நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!
"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்
மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்
எதற்காகவோ இருப்பழியும் காலம்
யானுளம் கலங்கி
யாவதும் அறியேன்
ஓதுவதற்கு ஒப்பாருமில்லை
ஒழிக என் கூதற் காலம்!
நெடும் புனல் நீக்கிய மறைப்பில்
துயிலிழந்த தெருவோரத்துக் கண்மாய்
பெரு நரிக்குக் கொண்டாட்டம்
துள்ளிக் குதிக்கும் மீனுக்கு அழிவு
இளநிலாக் காயும்
இருளாற் கவ்வும் இயக்கமும் அதுவாய்
எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்
எங்கேயும் கெந்தகப் புகையுண்ட குறை முகங்கள்
வல்லூறு வட்டமிட
ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது
பொன் திகழ் மேனியொடு பலர் தோன்றி
செங்கோல் காட்டிச் சொல்லிய கதைகளும் ஆறிய கஞ்சி
இருளிடை புகுந்த ஒளிமுதற் கடவன்
கோன்முறை வெடிபட வருபவர்
அடுபுலி அனையவர்
படுகடன் இது?
16.112007
4 Kommentare:
என்ன சிறீ அண்ணர்,
பயங்கர வெறி போல கிடக்கு..
நீங்க சொல்லிட்டேன்க ல எழும்பிடும் தமிழ்தேசம்..
ம்.. தூங்க்குங்கப்பா.
நிர்மாணத்தின் கவிதைங்க புரியல்லனு கொஞ்சம் கம்ப்லைன்டு. அதான் கொஞ்சம் விளக்குலாம்னு .... ஹி ஹி ஹி..........
//நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்! //
நீலமேகம் என்ற என் நண்பன், ஒரு சுட்டெரிக்கும் பகல் பொழுதில் வேலியை சுமந்து தெருவெங்கும் நடந்து சென்றான். அவன் கால் வலித்தது. ஐந்திரம் எனும் ஆயின்மென்ட் தடவியும் அவனது கால் அவனுடன் யுத்தம் புரிந்தது. !!! (ஹி ஹி ... புரிஞ்சிச்சா ?)
//"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்//
(இதில ஒன்னும் பிராப்ளம் இருக்காதுன்னு நினைக்கிறேன். புரிஞ்சுச்சா ?)
//மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்//
மதிலோரத்துல இருக்கும் ஒரு ஓணானுக்கு ஒரு வயிறு இருந்தது. அது சாப்பிட்டுவிட்டு அது வெளியேற்றும் யூரின் ஒரு ஓரமாக கொட்டும். அதனால் தூசிகள் மேலெழுந்து மேகத்தைச் சென்றடையும். ( நிர்மாணம்!!!, உங்க சிந்தனை சூப்பர் ...!!! )
//எதற்காகவோ இருப்பழியும் காலம்
யானுளம் கலங்கி
யாவதும் அறியேன்
ஓதுவதற்கு ஒப்பாருமில்லை
ஒழிக என் கூதற் காலம்!///
ஏதோ ஒரு காரணத்தினால் இருப்பு அழியும் காலமிது. எனக்கு ஒரே கவலை. ஒன்னும் புரியல. அமர்ந்து படிப்பதற்கு ஒரு பார் கூட திறந்து இல்லை. எனது கூதற் காலம் (அப்படின்னா அது ஒரு வகையான காலம்) ஒழிக.
//நெடும் புனல் நீக்கிய மறைப்பில்
துயிலிழந்த தெருவோரத்துக் கண்மாய்
பெரு நரிக்குக் கொண்டாட்டம்
துள்ளிக் குதிக்கும் மீனுக்கு அழிவு
இளநிலாக் காயும்
இருளாற் கவ்வும் இயக்கமும் அதுவாய்//
(இது கொஞ்சம் கஷ்டம் தான்)... புனல் என்றால் நீர். நீர் இல்லாத மறைவான தெருவோரத்தில் தூக்கமின்றி திரிந்த ஒரு பெரிய நரிக்கு கொண்டாட்டம். (மற்றதெல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.)
//எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்
எங்கேயும் கெந்தகப் புகையுண்ட குறை முகங்கள்
வல்லூறு வட்டமிட
ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது//
தமிழ்தேசத்துல பாஸ்பரஸ் புகை ஜாஸ்தியாம். வல்லூறும் ஜாஸ்தியாம். வல்லூறுக்கு ஊழ்வினை வந்து செத்துடிச்சாம். (புரிஞ்சிச்சா ?)
//பொன் திகழ் மேனியொடு பலர் தோன்றி
செங்கோல் காட்டிச் சொல்லிய கதைகளும் ஆறிய கஞ்சி
இருளிடை புகுந்த ஒளிமுதற் கடவன்
கோன்முறை வெடிபட வருபவர்//
(உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். புரிஞ்சிச்சுன்னா சொல்லுங்க பார்ப்போம்)
அடுபுலி அனையவர்
படுகடன் இது?
அடாத புலிகள் அனைத்தும் படவேண்டிய கடன் இதுவா ?
//16.112007//
மாதம் 16 தேதி 112 ஜேம்ஸ்பாண்டு
ஜேம்ஸ் பாண்ட்,தங்கள் பொழிப்பு நன்றாகவே மனித இருப்பைக் குறித்து மதிப்பீடு செய்கிறது!இந்தத் தோரணத்தில் தொங்குவது மனிதம்தான் அறிக,நண்பரே!நன்றி,தங்கள் முயற்சிக்கு!
//மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்//
மதிலோரத்துல இருக்கும் ஒரு ஓணானுக்கு ஒரு வயிறு இருந்தது. அது சாப்பிட்டுவிட்டு அது வெளியேற்றும் யூரின் ஒரு ஓரமாக கொட்டும். அதனால் தூசிகள் மேலெழுந்து மேகத்தைச் சென்றடையும். ( நிர்மாணம்!!!, உங்க சிந்தனை சூப்பர் ...!!! )
இது ஒரு அற்புதமான கற்பனை ஓனானின் ய்ய்றின் தூசிபோன்று மேலெலுந்து மேகத்தை அடையும் எனது கொஞ்சம் ஓவர்...தூசிபோண்று தூவும் என வந்திருக்கவேண்டும்.
இவன் கவிதை பித்தன்.
Kommentar veröffentlichen