் சிறைவைக்கப்பட்டபோது ‘தல’ ஜெயபாலன், உதயன் பத்திரிகையில் ‘கிறிமினல் குற்றச்சாட்டில் ராம்ராஜ் பிடிபட்டிருப்பதாக செய்திவிடும் தருணம், பிடிபட்டது எதற்கு என ஆய்வை மேற்கொள்ளாமல் முதலில் உங்களுக்காக ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்ய நானும் நிர்மலாவும் முயற்சித்தோம். நீங்கள் நம்புகிறீர்களா TBC உடைப்பில் எங்களுக்குத் தொடர்பு உள்ளதென?”.


எனது நேரடியான பகிரங்கமான கேள்விக்குப் பணிப்பாளர் பதில் எதுவும் சொன்னாரில்லை. அவர் எதுவும் பேசவில்லை. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய புதியவன் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தபோதும் ராம்ராஜ் மெளனத்தை கலைக்கவில்லை.


அடுத்ததாக நான் “மாற்றுக்கருத்தளர்கள் மேல் அவதூறு செய்பவர் எனக் கூறப்படும் சேதுவின் ஆதாரத்தை வைத்து நீங்கள் புனைந்த கதை அவதூறு இல்லாமல் வேறு என்ன? என் று கேட்டேன். பலருக்கு எனது நேரடியான கருத்துக்கள் அதிர்ச்சியைத் தந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சபையில் ‘நோகாமல்’ பேசவேண்டும் என்ற உணர்வு பார்வையாளர்களிடம் இருந்தது. அவர்கள் தேசத்தின் அவதூறுக் கலாச்சாரத்தை கண்டித்தாலும் சமரசமாகப் பிரச்சனையைத் தீர்க்கவே அவர்கள் யோசித்தார்கள். தேசம் அறியாமல் தவறு விட்டிருந்தால் இம்முயற்சி வெற்றியளித்திருக்கக் கூடும். ஆனால் திட்டமிட்டு அவதூறுகளைப் புனைந்து சேது போன்ற நம்பகமற்றவர்களின் சம்பாசணையை எடுத்து ஆதாரமாக வைக்கும் கயமைத்தனத்திற்கு சமரசம் தீர்வாகாது. நாங்கள் வெறும் யுத்த நிறுத்தத்தைக் கேட்கவில்லை. தீர்வுப் பொதியுடன் கொண்ட யுத்த நிறுத்தத்தை தான் கேட்டுப் பழக்கம். எனவே இதற்கு அதிர்ச்சி வைத்தியமும் அவசியம்.


ராஜன் என்பவரை ஆதாரமாக வைத்து ‘ஈஸ்ட் காமி’ல் உரையாடல் செய்ததை தேசம் உறுதிப்படுத்தாவிட்டாலும் இந்த விடயங்களை வாசித்து வருபவர்களுக்கு ஊகம் செய்வது அப்படிப் பெரும் கடினமல்ல. இந்த உரையாடலின் போது துணை மேயர் போல் சத்தியநேசனும் உடனிருந்தார் என்று தேசம் குறிப்பிட்டிருந்தது. அவருக்கு நான் ஒரு ஈ மெயில் அனுப்பி இந்த விடயத்தை வெளிக்கொண்டு வருமாறு கேட்டிருந்தேன். பதில் இன்னும் வரவில்லை. ஆனால் கீரனிடம் அவர் சொன்னது ஏற்கெனவே பதிவாகி இருக்கிறது. TBCயை உடைத்ததாகத் தேசம் ஜெயபாலனிடம் ஒப்புக்கொள்ளும் இந்த ராஜனைத்தான் நீங்கள் அகதிகளுக்கு உதவுபவர், சமூக சேவையாளர் என்று தேசத்தில் எழுதுகிறீர்கள். அவர் உண்மை பேச மறுப்பவர் என்பது வெள்ளிடைமலை. அவரது ஆதாரம் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?” என்றேன். யாருக்கும் பதில் சொல்ல திராணியில்லை. “ராகவன் ஆணித்தரமாக விடயங்களை வைத்திருக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும்” எனப் புதியவன் சொன்னபோதும் ‘சமூக அசைவியக்கம்’ தேசம் அசையவில்லை.


அதிகாரத்திற்கெதிராக குரல் எழுப்புவதாக ‘பாவலா’ செய்யும் தேசம் அதிகாரங்கள் இல்லாதவர் மேலேயே துணிந்து அவதூறை செய்தது. சபையில் நேரடியாக எழுப்பிய கேள்விகளுக்கு விடையின்றி தவித்தது. இது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏனெனில் திட்டமிட்டு கதைகளை புனைந்து மாற்றுக் கருத்தாளர்களை அவதூறுசெய்பவர்களையே சாட்சியாக்கி தயாரித்த கயமைத்தனத்திற்கு விடை கொடுப்பது சாத்தியமல்ல. இவ்வாறு எனது விமர்சனங்களும் கேள்விகளும் தொடரத் தொடர தேசத்தின் கண்டறியாத ‘ஜெர்னலினஸ’த்தின் மீது பார்வையாளர்களின் தார்மீகக் கோபமும் தொடர்ந்தது. கெங்கா, சபேசன், சந்திரகுமார், பெளசர், யமுனா ராஜேந்திரன் அனைவரும் தேசத்தின் ஊத்தைப் போக்கைக் கடுமையாகக் கண்டித்தனர். “நீங்கள் தான் கட்டுரையை போட்டு பின்னூட்டமும் இடுபவர்கள்” என நான் குற்றம் சாட்டினேன். தங்களுக்கு பின்னூட்டங்கள் நிறைய வருவதாகவும் தாங்கள் அதனை கட்டுப்படுத்டுவதாகவும் சோதி சொன்னார். “நீங்கள் பின்னூடங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் கட்டுப்படுத்துகிறீர்கள் என்பது உண்மை, ஏனெனில் ‘அந்த ராத்திரிக்கு என்ன சாட்சியம்?’ என்ற அவதூறுக்கு பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்பட்டன. அதில் ராகவன், கீரன் TBC திருடர்கள் என்று வந்தவற்றைப் பின்னூட்டமாக போட்டுவிட்டு மற்றவற்றைக் கட்டுப்படுத்தல் தான் உங்களின் தணிக்கை தார்மீகம்” என்றேன் நான்.
” ராகவன் நீங்கள் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்” என்று உணர்ச்சி வசப்படடு வார்த்தைகளை சிந்தினார் சேனன். வெள்ளைக்காரன் மாதிரி எனக்குச் சொல்லவேண்டாம் என நான் கேட்டுக்கொண்டதை கலந்து கொண்டவர்கள் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டனர். நான் கேட்ட கேள்விகள் பதிலற்றே போயின.


சேனன் ‘அவதூறுக்கு பெயர் கருத்து சுதந்திரமல்ல’ என்ற கூட்டறிக்கை பற்றிய மார்க்கட்டிங் சர்வே பற்றி பிரஸ்தாபித்தார். ஒரு கூட்டறிக்கையை ஏதோ ஆராச்சிக்கட்டுரையில் தத்துவ பிழைபிடிக்கும் பாணியில் அவரது நாடக அரங்கேற்றம் அமைந்தது. 74 பேர் ஒப்புதல் இட்டு ( ரவியின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்) வந்த ஒரு கூட்டறிக்கை இரண்டு அடிப்படை விடயங்களை கேட்டிருந்தபோதும் அதற்குக்குப் பதில் சொல்லும் அடிப்படை அறமேயற்று கூட்டறிக்கையில் கையெழுத்திட்டவர்களை தொந்தரவு செய்து, இரவு பகலாக தொலைபேசி அடித்து, சொன்னவற்றை அரைகுறையாக விளங்கி, முட்டாள்தனமான விளக்கம் ஒன்று விடப்பட்டது.
சேனனின் விளக்கத்தை கேட்ட பெளசர் “நீங்கள் இன்னும் திருந்தவில்லை என்றார். கூட்டறிக்கைக்கான பதிலை நீங்கள் நிதானமாக வும் பொறுப்புணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றார். ஆனால் முதலையும் மூர்க்கனும் கொண்டதை விடுமா! நீங்கள் எல்லோரும் தவறு என்று சொன்னாலும் நாங்கள் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பெயரைப் பாவித்து அரைவேக்காடு பதிலறிக்கையை விட்டுத்தான் தீருவோமென்று வெளியிட்டது தேசம்.


முடிவாக, என்னை NGO எனத் தேசம் அவதூறு பரப்பியதைக் கடுமையாக எனது சகோதரர் ஒருவர் கண்டிக்க, தேசம் ஆசிரியர் ஜெயபாலன் தனது நாடகத்தைத் தொடங்கினார்.இங்கு தான் கிளைமாக்ஸ்! சோதியின் கமரா குளொசப்பில் “ராகவன் அண்ணனுக்கு தம்பிகள் ஆதரவு கொடுத்தார்கள். எனது அண்ணனை சுட்டு விட்டார்கள்” என ஜெயபாலன் கண்ணீர் உகுக்க இருநிமிட மவுனம். ஜெயபாலனின் சகோதரரின் கொலையை கண்டிப்பதும் அவரது சகோதரர்கள் அதற்காக அழுவதும் பரிகசிக்கப்படக் கூடாதது. துரதிஸ்டவசமாக வடகிழக்கில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதோ காணாமல் போயிருப்பதோ ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. எவர் வீட்டில்தான் இழவு விழவில்லை. கீரன் வீட்டில் விழுந்தது. நீதியின் வீட்டில் விழுந்தது. நிர்மலாவின் வீட்டில் விழுந்தது.கீரனின் குடும்பத்தில் 10 பேர். இன்று மூவரைத் தவிர மீதிப்பேர் உயிருடன் இல்லை. அவரது தாயார் இறந்த வீட்டில் தான் அவதூறுக்கான மேடை அமைக்கப்பட்டது என்பதை நான் நம்புகிறேன். நிர்மலாவின் தங்கையும் சுடப்பட்டவர். நீதியின் தகப்பன் உட்பட 6 பேருக்கு மேல் அவரது குடும்ப அங்கத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கீரன் அய்ந்து வருடங்கள் தடுப்புக் காவலில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர். இவர்களை பார்த்து எவ்வித பொறுப்புமிலாமல் திருடர் என்று சொன்னது ஏன்?


ஜெயபாலனின் துயரில் நான் மட்டுமல்ல அனைவரும் பங்கு கொள்கிறோம். என்றாலும், ஜெயபாலன் கலங்கியது அவ்விடத்தில் பொருத்தமில்லாமல் இருந்தது என்பதே எனது அபிப்பிராயம். இதன் பின் “நானும் கொன்ஸ்டன்டனும் பொது நிறுவனங்கள் பற்றிய விடயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறோம். அப் லிங்க்ஸ் டீ ஆர் டெக்” என அடுக்கிச் சென்றார் ஜெயபாலன். ‘அப் லிங்ஸ்’ வியாபார நிறுவனம். சிலவேளை SLDF ஒரு வியாபார நிறுவனமென அவர் நினைத்தாரோ தெரியாது.



நிற்க, அவதூறு பற்றியோ ஆதாரங்களின் நமபகத்தன்மை பற்றியோ எவ்வித பதில்களும் அளிக்கப்படவில்லை. தாங்கள் பார்வையாளர்கள் வைத்த விமர்சனங்களை கருத்தில் எடுப்பதாகக் கூற நாடகம் ஒத்திவைக்கப்பட்டது. போல் சத்தியநேசன் ‘கருத்தில் எடுப்போம்’ என்று சொன்னதை ஒரு ஒளிக்கீற்றாக பார்த்து, இது ஒரு ‘பொசிட்டிவ் ஸ்டெப்’ என்றார். ஆனால் நாடகத்தை பார்த்த பலர் நாய் வாலை நிமிர்த்த முடியாதென்றனர். அதனை உறுதி செய்ய அவர்களது அறிக்கையும் பின்னூட்டங்களும் பல்லிகளும் தொடர்கின்றன.ஊடக சுதந்திரம் என்ற பதத்தை தவறாக விளங்கியே இவ்வாறான செயலில் தேசம் ஈடுபடுவதாக யாரும் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல.


‘எதையும் தேவையான போது எழுதுவேன், அதனை தட்டிக்கேட்டால் உடனே ஊடக சுதந்திரம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பேன், அவதூறு செய்வது எனது உரிமை, பொய் செய்தி போடுவது எனது கடமை. உனக்கு வரும அழுத்தங்களுக்கோ பாதிப்புகளுக்கோ நான் பொறுப்பல்ல என்ற திமிர்த்தனமான பதிலே தேசம் ஆசிரியர் குழுவினரிடமிருந்து எமக்குக் கிடைத்திருக்கிறது.

Freitag, 19. September 2008

பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்

காலம்.



எரித்தலில் விரிந்த கொடும் யுகத்தோடு
பங்கு பிரித்த பகற் பொழுதொன்றில்
பிசாசுக்குப் பிரித்துவிட்ட உடலம்
பொய் உரைத்துத் துப்பிய எச்சில்


பெய்த மழையில் பேயின் எச்சம் போனதென்ற
பிரமை கொள் பீலி சூனியம் வைத்தபடி
நெற்றியில் தேசிக்காய் நறுக்க
குருதிகொட்டிய பற்கள் அது பேயெனப் பகல


மென்று தொலைத்த தசைகளின்
மொச்சை மூக்கின் வழி
வாழ்வுக்கொரு குருதிக் கதை விளம்ப
மண்கொள் மூளை வரம்பிட்ட கணமோ


மேகத்துள் மெல்ல விரியும் இருப்பிழந்த
துகளுக்குக் கால்கள் மண்டை வழி முளைத்தபடி
முதுகைக் குப்புறப் படுத்தபடி
சொறிவதற்கு நாட்குறித்த கனவில்



தெருவோரத்து நாய்களில் ஒன்று
திடங்கொண்டு தேடிய எதிர்ப்பால்
மல்லுக்கட்டிய கணத்தை சுரந்த சிதளொடு
மெல்ல முகர்ந்த கணத்தை மோகித்து



என்னைக் காவு கொள் கனவொடு
வரம்பின்றி மோகித்து மனமொடு மிரண்டது
மீள் வருகை ஒன்றில் மோதிய
உடலை தூக்கி நகர்ந்தது காலம்



19.09.08

Samstag, 19. Juli 2008

அறிவித்தல்!

வாசகர்கள் கவனத்திற்கு,தேசம்நெற் இணையத் தளத்தில் வெட்டியொட்டப்படும் நிர்மாணம் தளக் கட்டுரைகளுக்கும்,அந்த நிர்மாணம் எனும் பெயருக்கும், நமக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.நமது வலைப் பதிவினது பெயரில் உலாவும் நிர்மாணம் முற்றிலும் வேறானவர் என்பதைக் குறித்துரைக்க வேண்டியது நமது கடப்பாடாகும்.இது,நிலவுகின்ற இலங்கை அரசியல்போக்கில் அவசியமாகும்.


புலம் பெயர் "மாற்றுக் கருத்தாளர்கள்"பலர் இலங்கை-இந்தியக் கைக்கூலிகளாக மாறிவரும் இந்த அரசியல் இலாபங்களின் பின்னே நமது பெயர்கள் அடிபட்டுப்போவதை நாம் விரும்பவில்லை.நமது மக்களின் விடிவுக்கான விடுதலையை நாம் மக்களின் தயவோடு சாதிப்பதற்கான அடிப்படை அரசியலை முன்வைத்து இயங்குபவர்கள்.எனவே,தத்தம் தனிப்பட்ட இலாபங்களுக்காக இலங்கை-இந்திய அரசுகளிடம் மடிப்பிச்சை ஏந்தும் பொறுக்கிகளாக அலையும் புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்"எனும் பெயரில் உலாவரும் ஞானம்,இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,மற்றும் அவர்களின் பின்னே வால்பிடிப்பவர்களின் இழி அரசியல் நடாத்தைகளின் கருத்துத் தளமாக உலாவரும் தேசம்நெற்றையும் நாம் எதுவிதத்திலும் மக்கள் நலனுக்கான சக்திகளென வரையறுக்கவும் இல்லை.இவர்கள் நமது மக்களின் எதிரிகள் கூட்டில் அரசியல் இலாபம் பெறும் பொறுக்கிகள் என்பதால், இவர்களுக்கும் எமக்குமான எந்தப் பொருத்தப்பாடும் கிடையாதென்பதை மிகவும் பொறுப்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.


நிர்மாணம் எனும் பெயரில் தேசம்நெற் தளத்தில் வெட்டியொட்டும் அவரது கருத்துக்களுக்கும் நமக்கும் அடிப்படையில் வேறுபாடுள்ளது.இந்த நிலையில் அவரது செயலூடாக நமது பதிவினது கருத்ததுத் தளத்தை அளவிடும் தப்பான தருணங்களை நாம் தவிர்த்துக்கொள்ளவே இப்பதிவினூடாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இலங்கைப் போர் வாழ்வினூடாகக் கடக்கப்பட்டிருக்கும் அரசியலில் நாம் யுத்தத்தை வெறுத்தொதுக்கும் அரசியலை மக்களின் நலனிலிருந்து முன் வைக்கின்றோம்.தேசம்நெற்றில் வெட்டியொட்டும் நிர்மாணம் கொண்டிருக்கும் அரசியலை அவர் பிரதியெடுக்கும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் கட்டுரைவழி புரியமுடியும்.இவர்கள் யுத்தத்தைத் தமது கட்சி-இயக்க-தனிப்பட்ட நலனிலிருந்து எதிர்ப்பதும்,அதேயே ஒரு கட்டத்தில் இலங்கை அரசின்வழி ஆதரிப்பதாகவும் இருக்கிறார்கள்.


நமது நிலைப்பாடனது, மக்களது அடிப்படை வாழ்வாதாரத்தின் அவசியமான அதீத தேவைக்காவும்,அவர்களது உயிர்வாழ்வின் பாதுகாப்புக்கும்,உரிமைகளை வென்றெடுக்கும் இன்னொரு வகையான மக்கள்-வெகுஜன எழிச்சிக்கான முன் நிபந்தனைகளுடன் இலங்கைப் போரை எதிர்த்து வருகிறோம்.இந்த நிலையிலிருந்தே இலங்கையில் இருவேறு அரச ஜந்திரங்களால் முன் தள்ளப்படும் யுத்த ஜந்திரத்தை எதிர்த்து வருகிறோம்.இது, எமது மக்களின் எதிர்கால வாழ்வினதும்,உரிமைகளினதும் உண்மையான விடுதலைக்குரிய நோக்கங்கட்கமைய முன்வைத்து நடாத்தப்படும் கருத்தியல் போரினுள் நமது நிலையாக இருக்கிறது.


இதுவே,எம்மை தனித்தியங்கும் நிலைக்குள் இதுவரை இயக்கி வருகிறது.நாம் எந்தக் காரணம்கொண்டும் தேசம் நெற்றில் பின்னூட்டுக்கள் போடுவதற்கோ அன்றி அத் தளத்துக்குக் கட்டுரைகள் எழுதவோ அடிப்படையில் எந்த பொருத்தப்பாடும் கிடையாது.கடந்த காலத்தில் அத் தளத்தில் நிர்மாணம் எனும் பெயரில் நாம் எந்தப் பதிவையோ அன்றிப் பின்னூடத்தையோ இடவில்லை என்பதையும் இத்தால் அறியத் தருகிறோம்.


எமக்கும் அத்தளத்தில் உலாவரும் நிர்மாணத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.


நன்றி.

நிர்மாணம்.

19.07.2008

Samstag, 21. Juni 2008

ஒரு கவிதையும்,தேசம்நெற் சிலபின்னூட்டங்களும்

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும்



கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

நீ "ஈழவிடுதலை" என்கிறாயே அது என்னவென்றுரைக்க முடியுமா?
மோதிய சுவரில் வழிந்தோடும் குருதியில் பட்டுவிலகும் தென்றல்
நாசித்துவராத்தோடு குருதிவெடில் சுமந்து
எனது உயிர்ப்புக்கு உப்பிடுகிறது


எனக்குள்ளும் இறந்தவர்கள்
கொன்றவர்களுக்குள்ளும்
கொலைகளை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்கள்
தேசத்தினது விடுதலையை மையப்படுத்தும் துப்பாக்கிவழி

எனக்கிருக்கும் உயிர்த்திருக்கும் உரிமை
எந்தத் தேசமும் தந்ததில்லை
அதைத் தருவதற்கு எவருக்கு உயிருரிமையாக்கப்பட்டது?
ஒட்டிய உடலொடு கஞ்சல்படும் உயிர் மொழியின் உரிமைக்கு உரமாகிறது

மொழியோ எனக்குள் இருப்பிழக்கிறது
அஞ்சல்படுத்தப்படும் மனித அழிப்புக்கு
உலகத்தின் பலபாகத்திலும் நியாயவோலை எழுதப்படுகிறது
மக்களின் நலனென்று கொலைகள் தீவிரமாக நடாத்தப்பட்ட

தெருமுனைகளும் தேசத்தை ஏலம் போடும் பொங்கு தமிழென
சாவதற்காய் உயிர்த்திருக்கும் அனைவரையும்போலவே
எனக்கும் உயிர் நிலைத்திருக்கு
எழுப்பப்படும் உயிரின் முனகலில் மரண வலி

கொலைகளின் தீவிரம் எதற்காக?
மரணம் நிச்சியப்படுத்தப்பட்ட பலிப்பீடத்துக்கு முன்னே
துப்பாக்கிகள் பிராத்தனை செய்கின்றன
தோத்திரம் உரைக்கும் எனது எஜமானர்கள் கைகளில் ஏசுவின் குருதி

கண்டடையப்படும் நியாயத்தின் வழி
விடுதலை எனக்குச் சாத்தியம் என்பவர்கள்
என்னைத் துரோகியென என்றோ கொன்றழித்தனர்
இதையும் விடுதலையின் நீதி என்கின்றனர்!

வாழ ஆசைப்படும் மெல்லிய விருப்புக்குத்
தேசத்தின் பெயரால் தியாகம்-வித்துடல் முன் நிறுத்தப்பட்டபின்
மரணங்கள் வழிபாட்டுக்கான தரிப்பிடங்களாகின்றன
கொலைகள் "ஈழப்போர்" எதிர் கருத்துக்குத் தீர்வாகிறது

போர் வாழ்வு புகழுடம்பின் புனிதமாகின தேசத்தில்
கொல்லப்படும் உயிர் கடைப்பொழுதிலும் வாழ்வுக்காக ஏங்கித்தொலைகிறது
அதையும் தேசவிடுதலைத் தியாகமென்று
உலகத் திண்ணைகளில் தேசியக் கொடியேற்றுகிறது பாசிசம்

கொல்லப்படுவதற்கு முன் கல்லறையின் முன்னே
கனத்த மனதுடன் குழந்தைகள் அணிவகுத்தபடி
வாழ்வுக்காய் ஏங்கிக்கிடக்கச் சில காட்டுமிராண்டிகள்
தமது கட்டளையைச் சுமக்கும்படி துப்பாக்கியால் சத்தியம் வேண்டுகிறார்கள்

கொல்பவர்களைக் காட்டு நீ
கொல்லப்படுபவர்களையும் காட்டு
ஏன் கொன்றார்கள் என்றே கேட்டு வைப்போம்
உண்மைகளை இருவரும்தவிர மூன்றாம் நபரெவரும் அறியார்

ஈழம் விடுதலையாவதற்குள் குருதிச் சேற்றில் அமிழ
தமிழ்க் குறுந்தேசியம் என்னையும் உன்னையும் அண்மிக்கும்
ஈற்றில் இருவருக்கும் வேறு கல்லறைகள்
"துரோகி-தியாகி"என்று குருதியால் எழுதியும் வைக்கப்படும்

விடுதலை, சுதந்திரம், சுயநிர்ணயம்,தமிழீழம்
ஏகப் பிரதிநிதிகளின் வழியே பொங்கு தமிழாகப்பொங்க
கல்லாப் பெட்டிகள் நிரம்பும் தேசிய வர்த்தகத்தில் பணமாக
இல்லாத ஈழமோ பிணத்தால் நிரம்பி வழிய


நிர்மாணம்
21.06.2008


(கொலைகளை நியாயப்படுத்தும் தமிழ்த் தேசியச்
சூதாட்டத்தில்
நொடிந்துபோன தமிழ்ச் சமுதாயம் இருப்புக்காய் யுத்தத்தை
எதிர்த்து...


மேலே ஒரு கவிதையும்,தேசம்நெற் சிலபின்னூட்டங்களும்,
தேசம் நெற்
நிரந்தர வாசகர்கள் ரகு-ரதன் ஆகிய இருவரையும் அம்பலப்படுத்தும் மரமண்டையினது
கருத்துக்களோடு...)



மரமண்டை on June 20, 2008 6:01 pm

/இதிலென்ன அபத்தம் இருக்கு. புலிக்கு எதிராக மோசமான அபத்தங்களை மாற்றுக்கருத்து என "மாற்றுக்கருத்துக் காரர்" சொல்வதில்லையா? பழக்கதோசத்தில எழுதிபோட்டார் வழமைதான் இது விட்டுத்தள்ளுங்கள்!!!! /-ரகு

ரகு, புலிக்கெதிராக மோசமான அபத்தங்களைத்தான் மாற்றுக்கருத்தாளர்கள் சொல்வதாகச் சொல்கிறீர்கள். இருக்கட்டும். ஆனால் புலிகள் அவர்களைக் கொன்றெல்லோ குவிக்கிறார்கள்! மோசமான அபத்தத்தைவிடக் கொலைகள் தேவைல்ல- பறுவாயில்லை என்ற அர்த்தம் உமது கருத்துக்குள் நிலவுகிறது! அட உதை நான் எழுதவில்லையே என்று கேனைத்தனமாக எழுதாதீர். புலிக்குக் காவடி துக்க நீர் எடுக்கும் உந்த நேரத்துக்கு வரலாற்றைக் கற்றுக்கொண்டீரானால் உப்பிடி உமது அறிவை அம்பலப்படுத்த மாட்டீர். போதுமடா உந்த ரகுவின் அறிவிலத்தன வாதம்.
மரமண்ட

ரகு on June 20, 2008 8:13 pm

//…புலிக்குக் காவடி துக்க நீர் எடுக்கும் உந்த நேரத்துக்கு வரலாற்றைக் கற்றுக்கொண்டீரானால் உப்பிடி உமது அறிவை அம்பலப்படுத்த மாட்டீர்…/-/மரமண்ட

வரலாற்றை இயலுமானவரை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் தான் எழுதுகிறேன். உங்களுக்கு கேள்விகள் இருப்பின் கேளுங்கள் தெரிந்தவரை பதில் அளிக்கிறேன். எனக்குத்தெரியாதென நீங்கள் கருதினால் சான்றுடன் தெரியப்படுத்துங்கள் கற்றுக்கொள்கிறேன்.அவர் சொன்னார்..இவர் சொன்னார்…மக்கள் பேசிக்கொள்கிறார்கள் ……கேட்கக்கூடியதாக இருந்தது…..அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன கதையள் வேண்டாம்!!!!
தேசம்நெற் இல் கருத்து எழுதத்தொடங்கிய நாளில் இருந்து பலர் மஹாபாரத, ராமாயண , வடஇந்திய, தென்னிந்திய, ஆசிய, ஆபிரிக்க, அரேபிய, தென்அமெரிக்க பெயர்களுடன் வந்து கருத்துக்கூறுகிறிச் செல்கின்றனர். நாளொரு கருத்து பொழுதொரு பெயர் என. ஆனால் நான் அதே பெயரிலே வந்து கருத்துக்கூறிக்கொண்டு தான் இருக்கிறேன். எங்கும் ஓடி புனைபெயகளின் பின்னால் ஒளிக்கவில்லை. சரித்திரத்தை ஆதாரங்களுடன் கற்றுக்கொடுங்கள்!

/..மோசமான அபத்தத்தைவிடக் கொலைகள் தேவைல்ல- பறுவாயில்லை என்ற அர்த்தம் உமது கருத்துக்குள் நிலவுகிறது!….//
விடுதலைப்போராட்டத்தில் மோசமான அபத்தக்கருத்துகள் கொலையை விட கேவலமானவை என்பதில் எனக்கு உடன்பாடே!!!!


மரமண்டை on June 21, 2008 8:38 am


/விடுதலைப்போராட்டத்தில் மோசமான அபத்தக்கருத்துகள் கொலையை விட கேவலமானவை என்பதில் எனக்கு உடன்பாடே!!!!/-ரகு


ஆக "விடுதலைப் போராட்டத்தில்" கொலைகள் செய்லாம் என்கிறீர்? உங்கள் இந்த மனதுதான் இதுவரை பல்லாயிரக்கணக்கான கொலைகளை" ஈழவிடுதலையின்" பெயரால் புலிகள் செய்கினம். இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங் குழுக்களும் அடக்கம்! இத்தகைய கொலைகள் அபத்தமான கருத்துகளைவிட நியாயம் பெறும் உமது மனதுதான் புலியினது அராஜகத்துக்கு உரம் போடுவதும்; அதன் இருப்புக்குத் தத்துவ ஆதாரமாகும். நீர் ரகு என்ற பெயரில் புலிக்குப் பிரச்சாரப் பீரங்கியாகப் புலியின் நிதியிடலில் இயங்கும் முதல்தரமான கொலைக்காரன். உம்மோடு கருத்தாடுவதற்கு முதலில் உமக்குள் இருக்கும் புலியைக் கொன்றுவிட்டு வாரும்.


(நாசிகளின் மீள் வருகை கருப்பு நாசிகளாக...)


இந்தத் தேசம் நெற்றில் மிகக்கெடுதியான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் ரகுவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தொடர்ந்து கொலைகளை "விடுதலையின் "பெயரால் எவர் நியாயப்படுத்துகிறாரோ அவரே மிகப்பெரும் சமூகவிரோதி. ஈழத்தின் பெயரால் இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்கள் மகத்தானவொரு உண்மையைவிட்டுச் சென்றுள்ளார்கள். அது தமிழ்ச் சமுதாயம் ஒரு கொலைவெறிபிடித்த சுயநலக் கிரிமினல் கூட்டம் என்பதே. இந்த உண்மையை புலிகள் அடிக்கடி செய்யும் அரசியல் சூதாட்டத்தில் அனைவரும் கண்டையமுடியும். இதையே ரகு தனது தொழிலாகத் தேசத்தில் கருத்துச் சொல்வதென்ற போர்வையில் செய்துவருகிறார். இதுவரை இந்த மக்கள்கூட்டம் இழந்த உயிர்களையும் கண்டு ரகு இப்படிக் கொலையை நியாயப்படுத்தும்போது அதையும் அனுமதிக்கும் ஜெயபாலன்மீது சந்தேகம் வருகிறது. இவரும் "விடுதலையின்"பெயரால் கொலைகளை ஏற்கிறரா என்று.

எதிரியையும் அவனுக்கு-அவளுக்குரிய உயிர்வாழும் உரிமையுடன் வாழ அனுமதிக்கும் உயிராதவுரிமையை எந்த விடுதலையும் பறித்திடமுடியாது. மாறாக "எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் என்று அதையொட்டி பார்ப்பதும் அத்தகைய காரணத்தின் தவறு அமைப்புக்குள் நிலவுவதன் தோறறுவாயைக் காணுவதும்தான் சரியாக இருக்கும்.

இதுவரைப் புலி அரசியலின் இருப்பே கொலைகளால்தான் எனும்போத அத்தகைய கொலையை ரகு நியாயப்படுத்துவது அவருக்குக் குற்றமாவதில்லை. இதனால்தான் பலர் புலிகளின் பொய்யுரைகளை நம்பிக் கொலைகளைச் செய்கிறார்கள். ஈழம் என்ற கோசம் இத்துணை வினைகளைச் செய்யுமென்று அன்றே ஆருடம்கூறியவர்கள் இப்போது புலிகளால் கொல்லப்பட்ட தினத்துக்குள் மட்டுமே வாழ்கிறார்கள்! அவர்களின் அடிச்சுவடே இல்லை. அதற்கு மாறாக ரகு போன்றவர்கள் நியாயம் சொல்லும் -கருத்துச் சொல்லும் தளமே மிஞ்சியுள்ளது.

மரமண்ட


ரதன் on June 21, 2008 10:23 am

//இந்தத் தேசம் நெற்றில் மிகக்கெடுதியான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் ரகுவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்./-/மரமண்ட

ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கோழைத்தனமானபடுகொலை என்கிறார்கள். சிறிலங்கா ஆயுதபடை மீது புலிகள் தாக்குதல் நடத்தினால் கோழைத்தனமான தாக்குதல் என்கிறார்கள். அப்ப எது வீரத்தனமான தாக்குதல்.
ஆயுதமோதல் என்றால் களப்பலிகள் உங்கள் மொழியில் கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆயதபடையில்லாத ஒரு நாட்டை சொல்லுங்கோ. பிறகு எல்லாருமாய் சேர்ந்த புலியை ஆயுதத்தை விட சொல்வோம். கலகத்தில்தான் நியாயம்பிறக்கும். வலிமைதான் வாழ்வு

//"எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் //
புலிகள் எதனால் உருவாக்கப்பட்டார்கள் என்ற பக்கத்தை பார்க்க மறு(ற)க்கிறீர்கள்.




மரமண்டை. on June 21, 2008 12:14 pm



//ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் கோழைத்தனமானபடுகொலை என்கிறார்கள். சிறிலங்கா ஆயுதபடை மீது புலிகள் தாக்குதல் நடத்தினால் கோழைத்தனமான தாக்குதல் என்கிறார்கள். அப்ப எது வீரத்தனமான தாக்குதல்.ஆயுதமோதல் என்றால் களப்பலிகள் உங்கள் மொழியில் கொலைகள் நடக்கத்தான் செய்யும். ஆயதபடையில்லாத ஒரு நாட்டை சொல்லுங்கோ. பிறகு எல்லாருமாய் சேர்ந்த புலியை ஆயுதத்தை விட சொல்வோம். கலகத்தில்தான் நியாயம்பிறக்கும். வலிமைதான் வாழ்வு
//"எதிரி-துரோகி"எப்படி உருவாகிறார்கள்?- ஏன்- எதனால் உருவாக்கப்படுகிறார்கள் //புலிகள் எதனால் உருவாக்கப்பட்டார்கள் என்ற பக்கத்தை பார்க்க மறு(ற)க்கிறீர்கள்.//-ரதன்


ரதன் மீளவும் தவறு செய்கிறீர்கள்.

ஈபிஆர்எல்எப் ஈபிடிபி புளொட்டு பிள்ளையான்குழு எனும் ஆயுதகுழு மீது புலிகள் நடவடிக்கை எடுத்தால்…
புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?

இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்.
புலிகளையும் ,மக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்.

ஆனால்,அந்த மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் அடக்கியொடுக்கும் புலிகளோ அல்லது அரசோ மற்றும் ஆயுதக்குழுக்களோ இவற்றைத் தீர்மானிக்கின்ற சூழலேதான் இன்று கொலைகளுக்கு மூல காரணம்.

பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தார்கள்?

புலிகளின் நியாயத்தின்படி பிள்ளையான் குழு மக்கள் விரோதிகளாக மாறியதற்கான அரசியல் என்ன? இதைச் சாத்தியப்படுத்திய போராட்டத்தின் செல்நெறியை மீள ஆய்வுட்குட்படுத்தும் உட்கட்சி ஜனநாயத்தைப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் முன்வைத்துப் போராட முடியுமா? அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்.
இவற்றையெல்லாம் புறத்தே தள்ளியபடி, ஏகத் தலைமை நாங்கதான்-நாங்கள் செய்யும் நடவடிக்கை-அரசியல்-கொலைகள் எல்லாம் மக்கள் நலனிலிருந்தே இப்படிச் செய்கிறோம் என்னும் புலி மனதே ரதன் வழி இப்போது இயங்குகிறது.

நான் கொலைகளைப்பற்றிக் கருத்துச் சொன்னால் உடனே அதே புலிமனது ஈ.பீ.ஆர்.எல்.எப் பிள்ளையான் குழு;அரசு என்று கயிறுதிரிக்கிறது!
புலிகளினது இயக்க நலனிலிருந்து மக்கள் உரிமைகளைக் காணவிரும்பும் மனது இறுதியில் கொலைகளைப் புலிக்கொடிக்குள் மறைத்துத் தேசிய விடுதலையால் நியாயப்படுத்துகிறது. இது திட்டமிட்ட புலி அரசியல். இங்கே ரகுவோ அல்லது ரதனோ மக்களின் உயிர்மீது கொலைக்காரகளின் அரசியல் கொலை வண்டியை ஓட்ட முனைவதன் தொடர்ச்சியாகத் தேசம் நெட்டில் பாதை அமைக்கிறார்கள். அது அம்பலப்படப்போகும் இந்தத் விவாதத்தை இனிமேல் தொடரவேண்டும்.

யுத்தத்தை நிறுத்து-அப்பாவி மக்களையும் அவர்களின் குழந்தைகளையும் "துரோகி"சொல்லி கொல்லுவதைத் தடுக்கவும் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களின் உயிராதார வாழ்வுத் தேவைகளின் சிதைவைத் தடுக்கவும் அவர்களின் மீது தொடக்கப்பட்டிருக்கும் அரச-இயக்கப் பயங்கரவாதப் போரைத் தடுத்திட முதலில் இந்த ஈழப்போர் என்றதை அம்பலப்படுத்தி அதற்கெதிராகக் கருத்தாடவும்.

மக்களையெல்லாம் மந்தைகளாக்கும் புலிவகை அரசியல், அப்பாவிக் குழந்தைகளை அழிப்பதில் கடந்த கால் நூற்றாண்டின் வரலாற்றைப் படிக்கவும்.
இதுதான் தமிழ் மக்களின் கண்ணீருக்குக் காரணமான ஆயுதக் கலாச்சாரத்தையும் அதன் பின் இயங்கும் அன்னிய அரசியல் ஆர்வங்களையும் விளங்கிக்கொள்ளவும்; இந்தப் போராட்டத்தால் துரோகிகளாக்கப்படும் போராளிகளின் பின்னே கட்டமைக்கப்பட்ட அரசியல் சூதாட்டத்தையும் விளங்கும் முதற்படியாகும்.

ரதன் பாணியில் புலிகளின் நடவடிக்கை என்று இவற்றை ஏற்பதற்கு நாம் ஒன்றும் மக்களின் உரிமைகளுகளுக்குப் புலிகளே பொறுப்பாளிகளெனப் புலிகளுக்கு பட்டயம் எழுதிக்கொடுக்கவில்லை.அப்படி மக்களின் உரிமைகளை ஏலம்போடும் ஏகதலைமைத்துவத்தை புலிகளின் அரசியலிலிருந்து நான் கற்றுக்கொள்ளவில்லை.


அது புலிகளின்வழி உங்களிடம் இயங்கினால்… அதை நீங்கள் எமக்காக இங்கே காவி வருவது வீண். மக்களே தமது விடுதலைக்கு எதிரானவர்கள் எவரென்பதை நிலைநாட்டும் நாட்கள் நெருங்கும்போதெல்லாம் அவர்களைக் குறுந்தேசிய மாயைக்குள் இட்டு அழிப்பு அரசியல் செய்ய நீங்கள் பொங்கும் பொங்கு தமிழுக்குப் புரட்சியென்றோ விடுதலைப் போராட்டமென்றோ எந்தத் தெரிவும் இல்லை. இது திட்டமிடப்பட்ட படுகொலை அரசியல். இதைத் தடுப்பதற்காக இவர்களை முதலில் அம்பலப்படுத்தியாக வேண்டும்.


ரகு-ரதன் இயங்கும் புலி அரசியல் சாய்வில் பொல்லாத கொலை அரசிலொன்று "நடவடிக்கை" என்று நியாயம் சொல்கிறது. இதையும் தேசம்நெற் மீளவும் பதிவிடுவதால் நான் தொடர்ந்து வருகிறேன். இது கொலைகளுக்கெதிரான குரல். ஈழப்போரென்று மக்களை துரோகியாக்கும் ஆயுத அராஜகத்துக்கெதிரான குரல் இது எப்போதும் -எங்கேயும் ஒலிக்கும். மீளவும் மக்கள் விரோதிகளை எச்சரிக்கிறேன்.

மரமண்டை.


ரகு on June 21, 2008 1:15 pm


//….இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங்குழுக்களும் அடக்கம்! ….///-மரமண்டை.

ஆனால் அவையளைக் கேட்டால் தாங்கள் வேறு புலி வேறு என்கினம். உப்பிடித்தான் இந்த ஆட்கள் தமிழ் நாட்டில செய்த நசலுகள் எல்லாம் புலியின்ர தலையில விழுந்தது.





/…இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்…..//என்ன நடவடிக்கை?


/…புலிகளையும் ,மக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
இந்த மக்கள் போராட்டக்குளுவை எப்படி உருவாக்கிறதண்ணை?

//…பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தார்கள்?…//
சொல்லிச் சொல்லி களைச்சும் இன்னும் கேக்கிறிங்கள். !!!

//.அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்….//
அதுதான் புலித்தலைமை நடவடிக்கை எடுக்குதே. அவர்களின் இயக்கத்துள் இவ்வாறான துரோகங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் விளங்கும்.



ரதன் on June 21, 2008 4:07 pm


//புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?//-மரமண்டை

ஈழத்தமிழரின் ஏகோபித்த பிரதிநிதி. தமிழீழத்தின் நிழல் அரசு. இது ஆயுத போராட்டாத்தாலும் 2004ல் நடைபெற்ற நாடளமன்ற தேர்தல் ஊடகம் நிரூபிக்கப்பட்ட உண்மை. புலிகளை தடைசெய்தவர்கள் கூட சிறிலங்கா அரசை புலிகளுடன் பேச வலியுறுத்துவது கூட இதன் அடிப்படையில்தான்.


//இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்.//-மரமண்டை

அதைதான் மக்கள் 2004லில் நடந்த நாடளமன்ற தேர்தலூடக தீர்மானித்தார்கள். 2000 குறைவான புலிகள் 120 000 மேற்பட்ட இந்தியப்படையையும் பல்லாரயிரக்கணக்கான இந்திய ஆதரவு ஆயுத குழுக்களையும் விரட்டிஅடிக்க முடிந்ததற்கான பிரதான காரணங்களிலொன்று ஏகோபித்த மக்கள் ஆதரவு என்ற யதார்த்தம் புரியவில்லையா?

//பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தாhகள்?//-மரமண்டை
முதலாவது தம்மீது நடைபெறவிருந்த விசாரணைக்கு முகம் கொடுக்கும் நேர்மையின்னை. அதே நேரம் புலிகளை எதிர்ப்பதால் கிடைக்கபோகும் பணம் பதவி ஆசை.


//புலிகளின் நியாயத்தின்படி பிள்ளையான் குழு மக்கள் விரோதிகளாக மாறியதற்கான அரசியல் என்ன?//-மரமண்டை
தனது மனித நேர்மையீனமென்பது பலருக்கு இயல்பாகவே உள்ளவிடயம். இதற்கெல்லாம் ஒரு அரசியல் காரணங்களில்லை. ஒருவகை தனிமனித பேராசை.


//உட்கட்சி ஜனநாயத்தைப் புலிகளின் அடிமட்டப் போராளிகள் முன்வைத்துப் போராட முடியுமா?//-மரமண்டை

புலிகள் "செய் அல்லது செத்துமடி" என்ற தொனிப்புடைய இராணுவ அமைப்பு இந்த அடிப்படையதார்த்ததை முழுமையாக உள்வாங்கினால் இந்த கேள்வியின் அர்த்தமற்ற தன்மை புரியும். அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்செல்வனுக்கு பிரிகேடியர் எனும் இராணுவ பதவி நிலையே வழங்கப்பட்டது.


//அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்//-மரமண்டை

"துரோகியாக்கப்பட்டதன்" என்ற சொல்லில் தொக்கிநிற்கும் அர்த்தம் என்ன?. கிழக்கு மக்களின் நன்மைக்காக தான் பிரிவதாக சொன்ன கருணா லண்டனுக்கு ஒடிவந்ததிலிருந்து புரியவில்லையா அவரின் சொல்லும் செயலும் எதிர்மாறனவை என்று. கருணாவுடன் கொழும்பிற்கு தப்பியோடிய தளபதிகள் ஏன் வலியவந்து புலிகளிடம் சரணடைந்தார்களென்று எப்பவாவது சிந்தித்து பார்த்தீர்களா!

புலிகளின் வருவிற்கு முன்னர் துரொகிகள் என்ற சொல்லோ மனிதர்களோ(?) தமிழர் வரலாற்றில் இருக்கவில்லையா? காக்கைவன்னியன் பூதத்தம்பி…. என்று மிகநீண்ட பட்டியல்களுக்கும் புலிகளா காரணம்.


//புலி மனதே ரதன் வழி இப்போது இயங்குகிறது//-மரமண்டை

ரதனை ரொம்பதான் புகழுகிறீர்கள். புலிகளிடமிருக்கும் வீரம் தியாகம் ஈகம் தொலைதூர பார்வை எங்கை ரதன் எங்கை!


//நான் கொலைகளைப்பற்றிக் கருத்துச் சொன்னால் உடனே அதே புலிமனது ஈ.பீ.ஆர்.எல்.எப் பிள்ளையான் குழு;அரசு என்று கயிறுதிரிக்கிறது!//-மரமண்டை
நீங்கள் கொலையென்ற ஒற்றை சொல்லுக்கை எல்லாவற்றையும் மறைக்கவெல்லோ பார்க்கிறீர்கள்.


//நாம் ஒன்றும் மக்களின் உரிமைகளுகளுக்குப் புலிகளே பொறுப்பாளிகளெனப் புலிகளுக்கு பட்டயம் எழுதிக்கொடுக்கவில்லை.//-மரமண்டை

முதலில் தனிமனித சுதந்திரத்தை மதியுங்கோ.


//அது புலிகளின்வழி உங்களிடம் இயங்கினால்… அதை நீங்கள் எமக்காக இங்கே காவி வருவது வீண்.//-மரமண்டை

அதை எனது பின்னூட்டத்தை வாசிப்பவர்கள் முடிவெடுக்கட்டும் எனது கருத்து வீணே இல்லை பிரயோசனமோ என. நீங்கள் சொன்ன மக்கள் உரிமையும் இதற்குள் அடங்குது.


//இது திட்டமிடப்பட்ட படுகொலை அரசியல். இதைத் தடுப்பதற்காக இவர்களை முதலில் அம்பலப்படுத்தியாக வேண்டும்.//-மரமண்டை
மக்களின் ஆதரவற்றவர்களின் வெற்று புலம்பல்களும் இதே தொனிப்பில் இருப்பதைதான் பார்க்கிறேன். தமிழர்களுடன் சேர்ந்து வாழும் புலிகளை மக்களிடத்திலிருந்து அந்நியப்பட்டுள்ளவர்கள் அம்பலப்படுத்த போகிறார்களாம்.


//மீளவும் மக்கள் விரோதிகளை எச்சரிக்கிறேன்//-மரமண்டை

நீங்களே வரவேண்டிய பொயின்ருக்கு வந்திட்டிங்கள்கள். நீங்கள் வெறுமான சொல்லுகிறீர்கள் புலிகள் அதை செய்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் கேட்டீர்களே "புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?" நான் இறுதியாக கேட்கிறேன் எச்சரிக்கை விட நீங்கள் யார்?



மரமண்டை on June 21, 2008 5:40 pm


/ரகு on jun 21 2008 1:15 pm //….இங்கே புலிகள் என்பதற்குள் அனைத்துக் குறுங்குழுக்களும் அடக்கம்! ….///

ஆனால் அவையளைக் கேட்டால் தாங்கள் வேறு புலி வேறு என்கினம். உப்பிடித்தான் இந்த ஆட்கள் தமிழ் நாட்டில செய்த நசலுகள் எல்லாம் புலியின்ர தலையில விழுந்தது.


…இத்தகைய குழுக்களை மக்கள்தான் தமது நடவடிக்கையூடாக அவர்கள் தமக்கு எதிரானவர்களாவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
என்ன நடவடிக்கை?

/…புலிகளையும் இமக்களே தமது நலனிலிருந்து புலிகள் மக்கள் போராட்டக்குழுவென்று தீர்மானிக்க வேண்டும்…..//
இந்த மக்கள் போராட்டக்குளுவை எப்படி உருவாக்கிறதண்ணை?

//…பிள்ளையான் குழுவோ அன்றி கருணாவோ ஏன்-எதற்காகப் புலிகளிலிருந்து பிரிந்தாhகள்?…//
சொல்லிச் சொல்லி களைச்சும் இன்னும் கேக்கிறிங்கள். !!!

//.அன்று மாத்தையா குழு துரோகியாக்கப்பட்டதன் பின் இன்று-கருணா-பிள்ளையான் தொடர்கதை. இதை உற்பத்தி செய்யும் புலித் தலைமை பற்றி கப்சிப்….//
அதுதான் புலித்தலைமை நடவடிக்கை எடுக்குதே. அவர்களின் இயக்கத்துள் இவ்வாறான துரோகங்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குழந்தைப்பிள்ளைக்கும் விளங்கும்.-ரகு//



ரகுவினது மனது இன்னும் கொலைகளை நியாயப்படுத்தும் மனதாகவே-புலியினது அரசியலால் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிதென்பதற்கு மேலுள்ள பதில் நிரூபணமாக இனியிருக்கும்.மக்களின் நடவடிக்கை என்றெழுதும்போது…அதை என்னண்ணை நடவடிக்கை-எப்படிப்பட்ட நடவடிக்கை என்கிறார்.இக்கேள்வி மக்களைப் பார்வையாளராக்கி அவர்களின் குழந்தைகளை அடியாட்படைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பாசிச இயக்கத்தின் வழி தெளிவாகிய மிக மோசமான எள்ளல்.மக்களின்றி-அவர்களது உண்மையான எழிச்சியின்றி-மக்கள் அமைப்பு உருவாகமுடியாது.மக்களே தமக்கான அமைப்பைத் தமது போராட்டத் தெளிவினுடாகக் கட்டியமைக்கும் மக்கள் எழிச்சிக்குச் சுயமான அவர்களது போராட்டச் சமூக நடவடிக்கைக்கு விலங்கிட்ட புலிகள்-அரசு-மற்றைய அராஜகக் குழுக்களெல்லாம் மக்களையும் அவர்களது விடுதலையுணர்வையும் வேராடு சாய்த்தபடி மக்களுக்காகக் காரியமாற்றுகிறோம் என்பது மிக மோசமான அழிவு அரசியலுக்கிட்டுள்ளது.இதை நோக்கிய மேன்மேலுமான இயக்கச் சர்வதிகாரம் ஏகத் தலைமைத்துவத்துக்காக மாற்றுக் குழுக்கள்மீதான அத்துமீறிய அராஜக அழிப்பால் இன்று மாற்றுக்குழுக்களை எதிரியாக்கிய"தெரிவு"புலிகளால் திட்டமிடப்பட்டு ஆற்றிய வரலாற்றுக் கொலை.இதைத் தகர்ப்பதற்காகவே மக்களின் சுய எழிச்சிக்குத் தடையான இயக்கச் சர்வதிகாரத்துவப் பாசிசக் காட்டாட்சியை உடைக்க ஜனநாயகத்தைக் கோருகிறது மக்களின் வாழ்நிலை.
இதை மறுப்பதும் மக்களைத் தொடர்ந்து யுத்த ஜந்திரத்தால் வருத்திக் கொலையின் மூலம் அவர்களின் எழிச்சியை ஒடுக்குவதற்குப் பெயர் ஈழப்போராட்டம்.இந்தக் கேடுகெட்ட இயக்க வாதச் சகதிகுள்ளிருந்தபடி மக்களின் நடவடிக்கை என்பதை விளங்க முற்படும் ரகுவின் மனது அதைக் கேள்வியாக்கி நம்முன் தன் கருத்து மனதை இப்படி அம்பலப்படுத்துகிறது.


மாற்றுக் குழுக்கள்மீது எடுக்கப்பட்ட புலிகளின் அழிப்பு யுத்தமானது இன்றைய கிழக்குப் போராளிகள்மீது எடுக்கப்பட்டுவரும் அராஜக அழிப்புவரை அரசியல் வறுமையை வெளிப்படுத்துகிறது.இங்கே ஆயுதத்தைவிட வேறுமொழி இல்லை என்பதன் தொடர்ச்சி புலிகளின் தலைமைத்துவத்தின் இருப்பினது தொடர்ச்சியாக விரியும்போது அதுவே கொலைகளை ஊக்குவித்துக்கொண்டு கொலையாக்கப்படுபவர்களைத் "துரோகி"என்று முத்திரை குத்துகிறது.இப்படி துரோகிகளாக்கப்பட்ட எத்தனையே தீரமிக்க உயிர்கள் இன்று இந்தத் தமிழ் மனதிடம் இன்னும் கேள்வியையே தொடக்கவில்லை.அப்படிக் கேள்வியை இத்தகைய ரகு-ரதன் போன்றவரிடம் எழுப்பியிருக்குமாயின் இவர்கள் இந்த அராஜக யுத்தத்தை நிறுத்துவதற்காகப் புலிகளையும்>இலங்கை அரசையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி மக்கள் பக்கம் நிற்பார்கள்.அப்படி நிற்கும்போது மட்டுமேதான் நாங்களும் மக்கள் குழுமத்திலொரு உறுப்பினர் என்ற பொதுமனது வேலை செய்யும்.இந்த மனதுதான் மக்களினது உரிமை என்பது புலிசொல்லும் புலுடா அல்ல.அது மாறாக மக்களை விடுவிப்பதற்கான கோரிக்கைகளோடு பின்னப்பட்டு மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அவர்களது வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்பட்ட வெகுஜன எழிச்சியாக இருப்பதற்கு செய்யப்படும் நடவடிக்கை என்று விளங்கும்.


பிள்ளையான் குழுவுக்கு எதிராக-மாற்றுக் குழுக்களுக்கெதிராகப் புலிகள் எடுக்கும் நடவடிக்கை என்வென்று குழந்தைகளுக்கும் தெரியுமென்று பாசிச அரசியலுக்கு விளக்கம் கொடுக்கும் ரகு அதே மனதோடு மாற்றுச் செயற்பாடு "துரோகம்"என்கிறார்.இதை மக்கள்தான் சொல்லவேணஇடும் துரோகமென.நீங்கள் வணங்கும் புலித் தலைமை அல்ல.ஆக புலிகள் கொலைகளைச் செய்வதும் அதை நியாயப்படுத்தத்"துரோகி"என்பதும் இன்று மக்களிடத்தில் எவ்வளவு பெரிய அரசியல் வெற்றிடத்தை-மெளனத்தை உருவாக்கியுள்ளது!ஒரு சிறு குழந்தையே இந்த வகை அரசியலால் மெளனமாக்கப்பட்டு அதன் உளவியலை அச்சப்படுத்திய இந்தக் கேடுகெட்ட அரசியலை ரகு பெருமிதமாக இங்கே எடுத்து வைக்கும் உளவியலை எந்த அரசியலோடு இணைக்கமுடியும்?இது கிட்லர் காலத்துக் காயடிப்பு அரசியலோடு சம்பந்தப்பட்டது.


மாத்தையாவை அவோரோடு சேர்த்துக் கொல்லப்பட்ட போராளிகளை இன்றும் தொடரும் இதே வகை அழிப்பைப் பற்றிய புலிகளின் சுய விமர்சனம் எஙஇகே முன்வைக்கப்பட்டது?அப்படி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மாத்தையாவையும் அவரோடு கொல்லப்பட்ட போராளிகளையும் மக்களேதான் தமது நலனிலிருந்து என்ன தீர்ப்பளிப்பதென்று தீர்மானித்திருப்பார்கள்.ஏனெனில் இதுவேதாம் மக்கள் போராட்ட அமைப்பின் இலக்கணம்.இன்று கருணாவின் பிளவுக்கு அதே பாணி"துரோகம்"என்பதை முன்வைக்கும் இதே புலிப்பாசிஸ்டுக்கள் கிழக்கில் கொன்றுகுவித்த போராளிகளை மக்கள் முன் நிறுத்தும் பண்போடு காரியமாற்ற முடியாத ஆயுதக்காடைத்தனம் உருவாகிய சூழல் எப்படியுருவாகியது?குறுங்குழுக்களாக அமைப்பு வெடிக்கும் ஒரு அரசியல் முகிழ்ப்புத் தடீரெனத் தோன்ற முடியாது.இது உட்கட்சிக்குள் தொடர்ந்து நிலையெடுத்துவரும்வரை அதை அறியாதளவுக்குபஇ பாசிஸ்டுக்கள் மக்களிடமிருந்து அன்னியப்பட்டுக் கிடக்கிறார்கள்.


இதே தொடர் கதையில் வரும் ரகு-ரதன் பாத்திரங்கள்தான் இன்று குழந்தைகளுக்கே தெரியும் என்று புலிகளின் அராஜகத்தின் அத்துமீறிய மக்கள் விரோதக் கொலைகளைச் சொல்லி நம்மையும் அச்சப்படுத்துகிறார்கள்.


தம்பி ரகு பக்கம் பக்கமாக எழுதுவதல்ல மக்கள் அரசியல்-விவேகம்.மாறாக மக்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து அவர்களை எஜமானர்களாகக்கொண்ட மக்கள் அரசியலை விளங்க முற்படுவதும் அதை நிலைப்படுத்தும் சூழலை இல்லாதாக்கிய இயக்கச் சர்வதிகாரத்தை தொடர்ந்து அம்பலப்படுதஇதுவதுதான் நியாயமான விவேகம்.இதன் தொடரில்தான் யுத்தத்தை நிறுத்து.மக்களைப் பேசவிடு என்கிறோம்.நீங்களோ குழந்தைகளுக்கே எங்கள் புலிகளின்"துரோக"த்துகான மரணத் தண்டனை என்று மக்கள் விரோதிகளாகவே அம்பலப்பட்டுத் தலை குனியும் அராஜவாதிகளாக நிற்கிறீர்கள்.


மரமண்ட



மரமண்டை on June 21, 2008 6:09 pm


//நீங்களே வரவேண்டிய பொயின்ருக்கு வந்திட்டிங்கள்கள். நீங்கள் வெறுமான சொல்லுகிறீர்கள் புலிகள் அதை செய்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் கேட்டீர்களே "புலிகள் யார் நடவடிக்கை எடுக்க?" நான் இறுதியாக கேட்கிறேன் எச்சரிக்கை விட நீங்கள் யார்?//-ரதன


ரதன் புலிகள் மக்கள் பிரதிநிதிகள் என்பதல்ல இங்கே பிரச்சனை. பிரச்சனை கொலை அரசியல்- அராஜகம்- இயக்கச் சர்வதிகாரம்- அழிப்பு யுத்தம் பற்றியது. இதை மறுத்துவிட்டுப் புலிகளைப் புனிதராக்கும் உங்கள் புலிமனது. தமிழ்தேசிய மனதின் அறுவடையாக இங்கே மீளக் கேள்வி கேட்கிறது. நான் மக்கள் விரோதிகளைத்தான் எச்சரிக்கிறேன். மக்கள் சமுதாயத்தின் குழுமத்தில் நானும் அடக்கமென்பதால் அதே மக்களின் நலன் எனக்குள் பிரதியாகிறது. இங்கே அந்தப் பிரதி மக்களாகிய எமது நலனிலிருந்து ஒரு யுத்த ஜந்திரத்தையும் அதன் வழியாக வந்து சேர்ந்த கொடிய அடக்குமுறையையும் எதிர்த்து எச்சரிக்கை செய்கிறது. இந்த எச்சரிக்கை எம்மை அழிக்காதே. இது உங்கள் அழிவில் நிறுத்தும் இன்னொரு அமுக்தைத் தரும் என்பது.

புலிகள் தம்மைத்தாமே மக்களின் பிரதிநிதிகளாக்க எடுத்த அரசியல்-அழிப்பு நடவடிக்கைகளின் தொடர் வருகைகளில் எத்தனையே அப்பாவி மக்களை அழித்திட்டார்கள். அதை நியாயப்படுத்த எத்தனையோ கதையாடல்- துரோகி- தியாகம்- தேசியம்- ஈழம் என்றபடி. இத்தகைய வழி ரதன்-ரகு எல்லோரும் வந்து போவீர்கள் .ஆனால் அழிவது மக்கள்தான். போராட்டத்தால் செததுமடியும் ஒவ்வொரு போராளியும் இயக்கச் சதியையும் அவ்வியக்கத்தின் தலைமையின் அழிப்பு அரசியலையும் தேசத்துக்கான விடீவென்று நம்பவைக்கப்பட்டு யுத்ததுக்கு அனுப்பி கொல்லப்படுகிறார்கள். நீங்கள் இத்தகைய ஏமாற்று யுத்ததையும் அதன் இயக்கக் கட்டமைவையும் தேசத்தின்- மக்களின் அரசு என்கிறீர்கள் .இது புலிப் பிரச்சாரத்தின் ஒரு தொடர்தான்.

இந்த நிழல் அரசு மக்களின் பட்டிணிக்கு இதுவரை செய்ததென்ன? பசிகிடப்பவர்களை யுத்த்துக்கு அழைத்து அடியாட்களாக்கியதைத் தவிர வேறென்ன மக்கள் நல நடவடிக்கை செய்தார்கள்?


நீங்கள் புலியைக் காவித் திரியும் இயக்கவாத மாயைக்குள் இருந்தபடி அனைத்தையும் புலிவழி பார்க்கப் பழக்கப்பட்டதை இங்கே கொட்டி அம்பலப்பட்டு நிற்பதற்கு இன்னும் எழுதுவேன்.

மரமண்டை.

Sonntag, 4. Mai 2008

தேசம்நெட் ஜெயபாலன் நெஞ்சைப் பிழியும் ஒரு கட்டுரையை...

சகோதர இயக்கப் படுகொலையின் பின்னே...


தேசம்நெட் ஜெயபாலன் நெஞ்சைப் பிழியும் ஒரு கட்டுரையை மிக வருத்தத்தோடு எழுதியிருக்கிறார்.இக்கட்டுரை மிக நேர்த்தியாக இயக்க அராஜகத்தின் பிற்காரணங்களை,வெளித்தொடர்புகளை இனம்காண மறுத்தொதுக்குக்கிறது.இது ஜெயபாலனது தெரிவாக இருக்கலாம்.எனினும்,மறுத்தொதுக்க முடியாதவொரு வலியைத் தனது சொந்த அனுபவித்திலிருந்து ஜெயபாலன் தொகுத்துள்ளார்.அவரது குடும்பத்திலேயே இயக்க அராஜகம் உயிரைப் பறித்திருக்கிறது!அவர் குடும்பத்தைப்போலவேதான் ஈழத்தின் பல்வேறு குடும்பங்களிலும் உயிரிழப்பும்,பொருளிழப்பும்-இடப்பெயர்வும் நிகழ்துள்ளது. இவையனைத்தும் ஈழப்போரினது பல்வேறுபட்ட முகங்களினது ஒரு வடிவம்.

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டில் ஆயுதப்போராட்டமென்பது மக்களால் தீர்மானிக்கப்பட்ட முற்றுமுழுதான மக்கள் வகைப்பட்ட முன் நிபந்தனைகளால் உந்தப்பட்ட இயக்கக் கட்சியுருவாக்கத்தில் ஆயுதப்போராட்டம் ஒரு பகுதியாக எழுந்தது அல்ல.அது முற்றுமுழுதும் அன்னிய சக்திகளால் உந்தப்பட்டு அவர்களது முற்றுமுழுதான நலன்களோடு தோற்றம் பெற்ற இயக்கங்களே ஈழத்தில் தோற்றங்கண்டன.எந்தவொரு அமைப்புக்குபின்னும் மக்களே உந்துசக்தியாகவும் அவர்களே போராட்டத்தில் முன்னணிப்படையுமாக நிற்பார்களாயின் அங்கே ஒவ்வொரு இயக்கத்தினுள்ளும் உட்கட்சி ஜனநாயகவும் மிக நெருங்கிய முறையில் இயக்கப் போக்கை நிர்ணியிக்கும் மத்திய குழுவைத் தந்திருக்கும்.ஆனால், ஈழத்தில் தோற்றும் பெற்ற அனைத்து இயக்கங்களுக்குள்ளும் தனிநபர் வாதமும்-வழிபாடும் தடல்புடலாகத் தோற்றங்கண்டது.அங்கே, இத்தகைய தனிநபர்களை முன்நிறுத்திக் கட்டபட்ட ஒளிவட்டம் அராஜகத்தை சுயதேவைக்காக இவற்றைக்கட்டி வளர்ப்பதற்கும்,அதையே பாதுகாப்பதற்குமாக இயக்கங்களுக்குள் தவிர்க்கமுடியாத விதியாக அராஜம் ஆயுதமாக்கப்பட்டது.இன்றுங்கூட உட்கட்சிஜனநாயகம் என்றால் என்னவென்பதே புரியாத இயக்கவாத மாயை நம்முள் நிலவுகிறது.இது காவிய நாயகர்களின் பின்னே தன் விருப்பைத் தேடுகிறது.தேசியத்தைச் சொல்லி மாற்றார் குழந்தைகளைப் பலியெடுப்பதற்காக நியாயஞ் சொல்லித் தன் புலப்பெயர்வு வாழ்வைத் துய்த்துச் செரித்தபடி புரட்சியென்பதைப் புலிப் போராட்டத்துக்குள் இனங்காண்கிறது!இத்தகைய பாசிஸ்டுக்களே புரட்சியென்பதை ஒடுக்கும் புலி அரசியலின் தொடர்ச்சியில், ஆங்காங்கே புலி இயக்கப் பாசிசக் கருத்தியல் அராஜகத்தை மிக நுணுக்கமாகச் செய்து முடிக்கிறார்கள்.இவர்களிடம் நெருக்கமான அன்னியச் சகத்திகள் எம்மக்களின் உண்மையான அவலத்தைத் தமது அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை எமக்கான அரசியல் தீர்வுக்கான ஒத்துழைப்பாகப் படம் காட்டுகிறார்கள்.இவர்களேதான் அன்றுஞ்சரி இன்றுஞ்சரி சகோதர இயக்கப்படுகொலைகளைத் தூண்டியவர்கள்-அப்பாவி மக்களை இனவாதத்தோடு வெட்டிக் குதறியவர்கள்.

அன்று,இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்கள் புரட்சியென்பது மிகச் சுலபமாக நெருங்கி வருவதை இனம் கண்ட அமெரிக்கா அந்த அரசியல் விழிப்புணர்வு தென்கிழக்காசியாவில் வசந்தத்தின் இடிமுழக்கமாக மலரும் சூழலைமிக யதார்த்தமாகப் புரிந்துகொண்டது.இதற்கு இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஒடுக்குமுறை மிக நேரிடையாகச் செயலாற்றுமென்றே அன்று கருத்திலெடுத்த ஏகாதிபத்தியங்கள் தமிழ்வலது சாரிகளான தமிழரசுக்கட்சியை மிகச் சாதுரியமாகக் கையாண்டது.இத்தகைய செயற்பாட்டின் தொபடர்ச்சியாகப் பின்னாளையத் தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிதாமகன் செல்வா பற்பல ஒப்பந்தங்களைச் செய்து அவற்றையே சிங்களத் தலைமைகளால் நீர்த்துப்போகச் செய்யும் அமெரிக்க-இந்திய அரசியலுக்கு உடந்தையாகச் செயற்பட்டார்.இத்தகைய அரசியலானது சிங்களத் தரப்பில் ஜே.ஆரையும்,தமிழர் தரப்பில் செல்வாவையும் மிகச் சரியாகப் பயன்படுத்தியது.

1958 ஆம் ஆண்டு முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகத்துக்குள் இலங்கை இனப்பிரச்சனை ஓரளவு நிறைவுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்கூடாக எட்டபட்ட தீர்வாக இருந்திருக்கும் வாய்ப்பைப் பண்டா-செல்வா ஒப்பந்தம் சுட்டிநின்றது.ஆனால்,இத்தகைய ஒப்பந்தமும் இலங்கையும் பண்டாவின் தேசியப் பொருளாதார நடவடிக்கைகளைக்கூர்மைப்படுத்துமென அறிந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் பெயரளவிலான பண்டாவின் பம்மாத்துத் தேசியப் பொருளாதாரத்தையே அனுமதிக்க மறுத்து அவரைப் போட்டுத்தள்ளுவதற்குமுன்பே ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான ஜே.ஆர் மற்றும் செல்வா தலைமையிலான கூட்டணியையும் பயன்படுத்தி பண்டாரநாயக்காவை அந்த ஒப்பந்தத்தையே கிழித்தெறிய வைத்துத் தன் நோக்கை(அமெரிக்க அரசியல் இலக்கு) வெற்றியோடு பண்டாவை தட்டுவதுவரை செய்து முடித்தது.ஜே.ஆர் தலைமையில் களனியிலிருந்து கண்டிக்கான பாதையாத்திரை சிங்களப் பெளத்தபீடங்களையும்,காடையர்களையும் உள்வாங்கியே சென்றது.இத்தகைய இனவாத்தைத்திட்டமிட்டு உந்தித்தள்ளிய ஏகாதிபத்தியம் பண்டாவின் ஆட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை சிங்கள மக்களிடமிருந்து வருவதற்காகச் செயற்கையான அரசியல் நடவடிக்கையைச் செய்த அதே தருணம் தமிழர்தரப்பில் அதை இன்னும் கூர்மைப்படுத்தும் இனவாதச் செயற்பாடாகத் தமிழரசுக்கட்சியை(அன்றைய)மிகச் சாதுரியமாகப் பயன்படுத்தியது.செல்வாவைத் தந்தையெனும் இன்றைய தமிழ்க் குரடர்கள் அன்றைய யாழ்ப்பாணத்தில் சிங்கள எழுத்துக்களைத் தார்பூசி அழித்த தமிழ்த் தலைவர்களின் அரசியலின்பின்னே மறைந்திருந்து தமிழரையும் சிங்களவரையும் நிரந்தரமாகப்பிரிக்கும் அமெரிக்க அரசியலே என்பதைப் புரியார்! ஏகாதிபத்தியத்தை தமது கக்கத்தில் மறைத்துவைத்துக்கொண்ட நமது தலைவர்களை எத்தனைபேர்கள் இன்று அறிவார்கள்?

இதுன் தொடர்ச்சியான ஏகாதிபத்தியச் சதியில் பண்டா கொல்லப்படவும் தமிழர் தரப்பில் கூட்டணிகள் உருவாகவும் பின்பு அது சிதைந்து ஆயுதப்போராட்டமாகத் திடீரென உருவாகுவதற்கும் அமெரிக்க-இந்திய அரசுகளின் வெளிப்படையானதும் மறைமுகமானதுமான செயற்பாடுகள்-திட்டமிடல்கள் இருக்கின்றன.இவை குறித்து ஓரிரு பக்கங்களில் எழுதிக் குறிப்பிட்டுவிட முடியாது.ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தின் வரலாற்றை ஒரு வரலாற்றியலாளர் எழுதமுற்படும்போது எமது எதிரிகள் எமக்குள்ளே உருவாக்கப்பட்டவிதம் உண்மையாக வெளிப்படும்.அப்போது புலிகளின் பாத்திரம் நிச்சியம் புலப்படும்.அதுவரையும் புலிகளின் பின்னே மறைந்துள்ள வர்க்க நலனுக்கு அமெரிக்க வெள்ளைமாளிகைவரை தொடர்ச்சியான உந்துதல்கள் இருப்பதையும் அது இந்தியாவின் எடுபிடியாக இருந்த-இருக்கவிரும்பும்-இருக்கும் காலவர்த்தமானத்தின் கடைக்கோடி நிலையையும் நாம் (புரிந்துகொண்டும்)புரிந்துகொள்ள முடியாது.இதன் தொடர்பான அரசியலில் புலிகளாலும் மற்றும் குறுங்குழுக்களாலும் நடாத்தி முடிக்கப்பட்டு, இப்போது கண்டவிடத்தில் தோற்றம் பெறும் ஆயுதக்குழுக்களின் வரவினூடாக மனிதப்படுகொலைகள் விழுவதையும் நாம் ஓரளவாவது புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

அன்று சகோதர இயக்கப் படுகொலைகளை இயக்கங்கள் தோற்றமுறும்போது திட்டமிட்ட இந்திய ரோவும்,சி.ஐ.ஏ.வும் படிப்படியாக அதைச் செய்து முடித்தபோது அதன் உச்சம் ரெலோவைப் பூண்டோடு அழிப்பதற்காகன முறையில் அதை அணைத்துப் புலிகளால் அழித்தொழித்த அரசியலில் இன்றுவரை கருணா-பிள்ளையான் என இந்திய ரோ புலிகளுக்குள் ஊடுருவிய விந்தை மகத்தானது.

இத்தகைய அரசியல் பின்புலத்தை மறுத்துவிட்டுப் புலிகளை அணுகும் ஒவ்வொரு தருணமும் நாம் நம்மை அழிப்பதற்கான இயக் அராஜகத்தை மென்மேலும் உருவாக்கும் அன்னிய அரசியலுக்கு உடந்தையாகவே இருக்கின்றோம்.இதை மறுத்துப் புலிகளையோ அல்லது மற்றெந்தக் குறுங்குழுக்களையோ மக்களின் மீட்பர்களாக ஒவ்வொருவரும் தத்தம் மனவிருப்புக்கேற்பக் கையாள்வதாக இருக்கும்போது, நமது மக்களின் பல்லாயிரம் உயிரோடு விளையாடுகிறோம்.இங்கே புலிகளைத் தென்கிழக்காசியாவின் வி(வெ)டிவெள்ளியாக உணரும் தேசிய இஞ்சி தின்ற புலம்(ன்)பெயர்ந்த மந்திகளுக்கு அரசியல் மக்களின் உயிர்குடிப்பதாகவே இருக்கும்.

ஜெயபாலன் தந்த இயக்க அராஜகத்தின் வரலாற்றுக்குறிப்புகள் வெறும் உள்ளக முரண்பாடுகளின் இயக்கப்பாடல்ல.நமது மக்களைக் கொன்றுபோடவும் தொடர்ந்து இலங்கையில் இனவாத இருப்பை நிலைப்படுத்தவும் அதன் வாயிலாகத் தென்கிழக்காசியாவில் புரட்சித்தீயைத் தொடர்த்து அணைப்பதற்கெடுக்கும் முயற்சியில் உலக ஆளும் வர்க்கங்கள் மிக நெருக்கதாக உடன்படுபடுகிறார்கள்.அவர்கள் மக்களை,மக்களின் புதல்வர்களாலேயே வேட்டையாடியதற்கு இன்றைய புலிகளின் பிரச்சாரப் பீரங்கிகளான தமிழ்நாட்டு அரசியல் கயவர்களும் காரணமானவர்களென்பதை வரலாறு சொல்லும்.

எனவே,எமது மக்களின் மீட்பர்களாகக் கோபால்சாமிகளால் இன்று தூக்கி நிறுத்தப்படும் புலிகளின் இருப்பானது இலங்கையின் இனவாதத்தைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தவும் ஏகாதிபத்தியச் சார்பு அரசியலைவிட்டு இலங்கைவழுவாதிருக்கவும் அன்னியச் சக்திகளின் சுயதெரிவாகவே இருக்கிறது.இதற்கான அனைத்து அரசியலும் அதன் உள்ளார்ந்து இயக்க அரசியலின் தொடர்ச்சியிலேயே சாத்தியமாகும்.எனவே,புலிகள் இயக்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மக்களியக்கமாக மலர்வதற்கான தலைமை அதனிடத்தில் இல்லை.அத்தகைய தலைமைகள் உருவாவுவதற்கான இயக்க உட்கட்சி ஜனநாயகம் அங்கே மருந்துக்கும் கிடையாது.தனிநபர் வழிபாடும்,ஒளிவட்டமும் ஏகாதிபத்தியத்தின் அரசியலுக்கு அவசியான இரு கண்கள்.

நிர்மாணம்
04.05.2008




தயவு செய்து நிறுத்துங்கள்!!! : த ஜெயபாலன்

ஏப்ரல் 29, 1986 என்றும் போல அன்றும் அந்த காலைப் பொழுது மலர்ந்தது. காலைச் செவ்வானம் தமிழீழம் கேட்டு போராடச் சென்ற இளைஞர்களின் குருதியில் தோய்வதற்காய் உதித்தாக எண்ணி இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படப் போகின்றது என்பதை அறியாமலேயே தமிழ் மக்கள் விழித்தெழுந்து தத்தமது கடமைகளுக்குத் தயாராகினர்.


இந்த நாளுக்கு சில வாரங்களுக்கு முன்னரேயே சங்கர் லால் அப்போது வட்டுக்கோட்டைக்குப் பொறுப்பாக இருந்த ரெலோ இயக்கத்தின் தலைவர் எமது வீட்டில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு வந்து பெட்டி பெட்டியாக மறைத்து வைத்தார். எனது சகோதரன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்திருந்த போதும் சங்கர் லால் அதைப் பற்றி அக்கறைப்படவில்லை. திடீரென வட்டுக்கோட்டை கிராமமும் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்கு உள்ளானது. இத்தேடுதல் அடிக்கடி இடம்பெற்றதை அடுத்து எமது வேண்டுகோளின் படி மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை சங்கர் லால் இடம்மாற்றினார்.


இருந்தாலும் எமது நட்புத் தொடர்ந்தது. இரவு வேளைகளில் வருவார். குடும்பத்தவர்களுடன் உரையாடுவார். அப்பாவுடன் மிகவும் நட்பானார். எங்கள் குடும்பத்தவர்களைப் பொறுத்தவரை சங்கர் லால் ஒரு முன்னுதாரணமான போராளி. ஆயுதங்களுக்கு மேலால் மக்களையும் அவர்களின் உறவையும் நம்பிய ஒரு நல்லுள்ளம் கொண்ட இளைஞர்.


சங்கரத்தையில் பத்திராளி கோயில் மிகவும் பிரசித்தமானது. சங்கரதைச் சந்தியில் இருந்து பத்திராளி கோயிலுக்குச் செல்லும் வழியில் ரெலோ இயக்கத்தின் ஒரு முகாம் உள்ளது. இலங்கை இராணுவத்தின் முகாம்களையொட்டி விடுதலை இயக்கங்கள் காவல் அரண்களை அமைத்து இருந்ததால் இலங்கை இராணுவம் வெளியேறி தமது முகாம்களை அழித்துவிட முடியாது என்ற நம்பிக்கையில் தமிழீழ விடுதலை இயக்க முகாம்களில் பெரிதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதில்லை. அவ்வாறே சங்கரத்தையில் இருந்த ரெலோ முகாமும்.

அப்போது கண்நோய் பரவி இருந்த காலமும். புதிதாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்களும் பலர் இருந்தனர். இந்த முகாமில் படலையைத் திறந்ததும் விறாந்தை என்றும் போல் அன்றும் அதில் அனைவரும் உறங்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

‘புலிகள் ரெலோக்காரர்களை சுடுகிறான்கள்’ என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஆரம்பத்தில் இது ஒரு உள்ளுர் சம்பவமாகவே ரொலோ இயக்கத்தவராலும் கருதப்பட்டாலும் நேரம் செல்லச் செல்ல பல ஊர்களில் இருந்தும் வந்த தகவல்கள் நிலைமையின் கொடூரத்தை விளக்கியது. சங்கர் லாலும் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியும் எம்மை எட்டியது. இதற்கு சில தினங்களுக்கு முன் அப்போது வட்டுக்கோட்டைக்கு புலிகளின் தலைவராக இருந்த பிரசாத் (இவரின் மூத்த சகோதரர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்) சங்கர் லாலை தனது முகாமுக்கு அழைத்துச் சென்று அப்பம் சுட்டு சாப்பிட்டார்கள். அதே பிரசாத்தே சங்கர் லாலை சுட்டுக் கொன்றார் என்ற செய்தியும் எமது செவிகளை எட்டியது. இன்று பிரசாத் லண்டனில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளதாக அறிகிறேன். இவ்வாறு பல சம்பவங்கள். பல சங்கர் லால்கள். பல பிரசாத்கள்.


நானும் அப்பாவும் சங்கர் லாலுக்கும் கொல்லப்பட்ட ஏனைய போராளிகளுக்கும் எமது இறுதி அஞ்சலியைச் செலுத்த சென்றிருந்தோம். படுத்திருந்த போது கொல்லப்பட்ட அந்த இளைஞர்களின் தலை சிதறி சுவரில் இரத்தமும் சதையும் ஒட்டியிருந்தது. இரத்த வெள்ளத்தில் உடல்கள். இதயத்துடிப்பு நின்ற பின்னும் சங்கர் லாலின் கைக்கடிகாரம் டிக் டிக் என காலக் கணிப்பைத் தொடர்ந்தது. மறுநாள் காரைநகர் மக்கள் இபோச பஸ் வண்டிகளில் சாரைசாரையாக வந்து இறங்கினர். பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு பிரேதப் பேழைகளை காரைநகருக்கு எடுத்துச் சென்றனர்.


இதற்கு சில ஆண்டுகள் கழித்து 1989ல் இத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன் இயக்கத்தைவிட்டு வெளியேறி சுவிஸ்லாந்து செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார் சகோதரன். ஆனால் அதற்கிடையே முள்ளிக்குளத்தில் இருந்த முகாமிற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார். அப்போது விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவமும் இணைந்து நடத்திய தாக்குதலில் இரு தரப்பிலுமாக நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் எனது சகோதரனும் ஒருவர் என்பது, சம்பவம் நடந்த சில தினங்களின் பின்னரேயே தெரியவந்தது.

அப்போது துக்கம் விசாரிக்க எனது சகோதரியின் சிநேகிதியும் அவரது தம்பி மனோகரனும் வந்திருந்தனர். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்போது எனது அப்பா சொல்லி அழுதார், "தம்பி இதெல்லாம் ஒன்றும் சரிவராது. நீங்கள் உங்கட உங்கட குடும்பத்தைப் பாருங்கோப்பு. எங்கடை விதி இது தான்." என்று. அடுத்த சில மாதங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் விடுதலைப் புலிகளும் மோதிக் கொண்டதில் மனோகரன் உயிர் இழந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்துடனேயே சகோதரப் படுகொலைகளும் ஆரம்பித்து விட்டது. ஆனால் 1986 ஏப்ரல் 29ல் இடம்பெற்றதே மிக மோசமான ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டுப் படுகொலை. இதுவரை விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000 அதிகம் என மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு தெரிவிக்கின்றது. இவற்றைவிட ஏனைய விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குறிப்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் உட்படுகொலைகளிலும் சகோதரப் படுகொலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரி எமது இனத்தின் மீது மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பிற்கு எவ்விதத்திலும் குறையாமல் நாம் வளர்த்துவிட்ட விடுதலை அமைப்புகளும் எம்மை அழித்துள்ளன. தமிழீழ விடுதலை நியாயமானதா? சாத்தியமா? என்பதற்கு அப்பால் 1986 ஏப்ரல் 29லேயே எமது தமிழீழ விடுதலைக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

தமிழ் மக்களின் உயிர்களைக் கொல்வதற்காக எந்தத் தமிழ் மக்களும் போராளிகளையும் தலைவர்களையும் உருவாக்கவில்லை. அரசியல் படுகொலைகள் முற்றாக நிறுத்தப்படாத வரை தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும். வி.புலிகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மலையக, முஸ்லீம், சிங்கள மக்களுக்கும் பொது எதிரியான, பேரினவாத இலங்கை அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும்.


இதுவரை மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு வி புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதுடன் இனிமேல் இவ்வாறான மனித நாகரீகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதியை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனைச் செய்யாத எவரும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியற்றவர்களே.
தயவு செய்து நிறுத்துங்கள்!!! படுகொலைகளை.



//Sothilingam on May 4, 2008 7:51 am
தமிழீம் தோற்று விட்டதை அன்றே
நிச்சயப்படுத்தியது இந்த புலிகளின் படுகொலை- இன்றய தோல்வி நிலையின் ஆரம்பம்
தோழர் சிறீசபாவின் மற்றும் 300 மேற்ப்பட்ட தோழர்களின் படுகொலை செய்யப்பட்ட தினமே
- தமிழர் தோற்றுப் போய்விட்ட நாள் இது - ஒன்று சேர்ந்து போராட முன்வந்த தோழர்
சிறீ சபாவை துரோகத்தனமாக கொலை செய்த புலிகள் எப்படி தாம் தமிழர் போராட்டத்தை
நடாத்துவதாக கூறமுடியும். தமிழரைக் கொலை செய்துவிட்டு தமிழருக்காக போராடுவது
என்பது என்ன செயல்? தமிழ் அமைப்புக்ளை அழித்துவிட்டு தமிழருக்காக போராடுகிறோம்
என்பது எனன? தமிழ் மக்களின் மனதில் ஊன்றிவிட்ட இந்த கொடூரம் விட்டகலா முடியாத வடு
இந்தக் கொடூரமே எமது இனத்தை இப்போது அடிமையாக்கி விட்டுள்ளது. இந்தப் படுகொலைகள்
இன்றுவரை தொடர்வது ஏற்றக் கொள்ள முடியாதது.//

Blog-Archiv