Sonntag, 30. Dezember 2007

வருக புத்தாண்டே வருக!

வருக புத்தாண்டே,வருக!


மெட்டரும்பும் பொழுது
புலர்வதற்காய் விடிவு
நொருங்கிய இதயம்
குறை வயிறு

குந்தியிருக்கும் கொட்டில்
குளமான முற்றம்
எச்சில் மிதக்கும்
கழிச்சல் கரையும்

இது எங்கள் வாழ்வு
எழுதாத சட்டமும்
எழுதிய சட்டமும்
எங்களைக் கெடுக்கும்
எருவான வியர்வை
பயன் கொண்ட வாழ்வு எவருக்கோ!

பேச்சிலும் மூச்சிலும் முனகல்
முழியிழக்கும் நீரோ
எங்கள் முற்றத்தை நிறைக்கும்
நித்தம் இருண்டு கிடக்கும் தேசம்
தெருவில் ஓடுடன் உழவன்

தேசங்கள் விடியுதுதாம்
உலக வர்த்தகத்தால்!
உப்புக்கும் அவர்கள்
பல்லுக்குக் குச்சியும் அவர்களே செய்வர்
உருப்பட்டது எமது வாழ்வு

விடிவுக்காய் யுத்தமென்று
மடிவுக்காய்த் தொடரும்
மனிதமும் பேசி
மாண்டவர் உடலில்
தூண்டுவர் குரோதம்!

இத்தனைக்கும் மத்தியில்
இன்னொரு புத்தாண்டு
பிடரியில் முட்டும் பட்டுணி மரணங்கள்
பாய்விரித்துப் படுக்க
பாடை கட்டும் பொழுதோடு காலம்
குண்டு காவி கொட்டும் கொடிய விமானம்

பார்போற்றும் புத்தாண்டு
போரொடு புலரும்
பொழுதெல்லாம் குருதி நெடில்
கொப்பளிக்கும் குண்டுகள்
வெட்டப்படும் சுரங்கம்
வெருட்டப்படும் வேலையிடங்கள்
வேள்விக்குத் தொழிலாளி
வேளைகளில் உடல் தொலைத்து...

உருப்பட்டது உலகம்
உருப்படியாய்ப் புலராத வாழ்வு!

உங்களுக்கோ உலையேறும் அடுப்புகள்
எங்கள் அடுப்பில் பூனைகள் புரளும்
துள்ளும் குட்டிகள்
தூங்கும் சுகமாய்

குண்டடிபட்ட மனிதக் குழந்தை
குருதியிழந்து தூங்கும்
இத்தனைக்கும் மத்தியில்
வருக புத்தாண்டே,வருக!
வேறு:
மெட்டரும்பும் பொழுது
புலர்வதற்காய் விடிவு
எமது கால்களில் நாமே நின்றால்...


நிர்மாணம்
30.12.2007

Dienstag, 25. Dezember 2007

கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்

கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்


சுவே உன் பிறப்பையும்
இன்னுமொருமுறை கொண்டாடியாச்சு
இருந்தும்
கொடு வாழ்வு நமக்குப்
போனதாகத் தெரியாதிருக்கும்
இந்த நடுநிசிப் பொழுதில்
உம்மைச் சிலுவையில் அறைந்த அதே கரங்கள்
எம்மையும் சிலுவையில் அறைய
எவரும் விழி திறவார்-நீயுந்தான்!


நீ கொடுத்து வைத்தவன்
ஈராயிரமாண்டுகளாய் உன் இறப்புப் பிறப்புப் பேசப்படுகிறது
எங்கள் அழிவும் உன்னைப் போன்றதே
எனினும்
எவருக்கும் உணர்வு முளைக்கவில்லை
எல்லோரும் ஏறி மிதித்க
எங்கள் தேசம் எருசலேம் ஆகிறது


முசுக்கொட்டைச் செடிகளின் நுனியிலே
செல்லும் இரைச்சலைக் கேட்கும் போதே
சீக்கிரமாய் எழுந்து போகவும்
கர்த்தர் எமக்கு முன்பாக
எமது எதிரியை முறியடிக்கப் புறப்பட்டதாகவும் சொன்னாய்


எமக்குள் நடப்பதோ வேறு!
பற்றைக்குள் மறைந்தவர் மறைந்தவரே கர்த்தரே
படும் துன்பம் அப்பாவிகளுக்கே
நீயோ வானத்தில் மெளனித்தபடி
கர்த்தரின் கணகணப்பில்


நானோ அன்னையத் தொலைத்தவன்
சுற்றஞ் சுகம் தொலைத்தவன்
என் பரலோகத்தில் இருக்கும் பிதாவே,
என் தேசத்தின் பிதாவுக்கு
தேவையான ஆட்பலத்தையும்
பொருட்பலத்தையும் நாம் இட்டும்
தேசம் விடியுந்தரணம் எங்கோ தொலைந்து
தறிகெட்டலைகிறது!


எமக்காக நீயேன் முன் சென்று
எதிரிகளை நிர்மூலமாக்க முடியாது?
பைபிளிலோ
குரானிலோ அல்லது கீதையிலோ
கிடப்பதெல்லாம் யுத்தம் பற்றியதுதானே?


எல்லா மனிதரையும்
அன்பால் அணைக்க நாங்கள் புத்தரில்லையே?
நீயும் அப்படியே
பிறகேன் தயக்கம் பிதாவே?


மெல்லத் துரத்தும் எல்லை
மறுபேச்சுக்கே இடமில்லாதபடி
உசுப்பியெடுக்கும் ஊழிக் காலம்
உருவமிழந்த சில நட்பு வெளிகள்
நாலுந் தொலைந்து முட்டுச் சந்தியில் நாம்!


முகமிழந்த காலங்களைக்
கட்டையில் போட்டெரித்துவிடத் துடிக்கும் உணர்வு
மூச்சு முட்டும் நாயோட்டம்
எப்போதும் நடுத் தெருவில் நின்றபடி குரைப்பதும்
இல்லையேல் பிராணனைப் பிடுங்கும் உழைச்சல்


கோலமிட்ட முற்றம்
கொடு நிலவு முறித்த இரவு
கடும் முகில் இழப்பில் கரைந்த வெள்ளம்
காலங்கள் தொலையக் காத்திருந்த
திருவெம்பாவை கடந்த பொங்கல்


எல்லாம் தொலைய
தோணீயேறித் தொலைந்தோம் அகதியாகி
காணாத மனிதரைக் கண்டு
கட்டிய வழி உறவென்றெண்ணி
காணிக்கைகேட்டு
கட்டிய புடவை மாற்றெடுத்தோம்


எச்சில் இலையாய்
தேசம் தொலைத்த உடல்கள் கொண்டு
தெருக்களில் எடுத்த பிச்சை
குத்தியது கள்ளத் தோணியென்று!


நட இப்படி
கிட அப்படி
எடு இப்படி
எல்லா ஏவல்களும்
முகத்தில் எழுதும் இரவல் நாடென


பாட்டன் நாட்டிய மாந்தோப்பும்
பாட்டி வளர்த்த தென்னந்தோப்பும்
பனங்கூடலும் செல்லழித்துச் சிதைத்தது
சின்ன விரல்களும் கூடச் சிதைந்து
குருதியில் தாழ்ந்து அமுங்கியது


இத்தனைக்கும் பிறகு
ஏய்ப்பதற்கொரு யுத்த நிறத்தம்,
தீர்வுப் பொதி,
இந்தியா தீர்க்கும் சண்டித்தனம்!


கோடாலிக் காம்பாகக்
குடிகளைக் கெடுத்த இயக்க வாதம்
கோதாரி மாபியாக் கூட்டம்
கோத்தயைக் கூட்டிக் கொடுத்துக்
கூத்தடிக்கும் ஒட்டுக் குழுக்கள்
பிள்ளையான் கருணா பு....டை ஆண்டிகள்


உலகை ஏமாத்தும் தேசியத் தலை
ஊரைச் சுத்தும் அவரது உதவாக்கரைகள்
தேசத்தைச் சொல்லி
சேர்த்த மூட்டைகள் பிரித்து
வானொலி,தொலைக்காட்சி நிறுவல்கள்


பணத்தை இலக்கு வைத்து
பாடைகள் காவும் ஒரு கூட்டம்
பல்லை இளித்துக் குதறம் இன்னொரு வம்புப் படை
வாய் கிழியும் வரம்பிட்ட வெருட்டல்கள்
தேசத்தின் பெயரால்
தேசியத் தலைவரின் பெயரால்


தேசமே தொலைந்த பொழுதில்
தோணீயேறிய அந்தக் கணத்தில் தொலைந்தது அனைத்தும்
துப்பிக்கொண்ட வெற்றிலைச் சாற்றைப் போல்


இதற்குள் பணம் மட்டும்
தேசத்துக்கும் எமக்கும்
தொப்புள் கொடி கட்டி
தோளில் கிடப்பதைப் பறிக்கும்
பொழுதுகள் என்னவோ தமிழீழம் சொல்லும்!


முகந்தொலைந்த
அகதியக் கோலமும்
அடிமை வாழ்வும் எமக்கிட்ட
புதிய தீர்வாய்...


புதிய புதிய வருஷங்கள் வரும்
புதிய புதிய நத்தார் பண்டிகைள் வரும் ஏசுவே
அதுபோல்
புதிய புதிய தலைமைகள் தோன்றும்
தலைவர்கள் பேசுவார்கள்
போர்ப் பிரகடனஞ் செய்வார்கள்
தீர்வும் சொல்வார்கள்
எனினும்,
தீராது நமது அடிமை வாழ்வு


துரத்தும் ஒரு கூட்டம்
மடியேந்திக் காசு வேண்டிக்
கார் வேண்டும்
வீடு வேண்டும்
கேட்டால் உழைப்பின் விளைவு!


உழைப்பவர் நாங்கள்
உப்புக்கு அலைவது தெரிந்த கதை
இத்தனைக்கும் ஏமாற நாமிருப்போம்
தேசத்தின் பெயராலும்
இன்னும் எதன் பெயராலும்


ஏசுவே உன் பிறப்பையும்
இன்னுமொருமுறை கொண்டாடியாச்சு
கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர்
அதைச் சொன்னீர்,
உம்முடைய ஆசீர்வாதத்தினாலே
உமது அடியானின் வீடு(நாடு)
ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்!


எந்த அடியானின் தேசம் அப்பனே?
கர்த்தரான ஆண்டவரே
தேவரீர்
நடுத்தெருவில் அகதியாக அலையும்
என் கூட்டத்தையும் கடைந்தேற்றக் கை கொடுக்கத்
துணியாயோ?


எமக்காக இன்னொரு முறை
சிலுவை சுமந்து முள் முடிதாங்கிச்
சிலுவையில் மரிக்காயோ ஏசுவே?



நிர்மாணம்.
25.12.2007

Sonntag, 23. Dezember 2007

பிரதேச வாதம் முரண்பாடும் இணைவும்

அன்னிய நலன்களுக்காக
எமது உயிரை விடுவது
எவ்வளவு கேவலமானது?


ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் மக்களே,வணக்கம்.
இன்று நமது சமூக வாழ்வானது உயிர்த்திருப்பதற்கும்,கொலைப்படுவதற்குமான சடுதியான பயங்கரவாதச் சூழலுக்குள் இருந்தபடி தனது இருப்பை நிலைப்படுத்த முயன்று வருகிறது.எந்தவொரு இனத்துக்குள்ளும் இல்லாதபடி எமக்குள்ளே எம்மைக் கொல்லும் ஆயுததாரிகளை பல நூறு குழுக்களாக வளர்த்துள்ளது இலங்கை-இந்திய அரசியல் சூழ்ச்சி.


இந்தியாவின் மிகக் காட்டுமிராண்டித்தனமான இந்த நயவஞ்சக அரசியலைத் தமிழ்நாட்டுக் கட்சி அரசியல்வாதிகளின் தயவோடு இந்திய மத்திய அரசும், இந்திய ஆளும் வர்க்கமும் இலங்கையில் முன்னெடுத்து,நமது மக்களின் தலையில் பாரிய ஒடுக்குமுறையென்ற பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுள்ளது.இது பல தரணங்களில் நம்மைப் பூண்டோடு அழித்துவர முனைந்தபடி, காலத்துக்குக் காலம் பற்பல முரண்பாடுகளை நமக்குள் தூண்டி நமது போராளித் தேச பக்த இளைஞர்களைத் திட்டமிட்டு நம்மை அழிப்பதற்கேற்றவாறு தயார்ப்படுத்தித் தத்தமது நலன்களை இலங்கையில் அடைந்து வருகிறது.

நாம் இதிலிருந்து மீண்டு,நமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதபடி நமக்குள் பாரிய அராஜகக் குழுக்களைக் கட்டிவைத்து,நமது மக்களின் நலனுக்காகப் போராடும் முற்போக்காளர்களை நரவேட்டையாடி வருகிறது அந்நியச் சக்திகள்.அதுள் முன்னணியில் நிற்கும் இந்தியாவோ தன்னை இலங்கை மக்களின் நலனில் அக்கறையுள்ள நட்பு நாடாகக் காட்டிக் கொள்வதற்காகத் தமிழ்நாட்டுக் கட்சி அரசியல் வாதகளுடாகவும்,இலங்கைப் பாராளுமன்றப் பண்டிக்கூட்டமான தமிழர் தேசியக்கூட்டு மற்றும் ஆயுதக் குழுக்களுக்கூடாகவும் இந்திய அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வருகிறது.

நாம் எந்தவொரு சூழ்நிலையிலும் விழித்துவிட முடியாதபடி பாசிசப் புலிகளுக்கூடாகக் காரியமாற்றும் உலக அந்நிய நலன்கள் இன்றொரு முக்கியமான கட்டத்தில் நம்மை ஏமாற்றிவர புலிகளுக்கு மாற்றானவொரு சக்திகளை முன்னிறுத்திப் புலிகளின் இருப்பை மேலும் நிலைப்படுத்தித் தமது ஆர்வங்களை,பொருளாதாரப் பிராந்திய நலன்களைக் காத்துவருகிறார்கள்.இத்தகைய நலன்களுக்குத் துணைபோகும் புலிகளும் மற்றும் குழுக்களும் நம்மை இன்னும் ஏமாற்றுவதற்கான அரசியல் சூழ்ச்சிகளோடு புலிகளைக் குறைகூறியபடியே அவர்களின் எஜமானகளுக்கிசைவாகச் செயற்பட்டு வருகிறார்கள்.இவர்களே புலிகளின் அழிவை விரும்புவர்களாகவும்,புலிகளால்மட்டுமே தமிழர்கள் ஒடுக்கப்பட்டு அடிமை கொள்ளப்பட்டதாகவும் கூறி, மக்களிடம் புலிகளை இன்னும் வலுப்படுத்தித் தமிழ் பேசும் மக்களின்மீதான புதிய வகையானவொரு ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.போராடியே பழக்கப்பட்ட தமிழினத்துக்குள் இருந்து புரட்சிகரமான அரசியல் எந்தச் சூழ்நிலையிலும் அரும்புவது ஆபத்தென்று புரிந்து கொண்ட இந்தியா, புலிகளின் இருப்பில் இத்தகைய அரும்பு நசுக்கப்படுமெனக் கருதியே அதைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.

பாசிசப் புலிகளும் தமது எஜமானர்களுக்கேற்றபடி போராட்டத்தைச் சிதைத்து,நமது மக்களையும் போராளிகளையும் நரவேட்டையாடி வருகிறது.இன்று போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் பதுங்கிகிடக்கிறது இன்னொரு நரவேட்டைக்கு!ஒரு இடைவெளிக்குள் முளைவிடும் முற்போக்காளர்களை வலுவாக இனம் கண்டு வேட்டையாடும் அதன் பாத்திரத்தைச் சரிவரச் செய்வதற்காக இலங்கை ,இந்தியப் பேரத்தில் இப்போது மூழ்கியுள்ளது.இதைக்கடந்தவொரு அரசியல் புலித் தலைமையிடம் இல்லை.இதை மறைப்பதற்காக அது "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்",என்றும் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"என்றும் மாறிமாறி நம் மக்கள் மீது குருதியைக் கக்கும்.இதை நாம் புரிவதே இன்றைய அவசியமாக இருக்கிறது.

இலங்கைப் பாசிசச் சிங்கள அரசு நமது பிரதான எதிரியென்பதாலும் அதுவே எப்பவும் எதிரியாக இருக்கிறது.ஆனால்,இப்போது இலங்கைப் பாசிச அரசைமிஞ்சிய தமிழ் ஆயுதக் குழுக்கள் நம்மை இன்னும் ஒடுக்கி,ஊராருக்கு உதவி வருகிறார்கள்.அந்நிய அரசுகள் இதற்காகக் கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும்போது அதன் சுவையில் தமிழ் பேசும் மக்களின் குருதி தாகமாக இருக்கிறது!

தென்னிந்தியாவெங்கும் மக்கள் யுத்தக் குழுவை(இந்திய உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் நக்லைஸ்டுக்கள்) வேட்டையாடும் இந்தியப் பாசிச இராணுவமும்,ஓட்டுக்கட்சிகளும் இந்திய மக்களின் மீது ஒடுக்கு முறையைப் புதியபாணியில் அவிழ்த்துவிட்டு ஒடுக்கும் அதே பாணியலானவொரு போராட்டத்தை இலங்கையில் மிகவும் மாறானவொரு உருவில் செய்து வருகிறார்கள்.இது சாரம்சத்தில் ஒரே இலக்கை உடையது.அதாவது இடதுசாரிகளை,மக்கள் நலனிலிருந்து போராடும் ஜனநாயக வாதிகளை அழிப்பதே இந்திய-இலங்கை உலக அரசுகளின்-ஆளும் வர்க்கத்தின் நோக்கு.

இத்தகைய போக்குகளால்-அன்னிய நலன்களால் நமது போராட்டம் சிதைக்கப்பட்டு,இலங்கையில் வாழும் இனங்களின் ஒற்றுமை அழிக்கப்பட்டு,ஒவ்வொரு இனங்களையும் தனிமைப்படுத்தி நம்மை இலகுவில் ஒடுக்கும் இந்திய-அமெரிக்கச் சதியானது மிகவும் கொடூரமானது.இது இலங்கைத் தீவின் முழுமொத்த மக்களின் வாழ்வையும் சூறையாடும் அரசியலை நமக்குள் விதைத்படி இலங்கைத் தொழிலாள வர்க்கத்தை மிக இலகுவாக பிரித்தெடுத்துச் சுரண்டி வருகிறார்கள்.

அப்பாவி மக்கள் அழியுந்தருவாயில் எதையும் சிந்திச் செயற்பட முடியாது அன்னிய நலன்களக்காகத் தமது உயிரை விடுவது எவ்வளவு கேவலமானது?

தமிழ் பேசும் மக்களாகிய நாமோ தமிழின் பெயராலும்,தேசவிடுதலையின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டு எந்தப் பிடிமானமும் அற்ற வெறும் ஓடுகாலி இனமாக உருவாகப்பட்டு நம்மை நாடோடிகளாக்கியுள்ளார்கள்.நமது சமூக சீவியம் வலுவாக அழிந்தபின் நம்மிடம் எஞ்சியிருக்கும் வாழ்வானது காத்திரமான சமூக ஆண்மையாக இருக்க முடியாது!நாம் மெலினப்பட்ட இனமாக,பொருளாதாரப் பலமற்ற சிறு குழுவாகச் சிதைக்கப்பட்டு,உலக இனங்களுக்குச் சேவகஞ் செய்யும் நாடோடிகளாக்கப்படும் அரசியலை நாம் எதன் பெயராலும் இனியும் முன்னெடுக்கமுடியாது.

இங்கே,தோழர் சபா நாவலன் தன் கட்டுரையூடாகத் தன் முழு வலுவை¨யும் தமிழ்பேசும் மக்களுக்காகத் தியாகஞ் செய்யும் மனநிலையோடு உண்மையோடு கருத்தாட முனைகிறார்.இக்கருத்தாடுதலானது மக்களின் நலனிலிருந்து மக்களுக்கான விடுதலை நோக்கிய ஆரம்பப் புரிதலின் கதவைத் திறப்பதாகவே இருக்கிறது.இந்நோக்கே மிகவும் அவசியமானது.நாம் நம் எதிரிகளை மிகக் காட்டமாக அறிந்து,நமக்குள்ளேயே நமது எதிரிகள் நமக்காகக் குரல் கொடுப்பதாகக் கொடுத்து, நமது போராட்டத்தைக் காவு கொண்டு,நம் பல்லாயிரம் மக்களை நர வேட்டையாடி நம்மை இன்று இந்த நிலைக்குள் கொணர்ந்த வரலாற்றை நாம் அறிய இத்தகைய கட்டுரைகள் அவசியமானதாகும்.இத்கைய அறிவுபூர்வமான கருத்தியல் மக்களைப் பற்றிக்கொள்ளும் தரணத்தில் மக்களின் போராட்டச் செல்நெறி இன்னும் வீரியமான முறையில் தகவமைக்கப்பட்டு,சரியான பாதையில் நகரும்போது நம்மை எவர் அடிமை கொள்வார்?

இந்த நோக்கோடு தேசம்நெற் இணையச் சஞ்சிகையிலிருந்து நாவலின் இக்கட்டுரையை நன்றியோடு மீள்பதிவிடுகிறோம்.


என்றும்
மக்கள் நலன் நோக்கிய ஆர்வத்தோடு,

நிர்மாணம்.
23.12.2007



பிரதேச வாதம்: முரண்பாடும் இணைவும் :சபா நவலன்



மனிதகுலமும் அதன் சமூக நிலையும் நிலையானவையல்ல. காடுகளில் காட்டுமிராண்டிகளாக, குழுக்களாக அலைந்து திரிந்த மனிதர்கள் தாம் சார்ந்த குழுக்களின் குழுனிலை எண்ணிக்கை பெருகத் தொடங்க நாடோடி வாழ்க்கை சுமையாகிவிட, ஆற்றங்கரைகளில் குடியேற ஆரம்பித்த போது மனித குலத்தின் இணைவு முதன் முதலில் வெளிப்படையாக ஆரம்பித்தது. பௌதீக சார்பு நிலைகளும், புவியியல் நிலைமைகளுக்கும் ஏற்ப பண்பாட்டு அம்சங்களும் நிர்வாக அமைப்புக்களும் உருவாக ஆரம்பித்தது. பெரும் எண்ணிக்கையில் அமைந்த குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்த மனித சமுதாயம் சாம்ராஜ்யங்களின் ஆதிகத்தின் கீழ் மேலும் ஒருங்கிணைந்து கொண்டது.
ஐரோப்பாவின் பெரும்பாலான பிரதேசங்களில் சாம்ராஜ்யங்களாகப் பிரிந்து கிடந்த பகுதிகள் தேசங்களாக இணைந்து கொண்டன. பல மொழிகள் அழிந்து போயின. பிரதேச எல்லைகள் அழிந்து போய், தேசங்களின் எல்லைகள் உருவாகின. மக்களைப் பிரித்திருந்த நிலப்பிரபுத்துவ எல்லைக் கோடுகள் தேசங்களின் வரைவுக்குள் மறைந்து போக புதிய தேசங்களாக மக்கள் இணைந்து கொண்டனர். இவ்வாறு மனித குலத்தின் வரலாறு முழுவதும் மக்கட் பிரிவுகளின் இணைவிற்கும் ஒருங்கமைபிற்குமான வரலாறேயாகும். மனிதர்கள் கூட்டங்களாகவும் குழுக்களாகவும் சாம்ராஜ்யங்களாகவும் தேசங்களாகவும் இணைந்து வேறுபடுகளையும் குறுகிய எல்லைகளையும் தகர்த்தெறிந்த இந்த வரலாற்றுப் போக்கானது காலனியாதிக்கத்திற்குப் பின்னர் மாற்றமடைய ஆரம்பித்தது.
இயல்பான வரலாறுப் போக்கானது அதிகாரா சக்திகளின் நலன்களுக்காக சிக்கலானதாகத் திரிக்கப்பட்டது. மக்களிடையேயான முரண்பாடுகள் திட்டமிட்டுக் கூர்மைபடுத்தப்பட்டடன. பிரிவுகளுக்கான போரும் மனித சமுதாயத்தின் சிதைவும் நாளாந்த வாழ்வின் இயல்பு நிலையாகிவிட்டது.
முரண்பாடுகளைத் தகர்த்து புதிய சமூகத்தை உருவாக்குதற்கான மனித சமூகத்தின் போராட்டம் என்பது முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதற்கான போராட்டமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் பேசும் தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தூண்டித் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பரந்துகிடக்கும் ஜனநாயக சக்திகளிடம் இருந்து தமிழர்களைத் தனிமைப்படுத்திய புலிகள், வட கிழக்குத் தமிழர்கள் மீது பௌத்த சிங்களப் எதேச்சரிகாரம் பிரயோகிக்கப்படும் போதெல்லம் குரல் கொடுத்த தென்னிந்திய ஜனநாயகச் சக்திகளிடம் இருந்தும் இலங்கைத் தமிழர்களைத் தனிமைப்படுத்தினர்.


தமிழர்களது அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளித்து வந்த முஸ்லீம் தமிழர்கள் மீது தமது வன்முறையைப் பிரயோகித்த புலிகள் முஸ்லீம்களுடனான முரண்பாட்டைத் தூண்டி தமிழ் பேசும் தமிழர்களைத் தனிமைப்படுத்தினர். சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் வாழ்வுக்கான போராட்டத்தை ஆதரித்த ஆயிரக்கணக்கான மனிதாபிமானிகளை அன்னியப்படுத்தி தமிழர்களை அன்னியப்படுத்தினர். பிரதேச முரண்பாடுகளைத் தேவைப்படும் போதெல்லாம் தூண்டிவிட்டு அடக்குமுறைக்கு எதிராக மையப்படுத்தப்பட்ட தமிழ் பேசும் மக்களின் எழுற்சியைக் கூறுபோட்டனர். மலையகத் தமிழர்களின் அவலங்களை இலங்கை அரசைப் போலவே புறக்கணித்து வந்த புலிகள், தமிழ் பேசும் மக்களின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை, தேசியத்தின் பேரால் முரண்பாடுகளை ஆழப்படுத்தி சீரழித்த வரலாற்றின் இன்னுமொரு தொடர்ச்சிதான் கருணாவின் தோற்றமும் கிழக்கு மக்களின் விரக்தி நிலையுமாகும்.

புலிகளைப் பொறுத்தவரை தேசவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான தேச பக்தர்களும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர்களும், இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டிருந்தவர்களும் தான் கொன்று ஒழிக்கப்பட வேண்டியவர்களாகக் கருதப்பட்டார்கள். விடுதலை இயக்கங்கள், அரசியற் கட்சிகளென தமிழ் மக்களின் தேச விடுதலைக்கு ஆதரவான எல்லா சக்திகளுமே புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டன. உயிரோடு எரிக்கப்பட்ட இளம் போராளிகளில் இருந்து வீட்டு முற்றத்தில் வைத்தே கொலை செய்யப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவான புத்திஜீவிகள் வரை நூற்றுக் கணக்கானோரின் பட்டியல் எம்முன்னே நீண்டுகிடக்கின்றது. புலிகளுக்கு உள்ளேயே அதன் முழு நேர உறுப்பினர்களாக இருந்த பல போராளிகள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதாலேயே குழிதோண்டிப் புதைக்கப்பட்டு இருக்கிறார்கள். பௌத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான சிந்தனைப் போக்கினைக் கொண்டவர்களும் மக்களை நேசித்தவர்களும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தேசிய இன முரண்பாட்டை தமது சொந்த நலனுக்காக கையண்ட புலிகள் மக்கள் இடையேயான முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதில் இருந்தே தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். மக்களின் விடுதலைக்கு எதிரான சக்திகள் அதே மக்களின் விடுதலையைக் கையிலெடுத்துக் கொள்ளும் போது உருவகின்ற எதிர்ப்புகளை அடக்குவதற்காக பாசிச வடிவத்தைக் கொள்கிறது. மூன்றாம் உலக நாடுகளின் பல விடுதலைப் போராட்ட அமைப்புக்களினது அரசுகளினதும் பாசிசத் தன்மைக்கு அடிப்படைக் காரணமாக அமைவது இதுதான்.

ஒடுக்கப்படுகின்ற மக்கள் இடையேயன முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதன் ஊடாகவும் அவற்றைத் தமது நலன்களுக்காக கையாள்வதன் ஊடாகவும் உருவான இன்னொரு அமைப்புத்தான் கருணா குழு. கருணாவின் கோரத்தாண்டவம் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது. புலிகளுக்கு எதிரான புதிய சக்திகளைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாற்றி உள்ளது. கிழக்கிலும் தெற்கிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களை மரண பயத்திற்குள் கட்டி வைத்திருந்த இவரது குழு, அரச பயங்கரவாதத்துடன் கைகோர்த்துக் கொண்டு மனித விழுமியங்களை மண்ணுள் புதைத்து விட்டதை இந்தத் தலைமுறையில் யாரும் மறந்து விடமாட்டார்கள். மக்களை அழிப்பதற்கான இதன் தொடர்ச்சியாக பிள்ளையன் குழு பேரினவாத அரசின் பிடிக்குள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மனித குலத்தின் வறலாறு முழுமையும் மக்கட் கூட்டத்தின் ஒருங்கிணைப்பகவே திகழ்ந்து வந்தது. இந்த இயல்பான வரலாற்றுப் போக்கானது காலனியாதிக்கக் காலகட்டம் வரை மக்களை ஒருங்கிணைத்தது. இந்தியா, இலங்கை போன்ற மூன்றாவது உலக நாடுகள் குழுநிலை சமூக அமைப்பில் இருந்து நிலப்பிரபுத்துவம் வரை வளர்ச்சி அடைந்திருந்தன. குழுநிலை சமூகத்தில் இருந்த குழுக்களை சாம்ராஜ்யங்கள் ஒன்றிணைத்த போது குழுக்கள் மத்தியில் இருந்த பண்பாட்டு முறைகள் மையப் பேரரசின் தன்மைக்கேற்ப இயைவுபட வேண்டிய தேவை ஏற்பட்ட போது மக்கள் மத்தியில் பெரும் குழப்பமும் சீரழிவும் ஏற்பட்டது. இந்த சீரழிவையும் குழப்பத்தையும் சீர்செய்ய பல சித்தாந்தங்கள் உருவாகின. கிறிஸ்த்தவ மதம் மேற்கிலும், இந்து தத்துவம் தெற்கிலும் உருவானது. அந்தந்த சமூகச் சூழ் நிலைகளிற்கு ஏற்ப, இணைந்து இருந்த மக்கட் பிரிவினர், சாதி ரீதியாக வகைப் படுத்தப்பட்டனர். இந்தியாவினதும் தெற்காசியாவினதும் சமூகச் சூழல், வர்ண சாத்திரங்களூடான சாதி அமைப்புமுறையை உருவாக்கிற்று.
உமா சக்கரவர்த்தி போன்ற பல இந்தியச் சமூகவியலாளர்கள் இந்த சாதி அமைப்பின் இறுக்கத்தைப் பற்றியும் அதன் தோற்றம் பற்றியும் பயனுள்ள ஆய்வுகளை மேற்கொண்டு உள்ளனர். இந்தியாவில் மிக நீண்ட காலமாக, சுமார் 20 நூற்றாண்டுகளுக்கு மேலாக மாறாத் தன்மை கொண்டிருந்த நிலையான நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புப் பற்றிக் குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், இதற்கான காரணங்களை ஆராய முற்படுகிறார். நிலப்பிரபுத்துவத் தனித்தன்மைக்கே உரித்தான மக்கள் மத்தியிலான முரண்பாடுகளுடன் ஒன்றிணைந்த மக்கள் கூட்டம் தேசங்களாக வடிவெடுக்கும் முன்னமே சீரழிக்கப்பட்டுவிட்டது. நிலப்பிரபுத்துவ முரண்பாடுகள் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்பட்டன. இலங்கையில் பௌத்தம் பற்றி ஆராயும் ஜெய தேவ உயாங்கொட, காலனிகாலத்தில் சமூகம் மறு - நிலப்பிரபுத்துவ மயப்படுத்தப்பட்டதாக நிறுவுகிறார்.
காலனி காலகட்டத்தில் உருவான மூலதன உருவாக்கத்தைக் கண்ட கார்ல் மார்க்ஸ், பிரித்தானியர்கள் அறியாமலேயே இந்தியாவில் புரட்சி நடந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

உலக மயமாதலின் போதும் இதே எண்ணம் தான் பல சமூக உணர்வாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. ஆனால் இப்போது நடப்பதைப் போலவே ஏகாதிபத்தியம் அன்றும் விழித்துக்கொண்டது. நிலப்பிரபுக்களோடு சமரசம் செய்துகொண்டு தேசிய மூலதனத்தையும், தேசிய சிந்தனையாளர்களையும் நிர்மூலமாக்கியதுடன், உருவான தேசிய சிந்தனையை தனது அடிவருடிகளூடாகக் கைகளில் எடுத்துக்கொண்டு அதனைச் சீரழிக்கத் தொடங்கியது. இதன் வெளிப்பாடே தமிழர் விடுதலைக் கூட்டணியும் புலிகளும் அதன் இன்றைய தொடர்ச்சியுமாகும்.
ஆக மனித சமூகம், இதுவரையில் தேசமும் தேசிய இனங்களும் வரை மக்கள் கூட்டங்களின் இணைவுகளைச் சந்தித்திருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இதுவும் அரைகுறையாக நிறுத்தப் பட்டுவிட்டது. பெனடிக்ட் அண்டர்சன், எர்னஸ்ட் கெல்னர், ஹொப்சன், ஸ்டாலின் போன்ற பேசப்படுகின்ற பெரும்பாலான சமூக விஞ்ஞானிகளும், தமது தளங்களில் இருந்து தேசிய இனங்களும் தேசமும் சந்தைப் பொருளாதார உருவாக்கத்தின் ஒரு அம்சமாகவே குறிப்பிடுகின்றனர். தேசிய இனங்களும் தேசியம் பற்றிய இதுவரையான பெரும்பாலான கருத்தாக்கங்கள், ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய சீரழிவிற்கு முற்பட்ட காலத்தவையே ஆகும். லெனின், ஸ்டாலின் போன்ற தத்துவ ஆசிரியர்களுக்குப் பின்னதாக எர்னஸ்ட் கெல்னர், ஹொப்சபன் அண்டர்சன் போன்றவர்களும் கூட இந்த ஏகாதிபத்தியத் தாக்கங்களை கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
முரண்பாடுகளுடனான மக்களின் வரலாற்றின் ஒரு கட்டத்திற்கான ஒருங்கிணைதலான தேசிய இணைதல் கூட இலங்கை போன்ற நாடுகளில் முழுமையானதாக அமைந்திருக்கவிலை. இங்கெல்லாம் வளர்ச்சி அடையும் நிலையிலுள்ள தேசிய இனங்களையே நாம் காணுகின்றோம்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த வளர்ச்சியின் தேக்கநிலை திட்டமிட்டுப் பேணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட இந்தத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட முரண்பாட்டிற்குச் முற்பட்ட காலப் பகுதியில் தேசிய இனங்களின் ஒன்றிணைவு மிக வேகமாக நடந்தேறியது. இந்தியாவில் இருந்து மிக பெருமளவில் இலங்கை வந்து குடியேறிய கௌரவர் என்ற சாதிப் பிரிவினராகிய தமிழர்கள் கராவ என்ற சிங்கள சாதிப் பிரிவினராக மாறிப் போனதுடன், இன்று சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். தமிழ் பேசிய அனுராதபுரம் 100 இற்கும் குறைவான ஆண்டுகளில் முழுச் சிங்கள நகரமாக மாறிப் போனது.
கணனத் ஒபேசெகரவின் கருத்துப்படி 30 வீதத்திற்கும் அதிகமான சிங்கள பௌத்தர்கள் தமிழ் இந்துக்களாக இருந்தவர்களே. 19ம் நூற்றாண்டில் ஆரம்பித்த குறிப்பாக மூலதன உருவாக்கத்தினூடான மற்றங்கள் ஏற்படுத்திய இணைவானது, தெற்கில் இருந்த பெருமளவிலான தமிழர்களை சிங்களவர்களாக மாற்றியது. மூலதன வளர்ச்சி மட்டும் திட்டமிட்டு ஏகாதிபத்தியங்களால் சிதைக்கப்படாமல் இருந்திருக்குமானால், முழு இலங்கையுமே சிங்களம் பேசும் நாடாகவே அமைந்திருக்க வாய்ப்புகளுண்டு.
இந்த இணைவை தனது சொந்த நலனுக்காகத் திட்டமிட்டு வேறுபடுத்திய ஏகாதிபத்தியம், மக்கள் மத்தியில் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தியது. தமிழர்கள் முஸ்லீம்கள் சிங்களவர் மத்தியில் சந்தைப் போட்டி உருவாக, வட கிழக்குத் தமிழர்கள் ஒரு சந்தையை அடிப்படையை நோக்கி இணைந்துகொள்ள, இவர்கள் தேசிய இனமாக உருவாக ஆரம்பித்தனர். வல் டானியல் கூறுவதைப் போல, ஐரோப்பியத் தேசிய இனங்களைப் போலல்லாது தீவிரமான உள்முரண்பாடுகளையும் தன்னகத்தே கொண்டிருந்த இந்தத் தேசிய இனமானது, இன்னமும் வளர்ச்சி நிலையிலேயே உள்ளது.
இந்தக் கருத்து நிலையில் இருந்தே வட - கிழக்கு இணைவு தொடர்பான பிரச்சனைகளும் நோக்கப்படல் வேண்டும். சிங்கள பௌத்தர்களையும் தமிழ் இந்துக்களையும் ஒன்றாக இணைத்த சந்தைப் பொருளாதாரம் தடுத்து நிறுத்தப்பட்ட போதுதான் பொதுவாக இருந்த மொழி கலாச்சாரத் தொடர்புகளின் அடிப்படையில் மக்கள் இணைந்து கொண்டார்கள். ஆனால் உறுதியான சந்தையினை அந்நிய மூலதனம் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய நிலையில் தேசிய முதலாளிகள் என்ற அதிகார வர்க்கத்தால் தலமை தாங்கப்படும் தமிழ் தேசியம் உருவாகவில்லை. மக்கள் இடையேயான உறுதியான தொடர்புகள் ஏற்பட்டு இருக்கவில்லை.
இதனால் முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட தேசிய இனங்களாக உருவாகும் நிலையில் இருந்த இந்த தமிழ் தேசிய இனத்தின் உள்முரண்பாடுகள் அதிகார சக்திகளால் கையளப் படுகின்றன. புலிகள், கருணா குழு மற்றும் சில அதிகார வர்க்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றன. தமிழ் தேசிய இனத்துள் இருக்கும் உள்முரண்பாடுகளை மேலும் அதிகப்படுத்துகின்றன. இது பல சந்தர்ப்பங்களில் திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் வட - கிழக்குத் தமிழர்களின் தேசிய இணைவு எதிர்காலத்தில் தடுக்கப்படுவதுடன், கிழக்கு சார்ந்த தமிழர்கள் தனியான தேசியமாக பிரிவடையும் துர்ப்பாக்கிய நிலை கூட ஏற்படலாம்.

இந்தத் திட்டமிட்ட, உள் நோக்கம் கொண்ட அரசியற் செயற்பாட்டிற்குப் பின்னால் நிலப்பிரபுத்துவ சிந்தனை கொண்ட அன்னிய மூலதன சக்திகளூம் மறுபுறத்தில் இவர்களுக்குத் துணைபோகும் பிரதேச வாதிகளும் செயற்படுகின்றனர். யாழ் மேலாதிக்கவாதம் எவ்வளவு ஆபத்தானதோ அதேயளவு பிரதேசவாதமும் ஆபத்தானதே! 19ம் நூற்றாண்டில் நடந்ததைப் போலவே இன்னுமோரு முரண்பாட்டை உருவாக்குவதற்கான அத்திவாரம் இடப்பட்டுக் கொண்டிருப்பதை இடது சாரிகளும் ஜனநாயக சக்திகளும் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய மூலதன உருவாக்கத்திற்கும் சார்பான இலங்கை அரச தரகுகளும், அதன் ஆதரவுப் படைகளான, புலிகளும் யாழ் மேலாதிக்க வாதத்தினூடான இந்த முரண்பாட்டை கையாள்வதனூடாக இந்த முரண்பாட்டை கூர்மைப்படுத்துகின்றன. யாழ்ப்பாண மேலாதிக்க வாதமும், நிலப்பிரபுத்துவ மனோனிலை சார்ந்த தலைமைகளும் வட - கிழக்கு முரண்பாட்டைத் தமது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக கால காலமாகப் பயன்படுத்தி வந்துள்ளன.

நாகாலாந்தில் வௌ;வேறு மொழிகளைப் பேசுகின்ற இனங்கள் கூட தேசிய இன அடக்குமுறைக் கெதிராக இணைந்து போராட விளைந்த நிலையில், சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான போராட்டத்தை புலிகள், கருணா போன்ற சமூக விரோதிகளிடமும் அவர்களை நியாயப்படுத்தும் அறிவுஜீவிகளிடமும் அரச பயங்கர வாதத்தின் அடிவருடிகளிடமும் பறிகொடுத்துவிட்டு இலங்கை மக்கள் பரிதாபகரமாக மரணத்தின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டு உள்ளனர்.

கிழக்கு மகாண மக்களின் ஒன்றிணைந்த வாழ்வையும் சகிப்புத் தன்மையையும் சீர்குலைப்பதற்காக, தேசிய இன அட்க்குமுறைக்கு எதிரான போராட்டதைக் கையிலெடுத்துக் கொண்ட ஏகாதிபத்திய சார்பாளர்களும், நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களும் சீர்குலைப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக் காலகட்டத்தில் இருந்து நிறையவே பங்களித்து உள்ளார்கள். முரண்பாடுகளை இவர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல, யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய இடங்களிலும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து உள்ளார்கள். இவர்களுக்கு உரமூட்டுவதற்கு பிரதேசவாதிகள் மறுபுறத்தில் எப்போதுமே தயாராக இருந்து உள்ளார்கள். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திருகோணமலை பேரினவாதத்தால் சீர்குலைந்து போன வரலாற்றை யாரும் மறந்துவிட மாட்டார்கள். பெருந் தேசியவாதத்தின் நேரடி ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுத்த கிழக்கு மாகாண மக்களின் தியாகங்கள் வரலாற்றால் மறைக்க முடியாதவை.


தேசம் என்பதற்கான அடையாளம் முலதனச் சந்தையை நிர்வகிப்பதற்கான ஒரு அதிகார அடையாளமே தவிர ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமல்ல. அடிப்படையிலேயே இந்த அடையாளம் முதலாளித்துவ ஒடுக்குமுறையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. தவிர, வளர்ச்சி நிலையிலுள்ள தேசியஇனத்தின் உள் முரண்பாடென்பது, பிரதேச அடையாளங்களையும் அதனூடான முரண்பாடுகளையும் தன்னகத்தே அதிகமாகக் கொண்டதாகும். தேசத்தின் உருவாக்கத்தை கம்யூனிஸ உருவாக்கமாக குழப்பிக் கொள்பவர்கள் தம்மை அறியாமலே மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைத் தீவிரப் படுத்துகிறார்கள். இடதுசாரிகள் தேசத்தின் உருவாக்கத்தில் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பாசிஸ்ட்டுக்களின் கைகளிலிருந்து ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதனூடாகவும் மட்டுமே தேசிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை மொத்த மக்களின் விடுதலைக்குமான போராட்டமாக மாற்றி அமைக்க முடியும்.
நமது நாடுகளில் தேசிய இன முரண்பாட்டை தூண்டியவர்கள் நிலப்பிரபுத்துவ சிந்தனையாளர்களும், ஏகாதிபத்தியத்தின் தரகர்களும் அதன் பங்காளர்களுமேயாகும். இன்று இந்த முரண்பாடு விரும்பியோ விரும்பாமலோ கூர்மை அடைந்துள்ளதை யாரும் மறுப்பதில்லை. இந்த முரண்பாட்டை தேச விடுதலைக்கு எதிரான பாசிஸ்டுக்களும், சமூக விரோதிகளும் தமது கையில் எடுத்துக் கொண்டு மனிதக் கசாப்புகடைகளில் வியாபரம் நடத்துகிறார்கள். உலகின் ஆதிக்க சக்திகளுக்குத் துணைபோகும் இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது பிரதேச முரண்பாடுகள் போன்ற உற்பத்தி சாரா முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்துவதாலல்ல, முற்போக்கு சக்திகளின் அதிகார வர்க்கத்திற்கு எதிரான இணைவினால் மட்டுமே சாத்தியமாகும்.

Freitag, 21. Dezember 2007

எங்கள் பரா இனித்திருந்தார்!

எங்கள் பரா இனித்திருந்தார்!


உணர்வுக்குள் உந்தும்
ஒரு இருளடைப் பொழுது
ஏற்றமென்றெண்ணும் கணத்தில்
இறக்கம் பிடரியில் தொட்டு
காணத்தக்க மாமனிதர் மரித்த கதைசொல்லி
மௌனித்துவிடும் இதயம்


இயங்க மறுக்கும் மொழியோடு
உணர்வைக் கொட்டிவிடவும் முடிவதில்லை
மெல்லத் தொடும் ஞாபகத்தின் முதுகில் சுமைகளை ஏற்றி
இதயத்தின் அழுகையைக் கோர்வை செய்வதைத்தவிர
வேறென்ன நம்மால் முடியும்?


எத்தனையோ பொழுதுகளில்
எங்கள் பரா இனித்திருந்தார்!
எப்படியிவர் சொல்லாத பொழுதொன்றில்
தனித்தே ஒதுங்கினார்?
கூடியிருப்பதிலும்
குறைகாணாதிருப்பதிலும் பெருவகமுடையவரோ
பிள்ளைகள் எமைப் பிரிந்தே சென்றார்?


சொல்வதற்கரிய செயற்பாட்டின் பெரும் வினை
மிகநேர்த்தியுற்ற நெறியின் சுவடு
செல்லப் புன்னகையின் குடில்
சோர்ந்தே போகாத இதயம்
சொல்லினிமை மிகு பேச்சாளன்
தோன்றிய தினத்துள் இருப்பிழந்தான்!


மடிதனில் உருளும் மழலைகளாய்
மனிதரின் அகத்தைப் புரிந்தவர் நாம்
மங்காத குரலும்
மடைதிறந்த அருவியுமான வார்த்தைகள் ஒதுங்க
மௌனித்துவிட்ட மாஸ்ரர் மக்கள் போராளியேதான்!

மகிழத்தக்க மனிதருள்
இனித்தே உறவுற்று செல்லக் கரம் தோள்களில் விரிய
சேதி கேட்டுச் சுகம் விசாரித்த
சுகதேவன் சுதந்திரமாய்ப் போனான்!


நிர்மாணம்.
21.12.2007

Donnerstag, 6. Dezember 2007

குரைக்கும் நாய்!

குரைக்கும் நாய்!


நாயொன்று இருந்தவிடத்திலிருந்து
குரைத்தபடி கோடுகிழிக்கிறது.
எனது தேசத்தில் குழந்தைகள் போராட வெளிகிட்ட நேரம்
ஏழரைச் சனியனின் நேரம்

தொடர் தோல்வியில்
என் இரத்தம் இலங்கைத் தீவெங்கும் ஆற்றை உண்டாக்கியபடி
தேசத்தின் மடியில் தவழ்ந்த என் புதல்வர்கள்
தாம் நினைத்த காரியத்துக்காகச் சாகிறார்கள்
எனினும்,
என் தேசத்தின் பிதாவுக்குச் சூழலை மதிப்பிடும் தகமையில்லை
இவன் தந்தை
நடந்த புல் சரியாத நன்றியுடை நல்ல மனிதன்
நான்
இவனை"அவனே-இவனே"என்பேன்!

என் தேசம் மரணிக்கிறது
எனக்குள் குருதி உறைகிறது!
நான் பாடிய மாதாகோவில் குருசு மரம்
எனது பிணத்தால் கறை படும் ஒரு பொழுதில்
எனது பிணம்
என் தோட்டத்தில் புதைத்தாகணும்
அதற்காவேனும்
நான் என் தேசத்துக்காக மரித்தாகணும்!

விடுதலை!

வீரியமிக்க என் மழலைகளின் மரணத்தை
நான் தாங்க முடியாது
புலம்புகிறேன்!


"புலிகளுக்குக் கடுஞ் சேதம்"தினக்குரல் செய்தியைப் போடுகிறது!
என் கண்களில் நீர் தாரைதாரையாகச் சொரிகிறது.
இது எனது சுயம்!
என்னை
எனக்கே புரிய முடியவில்லை.


நான் புரட்சியை விரும்புகிறேன்
இதைவிட என் மழலைகளை
தேசபக்தர்களை உயிராய் மதிக்கிறேன்
அவர்கள்
அப்பனாகிய என்னை
அம்மாவாகி என்னைக் கொல்லலாம்
அதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு!

தேசத்தின் கருத்தரிப்புக்குத்
தம்மை வித்தாக்கியவர்கள் அவர்கள்!!!


எனது மரணம்
அவர்களது தியாகத்தின் நீட்சியாகணும்
என் திடமான மரணம் தேசத்தின் வலுவுக்கு வீரியம் சேர்க்க
நான் அழிந்தேனும் அறிவைச் சொல்வேன்
என் குழந்தைகளின் படிப்புக்கு எதுவுமே சொல்லிக் கொடுக்கவில்லை
அவர்கள் பெறும் முட்டைகளில் நான் வெம்பிக் கொண்டாலும்
எனது தேசத்தின் குழந்தைகளின் உயிரின் விதைப்பில்
என்னை இழக்கிறேன்.

புரியாதவொரு புலத்தில் புலம்புகிறேன்
பெற்ற கல்வியில் தேசத்தின் விடிவைக் குறித்து நோகிறேன்
பெரிய கலைகள்,
பெரிய முறைமைகள்,
பெரிய தத்துவம் புரிந்த பொழுதுகள் ஏராளம்!
எனினும்,
என் மாதாவின் வயற்பரைப்பில் மரணத்தைக் கேட்கிறேன்
என் தேசத்தை நிர்மாணிக்கிற தேசத்துக் குழந்தைகளே,
போரிடுவென்று சொல்லேன்!!


கற்றுக் கொள்,
காலத்தை-நேரத்தை!
உனது தியாகம்
தேசத்தின் விடிவுக்கானதாவென்று
நீ
உணர்வதற்காய் கற்றுக்கொள்,கற்றுக்கொள்,
இன்னுமொருமுறை கற்றுக்கொள்!

நாயொன்று இருந்த இடத்திலிருந்து குரைத்தபடி
அது
எனது தேசத்தையும் குழந்தைகளையும் தின்னும் நோக்கில் குரைக்கிறது!
எனது கரங்களில் வலுவில்லை
கல்லெறிந்து வெருட்டுவது எனது நோக்கமில்லை
அதை மண்ணில் புதைப்பதே எனது நோக்கம்


நான்
வெறி பிடித்தவன்!
அறிவின் வெறி,
ஆணவமாய் இருக்காதெனினும்
அந்த வெறி
உலகத்தின் அறிதலை வெற்றி கொண்ட வெறி!!!


குரைக்கும் இழி நாய்
என் முன் மண்டியிடுவதல்ல என் நோக்கு!
அது கொண்ட அரசியலே
அழிவுக்கு வழி என் தேசத்துக் குழந்தைகளுக்கு,
இதை நீ
புரிக!


நிர்மாணம்.
06.12.2007

Dienstag, 27. November 2007

அண்டத்துள் துயிலுங்கள் ஆழ்ந்து!

அண்டத்துள்
துயிலுங்கள்
ஆழ்ந்து!


ல்லாம் கலைந்த பொழுதொன்றில்
நடுத்தெருவில் நிற்கும் ஒரு உணர்வு
அந்தத் தெருவோரம் ஏதோவொரு வருகைக்காக எவரெவரோ காத்திருப்பு
கடைசியில் எல்லாஞ் சிதைந்து
சாயம் வெளுத்த துணியாக எனது மனது

நிமிர்ந்து வானத்தைப் பார்க்கிறேன்
மழைமேகமிழந்த வெளியில் சூரியனின் வருகை தாமதமாக இருக்கிறது
கடுங் காற்று வீசுவதென்று நமது பெரியவர் சொல்வதும்
அந்தக் காற்றைத் தாம் அறிவதென்றும்
தம்மிடம் பெருங் காப்புக் கவசம் இருப்பதென்றும் வார்த்தையில் சொன்னார்

வட்டமிடும் கழுகுகள் அவர் குரலைத் தடுத்தன
அவை கக்கிய ஏதோவொரு பொருளால்
பெரு வெடியின் அதிர்வில் பேரண்டம் தோன்றியதாகவும்
அந்தப் பேரண்டம் இனியும் சுருங்கி வருவதாகவும்
விஞ்ஞானிகள் கூறிக் கொள்கிறார்கள்!

பழைய விலாசத்தில் பத்துப் பேர்கள், தலைகள் இருக்கலாம்
பாய் விரித்துப்படுக்க எண்பது மில்லியன் தமிழர்கள் எண்ணப்படலாம்
பாட்டு வாத்தியங்கள் இல்லாமல் பல்லவிகள் பாடப்படலாம்
பாருக்குள் நீதி இருப்பதாகச் சொல்வதில்தான் பரிதாபம் தெரிகிறது


புட்டுக் கொண்ட பேரவாப் புலம்பல்கள்
போருக்குள் மாண்ட இதயத்தின் விளிம்பில் இரக்கத்தைத்தான் கூட்டுகிறது!
எத்தனையோ பொழுதுகளில்
வீரத்திலிருந்து வான்முட்டும் கர்ஜனைகள்
வாய்ப் பந்தல் கதையாய் அந்த வானமும் சுருங்கி
தனக்குள் ஒடுங்கும் காலத்தின் எதிர்வு முகத்தில் ஓங்க
கண்ட இடமெல்லாம் தாண்டித் தயங்காத விஞ்ஞானத்திலும்
ஒரு கையை வைத்துச் சுவைத்தபோது
துரும்பைப் பிடித்தபடி ஆற்றிலிறங்கும் பெரியவர்

சர்வதேசத்துக்குள் இன்னும் நீதியைத் தேடி
நிலை பெற்ற பொழுதொன்றில் பொறிக்கிடங்கைக் கண்டபோது
பொறுப்புகள் பொங்கித் தாண்டவமாடுகிறதாம்
பொல்லாத பொழுதுகளும்
பொய்மைப் பேச்சுகளும்
வட்டத்தில் நிலை குத்தி
கொட்டத்தில் காட்டிய பேரெழிச்சித் தாண்டவமாய்த் தாண்ட
புதுவுலகச் சாம்பிராச்சியத்துள் நீட்டியுறங்குதாம் சமாதானப் புறா!

இருப்பிடமிழந்த தெருவோரத்து நாயாகிய எனது முகத்தில் சலிப்பு
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கத்தில் கனவுதரித்தாவது அந்தச் சுகத்தைத் தராதோவென்றொரு நப்பாசை
நாமிருக்கும் கோலத்தில் கூட்டிக் கழித்து
ஊதிப் பெருக்கி மடக்கி வகுப்பதைத் தவிர வேறென்ன செய்ய?

அண்டத்துள் துயிலுங்கள் ஆழ்ந்து
துன்பத்தில் நாமிருந்து
தூங்கித் தவிக்கும் பொழுதுகளிலாவது உங்கள்
புதிய வரவில்
பூத்துக் குலங்கும் தேசத்து விடியல்
எட்டுவதற்காகவேனும் இப்போது ஓய்ந்தெழுக!

நிர்மாணம்
27.11.2007

Sonntag, 25. November 2007

கிழக்கின் சுய நிர்ணயம் கொட்டும் கோடிகள்!

கிழக்கின்
சுயநிர்ணயம்
கொட்டும் கோடிகள்!


கேட்பாரின்றிக் கேணிகள்
விதைப்பாரின்றிக் காடாய் வயற்பரப்புகள்
வாத்தியாரின்றிப் பள்ளிகள்
வாழ்விழந்த ஏசு குருசு மரத்தில் தொங்கியபடி
தமிழ் தனித்தபடி தேசத்துள் விடுதலை தேடி...

எண்ணப்பட்ட தலைகளின் சரிவில்
மாவீரர் தினங்கள் வந்து போகும்
குருதிச் சேறு அப்பிய குழந்தை முகங்கள்
கொல்வதற்கேற்ற கூட்டுப் பிராத்தனை
தனித்த தேசம் சுய நிர்ணயம் தமிழீழம்!

பயங்கரவாதக் கதைப் புனைவில்
காலத்தை ஓட்டும் சிங்களக் கொடும் யுத்தம்
எக் காலத்துக்குமானவொரு தேசக் கதாநாயகர்
இவர்களுள் கையூட்டுப் பெற்றவர்களின்
பிரதேசக் கதாகலாட்ஷேபம்

காரியத்து மூளைக்குக் கதைக்க
ஒரு வடபகுதியும்,வன்னியும்
வாழ்விழந்தாகச் சொல்லவொரு கிழக்கும்
பெரும் பசைகள் வலுக்க வந்தது
இலண்டனுக்கும் பாரீசுக்கும்?

ஆரூ கண்டார்?
ஆட்களைக் கடத்தியவர்களுக்கு
நோட்டுக்களைக் கடத்தவா சுணக்கம்?
சும்மா சொல்லக் கூடாது
சுகமாய் இருக்க மக்களின் சோகம்
சொல்லிக் கொள்ளப்"புலிகளின்" அராஜகம்
வடக்கின் மேலாதிக்கம்!!

வண்டு திசை பார்த்துப் பூவொன்றில்
வயலும் வரப்பும் வாழ்வளித்த குறுங் குடில்
கிராமத்துக் குறுவாழ்வில்
குலைந்த சோகம்!

தெருவில் பொதியேந்தி
பொழுது படுவதற்குள் திரும்பும்
உழைத்தோய்ந்த முகங்கள்
சுழற்காற்றில் அள்ளப்பட்டது தெருவும்
தேசங்கொண்ட மனங்களும்

எங்கள் தெருவில் நாண்டுநிற்கும் நாவல்மரம்
எப்போதோ அழிந்தொதுங்கிய
நெட்டூரப்பொழுதின் வரவில்
வாழ்விழந்த மாதாவும் மெளனிக்க

இருப்பழியும் கரும் பொழுதொன்றில்
குருசு மரத்தடியில் சரியும் என்னுடலுக்கு
சாவு வந்ததாய்ச் சொல்வதற்கேனும்
என் கிராமத்தில் மனிதருண்டா?
இது"தமிழீழம்"கோசம் செய்த மோசம்?

நான் கனவுதரித்த கிராமம்
தின்னக் கொடுத்து வைக்காத உறவுகள்
பெருநாள் பொழுதொன்றில்
பெயர்த்தெறியப்பட்ட கிராமத்து இருப்பு

கருமேகம் பொழிய
காதல் வயலும் கதிர் முறிக்க
கால் வயிறு நிறைப்பாள் அன்னை
களித்திருப்போம் கஞ்சியில்
எனினும்,
கைக்கூலியாய் இருந்ததில்லைக்
களவும் செய்ததில்லை!

கோழித் "திருடனும்",
வாழைக் குலைக் "கள்ளனும்"
வாழ்வை விளக்குக் கம்பத்தில் தொலைக்கக்
கொலைஞர்கள் கூடிக் குலாவ
கோவணம் நிறைந்த கோடிகள்!

கொடுமை!
கொல்லைப் புறத்தில்
கன்னக் கோல் கொடும் பொழுதில்
கொலைகளை எண்ணக் கொம்யூட்டர்
"கிழக்கின் சுயநிர்ணயம்"
வழங்கும் வங்கிகள் நிறைய...

இப்போதெல்லாம் கிராமம் பட்ணத்தில்
சில்லறை கேட்டுத் தெருவில் தனித்தபடி
குற்றுயிர்கொண்ட குக் கிராமத்துத் திட நெஞ்சு
கூடின்றிக் குலையும்

வன்னியிலும்
பாரிசிலும் இலண்டனிலும்
குருதிதோய்ந்த வலுக்கரங்கள்
வட்டியில் வயிறு வளர்க்கும்
வாழ்விழந்தது வடக்கும் கிழக்கும்.


நிர்மாணம்.
24.11.2007

Freitag, 16. November 2007

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்!

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்!


நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!

"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்

மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்


எதற்காகவோ இருப்பழியும் காலம்
யானுளம் கலங்கி
யாவதும் அறியேன்
ஓதுவதற்கு ஒப்பாருமில்லை
ஒழிக என் கூதற் காலம்!

நெடும் புனல் நீக்கிய மறைப்பில்
துயிலிழந்த தெருவோரத்துக் கண்மாய்
பெரு நரிக்குக் கொண்டாட்டம்
துள்ளிக் குதிக்கும் மீனுக்கு அழிவு
இளநிலாக் காயும்
இருளாற் கவ்வும் இயக்கமும் அதுவாய்

எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்
எங்கேயும் கெந்தகப் புகையுண்ட குறை முகங்கள்
வல்லூறு வட்டமிட
ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது

பொன் திகழ் மேனியொடு பலர் தோன்றி
செங்கோல் காட்டிச் சொல்லிய கதைகளும் ஆறிய கஞ்சி
இருளிடை புகுந்த ஒளிமுதற் கடவன்
கோன்முறை வெடிபட வருபவர்
அடுபுலி அனையவர்
படுகடன் இது?

16.112007

Donnerstag, 1. November 2007

விதியே,விதியே விடுதலை செய்வாய் இவரை?

விதியே,
விதியே
விடுதலை செய்வாய் இவரை?

கைமுனுக்களும்
எல்லாளன்களும்
கதை பேசும்
ஒரு
உலாக் காலத்துக்காய்
இறக்கையிழந்தது தாய்க் கனவு

எல்லாளர்களினதும்
கைமுனுக்களினதும்
பழைய உறவுக்காய்
உதிர்ந்தொதுங்கும்
சில விடிவெள்ளிகள்

எதற்குமே
வீரம்,தீரம்
வியூகம் வகுத்து உருவேற்ற
"உலகத் தமிழர்களே"வணக்கம்!!

ஒரு தெரு விளக்கு
சோம்பல் முறிக்கும் இருண்ட பொழுதில்
கபாலம் பிளந்து,
கால் முறிந்து
கண்ணீரோடு களமாடியது ஈழம்

அரசர்கள்
அவிழ்த்துவிட்ட யுத்தவெளியில்
அரிசிக்கு அலையும் தாயொருத்தி!
அநுராதபுரக் காட்டுக்குள்
கண்ணீரோடு மனதை அனுப்பி
பெற்ற வயிறு பொங்க
பெயர் குறித்த படத்திற்குப் பூவெறிந்தபடி
சில கிழங்கள்...

துட்டக்கைமுனுவுக்கு
எல்லாளன் ஓலை எழுதும்
புதிய வரவில்
போனதென்னவோ
எவளோ வீன்றவுயிர்களெனச் சில முணுமுணுப்பு
தேசியத்துச் சூடடிப்பில்
எருமைக்கு இரக்கமில்லாச் சில கணங்கள்
எழுதிச் சொல்வார்
அந்த,இந்த விமானத்தில்
இருபது சரியாம்
தலைவரா-கொக்கா?


எவனுக்குத் தெரியும்
மரணத்தின் வலி?

கேட்டுப்பார்!

நோட்டுக் கணக்காய்
நீட்டிவைப்பார் வரலாறு
அங்கே விடுதலை
இங்கே விடுதலை உயிரிழந்தே
உருவுற்றதென்பார்

பிறகென்ன?

போய்ப் பார்,
களமாடும் பிஞ்சு விழியுள்
வாழ்வின் பிறப்புமிறப்பும் பிணையுந் தரணம்
இன்னொரு தளத்தில்
வெற்றிக் களிப்பும் சுவைப்பும்!
விதியே,விதியே
விடுதலை செய்வாய் இவரை???

Samstag, 20. Oktober 2007

"ஆயுதங்களைவிட ஆபத்தானது"துரோகி"என்ற கருத்தியல் தளமாகும்!"

சாத்திரிக்குப் போகும் மூத்திரம்: புலிக்குள் நிகழும் நடுக்கம்!


கேடுகெட்ட தமிழ்த் தேசியம்.இதுவரை காலமும் தாங்கள் சொல்வதே "தேசியம்-விடுதலை" என்ற அடக்குமுறை அராஜகத்தால் எத்தனையோ போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத்தள்ளிய புலிகள், இன்றுவரை தமிழ்மக்களின் நலனில் அக்கறை கொள்ளாது இருப்பதை உறுதிப்படுத்துபவன் இந்தச் சாத்திரி என்ற மூத்திரம்,அற்புதன் என்ற அலுக்கோசு-அரைப்பனி.

தமிழ் பேசும் மக்களின் நியாயமான சுய நிர்ணய விடுதலையை மரணப்படுக்கைக்கு தள்ளிய புலிகளின் கொலைகள், உலகப் பிரசித்தமானது.இவர்களால் மாற்றியக்கங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைவெறித் தொடர்ச்சியின் இன்னொரு வகையான அராஜகமே இன்றைய சேறடிப்புகள்-செல்லரித்துப்போன கோணங்கித்தனமான குதர்க்கங்கள்.இந்த மக்கள் விரோதிகள் எத்தனையெத்தனை இளம் போராளிகளைத் துரோகி சொல்லிப் போட்டுத் தள்ளினார்கள்?இவர்களைத் தவிர அனைத்து இயக்கங்களும் "துரோகிகளான"கதை நாம் அனைவரும் அறிந்ததே!இந்தக் கேவலமான சதியை இந்திய உளவுப்படையான ராவ் மூலம் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளின் முன்னணித் தலைவர்கள்-ஆலோசகர்கள் செய்து முடித்தபோது, நமது தேசத்தின் மிகப் பெரும் செல்வமான மனிதவளம் அழித்தொழிக்கப்பட்டது.

இன்று, இதே புரளியோடு புலிப்பினாமிகள் தலித்துவக் குரலை நசித்திடவும்,தம்மைத் தவிர வேறொரு அமைப்புப் பலம் பெற்றுவிடக் கூடாதென்ற பதவி-அதிகார வெறியால் தமிழ் மக்களில் கணிசமானவர்களைத் "துரோகி"யென்றழைத்து, எதிரிக்கு நமது விடுதலையை விலைபேசுவது மிகப் பெரும் சமூகக் குற்றமாகும்.இது நமது மக்களை இன்னும் அடிமை கொள்ளமுனையும்,இந்திய மற்றும் உலக-இலங்கைச் சிங்களக் கொடுங்கோன்மை அரசுகளுக்கு பலமான-சாதகமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவே நாம் இனம் காணவேண்டும்.

கருத்தியல் தளத்தில் ஒரு சிறு பொறிகூட மேலெழும்புவதை இந்தத் (வி)தேசியவாதச் சகதிகள் பொறுத்துக்கொள்ள முடியாது, இஞ்சி தின்ற குரங்காய் ஓடியாடித் திரிகிறார்கள்.தமது அதிகாரப் பீடத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக இவர்கள் செய்த-செய்யும் கொலைகளின்பின்னே கோரமாகக் கொட்டப்பட்ட அராஜகக் கருத்தியல்கள் நமது உரிமைகளுக்கு ஆப்பு வைத்த அதே பாணியில் தொடர்ந்து செயற்படும் புலிகளின் முகவர்கள்,இன்னும் எத்தனை பொய்களை உரைத்திடினும் ஒடுக்கப்படும் மக்கள் தமது அதிகாரத்துக்கான நியாயத்தை உயர்த்திப் பிடித்தபடி போர்க்கொடி தூக்குவது தொடரவே செய்யும்.ஒடுக்கு முறைகளுக்கெதிரான மனிதச் செயற்பாடானது எப்பவும் தனிநபர் சுதந்திரத்தைத் தூண்டியபடியேதான் நகர்வது.கடந்த காலத்தில் எத்தனையெத்தனை கொலைகள்தான்"துரோகி"சொல்லி நடந்தேறியது?இருந்தும் மக்களின் குரல்களை அடக்க முடிந்ததா?

மக்களின்மீதும்,அவர்களின் நலன்கள்மீதும் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்த முனையும் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தரணங்களில்,அந்த மக்களையே"துரோகி"என அழைத்து ஒடுக்கும் சூழ்நிலைகள், ஏலவே பற்பல நாடுகளின் சிறுபான்மை-பெரும்பான்மை இனங்களுக்குள் நடந்தேறியபோதும் புலிகளினது அரசியல்-அராஜகமே நம்மை இன்னும் கிலிகொள்ள வைப்பதாகும்.இவர்கள், தமிழ்பேசும் மக்களின் சிங்கள ஆளும்வர்க்க எதிரியைத் தொடர்ந்து நண்பராகவும்,எதிரியாகவும் சித்தரித்துத் தமது நலன்களைப் பெறுவதற்காகச் செய்யும் போராட்டத்துள் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்ட முழுமொத்த மக்களையும் எதிர் நிலைக்குத்தள்ளித் தமது கொலைக் கரத்தைத்"தேசிய விடுதலை"சொல்லி மறைப்பதற்கெடுக்கும் எல்லா வகைக் காரணிகளும் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானதாகத் திரும்புகிறது.

அன்று யாழ்ப்பாணத்திலிருந்த முழு மொத்த இஸ்லாமிய மக்களையே தமிழர்களுக்கு எதிரிகள்-சிங்களக் கைக்கூலிகளென வர்ணித்து,அவர்களின் பூர்வீக யாழ்மண்ணிலிருந்து வதைத்து வெருட்டியடித்த புலிகள்,இப்போது அதே கதையோடு தலித்துக்களின் வாழ்வோடு விளையாடுகிறார்கள்.இதற்காகத் தலித்துவ முன்னணியை,அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் பத்திரிகைகளை-இலக்கியகர்த்தாக்களை,மனித மேம்பாட்டாளர்களைச் சிங்கள இனவாத அரசின் கைக்கூலியாக வர்ணிக்கும் கயமையான அரசியலோடு, முழுமொத்தத் தமிழினத்துக்கே ஆப்பு வைத்துத் தமது அரசியல் ஆதிக்கத்தை-ஏக பிரதிநித்துவத்தை நிலைநாட்ட முனைகிறார்கள்.இதற்காக எவரையும் "துரோகி,கைக்கூலி"என்ற மிகக் கொடுரமான கருத்தியல் ஒடுக்குமுறைக்குள் தள்ளி,அவர்களை தொலைத்துக்கட்டுவதற்காக முனைகிறார்கள்.இதற்காகப் புலிகள்போடும் எச்சிலை உறிஞ்சும் சாத்திரிகள்,பூசாரிகள்,அற்புதன்கள் கட்டும் மடத்தனமான கருத்துக்கள் மிகவும் மலினப்பட்ட புலியின் நெட்டூரம் நிறைந்த அராஜகத்தையே நிலை நாட்டுகிறது.இது புலம் பெயர் சூழலில் மிகவும் ஆபத்தானது.மிகப் பெரும் அராஜகச் சூழலும்,கொலைக் கரமும்,மாற்றுக் கருத்துகளின் குரல்வளையை நெரிக்க முனையும் தரணமாகவே பார்க்கப்பட வேண்டும்.

இத்தகையவொரு வலிய-கொடிய அடக்குமுறை தமிழ் பேசும் மக்களின் உரிமையைச் சொல்லி அரங்கேறுகிற சந்தர்ப்பங்களில்,இன்னும் அதிகமான அப்பாவி மக்களின் உயிர்கள்"துரோகி"சொல்லிப் பறிக்கப்படும் அபாயம் நெருங்குகிறது.இதை ஏலவே செய்து இதுவரைத் தமது ஏகத் தலைமையைத் தக்க வைத்த புலிகள்,இனிமேலும் அதைத் தொடரவே முனைவர்.அதன் தொடர்ச்சியாகப் புலிகளின் பினாமிகளால், ஜனநாயக ரீதியாகச் செயற்படும் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல்-சேறடித்தல் முதல்கட்டமாக நடாத்தப்பட்டு,மக்களை மூளைச் சலவை செய்து,தாம் செய்யப்போகும் கொலைகளுக்கு மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராதிருப்பதற்கான முன்னெடுப்பே இந்தச் சாத்திரி,பூசாரிகள்,அற்புதன்களால் அள்ளிப் போடும் அவதூறுகள் என்பதில் நாம் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்.

இது,நமது குரல்வளையைமட்டும் நெரிப்பதில்லை.தமிழ் பேசும் முழு மொத்த மக்களையும் அடிமைப்படுத்த முனையும் சிங்கள இனவாத மற்றும் உலக அரசுகளுக்காக இவர்கள் கூலிக்குக் கொலை செய்யும் அமைப்பாகச் சிதைந்ததையே காட்டுகிறது.இத்தகைய அரசியலை விளங்குவதற்கு ரெலோ அமைப்புமீதும் மற்றும் ஏனைய தோழமைக் குழுக்கள்மீதும் புலிகள் நடாத்திய கொலைவெறியே சாட்சியாகும்.பல் வகை இயக்கங்கள் ஒன்றிணைந்து போராடும்போது,மக்களின் உரிமைகளைச் சிங்கள இனவாத அரசு ஏமாற்றிவிட முடியாது.ஆதலால்,இத்தகைய நோக்கிலிருந்து தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது அமைப்புக்களையும் நரவேட்டையாடும் ஒரு அமைப்பாகப் புலிகளை அன்னிய நலன்கள் வளர்தெடுத்து,இன்றுவரையும் அமைப்பு ரீதியாகவும்,இராணுவரீதியாகவும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உலாவவிட்டுள்ளார்கள்.இது தமிழ் பேசும் மக்களின் எந்த நியாயமான குரலையும்"துரோகி" என்றே குரைத்துக் குதறும்.இந்தக் குரைப்புக்கு சாத்திரிகளோ அல்லது பூசாரிகளோ அன்றி அற்புதன்களோ தலைமை தாங்குவதில்லை.புலிகளே நேரடியாக இவர்களைப் பயிற்றுவித்து வருகிறார்கள்.இது குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
"ஆயுதங்களைவிட ஆபத்தானது"துரோகி"என்ற கருத்தியல் தளமாகும்!"

நிர்மாணம்.

Freitag, 19. Oktober 2007

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு எச்சரிக்கை !

சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு எச்சரிக்கை !


வாசகர்களே,
திரு.சேனன் புலம் பெயர் சூழலுக்குள் மிக முக்கியமான
ஆய்வாளர்.
இவர் 90 களுக்குப் பின் பிரான்ஸ் வந்த கையோடு,புலம் பெயர் இலக்கியச்
சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்தவர்.
தற்போது இலண்டனில் தனது மேற்படிப்புக்காக
வாழ்ந்தாலும்,உலக நடப்பில் மிகவும் கவனம் செய்து
வருபவர்.
மார்க்சியம்,பின்நவீனத்துவம்,மானுடவியல்,

வரலாறு,மொழியியல்,பௌதிகம்,பொறியியல்,கணிதம் போன்ற
தளங்களில்
மிக ஆழ்ந்த புலமையுடைய இவர்,ஈழத்துச் சமுதாயத்துள் நிலவும் சாதிய
ஒடுக்குமுறைகள் குறித்துச் சில தரவுகளைச் சொல்கிறார்.
இதுள், இன்றுதேசிய
விடுதலைக்குப் போராடுவதாகச் சொல்லும் புலிகளின் முன்னணித் தலைவர்களே உயர்
வேளாளரோடு
சமரசம் செய்து,தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குழி தோண்டியதைத்
தோலுரிக்கிறார்.படித்துத்தான் பாருங்கள்.படித்து
விமர்சிப்பதை உங்களோடு
வைத்திராது எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.எதையும் கேள்விக்குட்படுத்துவோம்.அப்போது
உண்மையின் தரிசனம் ஓங்கி எம் முன் விரியும்.அது நம்மை நேரிய பாதைக்கிட்டுச்
செல்லும்-அற்புதமான அறிவு கூடும்போது
ஆராலும் தடுத்துவிட முடியாத போராட்டத்
திடம் தலித் மக்களின் விடுதலைக்கு உந்து சக்தியாகும்.-நிர்மாணம்.


இன்று சாதியம் பற்றி, குறிப்பாக
புலம்பெயர் சமுகத்திற்குள் சாதியம் பற்றி
பேசுவது பல்வேறு வகை கோபங்களை
கிளறும் என்பது தெரிந்ததே.
தமிழ் சமுதாயத்திற்குள் ஊறி
உறைபட்டுக்கிடக்கும் சில ஊத்தைகளை
பற்றி ஒருசொல் அங்க இங்க பேசப்படும்போது
உலகின் அனைத்து புனிதங்கிளினதும்
பெயரில் எதிர்ப்புக் கிளம்பி அடி விழுவது
வழமையாக நடக்கிறது. எங்காவது
மூலைக்கு மூலை முனகுபவர்கள் கூட
கூச்சப்பட்டு ஒதுங்கும்படி காழ்ப்போடு
ஒதுக்கப்படுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழ்
சமூகத்திற்குள்ளும் மேலாதிக்க (வர்க்க,
சாதிய) சிறுபான்மை செல்வாக்கு செலுத்தி
வருவதன் வெளிப்பாடே இது.
"இல்லாத கதை பேசி சும்மா தாமே
என்றிருக்கும் சமுதாயத்தையும் கெடுக்க
முற்படுகிறார்கள்", "இதென்ன புதுக்கதை",
"இப்படியும் நடக்குமோ?" "ஏன் தேவையில்லாம
பிரச்சினைகளை இழுக்கிறாய்?", என்ற
குரல்கள் முதற்கொண்டு, "வெளிநாட்டில
இந்தப்பிரச்சின இல்லை" என்று அடித்துக்கூறி
சூட்சுமமாக விதண்டாவாதம் செய்பவர்கள்
உட்பட அனைவரும் சுய சாதிய, வர்க்க
நலன்களுக்காக செயற்படுபவர்களாகவே
இருக்கிறார்கள்.

வெளியில் பயந்து பாசாங்கு காட்டும்
வெள்ளாள அறிவிலி மடச்சாம்பிரானிகளின்
ஆக்கினைகள் பல லண்டனில் நடந்து
வருகிறது.

உதாரணமாக "காரைநகர் நலன் புரிச் சங்கம்"
என்று இயங்கும் ஒரு அமைப்பை சொல்லலாம்.
இவ்வமைப்பு காரைநகர் மேலாதிக்க
வெள்ளாளரின் புகலிடமாக கடந்த 20-25 வருட
காலமாக இயங்கிவருகிறது. காரைநகரில்
அதிகம் வாழும் ஒடுக்கப்படும் சாதியினரை
புறக்கணிக்கும் இச்சங்க மேலாதிக்க
வெள்ளாளர் அப்படியே ஊர் மேலாதிக்க
பழக்கங்களை இங்கும் தொடர்கின்றனர்.
காரைநகர் சாதிய கொடுமைகளின்,
அதற்கு எதிரான போராட்டங்களின் களமாக
நீண்டகாலமாக இருந்து வருகிறது. காரைநகர்
தண்ணிப் பிரச்சினை இதற்கு ஒரு முக்கிய
காரனமாக இருந்து வந்திருக்கிறது. இது பற்றி
அறிவது இங்கிலாந்துக்கும் கடத்தப்பட்டு
இருக்கும் மேலாதிக்க நடவடிக்கைகளை
புரிந்துகொள்ள உதவும்.


காரைநகரில் அந்தந்த சாதியினர்
தமக்கென்றிருக்கும் கிணறுகளில் மட்டுமே
தண்ணி அள்ளுவது பழக்கத்தில் இருந்து
வருகிறது. இருப்பினும் பெரும்பான்மையான
நல்ல தண்ணிக் கிணறுகள் வெள்ளாளரின்
வயல்களிலேயே இருக்கின்ற காரணத்தால்,
அந்த வயல் கிணறுகளுக்கு ஒடுக்கப்படுப
வர்கள் தண்ணி எடுக்கச் செல்வது வழக்கம்.
இவர்கள் அங்கு தண்ணி பெற்றுக்கொள்ள
முடியுமே அன்றி தண்ணி அள்ள முடியாது.
குடங்களுடன் அங்குபோய் வரிசையில்
நின்றால் ஆதிக்க சாதியினர் முட்டாமல்
தட்டாமல் தண்ணி ஊத்தி விடுவினம்.
மற்றபடி, ஒடுக்கப்பட்டவர்கள் தண்ணி அள்ள
அங்கு அனுமதியி;லை. இதில் கேவலமான
விசயம் என்னவென்றால் இந்த கிணறுகளில்
பெரும்பாலானவை -அவை மேல்சாதியினரின்
வயல்களுக்குள் கிடந்தாலும்- அரசாங்கத்தால்
கட்டப்பட்டவை. இந்த பொதுக் கிணறுகள்
தங்கள் வயல்களுக்குள் கிடப்பதால்
வெள்ளாளர் அதைச்சுத்தி வேலிபோட்டு
சொந்தம் கொண்டாடுவது காரைநகரில்
அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதிகமான பிரச்சினைகள் வெடிப்பது
வறட்சிக்காலத்தில்தான். வெள்ளாளர் பெரிய
பெரிய பீப்பாய்களை கொண்டுவந்து வயல்
கிணறுகளில் தண்ணி அள்ளிக்கொண்டு
போய்விடுவார்கள். 60, 70 பேருக்கும் மேலாக
வரிசையில் நிற்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு
அவர்களாக இரக்கப்பட்டு ஊத்திவிட்டால்தான்
உண்டு. இத்தருணங்களில் சண்டைகள்
தொடங்கும்.
தண்ணி எடுக்கும் இடத்தில் நித்தமும்
நிகழும் சச்சரவுகள் மாதிரியன்றி இந்த
சண்டைகள் பெரிதாக வளரும்.

உதாரணமாக 1987ம் ஆண்டுஈஸ்ட்டர் மாதம்
ஏற்பட்டகொந்தளிப்பை சொல்லலாம்.
ஈஸ்ட்டர் காலம் ஒடுக்கப்பட்ட
பலகிறித்தவ மக்களின்முக்கிய காலம்.


காத்து காத்து நின்று பீப்பாய்களில்
தண்ணி போய் கிணறு வற்றும் போக்கு
பொறுக்க முடியாமல் ஒடுக்கப்பட்ட மக்கள்,
தண்ணி ஊத்தி விடும்படி காத்துக்கொண்டு
நிற்காமல் அள்ளிக் கொண்டுபோக வெடிச்சது
பிரச்சினை.

வெள்ளாளர் அல்லோல கல்லோலப்
பட்டினம். மற்றக் கிணறுகளில் தாரை ஊற்றி
தண்ணியை கெடுத்தினம். கிணத்தச் சுத்தி
முள்ளுக்கம்பி வேலிய கட்டிச்சினம். சனம்
அத புடுங்கிப் போட்டு தண்ணி எடுக்குது
என்று காவலுக்கும் ஆள் வைச்சினம்.
இவை முள்ளுக் கம்பி வேலிபோட்டு
காவலுக்கும் ஆள்வைச்ச இந்த கிணறுகளில்
பெரும்பான்மையானவை காரைநகர் கிராம
சபையால் கட்டப்பட்டவை. (காரைநகர்
கிராம சபையின் மேலாதிக்கமும், முன்னால்
எம்.பீ.(நாடாளுமன்ற உறுப்பினர்) தியாகராசா தண்ணியை டாங்கில ஏத்தி
லைன் போட்ட பின்னனிகளை அடுத்த
லண்டன் குரலில் பார்க்கலாம்).
இந்த பிரச்சினை கன இடங்களில்
வெடிச்சு பெரிதுபட்டுக்ககொண்டே போன
போது, திலீபன், குமரப்பா(புலிகளின் முன்னணித் தலைவர்கள்) என்று பலரும்
வந்து பெரிய கூட்டங்கள் வைக்க நேர்ந்தது.
"இதை முதன்மைப்படுத்த வேண்டாம்"
என்று சமாதானம் செய்ய வெளிக்கிட்ட
கதையும் இத்தருணத்திலேயே நிகழ்ந்தது.

தண்ணிக்கு வழியில்லாத பெரிய அடிப்படை
பிரச்சினையில் இருந்த மக்களிடம் வந்து
இந்த பிரச்சினையை - அடிப்படை
மனிதாபிமான பிரச்சினையை - பெரிதுபடுத்த
வேண்டாம். முதலில் நாட்டுப் பிரச்சினையை
பார்ப்பம் என்று கூட்டம் போட்டு கதைக்க
வெளிக்கிட்டதற்கு ஒடுக்கப்பட்டவர்கள்
மத்தியில் ஆதரவு இல்லாமல் போனது
ஆச்சரியமான விசயமில்லை.
இந்தமாதிரி பிரச்சினைகள் தொடர்ந்து
நடந்துகொண்டுதான் இருந்தது. இப்பொழுது
கூட பல பொதுக் கிணறுகளை சுத்தி
வேலிகட்டப்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு
ஆபுசு வீட்டுக் கிணத்தை சொல்லலாம்.

தற்சமயம் நேவிக்காரன் தண்ணியை
எடுத்துச் செல்வதால் மேலும் பற்றாக்குறை
ஏற்பட்டதால் வெளியில் இருந்து தண்ணி
கொண்டு வரவேண்டிய கட்டாயம்
ஏற்பட்டிருக்கு.

காரைநகர் நலன்புரி சங்கத்தார் தம்காசில்
வெளியில் இருந்து பௌhசரில் தண்ணி
கொண்டு வந்து சனத்துக்கு கொடுக்க பண
உதவி செய்கிறார்கள். அதற்கு ஆதாரமாக
வண்டியை தள்ளிக்கொண்டு நின்று படம்
எடுத்துக்கொண்டு வந்து லண்டனில் படம்
காட்டுகிறார்கள். தண்ணிக்கு வழியற்ற
சனத்துக்கு ஏதோ ஒரு வழியில் தண்ணி
கிடைப்பது சரிதான். இவர்களது "இரக்க
சுபாவத்தாலும், தருமத்தாலுமே" மக்களுக்கு
தண்ணி கிடைப்பதாக நிறுவ முயலும்
இவர்தம் மேலாதிக்க பாவனைகளைத்தான்
பொறுத்துக்கொள்ள முடியாது.

இதே நலன்புரிசங்க்ககாரர் பழைய
காரைநகர் தண்ணி பிரச்சினைகளில்
மும்முரமாக நின்றவர்கள். இன்று ஒடுக்கப்பட்ட
இடங்களுக்கும் தண்ணிகொடுப்பதாக இவர்கள்
காட்டும் பாவனை பழைய "கொடுக்கும்"
மேலான்மையை மீண்டும் நிறுவவே.
நேவிக்காரனால் உப்பாகிப்போன
கிணறுகளுக்கு மத்தியில் வாழும் மக்களுக்கு
20 ரூபாயோ சொச்சமோ கொடுத்து தண்ணி
கிடைப்பது பெருங்காரியம். இந்த நலன்புரி
சங்கம் இல்லாவிட்டால் இது நடக்குமோ என்று
கேட்பவர்கள் சிந்திச்சு பார்க்க வேண்டும்.
இவர்கள் தமது சொந்த காசை கொண்டுபோய்
இந்த வேலை செய்யவில்லை. இது சங்கக்
காசு. இந்த சங்கக் காசு பெரும்பாலும்
மேல்சாதியினரிடம் இருந்து வருகிற
காரணத்தால் மேலாதிக்கத்தை நிறுவும்
பணிகளுக்கே செல்கின்றன. உதாரணமாக
காரைநகர் இந்துக் கல்லூரிக்கு இக்காசு
போகிறது. இப்பாடசாலையில் கிட்டத்தட்ட
70 பதுகள் வரை பிற்படுத்தப்பட்ட சமூகத்து
மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்பும்
பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் அங்கு பணிபுரிய
முடியாத நிலையே அங்கு நிலவி வருகிறது.
முன்பு இப்பாடசாலை அதிபராக வரவேண்டிய
டானியல் மாஸ்டருக்கு நடந்த பிரச்சினைகளை
காரைநகர் வாசிகள் அறிவர். இவரின் கலகம்
தாங்க முடியாமல் வேறு வழியின்றி காரை
சுந்தரம்பிள்ளையை அதிபராக போட்டு
கூட்டணியினர் தப்பிக்கொள்ள முயன்ற
கதையும் தெரியும். சுருக்கம் காரணமாக
இதுபற்றி இங்கு விபரிக்கவில்லை ஆனால்
நிச்சயமாக பின்பு பார்ப்போம். அதுமட்டுமின்றி
இன்றைக்கு அங்கு தொடரும் மேலாதிக்க
ஒடுக்குமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக
லண்டன் குரலில் வெளிக்கொண்டு வருவோம்
என்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.


போதாக்குறைக்கு காரைநகர் இந்துக்
கல்லூரியில் வேலை செய்யும் பல
ஆசிரியர்கள் நலன்புரி சங்கத்தாரின்
உறவினர்களாகவோ, நண்பர்களாகவோ
இருக்கிறார்கள். இந்த இந்துக் கல்லூரி இன்று
மேலாதிக்க எம் பி தியாகராசாவின் பெயரால்
அழைக்கப்படுகிறது. இந்த தியாகராசாவின்
மருமகன்தான் காரை நலன்புரிசங்கத்தின்
செயலாளராக கடந்த 25 வருடங்களாக
இருகக்கிறார். இவரது தகப்பனார் சபாபதிப்பிள்ளை
எதுவித அரசியல்அடிப்டையுமற்று கட்சிக்கு
கட்சி தாவி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
எதிராக இயங்கியது பலரும் அறிந்ததே.
கிட்டத்தட்ட சங்கம் தொடங்கிய காலம்
தொட்டு இன்றுவரை சங்கத்தை தங்கள்
சொந்த குடும்பச் சங்கமாக நடத்தி வரும்
களபூமிக்காரரின் சாதித் தடிப்பு இன்று
அச்சங்கத்தை ஏறத்தாள சாதிச்சங்கமாக
மாற்றிவிட்டிருக்கு. பிறகேன் "காரைநகர்"
பேரை இழுப்பான் என்று தெரியவில்லை.
சும்மா வெள்ளாளர் நலன்புரிசங்கம், அல்லது
களபூமியர் நலன்புரி சங்கம் என்று வைத்துக்
கொண்டிருந்திருக்கலாம்.

சமீப காலங்களில் அகதியாக ஓடி
வந்தவர்கள் போலன்றி இவர்கள் லண்டனில்
நன்றாக கால் ஊண்றியவர்கள். அவர்களிடம்
தாராளமாக இருக்கும் நேரமும் வசதியும்
காரணமாக "சமூகசேவை", "சங்கம்"
என்று ஓடித்திரிய அவர்களாள் முடிகிறது.
தங்களின் சுய திருப்திக்காக சங்கங்கள்
கட்டும் பல்வேறு வசதியானவர்களில்,
கார்நகர் நலன்புரிசங்கத்தின் சாதிய தடிப்பு
ஓங்கியிருப்பதால், அதில் ஒரு நல்ல
சூடுபோட வேண்டியது எமது கடைமையாக
இருக்கிறது.

இந்த வருடம் அண்மையில் நடந்த
இச்சங்கத்தின் ஒரு கமிட்டி கூட்டத்தில்
அச்சங்கத்தின் உபதலைவர் கோணேசலிங்கம்
ஒடுக்கப்பட்ட காரைநகர்வாசி ஒருவர்மேல்
காழ்ப்பு காட்டி, இவர்களையெல்லாம்
இச்சங்கத்துக்குள் கொண்டுவர வேண்டாம்
என்று மிரட்டியது பலரதும் கோபத்தை
கிளறிவிட்டுள்ளது. இதை கண்டும்
கானாமல் இருந்தவர்கள், இது தொடர்பாக
அதிருப்தியடைந்தவர்கள், பிரிந்து சென்று
இன்னுமொரு சங்கம் கட்டியுள்ளவர்களின்
கருத்துக்கள் முதலான மேலதிக செய்திகளை
அடுத்த லண்டன் குரலில் படிக்கவும்.


-சேனன்.

தலித் சிறப்பிதழிலிருந்து நன்றியோடு மீள் பதிவிடுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு துணிவான தலைமை கொடுக்க முடிந்தது.

சாதியப் போராட்டம் சில நினைவுகள்



(தோழர். சண்முகதாசன் அவர்கள்
எழுதிய 'ஒரு கம்யுனிசப் போராளியின்
அரசியல்
நினைவுகள்' என்னும் நூலில்
சாதீயப் போராட்டம் பற்றி அவர்
குறிப்பிட்ட
கருத்துக்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.)


சாதி அமைப்பு என்பது இலங்கை
முழுவதிலும் சிங்களவர், தமிழர் இருசாரார்
மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால்
வடக்கில் உள்ள தமிழர்களைப் பொறுத்த
வரையில் இதனுடன் தீண்டாமை என்ற
நாசமும் சேர்ந்து இருக்கின்றது. அங்கு
சில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக
கருதப்படுகின்றன. ஆவர்கள் மனிதர்களாகவே
கருதப்படவில்லை. சமுதாயத்தின் கீழ்தட்டில்
அவர்கள் கிடந்து நசிகின்றார்கள். ஆவர்கள்
உயர் சாதியினரின் வீடுகளுக்குள் செல்ல
முடியாது. அவர்களுடன் ஒன்றாக கலந்து
பழக முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுடன்
கலந்து திருமணம் செய்து கொள்வது
என்ற பேச்சுக்கே இடமில்லை. தாழ்த்தப்பட்ட
மக்கள் பொதுக் கிணறுகளில் இருந்து
தண்ணீர் அள்ள முடியாது. ஒரே கிண்ணத்தில்
தேநீர் பருக முடியாது. மிகவும் மோசமானது
என்னவென்றால் கடவுளைக் கும்பிடக்கூட
கோயிலுக்குள் அவர்கள் செல்ல முடியாது.
தீண்டாமை என்பது மனிதன் மனிதனுக்குச்
செய்யும் மிக மோசமான கொடுமை என்று
உண்மையில் கூறமுடியும்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள்
இச்சாதீய அடக்குமுறைக் கொடுமைகளுக்கு
எதிராக திரண்டெழுந்து பல கிளர்ச்சிகளை
மேற்கொண்டார்கள். ஆனால் இவை
கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டன.
சாதி அடக்குமுறைகள் சிலவற்றின்
காட்டுமிராண்டித்தனத்தை உண்மையில் நம்ப
முடியாது. கிளர்ச்சி செய்யத் துணிந்த
தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள் உடனே
தீக்கிரையாக்கப்பட்டன. அவர்களுடைய
கிணறுகளில் நஞ்சு ஊற்றப்பட்டது.
காணிகளில் இருந்து அவர்கள் துரத்திக்
கலைக்கப்பட்டனர். (தீண்டத்தகாதவர்களுக்கு
பெரும்பாலும் சொந்தமாக காணி இருக்க
வில்லை). மார்புக்கு மேல் மறைக்கத்
துணிந்த தாழ்த்தப்பட்ட பெண்களின்
சட்டைகள் கத்தியால் கிழித்தெறியப்பட்டன.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்கள்
தோளில் சால்வை போட அனுமதிக்கப்பட
வில்லை. சால்வை போட்டால் உயர்
சாதியினihக் கண்டதும் அவர்கள் அதனை
அகற்ற வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகளின் திரிபுவாதம்
சீர்திருத்தவாதம் ஆகியவற்றால்தான் இந்த
மிருகத்தனமான சமூக ஒழுங்கிற்கு எதிரான
போராட்டம் சரியாக நடத்தப்படவில்லை.
உயர் சாதியினர் மக்கள் தொகையில்
பெரும்பான்மையாக இருக்கின்றபடியால்
எந்தப் பாராளுமன்றக் கட்சியும் அவர்களைப்
பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்த
நிலைமை எமது மார்க்சிய - லெனிய
கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன்
மாறியது. எமது கட்சி பாராளுமன்றத்தின்
மூலம் சோசலிசத்தை அடையலாம் என்ற
கருத்தை நிராகரித்தது. பாராளுமன்ற
திரிபுவாதம் என்ற சகதியில் அதன் தலை
புதைந்து இருக்கும் வரை ஒரு கட்சி எந்த
வெகுஜனப் போராட்டத்திற்கும் வெற்றிகரமாக
தலைமை தாங்க முடியாது என்பதை
எவரும் இலேசாகப் புரிந்து கொள்வார்கள்.

Mao and N. Shanmugathasan

பாராளுமன்ற சந்தர்பவாதம் என்ற திரிபுவாத
தளையில் இருந்து விடுபட்ட நாம்
தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு
துணிவான தலைமை கொடுக்க முடிந்தது.
1966ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம் திகதி
சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும்
எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட்
கட்சியின் தலைமையில், சுன்னாகத்தில்
இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு
வெகுஜன ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை
ஒழுங்குபடுத்தியது. முற்றவெளியில்
இந்த இயக்கத்தின் நோக்கங்களுக்கு
ஆதரவாக ஒரு பொதுக்கூட்டம் நடைபெற
இருந்தது.

பொலிசார் ஊர்வலத்தை
தடுத்து நிறுத்தினார்கள். பொலிசார்
எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்களின்
எந்த இயக்கத்தையும் நசுக்கினார்கள்
என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். இதற்குக்
காரணம் பொலிசாரும் உயர் சாதியினர்
என்பதே. ஆனால் ஊர்வலக்காரர்கள்
கலைய மறுத்தார்கள். இறுதியில் ஒரு
வரிசையில் யாழ்ப்பாணம் செல்ல பொலிசார்
அவர்களை அனுமதிக்க வேண்டியதாயிற்று.
முற்ற வெளியில் மிகுதியும் வெற்றிகரமான
கூட்டம் ஒன்றை நாம் நடத்தினோம். இக்
கூட்டத்தில்தான் புகழ் பெற்ற அமெரிக்க
நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு
அவருடைய சகோதரர் கூறிய புத்திமதியை
நான் மேற்கோள் காட்டினேன். "ஒருபோதும்
அடிபணிந்து போகாதே. ஏதிர்த்து நின்று
அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக
அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும்
விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்."


சாதி அடக்குமுறைக்கும் தீண்டாமைக்கும்
எதிரான இயக்கம் சில வெற்றிகளைப்
பெற்றது. பல ஆலயங்கள் திறக்கப்பட்டன.
பல இடங்களில் தேநீர் கடைகளில்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி
கிடைத்தது. மாவிட்டபுரம் கோயிலுக்குள்
பிரவேசிப்பதற்கான போராட்டம் இவற்றில்
முக்கியமானது. யுhழ்ப்பாணத்தில் உள்ள
இந்த பிரசித்தி பெற்ற கோயிலுக்குள்
தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதைத்
தடுக்க உயர்சாதியினர் அழுங்குப் பிடியாக
நின்றார்கள். ஆவர்கள் இந்த ஆலயத்தின்
உள் மண்டபத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்
கம்பிகள் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களை
தடுத்து நிறுத்தும் அளவிற்குச் சென்றார்கள்.
கொஞ்சக் காலம் அவர்கள் ஆலயத்தை மூடி
வைத்திருந்தார்கள். ஆனால் உயர் வருமானம்
பெறும் இந்த ஆலயத்தை அவர்கள் நீண்ட
காலம் பூட்டி வைக்க முடியவில்லை.
இறுதியில் மக்கள் நெருக்கத்தினாலும்
நேரடிப் பேராட்டத்தினாலும் இந்த ஆலயத்தின்
கதவுகள் திறக்கப்பட்டன.


தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த
போராட்டத்திற்கு ஆதரவாகப் பல வடிவக்
கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன
என்பதைக் குறிப்பிட வேண்டும். அற்புதமான
பாடல்கள் பல தோன்றின. நூற்றுக்கு
மேலான தடவை அரங்கேற்றப்பட்ட கந்தன்
கருணை என்ற சிறப்பான நாடகம் ஒன்றை
எமது தோழர்கள் தயாரித்தளித்தார்கள்.
உயர்சாதியினர் இந்த நாடகத்தை
எதிர்த்தார்கள். இந்த நாடகம் பெரும்
வெற்றியாகியது. கொழும்பில் கூட அது
பல தடவை அரங்கேற்றப்பட்டது. புரட்சிகர
கலை எப்படி பரட்சிகர இயக்கத்தை
முன்தள்ளிவிட முடியும் என்பதற்கு அது
நல்லதோர் உதாரணம் ஆகும்.

புரட்சிகரநடைமுறையின்றி புரட்சிகர கலை பிறக்காது
என்பதையும் அது தெளிவாக்கியது.
நடைமுறைதான் பிரதானமானது. ஆனால்
புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும்
புரட்சிகர கலை புரட்சிகர இயக்கத்தை
மேலும் முன்தள்ளிவிட உதவுகின்றது.
சூன்யத்தில் நாம் புரட்சிகர கலையை
உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின்
அங்கமாக அது உருவாகின்றது.
சாதி அமைபபு; முறைககும தீண்டாமைக்கும்
எதிரான எமது கட்சியின் இயக்கம் அதன்
மாபெரும் சாதனைகளில் ஒன்றாகும்.
ஆதனைஒட்டி நாம் என்றும் பெருமைப்படுவோம்.


அது வடக்கு இலங்கையில் உள்ளுர்
நிலைமைகளுககு; ஏறப் மாhக் ச் pய-லெனியதi; த
பிரயோகம் செய்ததாகும். இதனால்
ஆயிரக்கணக்கானோர் புரட்சிப் பாதைக்கு
வந்தார்கள். சகல பகுதி மக்கள் மத்தியிலும்
(வடக்கிலும் தெற்கிலும்) இதனால் கட்சியின்
செல்வாக்கு பரவியது. யாழ்ப்பாணத்தில்
தாழ்த்தப்பட்ட சாதியில் கணிசமான
தொகையினர் தொழிலாளர் வர்க்கத்தைச்
சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற் கொள்ள
வேண்டிய விடயமாகும். உழவர்களும்
உழைப்பாளிகளும் அவர்கள்தான்.


அவர்கள் உடல்ரீதியிலும் பலமானவர்கள்.
இதனால்தான் யாழ்ப்பாணத்தில் எமது
கட்சி ஒழுங்குபடுத்திய எமது கூட்டத்தை
எவராலும் குழப்ப முடியவில்லை. இந்த
நம்பிக்கையில்தான் நான் பின்னர்
1975இல் சுன்னாகம் சந்தைக்கு முன்னால்
பொது மேடையில் மானிப்பாய் தொகுதி
தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
தருமலிங்கத்துடன் பகிரங்க விவாதம்
நடத்தினேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள்
தொகையில் கூடுதலானவர்கள். ஆனால்
எம்மை யாரும் தொட்டுவிடமுடியாது.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பலர்
எம்முடன் இருந்ததுதான் எமக்குக் கிடைத்த
பாதுகாப்பாகும்.



நன்றி தலித் சிறப்பிதழ்

தமிழ்ச் சமூகம் மாபியா போன்ற வெள்ளாள சமூகத்தினரால் கட்டுப்படுத்தப்படுகிறது!!!

தமிழரின் ஒற்றைப்பரிமாணம் ?

-பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்


ஒரு புறத்தில் சாதி என்பது கற்பனை எனக் கூறிக் கொண்டு மறு புறத்தில் அவர்களைக் கீழே அமுக்கி வைக்க முடியாததால் போலியான விதத்தில் வெள்ளாளர்களாக உயர்த்தி வைப்பதன் மூலம் சாதியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களாகிய நாம் ஒற்றைப் பரிமாணம் கொண்டவர்களாக என்றும் இருந்ததும் இல்லை. இருப்போம் என்பதும் சந்தேகமே. இது மனித சமூகத்தின் இயல்பு நிலை சம்பந்தப்பட்டது. சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம். அவர்களே இலங்கையை ஆள்கிறார்கள். முக்கியமான முடிவுகளின் வெளிப்பாடுகளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இவை எமது உறவு சம்பந்தப்பட்டவை என்பதை அவர்களும், தமிழர்களாகிய நாமும் அறிவோம். இவர்கள் ஏன் போராடுகிறார்கள்? என பல சிங்களக் கல்விமான்கள் அடிக்கடி ஆச்சரியத்துடன் கேட்பார்கள். புலிகளின் தோற்றத்தின் பின்னரே தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக பல சிங்கள கல்விமான்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

அவர்களைப் பொறுத்தவரையில் தமது ஆட்சி யாளர்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கடந்த காலங்களில் தமிழர்களை நன்கு நடத்தி இருப்பதாகவே கருதுகின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையர்கள் பலரும் தமது ஆட்சியாளர்கள் கறுப்பர்களை நன்கு நடத்தியதாகவே நம்பினார்கள். தமது குடியேற்ற ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு தாம் சிறந்த நாகரிகத்தைப் போதித்ததாக பிரித்தானியர்கள் நம்பினார்கள்.
இதேபோன்று தமது நுகத்தடியில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுமைகளோடு வாழ்வதாக தமிழ் ஆட்சியாளர்கள் எப்போதாவது உணர்ந்தார்களா? அதற்கான சாத்தியமுண்டா?


தமிழ்ச் சமூகம் மாபியா போன்ற வெள்ளாள சமூகத்தினரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை மிகவும் ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகிறேன். புலிகளின் தலைமை அச்சமூகத்தைச் சார்ந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் அறிவுத்தளம் வெள்ளாள சமூகத்திடம் தான் உள்ளது. றோமன் கத்தோலிக்கரும், கரையோர மக்களும் கீழ்ச் சாதியினர் என நியூயோர்க் இலங்கைத் தமிழ்ச் சங்கம் தனது வெளியீட்டில் தெரிவித்திருந்தது.

Prof.Dr.Ratnajeevan H.


தற்போது வல்வெட்டித்துறையில் வாழும் மக்களை உயர்ந்த அரச வம்ச சாதியாகக் காட்டும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. தலைமைத்துவத்தை அங்கீகரிக்கு முன் சாதியை உயர்ந்த அந்தஸ்திற்கு எடுத்துச் செல்வது அவசியத் தேவையாகியுள்ளது. நாவலரை உயர்ந்த இந்துவாக உயர்தியதன் பின்னரே அவர் மொழிபெயர்த்த பைபிளின் சிறப்பு விபரிக்கப்பட்டது. உயர்ந்த சாதியினரால்தான் உயர்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் என்பதை நிருபித்த பின்னரே பாலசிங்கம் மாமனிதராக்கப்பட்டார். இது வெள்ளாள சமூகத்தினரால் ஈழப் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் தத்துவார்த்த விளக்கங்களாகும். போராட்டத்தில் இறப்பவர்களுக்கு ஓர் சமூக அந்தஸ்தினை வழங்க எடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடாகும்.

புலிகளில் வெள்ளாளர் அல்லாதோர் உள்ளனர். அவர்கள் அதிகாரத்தின் உச்சநிலையில் உள்ளார் கள் என்பதும் உண்மையே. முதலில் உயர் சாதியர் யார்? என்பதனை விளக்கினால் மட்டுமே அதிகாரத்தில் இருப்பவரை அங்கீகரிப்பது நியாயப் படுத்தப்பட முடியும். அதுவரை இவை தொடரும். இன்னும் இரண்டு தலைமுறை சென்றால் அவர்களும் வெள்ளாளர் அல்லது சைத்திரியர் ஆகிவிடுவர்.


கடந்த 2007 ஆகஸ்ட் 6ம் திகதி புலிகளின் tamilnet என்ற இணையத் தளத்தில் பறையர் சமூகத்தினர் என்போர் தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் மிகவும் சிறப்பு மிக்க வழித் தோன்றல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணையத் தளத்தின் ஆசிரியர்களை பறையர்கள் என அழைத்தால் மகிழ்ச்சி அடைவார்களா என்பது சந்தேகமே. இதுவே வெள்ளாள சமூகத்தின் போலித்தனமாகும். ஒரு புறத்தில் சாதி என்பது கற்பனை எனக் கூறிக் கொண்டு மறு புறத்தில் அவர்களைக் கீழே அமுக்கி வைக்க முடியாததால் போலியான விதத்தில் வெள்ளாளர்களாக உயர்த்தி வைப்பதன் மூலம் சாதியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அமுக்கி வைக்க முடியாவிடில் தெரிவு செய்து தமது மட்டத்தில் தற்காலிகமாக வைத்திருத்தலாகும்.


வெள்ளாள சாதியினரின் அதிகார முன்னிலைப் படுத்தலும், மேற்குலக நாடுகளில் புதிதாகத் தோன்றியள்ள பணக்கார வர்க்கமும் இணைந்து புதிய தொழிலில் செயற்படுகின்றன. இவர்கள் அவர்களது குடும்ப வரலாறுகளுக்கு புதிய விளக்கம் அளிக்கின்றனர். பழைய அரசர்களின் காலத்திற்குச்; சென்று ஆதாரங்களைத் திரட்டி விளக்கம் அளிக்கின்றனர். பண்பாடான கலாச்சாரத் தினை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கொண்டிராத பலர் சிறந்த பண்பாட்டு குடும்ப மரத்தின் வாரிசுகளாக விபரிக்கப்படும் வரலாறுகள் தற்போது எழுதப்படுகின்றன. றோமன் கத்தோலிக்கர் என்போர் கீழ் சாதியர் என வர்ணித்த தமிழ்ச் சங்கம் வெளிநாட்டில் வாழும் இன்னொரு றோமன் கத்தோலிக்க குடும்பத்தினரை ஆரிய சக்கரவர்த்தியின் வழித்தோன்றலாக வர்ணித்து எழுதியுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி இவ்வாறான மடத்தனமான சமூகப் பிரக்ஞையே இல்லாத வெளிநாட்டுத் தமிழர்களின் கையில் சிக்கிச் சீரழிவது நம்பகரமானதாக அமையுமா?

ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் புலிகளின் ஆலோசனையாளர்கள் என அழைக்கப்படுவோர் பலரும் வெள்ளாளர்களே. இந்த உண்மையை இவர்களால் மறைக்க முடியாது. சட்ட ஆலோசகர்களாக பேச்சு வார்த்தைக்குச் சென்றவர்கள் வெள்ளாளர் அல்லாதோர் என்ன செய்யவேண்டுமெனக் கூறுவார்கள். இவர்கள் ஒரு காலத்தில் எதிரிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள். இவர்கள் வெள்ளாள குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதை விட தாம் அவ்வாறான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனக் கூறியே வாழ்ந்த பின்னணியைக் கொண்டவர்கள்.

இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம். தமிழ் தலைமையைப் பார்ப்போம். யாழ்ப்பாணத் தலைமையினால் சகல தமிழரையும் முன்னெடுத்துச் செல்ல முடியுமா? எமது கடந்த கால தமிழ்த் தலைமைகள் ஏன் மக்களால் தோற்கடிக்கப்படார்கள் எனபதை இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் சிங்களத் தலைமை அவதிப்படுவது போல் இன்றைய தமிழ்த் தலைமைகளால்; தொடர்ந்து செல்ல முடியுமா? கிழக்கு மாகாண மக்களின் கணிசமான ஆதரவு இல்லாமல் கருணாவால் இவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியுமா? என கிழக்குப் பல்கலைக்கழக கல்விமான்களால் உறுதிபடக் கூற முடியவில்லை. மண்ணுக்குள் தலையைப் புதைத்து வைத்துக் கொண்டு நீண்ட காலம் இந்த உண்மையை மறைக்க முடியாது.

சிங்கள ஒடுக்குமுறையிலிருந்தும், விஸ்தரிப்பில் இருந்தும் வௌ;வேறு குழுக்களாக உள்ள மக்கள் வௌ;வேறு விதங்களில் போராடி வருகின்றனர். கிழக்கு மாகாண மக்கள் யாழ். மேலாதிக்கத்தில் இருந்தும் தம்மை விடுவிக்க முயற்சிக்கின்றனர். கீழ்சாதி மக்கள் வெள்ளாள அதிக்கத்திலிருந்து விடுதலை பெற போராடுகின்றனர். சிங்கள, தமிழ் மேலாதிக்கத்திற்கு இடையில் நசுங்கியுள்ள முஸ்லீம் மக்கள் தம்மை விடுவிக்கப் போராடுகின்றனர். தமிழ் புரட்டஸ்தாந்து சமூகத்தினர் இன்றுள்ள புதிய ஒழுங்கிலிருந்தும் தம்மை விடுவிக்க அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். மேற்கு நாடுகளில் தம்முடைய ஸ்தானத்தைப் பலப்படுத்துவதும் ஒரு போராட்டம்தான்.




முஸ்லீம் மக்கள் சம்பந்தப்பட்ட எமது பிரச்சாரத்தைப் பார்ப்போம். 27 சதவீதமான தமிழர்கள் வாழ்வதாக சேர். பொன். இராமநாதன் முஸ்லீம் மக்களையும் தமிழ் பேசும் மக்கள் எனக் கூறி இணைத்தார். சேர். ராசிக் பரீத், மற்றும் முஸ்லீம் தலைவர்கள் தம்மைத் தமிழர்கள் என அழைப்பதை விரும்பவில்லை. தமிழரசுக் கட்சி ஒரு வகையில் பாலமாகச் செயற்பட்டு அவர்களது வாக்குகளையும் பெற்றது. எம்மோடு வாழத் தகுதி அற்றவர்கள் என்பதால் அவர்கள் துரத்தப்பட்டதால் இவை யாவும் தற்போது பூச்சியத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில் நாம் மொத்த தமிழ் மக்களுக்காகவும் பேசத் தகுதி உள்ளவர்களா?

70 களில் மலையக மக்களை வன்னியில் வந்து குடியேறுமாறு உற்சாகப்படுத்தப்பட்டது. இதனால் இவர்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே பாதுகாப்பு கேடயமாக இருப்பார்கள் எனக் கருதினார்கள். மலையத்திலிருந்த பிச்சைக்காரர்கள் யாழ்ப்பாண நகரத்திற்கு வந்தபோது எமது சகோதர வாஞ்சை வேறு விதமாக இருந்தது.தமிழ்பேசும் மக்களின் போராட்டம் என்பது மிகவும் விசாலமானது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக போராடுவது என்பது சகல சிறுபான்மையினரினதும் ஆதங்கங்களின் கூட்டாக இருத்தல் வேண்டும்.


P/S:துப்பாக்கி நிழலில் தூங்குவதாக நடிக்கும் சாதியமைப்பை "தமிழீழத்தில்"அறிந்து,கருத்தாட இதையும் படியுங்கள்:தேசத்தில் தலித் சிறப்பிதழ்


நன்றி:தேசத்தில் தலித் சிறப்பிதழ்

Samstag, 6. Oktober 2007

காமனை வென்றகண் ஆரை உகப்பது?

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?


காமத்துக் கொட்டகையிலொரு
சூத்திரக் கனவு
கவித்துவமாக
கனிப் பறிப்பதற்கும்
புசிப்பதற்கும்
பக்குவங்கள் சில பாடங்களாய்...



பாய்(மெத்தை) விரித்தலென்னவோ
"ஏடங்கை நங்கை
இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம்
விரும்புவெண் தாமரை
பாடும் திருமுறை
பார்ப்பனி பாதங்கள்
சூடும்என் சென்னி..."அவளை நொந்து

(...) பாதம் தாங்கிய தலையின்
பின்னிரவுக் கனவின் கடுப்பில்
ஓரவாயுள் உவர்ப்பாய் ஊறிய
ஒரு யுகக் கனவு

அடுப்பில் எரியும்
பட்டமரத்துக் கட்டையாக
விரும்பு என்(அவள்) செந்தாமரையும்
விட்டது மூச்சு
அப்போது,

"எட்டுத் திசையும்
அடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரைஅனல்
மாநிலம் ஆகாசம்
பொடியுரியுங் காலத்துப் பொய்வெளிதனிலும்
பொய்யாக் கனவு புணரும் பொழுது
மெய்யா முடக்கு வாதமொன்று
ஒட்டி உயிர் நிலை
என்னும்இக் காயப்பை
பெருங்காய டப்பாவுக்கும்
பெருமையிலாப் (எதிர்ப் )பால் வினையுங்
கட்டி அவிழ்கின்ற
கண்ணுதல் காணுமே!"

அக்காப் பாட்டும்
பக்காப் பொருளும்
பல்லுப் படரும்
சொல்லும் அவிழ்க்கும்
சுகம் ஒன்று
சொறி நாய்ச் சிரங்காய்ச் சொறியும் எங்குமெதிலும்

ஏடங்கை நங்கை
உடலெங்கும் தேடும் படிகம்
எடுப்பதும் சுவைப்பதும்
சொல்லிப் புரியாச் சுகம்
வில்லுக்கு விஜயன்
மல்லுக்கு நான் வீமன்
வாளுக்கு என் தோழன்
முக்காலமும் உணரும் பெருவெளிப் பாதையொன்றில்
வீழ்ந்தேன் பெருவினையால்

"உடலாய் உயிராய்
உலகம தாகிக்
கடலாய் கார்முகில்
நீர்பொழி வானாய்
முக்காலப் பருவப்பயல்கள்
பாவியாகப் போகவும் துணியும்
விரும்பு செந்தாமரை விடியும்
விரியும் குவியும்
வியர்க்கும் விழிக்கும்
இடையாய் உலப்பிலி!"

அறியாப் பொருளாய் அமர்த்திய
விடலைப் பருப்பு அவியாப் பொழுதில்
எடுப்புப் பற்றிய இடுப்புச் சுகத்துள்
அடையார் பெருவிழி
அண்ணலாய் நானும் நின்றேனே நிமிர்ந்து!

சிற்றிடைச் சீமைச் சிற்பவலையுள்
செருகும் தலையுந் தொலைய
முறியும் கனவும்
கவிழ்த்த ஆண்மையுங் கரைய
கடுப்பாய் உலரும் உதட்டில்
வெளுப்பாய் மறையும் ஆத்தையின் கோலம்

"தானும் அழிந்து
தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்தென்
உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து
மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை
நானறி யேனே?"

நானறிந்தே அழிந்தேன்
நாவின் சுனையுள் நடுங்கிய கன்னி
மோகச் சுவையுள்
மடி வலித்த கணத்துள்
கடைந்தாள் "என்னை"
அள்ளிய பொழுது
அதுவே அழுதது
அலுப்புத் தாங்காது.

காமனை வென்றகண்
ஆரை உகப்பது?
நெக்குநெக்குள் உருகி உருகி
தொப்புள் வெளியுள்
நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
பழந்தாங்கும் முனையுள்
நக்கும்அழுதும் தொழுதும் வாழ்த்தி
செந்தாமரைச் சொண்டில் குந்திய பெருநிலையில்
நான விதத்தால் கூத்து நவிற்றிச்
கொடிபோலும் திருமேனி
கொழுத்துக் கிடக்கும் கொல்லைப் புறத்துள்
திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்பது என்றுகொல்லோ
என்
இள மேனிச் சிலிர் நங்கை
மென் கொங்கை புணர்ந்தே!

ஓம் சூத்திரா!
காமத்துச் சூத்திரச்
சுகத்தைச் சொல்லிப்
புகுவீர்
மெல்லத் தாண்டும்
தெற்பத்துச் சுகத்துள்
மேனினுடங்கி!

நிர்மாணம்.
(மோகத்துள்
முக்கி முனகிய பொழுதொன்று:05.10.2007)












Mittwoch, 26. September 2007

விடுதலை:உடலிலிருந்து உயிருக்கு!


விடுதலை:உடலிலிருந்து உயிருக்கு!



தொடரும் குண்டுத்தாக்குதல்கள்"..................."வன்னியை நோக்கித் தாக்தல்கள்!
கொலைகள்.இராணுவத் தளபதிகள்-போராளித் தளபதிகள் என்றெல்லா ஆயுததாரிகளும் அற்ப வயதில் அழிந்து போவதும்,அழிவார்களின் வழிகாட்டல்களில் ஆயிரமாயிரம் மக்கள் அழிந்து போவதும் ஈழ இலங்கைக் கோதாவில்,தொடர் கதையாய்...


போராளிக்குத் தாம் செத்துத் தேசம் விடுதலையாகுமென்ற கனவு,இராணவத்தானின் வான் தாக்குதலில் தமது தலையில் குண்டு விழுமென்ற பதபதைப்பு மக்களுக்கு!



துப்பாக்கிகளுக்கு உறக்கமில்லை,
தோட்டாக்கள் வெடிக்கின்றன-குண்டுகள் சிதறுகின்றன.
எனினும், தேசத்தில் சமாதானம் முன்னெடுக்கப்படுகிறது,
பேச்சு வார்த்தை தொடர்கிறது...



தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்!நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும்,மறுபுறம், ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கைக் குழந்தைகள்(...) ஒருபுறமும் அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்...இன்றைய நிலையில் பதவி வேட்கைக்காகப் பலியாகிப்போன குழுக்கள் தமிழ் மக்களுக்கு எதிரிகளாக்கப்பட்டபின், எல்லாத்தையும் வெறுத்துத் தமது நியாயத் தன்மைக்கு(...) வீரியம் சேர்ப்பதில் உள்ள அக்கறையால் ஈழதேசத்தின் நலனைப் போட்டுடைக்கிறார்கள்.


கூலிக் குழுக்களின் இன்றைய அட்டகாசமான பரப்புரைகள் மக்களைக் குழப்பியெடுப்பினும் மக்கள் தமது கடந்தகால அனுபவத்திலிருந்து இப்பாதகமான அரசியல் சூழ்ச்சியைப் புரிந்து கொள்கிறார்கள்.



என்றபோதும்,இலங்கையின் அதீத யுத்த முனைப்புப் புலிகளைச் சொல்லி மக்களை வேட்டையாடுவதற்காகக் குண்டுகளை வானிலிருந்து கொட்டுகிறது.அதையும் நம்ம கூலிக் குழுக்குள் புலிகளுக்கெதிரானதாகச் சொல்லி நியாயப்படுத்தும் நிலை இன்று...


கூடவே அரச தலைவர்கள்-அரச தூதர்கள் அமெரிக்காவுக்கு-ஐக்கிய நாடுகள் சபைக்கு...வெளி நாடுகளுக்குப் போய் கை குலக்கிச் சமாதானம் வேண்டி வரப் பிளேன் ஏறிப் பறக்கிறார்கள்.



இதற்குள் குண்டுகள் கோட்டைகளைப் பிடித்துக் கொடிகளைப் பறக்க விடும்போது
பிண நாற்றமடிக்கும் காற்றில் அவை பறக்கலாம்...


தொடர்ந்தும் கொடியிறங்கும்...
குண்டுகள் வெடிக்கும்...
மக்கள் எங்கோவொரு மூலையில்
அரிசிப் பருக்கைக்குப் பதிலாகக் கெந்தகப் பருக்கைகளை அகற்றயபடி...


விடுதலை...


உடலிலிருந்து உயிருக்கு...

Sonntag, 16. September 2007

கனத்த மிதப்பொன்றில்...


மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்.

Sonntag, 9. September 2007

குரைக்காதே டோண்டு!

குரைக்காதே டோண்டு!

குடுமியற்ற டோண்டு-நீ
கும்மாளமிட்டுக் கூட்டிப் பெருக்கும்
கம்யூனிசம் ஒரு ஓரத்தில்
இருந்தே தொலையட்டும்

இப்படி வா,
இன்னும் கொஞ்சம் நெருங்கி
அதென்ன உனக்குமட்டுமே
எந்தப் பன்னாடைக்குமில்லா உயர் சாதித்தடிப்பு?

உனக்குத் தெரியும்-நீ
உண்டு கொழுக்கும் உணவுக்கு
உழைப்பவனல்ல நீ என்பது
இருந்த இடத்தில் உண்டி வளர்க்க
கிட்லரைக்கூட வரவேற்றவர்கள் உன் பரம்பரை

உனக்காகச் சொல்வதற்கு
ஒரு இந்தியா போதும்
உலக நடப்புப் பெரியதுமில்லை-நீ
கும்மியடிக்கும் கம்யூனிசம் குளறுபடியுமில்லை!

கூற்றுக்குக் கூற்று மனிதரைத் தாழ்த்தும் கபோதியே!
பார்ப்பானின் படிகளில் நசியும் ஈக்களைவிட
மானுடர் அழிவு உனக்கு உறைக்கவில்லையா?
சே...பொல்லாதவனே!
ஜாதிக்குள் ஜாதி வைத்தவன் வாரீசே!!

பொய்யுரைப்பதற்காகவே பொறந்தாயா?
இல்லைப் பொல்லாப்புச் சொல்வதற்காகப்
புடியுருண்டைச் சோற்றை மெல்வதற்குப்
பொறந்தாயா?

எந்தத் தரணத்திலும் நீ
எதிரியின் ரூபத்துள்
எடுத்து வைக்கும் பொல்லாத வார்த்தைகளோ
வாழ்வாருக்கு வாய்க்கரிசி

என்ன மனிதனப்பா நீ?
இந்தியாவின் இருட்டுப் பக்கத்துள்-உன்
வெந்துலர்ந்த இதயத்தைத் தேடிப் பார்க்கிறேன் அங்கேயுமில்லை
ஓ...! உனக்கு அது இருப்பதற்கான அறி குறியே இல்லை

நேற்றைய பொழுதொன்றில்-நீ
நெருப்பிட்டெரித்த நிணத்துக்கு நந்தன் என்றும்
சதிவலை பின்னிப் பிணைத்தெரித்த உயிருக்கு
உடன் கட்டை என்றும் பின்னியவன் நீ!

உனக்கா புரியாது கம்யூனிசத்தை கடைந்தெடுக்க?
கட்டியம் கூறு!
கவனமாகச் செல்லரித்துச் சென்று
கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பதற்கு!!

அனல் வாதமிட்டும்
புனல் வாதமிட்டும்
ஒரு இனத்தின் வேரையே செல்லரித்தவன் பார்ப்பான்
அவன் விந்தின் வழியல்லவா நீ?

காலங் கடந்திடுவதற்குள்
கோவணம் கழற்றிக் கடமையைச் செய்
நாளை நலிந்தவருக்குச் சாஸ்த்திரமுரைக்க-உன்
பரம்பரை இருந்தாகவேண்டும்

நடுநிசிப் பொழுதொன்றில்
வேட்டையாடப்படும் மிருகங்களில் ஒன்று
உன் சாயலாகவும் இருக்கலாம்
எதற்கும் முந்திக்கொள் ராகவரே

கடுகளவும் பின் வாங்காதே!
கண்ணீரையாவது கடைவிரித்து
காவித் திரியும் குப்பைகளைக் காசாக்கத் தெரிந்தவன் நீ
கம்யூனிசம் பற்றிப் புலம்புவது புரியத் தக்கதே புண்ணாக்கு!!!

தாராவியிலும் மும்பாயிலும்-இன்னும்
முன்னூறு இந்தியப் பெரு நகரிலும்
பின்னைய பொழுதுகளில் கண்ணயரும்
இளம் இந்தியர்கள்
காரேறும் பொழுதுகளில் முண்டமாகும் தெருவோரம்
இதுவும் கம்யூனிசக் கோளாறாய் வாந்தியெடு

வற்றாத வடுவாய் நால் வர்ணமிருக்க
முப்பது கோடி இந்தியர்கள் இழி ஜாதியென்பாய்
இதுவும் கம்யூனிசக் கோளாறுதான்
இந்தியாவுக்கு இந்து அதர்மம் இப்படித்தான் சொல்லும்!

இந்த இலட்சணத்தில் நீயோ
கவடு கிழிப்பதில் காலத்தை ஓட்டியபடி
கம்யூனிசக் கோளாறுப் படிகம் சொல்ல
சீனத்தையும் மாவோவையும் கேட்டு
மடிப் பிச்சை எடுத்து...

மந்தைகளுக்குச் சொல்லிப் புரியாது
மொத்துவதற்கும் மனசு வருவதில்லை எமக்கு!
ஆண்டைகளுக்கு அடைகாப்பதில் உனக்குத்தான் எவ்வளவு சுகம்
அப்பப்பா அரவணைத்துன்னைக் கக்கத்தில் வைப்பார்-நீ
கம்யூனிசக் கோளாறைக் கோலமிட்டுச் சொல்
கோழி கூவுவதற்குள் கோடீஸ்வரனாவாய்!

கொப்பராணை நீ
கொல்லுவதற்காகவே
தொப்புள் கொடியறுத்துத் திரண்டெழுந்து
திண்ணையிற் குந்தியவன்

குரைக்காதே டோண்டு!
தெரு நாய்கள் உன்னைப் பதம் பார்த்தாலும்
நாய்களுக்கே நஞ்சேறும்
பாவம் நன்றியுள்ள நாய்கள்!!!

09.09.2007

Dienstag, 4. September 2007

டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!


நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!


டோண்டு அண்ணாவுக்கு அகவை நூறு
ஆர்த்தெழும் உணர்வுக் குவியலோடு
அன்பொழுகும் உங்கள் அகத்தை
என் விழி முன் நிறுத்தும் இந்தக் கணங்கள்


வாழ்வுப் பெரு வெளியில் நூறென்பது
சிலகணப் பொழுதின் ஆரவாரத்தில்
பதின்மப் பருவத்துக் கனவுத் தடத்துள்
அகவை நூறென்பதும் ஒரு படி நிலை


பார்ப்பதற்குக் கனிவும்
பழகுவதற்கு இனிமையும்
ஏந்தப் பெற்ற என் அண்ணா
எளிமையுள் இரக்கத்தைப் புதைத்து


எவருக்கும் இரக்கமுறும்(ஈழத்து அகதிக்கு...) இதயம் பெற்றாய்
இன்புற்று இனிதாய் உணரும்
உங்கள் உறவுக்கு ஏங்கும் பலருள்
நானும் ஒருவனாய் உணர-ஒப்பற்ற மகிழ்ச்சி!


எல்லைகாணா இந்தப் பிரபஞ்சத்துப் பெருநிலையுள்
வாழத்தக்க முறைமைகள்(அப்பப்ப நாசுக்காய் காய் நகர்த்துவது) தாங்கி
வருவோருக்கு இன்முகமாய்
இனித்தே இதயம் திறப்பாய் தமிழ் மணத்துள்!


இன்றுனக்கு நூற்றாண்டு!
அளப்பெரிய புருஷனாகி
அகவை நூறுக்குள்
அடியெடுத்து எமக்குப் பெரு வழியாகினாய்


இந்தப் பொழுதின் அனைத்து நித்தியங்களும்
உன் இதயப் பெருவெளியின்
இருப்பை உறுதி செய்ய
உலகின் உய்விப்புக்கு (இப்படியுஞ் சிலர்...) இப்படியும் ஒரு வடிவம்


நீ,இந்தப் பயணத்துள்
என்றும் இளையவனாய்
இளைப்பறியா எங்கள் வழித்துணையாய்
இருக்கக் கடவாய்!


இதயத்தின் அதிர்வுகளனைத்தும்
உன்னுறவின் பெரு வியப்பில்
எமையாழ்த்தும் ஒவ்வொரு துடிப்பாய்
இயக்கமுறும் எம் உயிர்ப்பில்


டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!
இன்னும் மகிழ்ந்தோயா(சோடிஸத்தின் இன்றைய உ.புருஷராய்) இதயத்தோடு
இனிதே நீ இருநூறென்ன ஆயிரமாண்டுகள்
எங்கள் இதயத்தோடு இணைந்திருக்க


எல்லாம் வல்ல
எல்லோர்க்கும் பொதுவான
எந் நாட்டார்க்கும் இறையாய்
எழில் கொண்ட இஸ்ரேலின் பாதம் பிடித்தே வேண்டி நிற்கிறேன்:


வாழ்க நீ,
வையகம் போன்றே,
எந்தத் திசையிலும் கொலுவுறும் இஸ்ரேலியச் செழிப்பாய்
மகிழ்ந்தே இருப்பாய்-நீ நலந்தாங்கிஇவாழ்க நீடூழி!!!

நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!

நீ,நலந்தாங்கி நீடூ வாழ்க:டோண்டு ராகவரே!!!


டோண்டு அண்ணாவுக்கு அகவை நூறு
ஆர்த்தெழும் உணர்வுக் குவியலோடு
அன்பொழுகும் உங்கள் அகத்தை
என் விழி முன் நிறுத்தும் இந்தக் கணங்கள்

வாழ்வுப் பெரு வெளியில் நூறென்பது
சிலகணப் பொழுதின் ஆரவாரத்தில்
பதின்மப் பருவத்துக் கனவுத் தடத்துள்
அகவை நூறென்பதும் ஒரு படி நிலை

பார்ப்பதற்குக் கனிவும்
பழகுவதற்கு இனிமையும்
ஏந்தப் பெற்ற என் அண்ணா
எளிமையுள் இரக்கத்தைப் புதைத்து

எவருக்கும் இரக்கமுறும்(ஈழத்து அகதிக்கு...) இதயம் பெற்றாய்
இன்புற்று இனிதாய் உணரும்
உங்கள் உறவுக்கு ஏங்கும் பலருள்
நானும் ஒருவனாய் உணர-ஒப்பற்ற மகிழ்ச்சி!

எல்லைகாணா இந்தப் பிரபஞ்சத்துப் பெருநிலையுள்
வாழத்தக்க முறைமைகள்(அப்பப்ப நாசுக்காய் காய் நகர்த்துவது) தாங்கி
வருவோருக்கு இன்முகமாய்
இனித்தே இதயம் திறப்பாய் தமிழ் மணத்துள்!

இன்றுனக்கு நூற்றாண்டு!
அளப்பெரிய புருஷனாகி
அகவை நூறுக்குள்
அடியெடுத்து எமக்குப் பெரு வழியாகினாய்

இந்தப் பொழுதின் அனைத்து நித்தியங்களும்
உன் இதயப் பெருவெளியின்
இருப்பை உறுதி செய்ய
உலகின் உய்விப்புக்கு (இப்படியுஞ் சிலர்...) இப்படியும் ஒரு வடிவம்

நீ,இந்தப் பயணத்துள்
என்றும் இளையவனாய்
இளைப்பறியா எங்கள் வழித்துணையாய்
இருக்கக் கடவாய்!

இதயத்தின் அதிர்வுகளனைத்தும்
உன்னுறவின் பெரு வியப்பில்
எமையாழ்த்தும் ஒவ்வொரு துடிப்பாய்
இயக்கமுறும் எம் உயிர்ப்பில்

டோண்டு ராகவனெனும் நாமம் கொண்ட திருமாலே!
இன்னும் மகிழ்ந்தோயா(சோடிஸத்தின் இன்றைய உ.புருஷராய்) இதயத்தோடு
இனிதே நீ இருநூறென்ன ஆயிரமாண்டுகள்
எங்கள் இதயத்தோடு இணைந்திருக்க

எல்லாம் வல்ல
எல்லோர்க்கும் பொதுவான
எந் நாட்டார்க்கும் இறையாய்
எழில் கொண்ட இஸ்ரேலின் பாதம் பிடித்தே வேண்டி நிற்கிறேன்:

வாழ்க நீ,
வையகம் போன்றே,
எந்தத் திசையிலும் கொலுவுறும் இஸ்ரேலியச் செழிப்பாய்
மகிழ்ந்தே இருப்பாய்-நீ நலந்தாங்கி,வாழ்க நீடூழி!!!



Sonntag, 4. Februar 2007

இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும்


இஸ்லாத்தை எழுதுதலும் கருத்துச் சுதந்திரமும் -


மறைந்த அறிஞர் எட்வர்ட் சய்த் அவர்களின் முக்கிய நூற்களில் ஒன்று "இஸ்லாமை எழுதுதல்" (Covering Islam). இஸ்லாத்தையும், அது தொடர்பான கலாச்சாரப் பிரச்னைகளையும், முஸ்லிம்களின் அரசியலையும் மேலை ஊடகங்கள் தொடர்ந்து எவ்வாறு எழுதி வந்துள்ளன, சித்திரித்து வந்துள்ளன என்பது பற்றிய ஒரு ஆய்வு அது. ஏராளமான சமகால ஆதாரங்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் மேலைக் கருத்தியலில் உள்ளார்ந்து படிந்துள்ள இஸ்லாமிய வெறுப்பை அவர் நிறுவியிருப்பார்.


இஸ்லாத்தைத் திரித்து எழுதுதல் என்பது இன்றைய, நேற்றைய பிரச்னை அல்ல. கடந்த 1200 ஆண்டு கால வரலாற்றில் ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். இது குறித்து நான் ஏற்கனவே நிறைய எழுதியுள்ளேன். (பார்க்க : நான் புரிந்து கொண்ட நபிகள், பக்கம். 21 30; மற்றும் "இந்துத்துவ வரையறையில் ஆண்மையும் பெண்மையும்' என்னும் கட்டுரை) இன்னும் ஒருமுறை அவற்றை எழுதி இதை வாசிக்கும் முஸ்லிம் சகோதரர்களின் உள்ளத்தைப் புண்படுத்த விரும்பவில்லை.


முஸ்லிம் உள்ளங்கள் மட்டுமல்ல, மனிதப்பண்புள்ள, கலாச்சாரப் பன்மைத்துவத்தை ஏற்கிற சனநாயக உள்ளங்கள் அனைத்துமே வேதனைப்படுகிற, கண்டிக்கவேண்டிய விஷயம் இது. மேலைக் கலாச்சாரத்தின் இந்த ஆணவப்போக்கின் ஓரம்சம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏதோ முஸ்லிம் வெறுப்பாளர்களும், கிறிஸ்தவ மதவெறியர்களுமே இப்படி இஸ்லாத்தை இழிவு செய்தார்கள் என்பதல்ல. பல துறைகளில் நேர்மையான பங்களிப்புகளைச் செய்த கவிஞர்கள் (தாந்தே, மில்ட்டன்), வரலாற்றாசிரி யர்கள் (கிப்பன்), எழுத்தாளர்கள் (வால்டேய்ர்), தத்துவவாதிகள் (கான்ட்) எனப் பலரும் இஸ்லாத்தைப் பற்றியும் இறைத்தூதர் முஹம்மத் பற்றியும் இழிவாகவும், தவறாகவும் எழுதியுள்ளனர்.

இதற்கு இரு காரணங்களைச் சொல்ல இயலும். 1. இஸ்லாம் குறித்த அறியாமை. 2. மேலை நாகரிகத்தின் இருப்பையே அச்சுறுத்த வந்த ஒன்றாக இஸ்லாத்தைப் பார்த்தமை. இஸ்லாம் குறித்த அறியாமை என்பதை நாம் அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. தத்தம் துறைகளில் மிகப் பெரிய சாதனை புரிந்த இந்த அறிஞர் பெருமக்கள் தமக்கு மிக நெருக்கமாக உள்ள ஒரு பண்பாட்டையும், மதத்தையும் குறித்து அறியாதிருந்ததை ஒரு பொறுப்பான செயலாக நாம் கருதி விட முடியாது.


கிரேக்கத்தத்துவங்களும் பல முக்கிய அறிவியற்கண்டுபிடிப்புகளும், வரலாற்றுக் குறிப்புகளும், பயண அனுபவங்களும் இஸ்லாம் மூலமாகவும், முஸ்லிம் அறிஞர்கள் மூலமாகவுமே மேலைச் சமூகத்திற்குக் கையளிக்கப்பட்டன என்பதை அறியாதவர்களா இவர்கள்?

மேலை அறிவுத்துறை (Western Scholarship) முஸ்லிம்களின் பங்களிப்பை அங்கீகரித்தது இல்லை. 5000 பக்கங்களில் எழுதப்பட்டுள்ள கேம்ப்ரிட்ஜ் மத்திய கால வரலாற்றில் ஸ்பெய்னின் அராபிய நாகரிகத்திற்கு வெறும் 50 பக்கங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற மூன்றாம் அப்துர் ரஹ்மான் போன்ற ஆட்சியாளர்களைப் பற்றி பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் முதலியன ஒப்பீட்டளவில் எவ்வளவு குறைவாகப் பேசுகின்றன என்பதையும் நாம் கவனித்திருக்க இயலாது. கணிதம், அறிவியல் துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பைப் பாடநூற்கள் மறைப்பதோடு தவிர்க்க இயலாமல் சில பெயர்களைக் குறிக்க நேரும்போது அவற்றின் இஸ்லாமிய அடையாளத்தை அழித்து ஒலிபெயர்ப்புச் செய்வதையும் நாம் இங்கே சுட்டிக்காட்டாதிருக்க முடியவில்லை. (எ.டு. : இப்ன் ரஷீத் அவரோஸ், இப்ன் சினா அவிசீனா; அல் மய்மூன் மேமோனிட்ஸ்; இப்ன் இஷாக் ஜோனீ ஷியஸ்; அர்ராஸீ ரேஸஸ்; அல்ஹேதாம் அல்ஹேஸின்).


இரண்டாவது காரணம் இஸ்லாம் குறித்த அச்சம் என்றேன். இத்தகைய அச்சத்தை அவர்கள் இந்து, பவுத்தம், கன்பூசியஸ் மதம் போன்றவற்றின் மீது கொண்டிருக்கவில்லை. இவை அருளப்பட்ட மதங்களில் ஒன்று (செமிடிக்) அல்ல என்பது மட்டும் இதற்குக் காரணமில்லை. புவியியல் ரீதியில் தொலைவாகவும், பலவீனமாகவும் இருந்த இவற்றைத் தமது இருப்பிற்கு அச்சுறுத்தலாக மேலைக் கலாச்சாரம் கருதவில்லை.
துருக்கி, ஸ்பெயின் வரை தனது ஆளுகையை விரிவாக்கிய இஸ்லாத்தைக் கண்டு அவர்கள் பெரிதும் அஞ்சினர். இஸ்லாத்தின் மீதான இந்த அச்சத்தின் இன்னொரு பக்கம் இறைத்தூதர் முஹம்மதின் மீதான வெறுப்பாக அமைந்தது. "எதிர் கிறிஸ்துவாக' அவரை வரலாறு முழுவதும் இழிவு செய்து வந்தது.

நபிகள் நாயகத்தை இரண்டு அம்சங்களில் அவர்கள் வசை பாடி வந்தனர்.


1. தன்னை இறைத்தூதர் எனவும் திருக்குர்ஆன் எனும் இறைவாக்குகள் தனக்கூடாக இறங்கியது எனவும் மக்களை ஏமாற்றி வந்தவர் (Impostar )


2. பாலியல் வக்கிரங்கள் உள்ளவர், குழந்தைகளைத் திருமணம் செய்து கொண்டவர் (Paedo-phile), (முஸ்லிம் சகோதரர்கள் என்னை மன்னியுங்கள்).


3. "ஜில்லன்ட்ஸ் போஸ்டன்' இதழ் வெளி யிட்டுள்ள இன்றைய கார்ட்டூன்கள் மூன்றாவது பரிமாணம் ஒன்றை முஹம்மத் நபிகள் மீது சுமத்தி இழிவு செய்கின்றன. அது : "பயங்கரவாதி' ( Terrorist) எனும் பிம்பம்.

மொத்தமுள்ள 12 கேலிச்சித்திரங்களில் பதினொன்று நாயகத்தைப் பயங்கரவாதியாய்ச் சித்திரிக்கின்றன. இன்னொரு படம் அவரைப் பாலியல் வாதியாய்ச் சித்திரிக்கிறது. அசப்பில் ஒஸாமா பின்லேடன் போன்ற தோற்றம் உடையவராய் அவர் காட்டப்படுகிறார். இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் கட்டுகிற முண்டாசு போன்ற தலைப்பாகை புகைந்து கொண்டுள்ள ஒரு வெடிகுண்டாகச் சித்திரிக்கப்பட்டுள்ள படம் யாரையும் கோபம் கொள்ளச் செய்யும்.
கடும் எதிர்ப்பிற்குப் பின் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட டென்மார்க் இதழ் தனது வலைத்தளத்திலிருந்து அப்படங்களை நீக்கிக் கொண்டன என்ற போதிலும் இன்னும் பல வலைத்தளங்களில் அவை காணப்படவே செய்கின்றன. ஏக இறைவனையும் இறுதி இறைத்தூதரையும் (எல்லா இறைத் தூதர்களையும்தான்) உருவடிவில் சித்திரிக்கக் கூடாது என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. எனினும் அவ்வாறான சில சித்திரிப்புகளை முஸ்லிம்கள் இதுவரை சகித்து வந்துள்ளனர்.

துருக்கி மற்றும் ஈரானியச் சிற்றோவியங்களில் (Miniatures) இத்தகைய சித்திரிப்புகள் உண்டு. அமெரிக்கப் பொது நிலையங்கள் சிலவற்றிலும் நபிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க உச்சநீதி மன்றக் கட்டிடத்தில் வரலாற்றில் வாழ்ந்த 18 சட்ட உருவாக்கிகளின் உருவங்கள் சலவைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நபிகளுடையது.


"அமெரிக்க இஸ்லாமிய உறவுக் குழு' (Council on American Islamic Relations) எனும் அமைப்பு இது தொடர்பாக இதுவரை தெரிவித்துள்ள எதிர்ப்புகளை அமெரிக்க அரசு புறக்கணித்து வந்துள்ளது. டென்மார்க் கார்ட்டூன்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களின் பின்னணியில் இன்று இக்கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. கார்ட்டூன்களைக் கண்டித்துள்ள புஷ் அரசு இக்கோரிக்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனினும் இன்றைய சித்திரிப்புகளுக்கு இப்படியான ஒரு உலகளாவிய எதிர்ப்பு தோன்றியதற்கு என்ன காரணம்? சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.



1. இன்றைய சூழல் இதில் முதற்பங்கு வகிக்கிறது. செப்டம்பர் 11க்குப் பின் முஸ்லிம் நாடுகள் மீதும், இஸ்லாமியக் கலாச்சாரத்தின் மீதும் மேற்கொள்ளப்படும் மேற்குலகத் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அயலுறவுக் கொள்கைகளிலும் மனித உறவுச் செயற்பாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சாதாரண பண்புகளை எல்லாம் இன்று மேலை அரசுகள், குறிப்பாக அமெரிக்கா கைவிட்டுள்ளது. தெருச்சண்டைகளில் பேசப்படுகிற சொற்களின் தரத்தில் புஷ், பிளேயர், கோண்ட லிசா ரீஸ் போன்றோரால் முஸ்லிம்களும் இஸ்லாமிய நாடுகளும் வசை பாடப்படுகின்றனர்.


"இரண்டாம் சிலுவைப் போர், "ரவுடி நாடுகள்' (Rogue States) "தீமையின் அச்சு' (Axis of Evil) என்றெல்லாம் முஸ்லிம் நாடுகளைப் பற்றிப் புஷ் குறிப்பிட்டுள்ளதோடு நிற்கவில்லை. ""தீய, கொடூரமான மதம்'' ( Evil and Wicked Religion) எனவும் அவர் இஸ் லாத்தைக் குறிப்பிட்டார். டென்மார்க் இதழுக்கும் அமெரிக்க அரசுக்குமுள்ள தொடர்பையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.


இவ்விதழின் கலைத்துறை ஆசிரியர் ஃபிளமிங்ரோஸ் என்பவர் புஷ்சுக்கு நெருக்கமானவரும் இஸ்ரேலிய ஆதரவாளருமான டேனியல் பைப்ளின் அழைப்பின் பேரில் சென்ற ஆண்டு விருந்தினராக வாஷிங்டன் வந்து போனவர். ஆப்கன் மற்றும் ஈராக் ஆக்ரமிப்புகளில் அமெரிக்காவை முழுமையாக ஆத ரிக்கும் நாடுகளில் ஒன்று டென்மார்க்.



2. இன்றைய பின்னணி : ஆப்கன், ஈராக்கிற்கு அடுத்தபடியாக ஈரானைக் குறி வைத்து மேலைநாடுகள் இயங்கும் நிலை. பலஸ்தீனத்தில் ஹமாஸ் வெற்றியை ஏற்க மறுக்கும் அவர்களின் போக்கு.



3. கேலிச் சித்திரங்களின் வெளியீட்டை ஒட்டித் தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்களில் வெளிப்படும் மேலைத்திமிர். டென்மார்க் அளவில் முதலில் தொடங்கிய எதிர்ப்பை அந்நாட்டை ஆண்ட வலதுசாரி அரசு புறக்கணித்தது. கண்டனத்தைத் தெரிவிக்க வந்த அரபு நாடுகளின் தூதுக் குழுவை டென்மார்க் பிரதமர் சந்திக்க மறுத்தார். உலக அளவில் போராட்டங்கள் வலுப்பட்டவுடன் டென்மார்க் இதழ் மன்னிப்புக் கேட்ட போதிலும் அதற்கு ""ஆதரவாக'' என அறிவித்து ஐரோப்பா முழுவதிலும் பல இதழ்கள் அக்கேலிச் சித்திரங்களை மீண்டும் வெளியிட்டமை.

இவை முஸ்லிம்களை ஆத்திரங் கொள்ளச்செய்ததின் நியாயத்தை யார் தான் மறுக்க இயலும்? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலக மய நடவடிக்கைகளுக்குள் நாம் எல்லோரும் ஆட்பட்டுள்ளோம். உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது என்பது முற்றிலும் பொருளற்ற வாசகமல்ல. எந்தப் பிரச்னையும் இனி "Local'' பிரச்னையாக தல அளவில் சுருங்கிவிட வாய்ப்பில்லை. இன்டர்நெட், செல் ஃபோன், SMS, என உலகம் எலெக்ட்ரானிக் வலைப் பின்னல்களின் (Networks) தொகுதியாக மாறி விட்டது. நாடுகள் மட்டுமன்று, பல்வேறு சமூகங்களும் இன்று வலைப் பின்னல் களால் நெருக்கமடைந்துள்ளன.


வலைப்பின்னல்களால் நெருக்கமும் வலிமையுமடைந்த சமூகங்களில் ஒன்றாகவே இன்று நாம் முஸ்லிம் சமூகத்தைக் காண்கிறோம். கலாச்சாரம், மொழி, இனம், மதவழி மரபு (ஷியா / சுன்னி) எனப் பலவாறும் வேறுபட்டுள்ள முஸ்லிம் சமூகங்களின் பன்மைத் தன்மைக்கு அப்பால் "முஸ்லிம்' என்கிற அடையாளம் உலகளாவிய வலைப்பின்னலாக உருப்பெற்றது வரலாறு பூராவிலும் உள்ள ஒரு நிலைதான் எனினும் முஸ்லிம் இடப்பெயர்வு (Migration), தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பன இன்றைய வலைப்பின்னலை மிகவும் நெருக்கமாகவும் வலிமையாகவும் ஆக்கியுள்ளன.


மக்காவை நோக்கிய கிப்லா, இறைக் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ், இஸ்லாமியச் சட்டத்தின் (ஷரீஅத்) மீது நம்பிக்கை கொண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட லட்சிய சமூக அமைப்பு, முஹம்மத் என்கிற இறுதி இறைத்தூதர் மீது கொண்டுள்ள அன்பு / நம்பிக்கை ஆகியனவே இவ்வலைப்பின்னலின் ஆதாரக் கூறுகள். அச்சு ஊடகத்தின் தோற்றம் இந்த அடிப்படைகள் வலுப்பெறுவதற்கு உதவியதையும் இவற்றின் அடிப் படையிலான நாடு தழுவிய / உலகு தழுவிய ஒரு அறவியற் சமூகமாக (Moral Community) தல அளவிலான தனித்துவங்களையும், வேறுபாடு களையும் தாண்டிய "உம்மா'வாக முஸ்லிம் சமூகம் உருப்பெற்றதை யும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்ற னர். (பார்க்க : Muslim Networks, (ed) Miriam Cooke & Bruc B. Lawrence)


இன்றைய எலக்ட்ரானிக் வலைப்பின்னல் உம்மாவை மேலும் நெருக்கமாக்கியுள்ளதன் ஒரு வெளிப்படையாகவே கார்ட்டூன்களுக்கான உலகளாவிய எதிர்ப்பை நாம் காணவேண்டியுள்ளது. (மேற்குறிப்பிட்ட நூலில் உள்ள சாமி அலிமீன் கட்டுரையைக் காண்க.) இன்றைய எதிர்ப்புகளில் வெளிப்படும் முஸ்லிம் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. உலகளாவிய இந்த எதிர்ப்பின் Local கூறுகளும் கவனிக்கத்தக்கன. ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் காட்டும் எதிர்ப்பிற்கும் முஸ்லிம் நாடுகளில் உருவாகியுள்ள எதிர்ப்பிற்குமுள்ள ஒரு வேறுபாட்டை மஹ்மூத் மம்தானி சுட்டிக் காட்டுகிறார்.


இன்றைய நவபாசிசம், முஸ்லிம் எதிர்ப்பு என்கிற வடிவில் உருப்பெறுகிறது. கிட்டத்தட்ட எல்லா மேலை அரசுகளும் முஸ்லிம் எதிர்ப்புடன் புதிய Immigration சட்டங்களையும், ஹிஜாப் அணிதல் போன்றவற்றைத் தடை செய்யும் ஆணைகளையும் இட்டுக் நம்பிக்கையை வரலாற்று ரீதியில் தவறானது எனச் சொல்வதோ, பல இறைக் கொள்கை அல்லது ஓரிறைக் கொள்கை குறித்து விவாதிப்பதோ கூடாது எனச்சொல்ல இயலாது.

முன்னாள் அடர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி சொல்வது போல இதன் பொருள் அம்மதத்தை உருவாக்கியவரையோ, அதன் இறைத்தூதராக நம்பப்படுபவரையோ இழிவு செய்ய அனுமதி உண்டு என்பதல்ல. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் " Blasphemy" US"க்கு நியாயம் கற்பிப்பதை ஏற்க முடியாது. மதநம்பிக்கைகள் குறித்த விவாதங்களும் மதத்தைத் தோற்றுவித்தவர் / இறைத்தூதர் பற்றி இழிவு செய்தலும் ஒன்றாகாது.


வழக்கம் போல முஸ்லிம் சமூகத்திற்குள்ளிருந்தே மாற்றுக் குரல்களும் ஒலிக்கவே செய்கின்றன. தன்னை இழிவு செய்தவர்களை எல்லாம் மன்னித்த முஹம்மத் நபிகளைப் போல நாமும் நடந்து கொள்வோம். போராட்டங்கள் எல்லை மீற வேண்டாம். இழிவு செய்தவர்களை எதிர்ப்பது என்கிற பெயரில் சம்பந்தமில்லாதவர்கள் வன்முறைக்கு ஆளாவதை அனுமதிக்க முடியாது. போராட்டம் நியாயமானதே. ஆனால் அது அப்பாவிகள் மீதான வன்முறையாக மாற வேண்டாம் என்ற கருத்தை "மில்லி கெஸட்' போன்ற இதழ்களும் கூட ஒலிப்பதை (பிப்ரவரி 16 28, 2006) இங்கே சுட்டிக் காட்டுவது அவசியம்.


அ. மார்க்ஸ்( Prof. Dr. A. Marx)

அ. மார்க்ஸ் (நன்றி: சமரசம்-தூ)

Blog-Archiv