Sonntag, 13. Januar 2013

ஷரியாவைக் காப்போம்!

>>Prof.Dr. Tariq Ramadan  presents itself as cosmopolitan liked, educated and smart. Young Muslims in Europe suburbs, he is an idol for many intellectuals, it is the flagship Muslim. But in fact, he preaches a regressive Islam.<<

ந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.

"இது,ஏன்? "என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, " இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் "இறையச்சம்" செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட "மேன்மை-நியாயம்" என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் டிராக்கோனியின்[draconian] சட்டவரைவின் கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்?" என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்!

எனக்கு இத்திரியாசைவிட பெரும் புலிகளான பாஷான் ரைபியையும்[Dr.Bassam Tibi-      Die islamische Herausforderung. Religion und Politik im Europa des 21. Jahrhunderts. Darmstadt: Primus. 3. Auflage, ISBN 3-534-22034-X Literatur/ Im Schatten Allahs. Der Islam und die Menschenrechte. München: Piper. ISBN 3492222854 ],ராறிக் ராமடானையும்[Prof.Dr. Tariq Ramadan- Radikale Reform: Die Botschaft des Islam für die moderne Welt, Diederichs, ISBN 978-3-424-35000-5  ],நன்றாகவே புரியும்.எனவே,இத்திரியாஸ் கூறும் [ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும் ]கருத்துக் கலவை வடித்தெடுத்த கயமையானது!ஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட    ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்?

யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய புலிகளைப் பாசிசப் புலிகளென்று சொல்லி அதை எதிர்த்து வந்த தமிழ்த் தேசியவினத்துக்குள்ளிருந்த பெரும் பகுதிச் சிந்தனையாளர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

நாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லை!ஆனால்,முற்போக்கு முஸ்லீம் அறிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த "சட்ட" அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்?

2:

திரு.மார்ஸ் அவர்களே,நீங்கள் எனது கருத்துக்களை அழித்துவிடுவதிலுள்ள சூழலைச் [dar asch-schahada ] சொல்வதில் நான் மறுப்பதற்கில்லை.மோடியையும்,குஜராத்தையும் நாம் மறப்பதற்கில்லை-மறுப்பதற்கும் இல்லை.என்றபோதும் ,புரிதலின் அவசியமும்,அதையொட்டிய ஆபத்துக்களைக் குறித்தும் பேசித்தாம் ஆகவேண்டும்.குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் " சிறப்பானது-நேர்மையானதென்பது" இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.

உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லை!இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.

1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as "progressive Islam". ;-) ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கானவொன நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண்ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும்மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறுவிளக்கமளித்துக்காக் முனைவதைச் சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கீழ்வரும் இணைப்பில் ஷரியாவால் எழுத்தப்பட்ட சட்டத்தின் அகோரத்தை இந்த இணைப்பிலுள்ள முகங்களில், அங்கங்களில் வாசித்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!

ப.வி.ஸ்ரீரங்கன்
13.01.2013

http://michael-mannheimer.info/category/scharia/

Keine Kommentare: