Dienstag, 30. Januar 2007

துப்பாக்கிகளைப் பற்றி

துப்பாக்கிகளைப் பற்றி.


துப்பாக்கிகளைப் பார்த்திருப்பீர்கள்!

துப்பாக்கியை மட்டும்
ஒருவனிடம் கொடுத்துவிட்டு
மனிதனாக இருப்பான் என
நம்பியிருக்க முடியாது.

துப்பாக்கிகளை வைத்திருக்கும் போது
முட்டாளும் அறிஞனாகிறான்.
பிரபஞ்சமே காலடியில்.
மக்கள் எல்லாம்(எல்லோரும்?) புற்களை
அங்கொன்றும் இங்கொன்றும் கடித்து
கூட்டமாய் நின்று
தலையசைப்பதைப்போல்
பிரமை.

மொழியைக் கற்பதற்கு
சில மாதம்,ஆண்டென
எப்படியும் ஒரு அவகாசம்
வேண்டியிருக்கும்.

துப்பாக்கியுடன்
தெருவில் இறங்கினால் போதும்
ஒரு மணிநேரமே அதிகமென்பேன்
துப்பாக்கி மொழியைக் கற்றுவிடலாம்.

துப்பாக்கிகளுக்கு
சுட்டுக்கொண்டே இருக்கவேண்டும்,
சாத்தியமாயின் ஒரு மனிதனை
மிருகத்தை
குருவியையாவது.
அதுவும் போனால்
ஒரு குரும்பட்டியையேனும்
சுட்டே ஆகவேண்டும்.மொழியைக் கற்பதற்கு
சிலமாதம் ஆண்டென
எப்படியும் ஒரு அவகாசம்
வேண்டியிருக்கும்.

துப்பாக்கி நண்பனே!
இவைபற்றியெல்லாம் உனக்குச் சிந்திப்பதற்கு
நேரமதிகமாய் இல்லை!!


உனது சிந்தனையெல்லாம்
காவலில் இருக்கும் மனிதனை
எப்படிக் கொல்வதென்பதாக இருக்கும்.

உனது அறிவிற்கெட்டியவரையில்
தலையில்,
வசதியாக இல்லாது போயின்
காது அல்லது நெற்றிப் பொட்டில்
குண்டுகளைச் செலுத்தி
அவ(ளை)னைக் கொல்வதைப் பற்றி
சிந்தித்துக் கொண்டிருப்பாய்.

அதிகமாக இந்த மனிதன்(மனிதர்கள்)
என்ன செய்திருக்க முடியும்?

ஜனநாயகத்தைப் பற்றி
அதிகம் பேசியவர்களாய் இருக்கலாம்.
அதிர்ஷ்டம் கெட்டவ(ள்)ன்
ஏதாவது
கொலை கொள்ளைகளைப் பார்த்துத்
தொலைத்திருக்கலாம்.
அல்லதுபோனால்
எதற்காகவேனும் நியாயம் கேட்டிருப்பா(ள்)ன்.

பதிலாக நீ
துப்பாக்கிக் குண்டுகளால்
கொன்றிருப்பாய்!

காலை விடியும்போது தெரிந்தவரையில்
சமூக விரோதியாகவோ
தேசத் துரோகியாகவோ
இறந்து போயிருப்பா(ள்)ன்.

நண்ப!
இறுதியாக
துப்பாக்கிக் குண்டுகளால்
நீ என்னையும் கொல்வதற்கு முன்பாக,
துப்பாக்கிகளை நம்பாதே.

துப்பாக்கிகளில் இருந்து
நீ தீர்க்கின்ற இரவைகள்
புழுதியாய்க் கிடக்கும் நிலங்களில்
விதைகளாய் விளைகிறது.

மறுபடியும் உனக்கு!
துப்பாக்கிகளை
எப்போது வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம்
(தருவதற்கென்றே பலர் உள்ளனர்).

முன்பாக
கற்பதற்கும்
மக்களை நேசிக்கவும்
அதிகமாயே உள்ளது.

நீ,
துப்பாக்கிகளை மட்டுமல்ல
துப்பாக்கிகளைத் தந்த
எஜமானர்களையும் நம்பாதே!

-செழியன்.

(அதிகாலையைத் தேடித் தொகுப்பிலிருந்து...1990-1993)

ஒழிந்தான் ஈழ அரக்கன்!

ஒழிந்தான் ஈழ அரக்கன்!


மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:

உணர்வுத் துடிப்பு அடங்குகிறது,
ஈழவரக்கனின் ஒவ்வொரு நரம்பிலும்
குருதியுறைந்து இதயம் தாக்கத்துள்
எத்தனை வகை வைத்தியங்களும் பலனில்லை,
மரித்துவிட்டான்!

இனியென்ன?
என் ஜனங்களே,
பாடையொன்றைக் கட்டுவதற்குமுன்
பறையெடுத்துவாங்கள் முழுவுலகமுமறிய
தம்மெடுத்துக் கொட்டுவதற்கு!

நாற்ற மெடுப்பதற்குள் பிணம் அகற்றப்பட்டாக வேண்டும்
அங்கே,இங்கேயென்று அலையாதீர்கள்!
சத்தியத்தை நீங்கள் இன்னும் தொலைக்கவில்லை
சதிகளை நம்பாதீர்கள்!!

மக்களின் உயிருள்ள வாழ்வுக்கு
நாசம் செய்த ஈழவரக்கன் ஒழிந்தானேயென
உருப்படியாய் எண்ணிக்கொள்வோம்.
உயிரை நீங்களோ,
உங்களுறவோ இனியிழப்பதற்கில்லை.

நம்பிக்கையைத் தொலைத்து,
மக்களின் உயிரையுறிஞ்சிக்கொண்டிருந்த
ஈழவரக்கன் தனிமையில் உயிரைவிட்டான்.

மக்களே!
மிருங்கங்கள் உங்கள் சுதந்திரத்தில் வந்து,
உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி
நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின.

உங்கள் குழந்தைகளின் பிரேதங்களை
சிங்களத்துத் தீக் குண்டுகளுக்கும்,
உங்கள் உறவுகளின் மாமிசத்தைத்
தெரு நாய்களுக்கும் இரையாக்கின.

நீங்கள் வாழ்ந்த
மண்ணைச் சுற்றிலும்
உங்களுடைய குருதியைத் தண்ணீரைப்போல்
சிந்தின,உங்கள் உற்றோரினது
உடல்களையெல்லாம் மாற்றியக்கமென்றும்,
துரோகிகளென்றும் கதைவிட்டு
மண்ணெண்ணை,இரயர் போட்டெரித்தன!!!

இனியும் நம்ப வேண்டாம்!
ஈழ அரக்கன் மரணித்துவிட்டான்.
அந்த அரக்கனின் வளர்ப்பு மிருகங்களே
அங்குமிங்குமாக அலைகின்றன,
அவை பைத்தியம் பிடித்த பொழுதொன்றில்
உங்களைக் குதறுவதற்குள் அவைகளை அழித்து விடவும்.

உங்கள் அயலாருக்கு நியாயத்தையும்,
உங்கள் சுற்றத்தாருக்கு பிரியமாகவும்
சாந்தமுடைய சமூகமாகவும் இருக்கக்கடவீர்.

இப்போது உங்கள் இடது கரங்கள்
ஈழ அரக்கனின் புணத்துக்கான பாடையொன்றைக் கட்டட்டும்,
வலது கரங்கள் மண்மேடாய்ப்போன
இல்லங்களைச் சீர் செய்யட்டும்.

இவற்றையிப்போதே செய்து விட்டீர்களானால்
விடியலில் வேதனைகள் குறைந்து
எல்லாம் வல்ல உங்கள் சக்தியை
ஒருங்கு படுத்திப் புதியவொரு ஆன்மாவை
உங்களுக்கு விசுவாசமாக்குவீர்கள்.

என் ஜனங்களே கேளுங்கள்!
உங்களுக்குச் சாட்சியிட்டுச் சொல்வேன்,
நீங்கள் அன்னியரை நம்பவேண்டாம்!
உங்கள் சக்தியையும்,ஆன்மாவின் பலத்தையும் நம்புங்கள்.

நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி,
நீங்கள் அவர்களுக்குப் பயந்த காலத்தை விட்டொழியுங்கள்.
அங்ஙனம் அவற்றை மறக்கும்பட்சத்தில்
இருளில் உங்களது அதிசயங்களும்,
யுத்த ப+மியில் உங்களது நீதியும் நிச்சியம் அறியப்படும்.

2006 டிசெம்பர் 27.

கல்வெட்டு.


கல்வெட்டு.


தோழியொருத்தியின் பிரவாற்றல் தாங்காது பாடித் தொலைக்கும் புலம்பலொன்று எப்போதோ...



"மாசறு காலவோட்டம் மாற்றம் மிகு-தை முதல் எல்லா நாளும்
விளங்கும் ஒரு சதித் திதியில்-துரோகிப் பட்டத்
தவமுடையாள் "....................."சிவபதமே சேர்ந்தார் குண்டடிபட்டு ஈழத்தின் பெயரால்"

கட்டியம்:

தமிழருக்கென்ற தனியொழுக்கத்தில் நிலைத்து,வாழ்வைச் சிறப்பாக்கும் நோக்குடன் கல்வியைக் கற்று,தம் குடும்பம், தமது டாக்டர் பட்டம் என்றும்,பட்டும் படாமலும் ஊர் நடப்பு,இறப்புக்கள்-கொலைகள் பேசும்,பட்டியல் போட்டு ஐந்தொகை தயாரிக்கும்"....................."அ.ஆ.இ.ஈ.உ.ஊ போன்ற அதிபுத்தியுடைய நல்ல மனிதருக்குள்,தான் பெற்ற கல்வியைத் தனது இனம் சிறப்படைய வேண்டுமென்ற கனவோடு, ஈழஞ் சென்று மக்களோடு மக்களாகச் சேவை செய்த துரோகிகளின் வாழ்வுக்கு உதாரணமான ஒரு பெரும் தோழிக்குக் கல்வெட்டுப் பாடும் கொடும் பொழுதொன்றில்- ஈழவிடுதலை இயக்கங்களுக்கு என்றும் இரத்தம் தேவையென்ற அவசியக் குறிப்பைத் தருவதற்கும் ஏதோவொரு நறுக்குத் தேவையானதாக இருக்கலாம்-இது,அது!

ணவன் புலம்பல்.

..........வாழ்வின் தனிமையிலே என்னை
அரவணைத்து வாழ்வளித்த அன்பே!
ஆசையோடு பாசமுதளித்து எனக்கு
மழலைச் செல்வமிட்டாயோ?

இல்லை?

வெண்ணை திரண்டு வர சாடியுடைந்த கதையாய்
(தேசிய)காலன் உனைக் கவர்ந்தானே-என்
காதல் கிளியுனை இழந்து நான்
சோக நெஞ்சாய் உன் கட்டிலில்...

துயர்படிந்த முகமாய் எம் மழலைகள்
துணைவி நீயின்றி ஊரும் நோயொடு
நாமும் சருகானோம் உன்னைப் போன்றே!
துன்பமெனும் கருமேகம் ஈழமென்று-எமைச்
சூழ்ந்து குடியெல்லாம் கோதாரி
கொலைக் களமாய் குடும்பங்கள்!

வேறு:

மறந்திடுவாயோ மனமே-எம்
தேசத்து நங்கையை மறந்திடுவாயோ ?
அறந்தரும் அன்புடையாள்
அறிவு தந்த மருத்துவச்சி
மறைந்தாள் கண்ணிலென

நினைத்திடும் பொழுதே-என்
நெஞ்சு வலிக்கிறது நீ
மறைந்தாய் என்றுணர
நாமின்னும் எத்தனை தடவைகள்
உனையிழக்க?

மறந்திடுவாயோ மக்கள் மனமே
ஈழத்துப் பெண்ணை மறந்திடுவாயோ?
அறந்தரும் அன்புடையானவள்
மறைந்தாள் ஈழப்போர் கொலையென.

மக்கள் புலம்பல்:

அம்மா எங்கே?
எங்கள் டாக்குத்தர் அம்மா எங்கே?
எங்கள் அம்மா துரோகியானாளோ?
நாறிய வாய்கு நல்ல மருந்திட்டாள்
நாய்க் கடிக்கு ஊசி போட்டாள்
பேய்க் குணத்துக்கு பேதியுந் தந்தாள்
போனாளோ துரோகியென!


பாட்டுப் பாடிக் கதைகள் சொல்லி
பக்கம் பக்கமாய் படிப்புச் சொல்லி
இந்த நோய்க்கு இந்தக் காரணமென்றும்
இதற்கு இந்த வகையில் இதயம் துடிக்குமென்றும்
எல்லாம் சொல்லி
ஈழத்து நோய்கு மருந்தும் கண்ட
எங்கள் அம்மா தூரம் போனாளே!


பல்லுப் போன குழந்தைகள் நாங்கள்
நோய்குத் துவண்ட பொழுதுகள் கண்டு
மெல்லிய கரத்தை எமக்குள் புதைத்து
மெல்லத் தூங்க வைத்த எங்கள் அம்மா,
தூங்கிப் போனாள் துரோகியென!

துயில் கலைத்து
வருவாள் ஒரு பொழுதில்
பத்துத் தலைகள் கொண்டு,
ஆரிடம்தான் நாங்கள் சொல்ல?
அறிவடித்த அற்பங்கள் உலகில்
அடுக்கும் பொய்கள்
ஆருக்கோ பொன் விளைய
அறிவாயோ அம்மா இந்த அற்புத நிகழ்வை?


எங்கள் துயரச் சுமையை
காவித் திரிந்த உனக்குத் தூக்கம் வந்ததோ?
தூங்கு நீ,தூங்கு!
கண் விழிக்கும்போது நீ
கடமையைச் செய்யத் துடிப்பாய்
அதற்கேனும் தூங்கு தாயே,தூங்கு!



பெற்றோர் புலம்பல்:


பாசமுள்ள மகளே-நீ
படித்த பொழுதுகளிலெமைப் பிரிந்தாய் சீமைக்கென்று
அன்றொரு நிலையில்.
இன்றோ,
சுற்றங்கள் தொலைய
நாயாய் அலையும் உன் பெற்றோர்கள்
பேயாய் வந்த புயலில் சுரண்டு போனோம்
உன்னை இழந்து.
வேறு:
ஈழமாய் அரசியல் வந்து
மோசமாய் ஆயுதம் புகுந்து
வேசமாய்ப் போனதடி தேச நலன்.

வேறுக்கும் வேறாய் விறகு வைக்க:

காற்றாய்ப் பறந்ததடி உன் முகமும்
கடுங்கோலனால் போனதடி உன்னுயிரும்
கடுகு வெடிக்குதடி பெற்ற வயிற்றில்

மற்வர் பிள்ளைகள்
ஒற்றர்கள் கண்களில்
ஒரு கோசம் சொல்லும் ஏதோவொன்றுக்கு
துரோகியாகி துலைக்கும் பொழுதில்
துயரம் என்ன-துணிவு என்ன?

தமிழின் பெயரால்
தமிழர் சாக
தங்குவார் எவரோ தமிழீழமென்று!


தங்கச்சி நீயும்
தாங்கிய குண்டு
தமிழ் குண்டென்றால்
தமிழுக்குச் சூடு
தாய்க்குச் சூடு.

வாய்விட்டழுவதே
வழக்கமாய்ப் போச்சு
வன்னிக்கென்ன வடக்குக்கென்ன
வாகரைக்கென்ன!

பட்ட மரங்கள்
பாடையில் போவார்
பாடையை உனக்குத்
துரோகி சொல்லித் தந்தது தொல்லை.

தமிழாய் இருந்தாய்
தாயைக் காத்தாய்
தந்தாய் அறிவைத்
தமிழராய் அறிய,
தரணியில் இன்று
தவிப்பது நாமே!



எனது பரம்பரையும் நானும்

எனது பரம்பரையும் நானும்


எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கும்
இந்த இருட்டில்
எதுவும் இல்லையென்பது நிச்சியமாகின்றது.

எனக்குப் பின்னால்
எல்லாப் பரம்பரைகளும்
கடந்துகொண்டிருந்த வெளியில்
நானும் விடப்பட்டுள்ளேன்.

சொர்க்கமும் நரகமும்
இல்லாதொழிக்கப்பட்ட பரப்பில்
ஆழம் காணப்படாத சேற்றில்
எனது கால்கள் புதைகின்றன

ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியைச் சுமந்தபடியே
தனது ஒவ்வொரு வேளை
உணவையும் உண்ணுகிறான்.

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையுங் கூட
இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.

கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்தத் தக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை.

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக்கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே

நான்
எனது நம்பிக்கைகளுடன் தோற்றுக்கொண்டிருக்கிறேன்.


(ஈழத்துப் போராட்ட இயக்கச் சர்வதிகாரத்தை எதிர்த்துச் சமூகக் கலகக்த் தற்கொலையைச் செய்து, செத்து மடிந்த கவிஞர் சிவரமணியின் கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை இது.இன்றுவரை இந்த நிலைமைதான் அனைத்து மக்களுக்கும்.நிலைமை ஒரு துளிகூட மாற்றமுறவில்லை!சிவரமணி சாகாதிருந்திருக்கலாம்.)

விறலிவிடு தூது...

விறலிவிடு தூது...

"கான லுங் கழறாது கழியுங் கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னகையும் மொழியாது
ஒருநின் அல்லது பிறிதியாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தற்
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்
தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து
பறைஇய தளருந் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமானால்...-அகம் 170


......... கரிய கழியில் கண்போல் மலர்ந்த நெய்தற் மலரின் இதழ் மணத்தை அமுதென...விரும்பித் தாதூதும் வண்டுகளே களிப்பு மிக்கப் பறந்து தளரும்படியான துறைவனிடம் என்னைப்பற்றிக் கழிகானாலும் சொல்லாது உப்பங் கழியும் சொல்லாது தேன் சொரியும் நறு மலருடைய புன்னை மரமும் சொல்லாது... ஒப்பற்றி(:-)))) நின்னையன்றி(சும்மா தாமாஷ்) வேறு யாதொன்றையும் உதவியாக உடையேன் அல்லேன் ,அதனால் நீ அவனிடம் சென்று சொல்லல் வேண்டும்...


அறிவும் புலனும் மங்கிய பொழுதொன்றில் யாருக்கும் -யார்மீதும் செழுநீர் பீச்சும் சிறப்புத் தமிழ் மக்காள்! சேதாரம் அகத்துள்,அரும்பாதோ அறிவுத் தீ?:-(((((((

அற்ப(:-0)அது நெஞ்சாய் குறியாசைபட்டு:- "அவர்க்கு "ஆவது பார்த்து" நீவீர் அரும் பெருஞ் சொற் தேடி அதுகுறியாய்...(ஓடு!ஆத்தாளிடம் அகவி,அருப்பெருஞ் செல்லதைக் கட்டிவைக்க ஒரு வழி பண்ணு!இல்லையா?பெருசுகளின் காதில மெல்லப் போடூடூடூடூடூடூ;.அப்புறம்பார்...ஆசைக் கனிவு ஒரே கழியுணர்வாய்...களி கொள்வாய் பிறகு கவிண்டுவிடுவாய் பொருட்சுமைக்காய்...)


"பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்நிறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல் செய் தகன்றாரை உடையையோ நீ..."-கலி 129


...பாயும் அலையோசை நீங்காத பரந்த நீருடைய பனிக்கடலே(பனி:மண்டையுள் படியும் பனி)! அன்பறத்துறந்தான் துறவன் என்று...(மாற்றாரை வதைப்பதில்,காமத்துப்பால் விளக்கி-பளுஊத் தூக்கிப் தன் பாடையில் போடும்...)சிண்டெரெல்லாச் சின்னக் குஞ்சுகள் பல கரை சோக்கத் காத்திருக்கும் அகண்ட பாரதத்தில் உமக்கொரூ "சிண்டெரெல்லா"கண்ணெதிரே காண்கலையோ?...
அடப்பாவி...

அப்பாவி பெரியோரை அடியோடு சாய்க நீ என்ன கிறுக்கனின் காரியதரசியோ?கடதாசிப் பயலே!)
அவனால் உண்டான காமநோய் சுடவருந்துவாரிடத்தே நின்று வருத்த நினைத்து ஓலிக்கின்றாயோ அல்லது நீயும் முன்னே காதல் செய்துப் பின்னர் நீங்கிய தலைவவியை-தலைவனை உடையையாய் வருந்தியழுகின்றாயோ!


வாய் மொழி துப்பி வரப்பெல்லாம் நாசமிடும்,கவியே(கவிஞரில்லை:குரங்கு என்று ஈண்டு காண்க!) காணுமிடமெல்லாம் கச்சைப் பேச்சைக் கக்குவது பாழ்.

"இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே...""-அகம்:128

என் நெஞ்சம் இருளில் தலைவன்(பால்விருப்புடைய பெருமான்...)மிதித்துச் செல்லும் இடத்தின் கொடுழமயை நினைந்து(உருகி,உலைந்து,குலைந்து,குடைந்து,குளிர்ந்தல்...)அவர் தளரும் கால்களைத் தாங்கச் செல்லும்...பேதையாய் யாருமிலை கேள்!...