Montag, 21. Januar 2008

குடுமிச் சண்டையில் ஒரு கூத்து!

குடுமிச் சண்டையில் ஒரு கூத்து!


ஆரவாரத்தின் விளிம்பில்
சில அறிமுகங்கள்
அடுத்தவனின் குடிலில் தொங்கும்
இன்னொருவனின் சொத்து
அதையும் உரிமம் கொள் புயல் வீச்சு


அனைத்துக்கும்
அவசியமில்லாச் சண்டையிட
"தர்ம நியாய" அண்ணனும்
தம்பிகளும்...
அங்கே,
அடித்து நொருக்கும் திசையில்
ஆராரோ நம்மை அழித்தபடி


நான் சொன்னாலென்ன
அல்ல
நீ சொன்னாலென்ன?
கொக்கரிப்பதால் கேடு எமக்குத்தான்
கருத்து வளையங்கள் மாட்டுவதற்கு அழகுதான்
ஆனால்இ
சாவதென்னவோ மானிடமல்லவா?





எதையும் சரியாகச் செய்துவிட
இதுவொன்றும் எதிரிகளற்ற பெரு வெளியல்ல
குடும்பத்துக்குள்ளேயே பாரிய எதிரிகள் இருக்க
இணையக் குடிகளுக்குள்...
குட்டிப்பார்ப்பதால் கோவணம் கிழியலாம்
கோட்டையைப் பிடிக்க முடியுமோ?


அந்தந்தத் தளத்துக்கு அவசியங்கள் அடுக்காய்
வெளித் தள்ளப்படும் குற்றக் கம்பத்தில்
கட்டப்படும் அறிவுக்கு நெத்திச் சூடு!
நெருப்பிலிட்டுச் சாம்பலை நெற்றியில் அணியச்
சில முனைப்புகள்!


ஏங்கிக் கிடக்கும்
மக்களின் பெயரில்
நாம்
வேட்டைக்குப் புறப்பட்டோம்
இடையினில் புகுந்த
கரடியின் வலுக் கரத்தால் சிதறிக் கொண்டோம்


இன்னும் கரடிகள் கூட்டம்
நமது வாசலில்
காட்டிலிருந்து வீடு மீளக் கனவிலும் நினைக்கா நாமோ
நடுக்காட்டில் குடுமிச் சண்டையில்...


கரடிகளின் கனவுகள் வலுத்தபடி
கண்ணீரில் மிதக்கும் மக்களின் முதுகில் சவாரியிட
சாவதற்கும் சில பாலகர்கள்...


இவர்களின் பெயரால்
நானும்இநீயும்
நடுத்தெருவில்...

Keine Kommentare: