Freitag, 4. Dezember 2009

இனியொரு,தமிழரங்கம் விவாதத்தில் நாம்...

அன்பு வாசகர்களே,வணக்கம்!,

இனியொரு தளத்தில் நடைபெறும் விவாதம்,அசோக்-இரயாகரன் ஆகிய இருவருக்குமிடையிலானதாக எவரும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை.
அது,சமூகஞ்சார்ந்து-மக்கள் நலன்சார்ந்து இயங்கும் அனைவர்மீதுமான விவாதாமாகவே பார்க்கப்பட்டாகவேண்டும்.

இதுவரை காலமாக இயக்கவாத மாயைக்குள் தம்மைத் திணித்திருந்தவர்கள் மக்களைக் கொலைகளின்வழி அடக்கிய தமது வரலாற்று நியாயத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.

இதுள்,மக்களது நலன்களைத் தூக்கிப்பிடித்து, இதுவரை இத்தகைய மனிதவிரோத அரசியலை அம்பலப்படுத்தியவர்கள் மேலும் மௌனித்திருப்பது,மக்கள் விரோத அரசிலை மேலும் வலுப்படுத்தும்.எனவே,இது குறித்துத் தமிழரங்கத்தில் விவாதிக்கும் தோழர் இராயகரனும்,இனியொருவில் ஒரு கட்டுரை எழுதிவிட்டு பின்னூட்ட அரசியல் நடாத்தும் அஷோக்கும் மக்களது அரசியல்மீது தமது பார்வைகளையும்,கடந்தகால தமது அரசியல் நடாத்தையும் மறு வாசிப்புச் செய்கின்றனர்.
 
இதுள், சந்தடி சாக்கில் திரு.நாவலன் புகுந்து ,சிவசேகரத்தின் பின்னூட்டத்தோடு"இனியொருவுக்" நற்சான்றிதழ் தர முனையும் அரசியலை நாம் கேள்விக்குட்படுத்துவோம்.
 
இன்றைய இவ்வரசியல் விவாதம் குறித்து நாம் விரிவாக விளங்கிக்கொள்ள, நிர்மாணத்தில் தொடர்ந்து எனது அபிப்பிராயங்களை எழுதுவேன்.அதன் ஆரம்பமாக இது தொடர்கிறது.
 
உண்மைகளைத் தேடி விவாதிப்போம்.

மக்களை ஒட்டக் கருவறுக்கும் அனைத்து அரசியல் நாடகத்தையும், நாம் கேள்விக்குட்படுத்துவோம்.

வாருங்கள்,

அவதானியுங்கள்.
 
அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
04.12.2009
 
 
  பிரபலங்களின் அவசியம் கண்ட நாவலன்
 
 
நாவலன்,உங்கள் பின்னூட்டம் குறித்துக் கருத்துப்பகிர்வது அவசியமென நினைக்கிறேன்.
 
அப்போதுதாம் நம்மெல்லோராலும் கொல்லப்பட்ட(படும்) மக்களது ஆன்மா சாந்தியடையும்.
 
சிவசேகரம் எழுதியதாகச் சொல்லப்படும் பின்னூட்டத்தை, புதிய ஜனநாயக்கட்சி அனுதாபி-உறுப்பினர்,தினக்குரல்"மறுபக்க"பத்தி எழுத்தாளர் சி.சிவசேகரம்தாம் எழுதியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்கிறேன்.அப்படித்தாம் நீங்களும் சொல்லி "நியாயம்" பேசுகிறீர்கள்.
 
நாவலன் சிவசேகரத்தின் முத்திரை (மார்க்) அரசியல் இருப்பைக்கொண்டு,அசோக்கும்,இனியொருவும் சமூகஞ்சார்ந்து ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஊடகம் எனச் சொல்வதற்கு சிவ சேகரத்தின்"தீர்ப்பு-வேண்டுதல்"துணைக்கு எடுத்துக்கொள்கிறார்.
 
நாவலன் கருத்துப்படி,இனியொருவைச் சமூகஞ்சார்ந்த தத்துவார்த்த விசாரணைக்காக ஆக்குவதற்கு நமக்குச் சிவசேகரம் தேவை என்றாகிறது.இதனால்,சிவசேகரம் அவர்கள் பெரும் பேறடைய முடியுமென எண்ணிக்கொள்வோம்.
 
நல்லது.
 
இதுவரை, புலிகள் பாசிசமாக வளர்ந்து உலகு பூராய்த் தமிழ்ச் சமுதாயத்தின் மாற்றுக்குரல்வளைகளை முறித்தபோது,சிவசேகரமும்,நீங்களும் கடந்த பத்தாண்டுகளாக என்ன செய்தீர்களென இப்போது கேட்பதைவிட,உங்களது முயற்சிகள் குறித்துத் தேடலை ஆரம்பிக்கிறேன்.அதிலிருந்து நீங்கள் புலிகள் அழிவுக்குப்பின் கொண்டுள்ள"சமூகவூக்கத்தை"ஆய்வுக்குட்படுத்துவோம்,பிறதொரு சந்தர்ப்பத்தில்.இங்கே-இனியொருவில் அல்ல!
 
இது அவசியமானது.
 
தமிழ்ச்சமுதாயம் மிக மோசமான பாசிச ஒடுக்குமுறைக்குள் கடந்த பத்தாண்டுகளுக்குமேலாகக் கிடந்து அவலப்பட்டபோது, அதையெங்ஙனம் எதிர்கொண்டார்கள் என்பதை உங்கள் இன்றைய குரல்களிலிருந்து இனம் காணுவது அவசியந்தாம்.அங்கே,உங்களது பாத்திரம் அறிமுகமாகிறது...
 
 
இதன்பொருட்டு,ஒரு அவசரமான நோக்கிலிருந்தபடி(...) நாவலன் தங்கள் பின்னூட்டத்திலிருந்து சில நோக்கங்களை இங்ஙனம் பார்ப்பதற்கு நாமும் முனையலாம்:
 
 
1):அசோக்கினது"இனியொரு"சமூகஞ்சார்ந்த தத்துவார்த்த விசாரணைக்காகப் பயன்படுத்துவதை வலியுறுத்த நாவலன் அவசியமாகிறது.
 
 
2):சிவசேகரம்தம் இரண்டுவரிக் கருத்தை மொட்டையாக"ரயா-அசோக்"தராசில் நிறுத்திச் சமூகத்தைப் பொதுமைப்படுத்துவது.
 
 
3):சிவசேகரம் கூறுவதால்"இனியொருவுக்கு"சமூக அக்கறைசார்ந்த போராட்டமும்,திசைவழியும் இருப்பதாக மலிவு விளம்பரம் தேடுவதும் உங்கள் ஆர்வமாகிவருவது.
 
 
4):தமிழ்ச் சமுக எண்ணவோட்டத்துக்குரியதான அதே பாணியில்,ரயாகரன் குறித்த முன் தீர்ப்பைச் செய்வதில் (ஆக சமூக அக்க்றையுடனான அசோக்கின் கட்டுரைக்கு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ரயாகரன் போன்ற ஒருவரின் பதில் எவ்வாறு அமையும் என்பதை இனியொரு வாசகர்கள் புரிந்து கொண்டு...)உங்கள் "ஆய்வுப் புத்தியை" மீளவும் சிவசேகரத்தின் குரலோடு பொருத்துவது.
 
 
 
5):இதுவரையான இராயவினது கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்காது இருந்துவிட்டு,சிவசேகரத்தின் துணையுடன் வாசகர்களை அணுகுவது.
 
 
இந்த "இனியொரு" ஊடகப் பண்பின் இருப்புமீது எழுப்பப்படும் சமூக அக்கறை சார்ந்த கேள்விகளை, நாம் சிவசேகரம் தரும் "நற்சான்றிதழ்"குரல்கொண்டு மறுத்தொதிக்கிவிட்டுவிடவேண்டுமெனச் செய்யும் மலிவு அரசியல் இருக்கே இது நாணையமுடையதாக இருக்குமாவெனச் சிந்தியுங்கள்.
 
 
இப்போது நம் "எல்லோருக்குமே"இருப்பு அவசியமாகப்படும்போது, அதை முன்நிறுத்தப் பிரபலங்கள் தேவைப்படுகிறது.நடாத்துவோம் நண்பர்களே-நடாத்துவோம்.
 
 
நேர்மையும்,நாணயமும் அதுகொண்ட மக்கள் நலன் நோக்கங்களும், நிச்சியம் எங்கள் எல்லோரிடமிருந்தும் மக்களைக் காக்கும்.
 
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
 
04.11.2009
 
 
 
http://inioru.com/?p=7948

 
 
//Sivasegaram

Posted on 12/04/2009 at 5:33 am

Please study the issues with care before shooting off your hip.The article here are in response to slanderous accusations by one who claims to be holier than holy.

The response is carefully written and limited to matters of political and public interest.Do not call it private mud slinging.

It has been Rayakaran who had done that for long and got away with it because many of his victims do not speak the same kind of language.That kind of abuse should stop in the Tamil political e-space (I mean the serious websites and not the trivial ones).

I think that the issues are more or less settled and it is up to Rayakaran to answer the charges, concerning his political stand and falsification of information, rather than continue to indulge in further abusive writing.It will be best for all of us if we treat the public domain with a greater sense of responsibility.

I very much appreciate the restraint shown by Ashok Yogan, and think that the best way of dealing with further abuse is to ignore it.//
 

//நாவலன்
Posted on 12/04/2009 at 7:18 am

அசோக் யோகன் எழுதிய கட்டுரை என்பது ரயாகரன் மீதான தாக்குதல் அல்ல. சமூக அக்கறையோடு எழுதப்பட்ட நேர்மையான விமர்சனம்.மறுபுறத்தில் தனிமனித தாக்குதல் என்பது ரயாகரனின் தொழில். சமூகம் குறித்தோ, அதன் வளர்ச்சி, வர்க்க நிலைகள், சர்வதேச உறவுகள் என்று எம்முன்னால் நீண்டு கிடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு, யார் யார் சமூகத்தைப்பற்றிப் பேசுகிறார்களோ அத்தனை பேரையும் சேறடிப்பது ரயாகரனின் தொழில்.

இத்தனை வருடங்களின் ஏதாவது தத்துவார்த்தப் பிரச்சனை குறித்து அவர் விவாதங்களை முவைத்திருக்கிறாரா? இல்லை. எல்லாமே தனிமனிதத் தாக்குதல்கள் தான். யார் எப்போது எந்தப்பக்கம் என்பது மட்டும்தான் இவரின் ஆதங்கம்.சமூக அக்கறையும் மக்கள் பற்றும் கொண்ட தோழர் சிவசேகரம், தோழர் அசோக் யோகன் போன்ற பலரை இவர் தான் நினைப்பது சரி என்று எண்ணியவாறே சல்லடை போட்டிருக்கிறார்.

குறிப்பாக புளட் அமைப்பின் கொலைகளுக்கு எதிராகப் போராடிய மூன்று குழுக்களில் அசோக் சார்ந்த தளக் குழு மிகப்பிரதானமானது. அது ரயாகரனின் இணைபுக்களே தெளிவாக்குகின்றன. இதற்கெல்லாம் பதில் எழுதினால் அவர் இன்னொரு பொய்யைக் கட்டவிழ்த்துவிடுவார்.இது தவிர ரயாகரன் தன்னை நியாயப்படுத்த வரலாற்றைப் புரட்டி நிகழ்த்தும் நாடகங்கள், குறிப்பாக விஜிதரன் போராட்டம் போன்றவை அதன் அரசியல் பின்னணியிலிருந்து அதில் ஈடுபட்ட மாணவர் தலைவர்களே ஆராய ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

எத்தனை இணையத்தளங்கள் எத்தனை தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன? இவற்றுள் தாக்குதலை நிரந்தரத் தொழிலாக வரித்துக்கொண்டவர் தான் ரயா.
ஆக சமூக அக்க்றையுடனான அசோக்கின் கட்டுரைக்கு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ரயாகரன் போன்ற ஒருவரின் பதில் எவ்வாறு அமையும் என்பதை இனியொரு வாசகர்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, தோழர் சிவசேகரம் கூறுவது போல் இனியொருவை சமூகம குறித்த தத்துவார்த்த விசாரணைக்குரிய தளமாக வளர்த்தெடுப்போம்.//

1 Kommentar:

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

இப்போது-இந்த நிமடம் இனியொருவில் கீழ்வரும் கேள்வியைக் கேட்டுப் பின்னூட்டியுள்ளென்.அதாவது வருமா?



P.V.Sri Rangan
Posted on 12/04/2009 at 8:04 pm
நாங்கள் போடும் பின்னூட்டுக்களை வெளியிட முடியாத அஷோக் ஆருக்காக அரசியல் செய்கிறார்?