Freitag, 18. Dezember 2009

சாதல் வைபோகமே!...

தோல்வியின் விளிம்பில் நிற்பினும் தோழி உன்றென் முகமொடு மொட்டவிழ்க்கும் என் இதழொடு ஊசாலாடும் உயிர்.
இளைய இதயம் உடைந்தேகுமாயின் நட்சத்திரங்களது புன் நகையொடு நீ பேசிடுவாய்,புன் நகைகொண்டு என்னையும் கொன்றிடுவாய் கூடவே அன்று.
தூரவெளி துவக்கும் நீலத்துள் நிலவும் உன் இருள் சுமக்கும் கூந்தலில், நான் கனவுக்காகத் தரித்து வைத்த மல்லிகை மொட்டவிழ்த்போது என் தோளினுள் தொங்கிய கொலைக்கான இரும்புக்கு ஏப்பம் வந்ததென மேனியொடுக்கி நீ, மௌனித்தாய்.
 
நீ,ஏழை என்னைப் போல்,எங்கள் கனவுகளுக்கு அன்பு செலுத்தப் பஞ்சமில்லையெனினும் முழுமையான ஆன்ம விருப்பு அகப்பட காலம் நீண்டபடி இருந்ததே!
 
காதல்!
Wenn junge Herzen brechen,
So lachen drob die Sterne,
Sie lachen und sie sprechen
Herab aus der blauen Ferne:
"Die armen Menschen lieben
Sich zwar mit vollen Seelen,
Und muessen sich doch betrueben,
Und gar zu Tode quaelen.
Wir haben nie empfunden
Die Liebe,die so verderblich;
Den armen Menschen drunten;
Drum sind wir auch unsterblich".
-Heinrich HEINE in Ramsgate.
வான் எட்டும் தொலைவில், வாழ்வு தூரச் செல்லும்.
 
ஆதராமற்ற ஒன்றில், அவிழ்ந்து போகும் ஆசைகள் முறித்தெறிந்தவுணர்வில் வரண்டது இதயெமென்றால்-வாழ்வென்பதன் தொடரில் சாவுக்கான தேதி தேடுதல் குடும்பம்.என்னைக் கொல்வதற்கு நானே உன்னை வருத்தியபோது ஊழென உருண்டாய்...
 
தேசம் தொலைத்தவன்.
 
தோன்றியதன் திசையுள் உன்னைத் தொலைத்தேனா?

 
நாங்கள் காதலைப் பரிமாறியதில்லை-அன்பைப் பருகிக் கொண்டதென்று அப்பப்ப ஆசையைக் கட்டி மோதலைக் கொண்டோம்.எத்தனை இரவுகளுக்கு ஏங்கிக் கிடந்த கனவுகள் எப்பவும் விடியலைத் தரிசித்திருக்கவில்லை.எனக்கும் மரணமில்லையென நீ அவிழ்த்த பொய்யில், நான் தொலைத்தது என் வாழ்வின் திசையை.
 
தேடுகிறேன்.
 
திசை புரியாத வழிமீது உனைச் சுமந்து வரும் காற்றில், என்னைத் தொலைக்கும்போது நான் மரணிப்பேன்!
 
ஆம்!நாங்கள் வாழ்ந்திருந்தோம் விழிமீது ஒருவரைச் சுமந்து.
 
எப்போதெல்லாம் கனவுகளுக்குப் பஞ்சமோ, அப்போதெல்லாம் சுமையிறக்கி ஒருவரையொருவர் புணர்வோம்.
 
அற்புதம்.
 
அகமொடு கனவுடையும் ஒவ்வொரு நாளியும், காதலெனும் வாழ்வு கனிந்திருந்து இதயமொடு அன்புரைக்கும்.கேட்டபோது தருவதற்கு அது செழுமையொடு தேனொழுகும் பருவத்தைச் சிதைக்கும்.
 
காலத்தில் வாழ்வதற்கு கருவறுக்கும் சொந்தம்.
 
அப்புக்கு ஆச்சி காதலொடு சேர்ந்திருந்தாளாம்.அம்மாவுக்கு அப்பா காதலுக்கு மதிலமைக்கக் கைப்பிடித்தாராம்.
 
எப்போதெல்லாம் இளமையைப் புரிந்தோம்?
 
இளமை குறித்துச் சொல்லும் போது, சுகமொடு வானெட்டும் ஆசைகொண்டு மெய்சிலிர்க்கும்.எத்தனையோ இரவுகளில் தொலைந்திருந்த உலகம் மாயமொடு மண் நினைக்க வரண்டது வானம்.தொலைந்தது இளமை அகதியெனக் கோலந் தாங்கி.

 
வாசமுதிரும் வசந்தம் உடம்பொடு உருகும் இளமை.
 
எல்லாந் திருடிய கனவு விடியமறுத்த தேசமாய் வேதனையை விட்டுச் சென்றிருக்கு.
 
வசந்த ருதுவுக்கு வண்ணமில்லை-மலரும் இல்லை.வாடிய பூவுக்கு வாழ்கைதாம் உண்டோ-இல்லையென்பவர் எவரிங்கே?மண்ணொடு மோதிக்கொள்ளுமொரு கணத்தில் வாழ்வொன்றுண்டதற்கு.
 
வாய்மொழிக்கு ஒலியுடைவு பிரசவமில்லையா?
 
வான்போற்றும் உழவனுக்கு மழையொடு காதலெனக் கொண்டவர்க்கு, சோறுதாம் அவன் சுகமெனச் சொல்லி உண்பதுவே காதலாகிச் கசிந்துருகிச் சேலைகொண்டொருத்திச் சுகம் விசாரிக்க...
 
காதலெனும் திசையில் கண்வருத்தி நீரிறைத்து, நெஞ்சு வலிக்க முகங்கொள்வாள் முதற்காதல் முன்னுரையாம்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
18.12.09

Keine Kommentare: