-பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்
ஒரு புறத்தில் சாதி என்பது கற்பனை எனக் கூறிக் கொண்டு மறு புறத்தில் அவர்களைக் கீழே அமுக்கி வைக்க முடியாததால் போலியான விதத்தில் வெள்ளாளர்களாக உயர்த்தி வைப்பதன் மூலம் சாதியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களாகிய நாம் ஒற்றைப் பரிமாணம் கொண்டவர்களாக என்றும் இருந்ததும் இல்லை. இருப்போம் என்பதும் சந்தேகமே. இது மனித சமூகத்தின் இயல்பு நிலை சம்பந்தப்பட்டது. சிங்கள மக்களை எடுத்துக் கொள்வோம். அவர்களே இலங்கையை ஆள்கிறார்கள். முக்கியமான முடிவுகளின் வெளிப்பாடுகளை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இவை எமது உறவு சம்பந்தப்பட்டவை என்பதை அவர்களும், தமிழர்களாகிய நாமும் அறிவோம். இவர்கள் ஏன் போராடுகிறார்கள்? என பல சிங்களக் கல்விமான்கள் அடிக்கடி ஆச்சரியத்துடன் கேட்பார்கள். புலிகளின் தோற்றத்தின் பின்னரே தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக பல சிங்கள கல்விமான்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
அவர்களைப் பொறுத்தவரையில் தமது ஆட்சி யாளர்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கடந்த காலங்களில் தமிழர்களை நன்கு நடத்தி இருப்பதாகவே கருதுகின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையர்கள் பலரும் தமது ஆட்சியாளர்கள் கறுப்பர்களை நன்கு நடத்தியதாகவே நம்பினார்கள். தமது குடியேற்ற ஆட்சிக்குட்பட்ட மக்களுக்கு தாம் சிறந்த நாகரிகத்தைப் போதித்ததாக பிரித்தானியர்கள் நம்பினார்கள்.
இதேபோன்று தமது நுகத்தடியில் வாழுகின்ற தமிழ் மக்கள் சுமைகளோடு வாழ்வதாக தமிழ் ஆட்சியாளர்கள் எப்போதாவது உணர்ந்தார்களா? அதற்கான சாத்தியமுண்டா?
தமிழ்ச் சமூகம் மாபியா போன்ற வெள்ளாள சமூகத்தினரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை மிகவும் ஆணித்தரமாக முன்வைக்க விரும்புகிறேன். புலிகளின் தலைமை அச்சமூகத்தைச் சார்ந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் அறிவுத்தளம் வெள்ளாள சமூகத்திடம் தான் உள்ளது. றோமன் கத்தோலிக்கரும், கரையோர மக்களும் கீழ்ச் சாதியினர் என நியூயோர்க் இலங்கைத் தமிழ்ச் சங்கம் தனது வெளியீட்டில் தெரிவித்திருந்தது.
Prof.Dr.Ratnajeevan H.
தற்போது வல்வெட்டித்துறையில் வாழும் மக்களை உயர்ந்த அரச வம்ச சாதியாகக் காட்டும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. தலைமைத்துவத்தை அங்கீகரிக்கு முன் சாதியை உயர்ந்த அந்தஸ்திற்கு எடுத்துச் செல்வது அவசியத் தேவையாகியுள்ளது. நாவலரை உயர்ந்த இந்துவாக உயர்தியதன் பின்னரே அவர் மொழிபெயர்த்த பைபிளின் சிறப்பு விபரிக்கப்பட்டது. உயர்ந்த சாதியினரால்தான் உயர்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் என்பதை நிருபித்த பின்னரே பாலசிங்கம் மாமனிதராக்கப்பட்டார். இது வெள்ளாள சமூகத்தினரால் ஈழப் பிரச்சாரத்தில் முன்வைக்கப்படும் தத்துவார்த்த விளக்கங்களாகும். போராட்டத்தில் இறப்பவர்களுக்கு ஓர் சமூக அந்தஸ்தினை வழங்க எடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடாகும்.
புலிகளில் வெள்ளாளர் அல்லாதோர் உள்ளனர். அவர்கள் அதிகாரத்தின் உச்சநிலையில் உள்ளார் கள் என்பதும் உண்மையே. முதலில் உயர் சாதியர் யார்? என்பதனை விளக்கினால் மட்டுமே அதிகாரத்தில் இருப்பவரை அங்கீகரிப்பது நியாயப் படுத்தப்பட முடியும். அதுவரை இவை தொடரும். இன்னும் இரண்டு தலைமுறை சென்றால் அவர்களும் வெள்ளாளர் அல்லது சைத்திரியர் ஆகிவிடுவர்.
கடந்த 2007 ஆகஸ்ட் 6ம் திகதி புலிகளின் tamilnet என்ற இணையத் தளத்தில் பறையர் சமூகத்தினர் என்போர் தமிழ்ச் சமூகக் கட்டமைப்பில் மிகவும் சிறப்பு மிக்க வழித் தோன்றல்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணையத் தளத்தின் ஆசிரியர்களை பறையர்கள் என அழைத்தால் மகிழ்ச்சி அடைவார்களா என்பது சந்தேகமே. இதுவே வெள்ளாள சமூகத்தின் போலித்தனமாகும். ஒரு புறத்தில் சாதி என்பது கற்பனை எனக் கூறிக் கொண்டு மறு புறத்தில் அவர்களைக் கீழே அமுக்கி வைக்க முடியாததால் போலியான விதத்தில் வெள்ளாளர்களாக உயர்த்தி வைப்பதன் மூலம் சாதியத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அமுக்கி வைக்க முடியாவிடில் தெரிவு செய்து தமது மட்டத்தில் தற்காலிகமாக வைத்திருத்தலாகும்.
வெள்ளாள சாதியினரின் அதிகார முன்னிலைப் படுத்தலும், மேற்குலக நாடுகளில் புதிதாகத் தோன்றியள்ள பணக்கார வர்க்கமும் இணைந்து புதிய தொழிலில் செயற்படுகின்றன. இவர்கள் அவர்களது குடும்ப வரலாறுகளுக்கு புதிய விளக்கம் அளிக்கின்றனர். பழைய அரசர்களின் காலத்திற்குச்; சென்று ஆதாரங்களைத் திரட்டி விளக்கம் அளிக்கின்றனர். பண்பாடான கலாச்சாரத் தினை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கொண்டிராத பலர் சிறந்த பண்பாட்டு குடும்ப மரத்தின் வாரிசுகளாக விபரிக்கப்படும் வரலாறுகள் தற்போது எழுதப்படுகின்றன. றோமன் கத்தோலிக்கர் என்போர் கீழ் சாதியர் என வர்ணித்த தமிழ்ச் சங்கம் வெளிநாட்டில் வாழும் இன்னொரு றோமன் கத்தோலிக்க குடும்பத்தினரை ஆரிய சக்கரவர்த்தியின் வழித்தோன்றலாக வர்ணித்து எழுதியுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி இவ்வாறான மடத்தனமான சமூகப் பிரக்ஞையே இல்லாத வெளிநாட்டுத் தமிழர்களின் கையில் சிக்கிச் சீரழிவது நம்பகரமானதாக அமையுமா?
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் புலிகளின் ஆலோசனையாளர்கள் என அழைக்கப்படுவோர் பலரும் வெள்ளாளர்களே. இந்த உண்மையை இவர்களால் மறைக்க முடியாது. சட்ட ஆலோசகர்களாக பேச்சு வார்த்தைக்குச் சென்றவர்கள் வெள்ளாளர் அல்லாதோர் என்ன செய்யவேண்டுமெனக் கூறுவார்கள். இவர்கள் ஒரு காலத்தில் எதிரிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள். இவர்கள் வெள்ளாள குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் என்பதை விட தாம் அவ்வாறான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனக் கூறியே வாழ்ந்த பின்னணியைக் கொண்டவர்கள்.
இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம். தமிழ் தலைமையைப் பார்ப்போம். யாழ்ப்பாணத் தலைமையினால் சகல தமிழரையும் முன்னெடுத்துச் செல்ல முடியுமா? எமது கடந்த கால தமிழ்த் தலைமைகள் ஏன் மக்களால் தோற்கடிக்கப்படார்கள் எனபதை இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் சிங்களத் தலைமை அவதிப்படுவது போல் இன்றைய தமிழ்த் தலைமைகளால்; தொடர்ந்து செல்ல முடியுமா? கிழக்கு மாகாண மக்களின் கணிசமான ஆதரவு இல்லாமல் கருணாவால் இவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியுமா? என கிழக்குப் பல்கலைக்கழக கல்விமான்களால் உறுதிபடக் கூற முடியவில்லை. மண்ணுக்குள் தலையைப் புதைத்து வைத்துக் கொண்டு நீண்ட காலம் இந்த உண்மையை மறைக்க முடியாது.
சிங்கள ஒடுக்குமுறையிலிருந்தும், விஸ்தரிப்பில் இருந்தும் வௌ;வேறு குழுக்களாக உள்ள மக்கள் வௌ;வேறு விதங்களில் போராடி வருகின்றனர். கிழக்கு மாகாண மக்கள் யாழ். மேலாதிக்கத்தில் இருந்தும் தம்மை விடுவிக்க முயற்சிக்கின்றனர். கீழ்சாதி மக்கள் வெள்ளாள அதிக்கத்திலிருந்து விடுதலை பெற போராடுகின்றனர். சிங்கள, தமிழ் மேலாதிக்கத்திற்கு இடையில் நசுங்கியுள்ள முஸ்லீம் மக்கள் தம்மை விடுவிக்கப் போராடுகின்றனர். தமிழ் புரட்டஸ்தாந்து சமூகத்தினர் இன்றுள்ள புதிய ஒழுங்கிலிருந்தும் தம்மை விடுவிக்க அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். மேற்கு நாடுகளில் தம்முடைய ஸ்தானத்தைப் பலப்படுத்துவதும் ஒரு போராட்டம்தான்.
முஸ்லீம் மக்கள் சம்பந்தப்பட்ட எமது பிரச்சாரத்தைப் பார்ப்போம். 27 சதவீதமான தமிழர்கள் வாழ்வதாக சேர். பொன். இராமநாதன் முஸ்லீம் மக்களையும் தமிழ் பேசும் மக்கள் எனக் கூறி இணைத்தார். சேர். ராசிக் பரீத், மற்றும் முஸ்லீம் தலைவர்கள் தம்மைத் தமிழர்கள் என அழைப்பதை விரும்பவில்லை. தமிழரசுக் கட்சி ஒரு வகையில் பாலமாகச் செயற்பட்டு அவர்களது வாக்குகளையும் பெற்றது. எம்மோடு வாழத் தகுதி அற்றவர்கள் என்பதால் அவர்கள் துரத்தப்பட்டதால் இவை யாவும் தற்போது பூச்சியத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில் நாம் மொத்த தமிழ் மக்களுக்காகவும் பேசத் தகுதி உள்ளவர்களா?
70 களில் மலையக மக்களை வன்னியில் வந்து குடியேறுமாறு உற்சாகப்படுத்தப்பட்டது. இதனால் இவர்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே பாதுகாப்பு கேடயமாக இருப்பார்கள் எனக் கருதினார்கள். மலையத்திலிருந்த பிச்சைக்காரர்கள் யாழ்ப்பாண நகரத்திற்கு வந்தபோது எமது சகோதர வாஞ்சை வேறு விதமாக இருந்தது.தமிழ்பேசும் மக்களின் போராட்டம் என்பது மிகவும் விசாலமானது. சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக போராடுவது என்பது சகல சிறுபான்மையினரினதும் ஆதங்கங்களின் கூட்டாக இருத்தல் வேண்டும்.
P/S:துப்பாக்கி நிழலில் தூங்குவதாக நடிக்கும் சாதியமைப்பை "தமிழீழத்தில்"அறிந்து,கருத்தாட இதையும் படியுங்கள்:தேசத்தில் தலித் சிறப்பிதழ்
நன்றி:தேசத்தில் தலித் சிறப்பிதழ்
18 Kommentare:
//Labels: ஈழத்தில் சாதியில்லை, எங்கப்பன் குதிருக்குள் இல்லை-இல்லவேயில்லை//
அதுசரி தேசம்நெட் எந்தக் குதிருக்குள் இருந்து தோன்றியது?
இவ்வளவுகாலமும் எங்கே போனார்கள் இவர்கள்?
திடீரென இணையத்தளங்களும் மாநாடுகளும் தோன்றுகின்றன.
ஈழத்தில் சாதியில்லை என்று எவர் சொன்னார்கள்? ஆனால் திடீரெனப் பேசத் தொடங்குவோரது நோக்கம் என்ன? அரசியல் என்ன? என்பவையே யோசிக்க வைக்கின்றன
தேசத்தின் தலித் சிறப்பிதழ் ஒக்ரோபர் நவம்பர் 2007 காலத்துக்குரியது.
thesamnet.net இணையத்தளம் பதியப்பட்டது 10 ஒக் 2007
இந்தத் தலித் போராளிகள் எல்லோரும் எங்கே இருந்தார்கள் இத்தனை ஆண்டுகளாக?
கூலின் கட்டுரை ஈழத்துத் தலித்துக்கள் பற்றிக் கவலைப்படுகிறதா? அல்லது புலிகளின் போராட்டத் தலைமை மற்றிக் கவலைப்படுகிறதா?
இவர்களது ஒரே நோக்கம் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என நிறுவுவது தான்.
அவ்வாறு நிறுவியபின்னர் அரச அடிவருடிகளைச் சாட்சிக்கு வைத்துத் தாம் விரும்பும் தீர்வொன்றைத் திணிப்பதுவே இலங்கைப் பேரினவாத அரசின் நோக்கம்.
இப்பொழுதாவது யோசிப்போம் - தலித் மாநாட்டின் நோக்கம் என்னவென்பதனை.
//அதுசரி தேசம்நெட் எந்தக் குதிருக்குள் இருந்து தோன்றியது?
இவ்வளவுகாலமும் எங்கே போனார்கள் இவர்கள்?
திடீரென இணையத்தளங்களும் மாநாடுகளும் தோன்றுகின்றன.
ஈழத்தில் சாதியில்லை என்று எவர் சொன்னார்கள்? ஆனால் திடீரெனப் பேசத் தொடங்குவோரது நோக்கம் என்ன? அரசியல் என்ன? என்பவையே யோசிக்க வைக்கின்றன//
உங்களது கேள்வியிலிருந்தே உங்கள் வாசக விசாலம் தெரிகிறது.
இருந்தும் நமது கடமை?பணி செய்து கிடப்பது!
...ம்,சொல்வோம்.கடந்த பல வருடங்களாக இச் சஞ்சிகை தொடராக வந்தவண்ணமே இருக்கிறது.இலண்டனில் மிகப் பிரபல்யமான சஞ்சிகை.இவையெல்லாம் தீவிர வாசகர்களுக்குச் சொல்லத் தேவையில்லை-உங்களுக்காகச் சொல்லி வைக்கின்றோம்.
நன்றி:தங்கள் வருகைக்கும்-கருத்துக்கும்!
//உங்களது கேள்வியிலிருந்தே உங்கள் வாசக விசாலம் தெரிகிறது//
ஒற்றை முடிவுகளோடு கருத்துக்களைத் தூக்கி எறிவது உவப்பாக இருக்கிறது உங்களுக்கு.
தோழரே நாம் தேசத்தை அறிவோம். ஜெயபாலனையும் அறிவோம். அவர்களது அரசியலும் அறிவோம். தேசம் நெட் whois data வைப் போய்ப்பாருங்கள். எப்பொழுது தொடங்கினார்கள் என்பதை.
தேசம் இலங்கைக்கு வருவது மிகக் குறைவு. அதிலும் தமிழர் பிரதேசங்களை அடைவதே இல்லை எனலாம். அந்த வகையில் நான் வாசித்தது சில தேசம் இதழ்கள் தான். ஆனால் நான் கேட்டது தேசம்நெட் இணையத்தளம் தொடர்பாக.
வாசக விலாசத்தைக் கேள்விகேட்டு எள்ளி நகையாடுகிறீர்கள். ஈழத்தில் வாழும் எந்தத் தலித்துக்கும் கிடைக்க வாய்ப்பில்லை இந்தத் தேசம் இதழ்கள். எத்தனை இலகுவாகத் தூக்கி எறிகிறீர்கள் எல்லா விளிம்புநிலை மக்களையும். உங்கள் தேசம் இதழ் கிடைத்து அதனை வாசித்தால் தான் வாசக விலாசம்??
வாழ்க
தோழர் ஒரு சின்னக் கேள்வி.
பத்தாம் திகதி பதிவுசெய்யப்பட்ட தேச இணையத்தளத்தின் உள்ளடக்கம் பத்தொன்பதாம் திகதியே உங்களால் மீள்பிரசுரமாவதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?
//70 களில் மலையக மக்களை வன்னியில் வந்து குடியேறுமாறு உற்சாகப்படுத்தப்பட்டது. இதனால் இவர்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே பாதுகாப்பு கேடயமாக இருப்பார்கள் எனக் கருதினார்கள்.//
இதைச் செய்தவர்கள் காந்தீயம் ஆட்களல்லவா? அவர்களுக்கும் புளொட்டுக்கும் நிறையச் சம்பந்தம் அல்லவா? அப்படியானால் புளொட்டும் சாதிய இயக்கமேதானா? டேவிட், ராஜசிங்கம் எல்லோரும் வேளாளசாதிக்குத்தானா போராடினார்கள்? எழுபத்தேழிலே புலிகள் எங்கே இருந்தார்கள்?
எழுபத்தேழிலே மலையகத்தமிழரை அரவணைத்துக் குடியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்கு வேளாள யாழ்ப்பாணச்சமூகம் எழுபத்தேழிலே அரவணைத்துக் குடியேற்றத் தவறிய சமூகம் என்று எழுதிக்கொண்டிருப்பீர்கள்.
சரி அந்த நேரத்திலே நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?
தூ அசுரா உங்களை விட இன்னும் சிறப்பாக எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை உனக்கு இரண்டு கண்களும் போனால் சரி என்று சொல்லியிருந்தார்
||சுசீந்திரனின் உரையில் இலங்கை அரசானது « மகாவம்ச » மனநிலையில் இருப்பதாகவும் மேலும் அவரது பேச்சானது புலிகளின் தமிழ்த் தேசியத்திற்கு வலுவூட்டும் தன்மை கொண்டதாகவம் காணப்பட்டதனாலேயே அவர் மீதான விமர்சனங்கள் காரசாரமாக இருந்ததாக அறிந்தேன். மேலும் புலிகள் இந்தியாவிலிருந்து; தமது பிரச்சாரத்திற்காக நெடுமாறன், திருமாவளவன் போன்றோரை அழைக்கும் சிரமத்தை குறைப்பதற்கு, சுசீந்திரனை அவர்கள் உபயோகிக்கும்படி எம்.ஆர். ஸ்டாலின் பரிந்துரை செய்ததாகவும் அறிந்தேன். நான் இருந்திருந்தால் பகவத்கீதை மனநிலையில் உள்ள சமூகத்தைவிட மகாவம்ச மனநிலை கொண்ட சமூகம் ஒன்றும் அபாயகரமானதல்ல எனும் பதிலை நண்பன் சுசீந்திரனுக்கு கொடுத்திருப்பேன்.||
புலிகளிலே உள்ள வெறுப்பிலே எதையும் செய்யத் தயாரானவர்கள் இன்று தலித் ஆதரவு வேடம் எடுத்திருப்பது வியப்பில்லையே
தமிழச்சியின் தலித் கூடல் விளம்பரம் இது
தலித் மகாநாடு அழைப்பிதழ்
சபாலிங்கத்தின் கொலைநாளை ஞாபகப்படுத்தும் ஒன்றுகூடல் விளம்பரம் இது
சபாலிங்கம் ஞாபகார்த்த கூடல் அழைப்பிதழ்
இரண்டின் அமைப்பிலும் ஒற்றுமையைக் கவனிப்பவர்களுக்கு இவற்றினை நடத்துகிறவர்கள் ஒரே ஆட்களே என்று சொல்லித் தெரியத் தேவையில்லை.
உங்களுக்கு முக்கியம் புலிகளை ஒழிப்பதுதான். இதற்கு ஜேஆர் ஜயவர்த்தனா சொன்னதுபோல எந்தச்சாத்தானோடும் கூட்டுச் சேரத் தயார்.
//70 களில் மலையக மக்களை வன்னியில் வந்து குடியேறுமாறு உற்சாகப்படுத்தப்பட்டது. இதனால் இவர்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையே பாதுகாப்பு கேடயமாக இருப்பார்கள் எனக் கருதினார்கள்.//
இதைச் செய்தவர்கள் காந்தீயம் ஆட்களல்லவா? அவர்களுக்கும் புளொட்டுக்கும் நிறையச் சம்பந்தம் அல்லவா? அப்படியானால் புளொட்டும் சாதிய இயக்கமேதானா? டேவிட், ராஜசிங்கம் எல்லோரும் வேளாளசாதிக்குத்தானா போராடினார்கள்? எழுபத்தேழிலே புலிகள் எங்கே இருந்தார்கள்?
எழுபத்தேழிலே மலையகத்தமிழரை அரவணைத்துக் குடியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்கு வேளாள யாழ்ப்பாணச்சமூகம் எழுபத்தேழிலே அரவணைத்துக் குடியேற்றத் தவறிய சமூகம் என்று எழுதிக்கொண்டிருப்பீர்கள்.
சரி அந்த நேரத்திலே நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?
தூ அசுரா உங்களை விட இன்னும் சிறப்பாக எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை உனக்கு இரண்டு கண்களும் போனால் சரி என்று சொல்லியிருந்தார்
||சுசீந்திரனின் உரையில் இலங்கை அரசானது « மகாவம்ச » மனநிலையில் இருப்பதாகவும் மேலும் அவரது பேச்சானது புலிகளின் தமிழ்த் தேசியத்திற்கு வலுவூட்டும் தன்மை கொண்டதாகவம் காணப்பட்டதனாலேயே அவர் மீதான விமர்சனங்கள் காரசாரமாக இருந்ததாக அறிந்தேன். மேலும் புலிகள் இந்தியாவிலிருந்து; தமது பிரச்சாரத்திற்காக நெடுமாறன், திருமாவளவன் போன்றோரை அழைக்கும் சிரமத்தை குறைப்பதற்கு, சுசீந்திரனை அவர்கள் உபயோகிக்கும்படி எம்.ஆர். ஸ்டாலின் பரிந்துரை செய்ததாகவும் அறிந்தேன். நான் இருந்திருந்தால் பகவத்கீதை மனநிலையில் உள்ள சமூகத்தைவிட மகாவம்ச மனநிலை கொண்ட சமூகம் ஒன்றும் அபாயகரமானதல்ல எனும் பதிலை நண்பன் சுசீந்திரனுக்கு கொடுத்திருப்பேன்.||
புலிகளிலே உள்ள வெறுப்பிலே எதையும் செய்யத் தயாரானவர்கள் இன்று தலித் ஆதரவு வேடம் எடுத்திருப்பது வியப்பில்லையே
தமிழச்சியின் தலித் கூடல் விளம்பரம் இது
தலித் மகாநாடு அழைப்பிதழ்
சபாலிங்கத்தின் கொலைநாளை ஞாபகப்படுத்தும் ஒன்றுகூடல் விளம்பரம் இது
சபாலிங்கம் ஞாபகார்த்த கூடல் அழைப்பிதழ்
இரண்டின் அமைப்பிலும் ஒற்றுமையைக் கவனிப்பவர்களுக்கு இவற்றினை நடத்துகிறவர்கள் ஒரே ஆட்களே என்று சொல்லித் தெரியத் தேவையில்லை.
உங்களுக்கு முக்கியம் புலிகளை ஒழிப்பதுதான். இதற்கு ஜேஆர் ஜயவர்த்தனா சொன்னதுபோல எந்தச்சாத்தானோடும் கூட்டுச் சேரத் தயார்.
வாங்க சார் வாங்க!!! சமூக சேவை செய்யலாம்!!!!
அதுசரி! இந்த திடீர் அக்கறை இந்தப் பிரமுகர்களுக்கு எப்படி உருவாகியது?.
இலங்கை அரசை தாங்கிப்பிடித்த இவர்கள் சாதாரண மக்கள் குறித்து அக்கறைப்படுவது நெஞ்சில் ஐஸ் மழை பெய்ய வைக்கிறது!!!!!!!.
வாழ்க சமூக அக்கறை. போட்டோ எடுத்துக்கொள்ள ஒரு கூட்டம் புறப்பட்டுவிட்டது!!. ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கலாம் வாங்க.
இதெல்லாம் சும்மா செய்ய வேண்டியதில்லை. வெளினாட்டு நிதி நிறுவனங்களில் இருன்து பணம் பெற்று சுருட்டிக் கொண்டே சமூக சேவை செய்யலாம்.
வாங்க சார் வாங்க!!
புள்ளிராஜா
வாங்க சார் வாங்க!!! சமூக சேவை செய்யலாம்!!!!
அதுசரி! இந்த திடீர் அக்கறை இந்தப் பிரமுகர்களுக்கு எப்படி உருவாகியது?.
இலங்கை அரசை தாங்கிப்பிடித்த இவர்கள் சாதாரண மக்கள் குறித்து அக்கறைப்படுவது நெஞ்சில் ஐஸ் மழை பெய்ய வைக்கிறது!!!!!!!.
வாழ்க சமூக அக்கறை. போட்டோ எடுத்துக்கொள்ள ஒரு கூட்டம் புறப்பட்டுவிட்டது!!. ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கலாம் வாங்க.
இதெல்லாம் சும்மா செய்ய வேண்டியதில்லை. வெளினாட்டு நிதி நிறுவனங்களில் இருன்து பணம் பெற்று சுருட்டிக் கொண்டே சமூக சேவை செய்யலாம்.
வாங்க சார் வாங்க!!
புள்ளிராஜா
//தோழர் ஒரு சின்னக் கேள்வி.
பத்தாம் திகதி பதிவுசெய்யப்பட்ட தேச இணையத்தளத்தின் உள்ளடக்கம் பத்தொன்பதாம் திகதியே உங்களால் மீள்பிரசுரமாவதன் பின்னால் உள்ள அரசியல் என்ன?//
எடக் கோதாரி!,
தலித்துக்களுக்காகக் குரல் கொடுத்துத்"திழீழத்தில்"சாதியத்துக்கு எதிரான சூழல்களைச் சமைப்பதற்குமுன்-அந்த "அரசியல்"குறித்துக் கேள்விகளோடு வருகிறீங்க!ஆனால்,பாருங்க இன்றைக்குச் சுமார் கால்நூற்றாண்டாகப் போராட்டப் புறப்பட்ட இயக்கங்கள் தத்தம்பாட்டுக்கு அடிபட்டுச் செத்தான்கள்-இன்னும் சாகிறாங்கள்.உதாரணத்துக்குப் புலிகள் சிங்கள அரசோடு கூட்டுச் சேருகிறாங்கள்,பின்பு அதையே குழப்பிச் சண்டை போடுகிறாங்கள்.ஒப்பந்தம் போடுகிறாங்கள்-சிங்கள இராணுவம் மக்களை நல்லபடியாக நடாத்தக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்கிறதென்ற அறிகைபடித்தாங்கள்.ஆட்டைக் கொன்றான்கள்,மாட்டைக் கொன்றாங்கள்,ஐயரைக் கொன்றாங்கள்!...ம்கூம் ஒரு கேள்வி!-கிடையாது.துரோகி என்றார்கள்.துணையாகப் போராடுகிறவர்களைப் போட்டுத் தள்ளினார்கள்.கேள்வி எழவேயில்லை."இத்தகைய கொலைகளுக்கெல்லாம்"என்னையா அரசியல் பிரபாகரனே?"-கேட்டோமா?,இல்லை!
வந்துவிடுவோம்,அப்பாவிகள் மேற்காணும் கேள்வியைக் கேட்டால்"இதற்கும்-அதற்கும் என்ன அரசியல்"என்றுபடி.
அதோ,அங்க பாருங்க.புலிகளிடம் போய்க் கேளுங்கள் இதுகுறித்து.அவங்களுக்குத்தான் எங்களைப் பற்றி நன்றாகத் தெரியுமே!
இதைவிட்டுப்போட்டு,நாங்க சொன்னா நம்பவா போறிங்க சாமி?
அய்யோ!! அய்யய்யோ!!! யாய்ருயா நீங்க!!!!!!!!! நீங்க நல்லவரா? கெட்டவரா? இயக்கத்திற்கு எதிரானவரா? நான் வாயை திறந்தாலும் திறந்தேன். புதுசு புதுசா கேள்விக் கேட்டுக்குன்னு வர்றீங்களே அய்யா!!! நீங்க யாருங்கையா?!!! எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சின்ன அறிவிப்பு செய்துவிட முடியுமா?
சரி உங்கள் தீர்வு என்ன... புலிகளை போரடவேண்டாம் என்று சொல்லி விட்டு...
அயல் நாட்டில் அடிவருடி பிழைக்கும் நீங்கள் வந்து காந்தியவழியில் உண்ணாவிரதம் இருந்து தமிழர்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்து... அனைத்து வகை தமிழர்களையும் அரவணைத்து அரசு நடத்த தயாரா?? வாய்கிழிய பேசுவது கூட அயல் நாட்டிலிருந்து அதுவும் இணையத்தில் மட்டுமே... எங்கே தெருக்கூட்டம் போடுங்கள்... அல்லது உலக சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துங்கள்... பார்க்களாம்..தங்களாளும் முடியாது.. அடுத்தவன் உயிர் உடமை வாழ்வு வழம் அனைத்தையும் அர்ப்பணித்து...உழைப்பான் நாங்கள் குளிரூட்டப்பட்ட அறையில் கொஞ்சிக்கொண்டு இருந்து விட்டு...பதிவு ஒன்ரு போட்டு...ஊரை ஏமாற்றுவோம்...
இருதியாக தமிழ் மொழி ஒன்று "கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே"
//அய்யோ!! அய்யய்யோ!!! யாய்ருயா நீங்க!!!!!!!!! நீங்க நல்லவரா? கெட்டவரா? இயக்கத்திற்கு எதிரானவரா? நான் வாயை திறந்தாலும் திறந்தேன். புதுசு புதுசா கேள்விக் கேட்டுக்குன்னு வர்றீங்களே அய்யா!!! நீங்க யாருங்கையா?!!! எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சின்ன அறிவிப்பு செய்துவிட முடியுமா?/
வாங்க என் தமிழ்க் குலத்துத் தங்கையே!உங்களிடம் காட்டிய குரங்குச் சேட்டையளை,இந்தப் புலிவால்கள் ஏங்கிட்டக் காட்டிட முடியாதுங்க.ஏன்னா,எனக்குள்ளும் ஒரு புலி இருக்கில்லையா?-நீங்களும் முதலில ஒரு புலியாகுங்க-மனிதராக இருந்தாக் குதறியல்லவா போட்டிடுவான்கள்?
வாங்க என் தமிழ்க் குலத்துத் தங்கையே!!!
இனமானத் தாரகை தமிழச்சி!!!
தமிழச்சி ரசிகன்!!!
தமிழச்சி ப்ரியன்!!!
இன்னும் என்னென்ன பெயரில் வரப்போகிறேனோ? எனக்கு ஆப்பு வைக்காமல் இருந்தால் சரி.
ஆமாம் ஏதோ "புலி வால்"
என்றீர்களே! நீங்க புலிங்களா?
//இதைச் செய்தவர்கள் காந்தீயம் ஆட்களல்லவா? அவர்களுக்கும் புளொட்டுக்கும் நிறையச் சம்பந்தம் அல்லவா? அப்படியானால் புளொட்டும் சாதிய இயக்கமேதானா? டேவிட், ராஜசிங்கம் எல்லோரும் வேளாளசாதிக்குத்தானா போராடினார்கள்? எழுபத்தேழிலே புலிகள் எங்கே இருந்தார்கள்?
எழுபத்தேழிலே மலையகத்தமிழரை அரவணைத்துக் குடியேற்றி இருக்காவிட்டால் இன்றைக்கு வேளாள யாழ்ப்பாணச்சமூகம் எழுபத்தேழிலே அரவணைத்துக் குடியேற்றத் தவறிய சமூகம் என்று எழுதிக்கொண்டிருப்பீர்கள்.
சரி அந்த நேரத்திலே நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? //
வாங்க,வாங்க!
மலையகத் தமிழரை "அரவணைத்து"க் குடியேற்றியவர்கள் யாழ்ப்பாண-வன்னிப் பெருங்குடிகள்?காந்தியமென்ன,கழகமென்ன எல்லாவற்றுக்குள்ளும் ஓடியவொரு நதி"யாழ் மேலாதிக்க வேளாள அதிக்கம்"என்பதில நமக்கு இருவேறு கருத்தில்லைங்க!அது சரி,இயக்க வாத மாயைக்குள்ளிருந்து வெளியில வாங்க.அப்புறமா நாங்க எந்த இயக்கமென்று துழாவிப் பார்க்கமால்"என்ன சொல்கிறம்"என்று பாருங்கள்.அப்புறமாச் சாயம் ப+சுகிறதா இல்லையாவென்று உங்களுக்கே புரியுமில்லையா?
வன்னியிலும்,யாழ்ப்பாணத்திலும் நிலச் சுவாந்திரர்களிடம் மாட்டுப்பட்ட மலையகத் தமிழர்கள்,தங்கள் சுதந்திரத்தை மட்டுமல்ல,மானத்தையும் இழந்தார்கள்.மலையகத் தமிழச்சிகளின் மடியினில் கைவைத்த யாழ்ப்பாண வேளாளனை லைட் போஸ்ட்டில் கட்டி,நெத்தியிலும் பொட்டுப் போட்டவர்கள் நாம்.ஆனால்,இதுவெல்லாம் தீர்வில்லை என்பதை இன்று உணர்கிறோம்.ஆக,மலைய மக்களுக்கு"அரவணைத்தோம்,அடுத்து வாழ வைத்தோம்"என்ற கதையோடு வரதீர்கள்!அவரவருக்கு தாம் உழைத்து உண்ட மண்ணே சொந்தம்.மலையகம்,மலையகத் தமிழருக்கே சொந்தம்.வன்னிக்குள் குடிபுகுதல் தீர்வல்ல.
||சுசீந்திரனின் உரையில் இலங்கை அரசானது « மகாவம்ச » மனநிலையில் இருப்பதாகவும் மேலும் அவரது பேச்சானது புலிகளின் தமிழ்த் தேசியத்திற்கு வலுவூட்டும் தன்மை கொண்டதாகவம் காணப்பட்டதனாலேயே அவர் மீதான விமர்சனங்கள் காரசாரமாக இருந்ததாக அறிந்தேன். மேலும் புலிகள் இந்தியாவிலிருந்து; தமது பிரச்சாரத்திற்காக நெடுமாறன்இ திருமாவளவன் போன்றோரை அழைக்கும் சிரமத்தை குறைப்பதற்குஇ சுசீந்திரனை அவர்கள் உபயோகிக்கும்படி எம்.ஆர். ஸ்டாலின் பரிந்துரை செய்ததாகவும் அறிந்தேன்//
சுசீந்திரன்? சும்மா சொறியாதீர்கள்.சுசீந்திரனுக்கென்ற தனித்தே அரசியல் ஒன்றுண்டு.அது ஊரோடு ஒத்தோடி ஓசியில் ஊர்வலம் போவது.பின்பு,உலக இலக்கியத்துள் புலிகளைத் தேடுவது.இதுக்கெல்லாம் ஒரு அரசியல்?-தெருவில் நின்று பிச்சையெடுத்துப் பிழைக்கலாம்!
//தமிழச்சியின் தலித் கூடல் விளம்பரம் இது
தலித் மகாநாடு அழைப்பிதழ்
சபாலிங்கத்தின் கொலைநாளை ஞாபகப்படுத்தும் ஒன்றுகூடல் விளம்பரம் இது
சபாலிங்கம் ஞாபகார்த்த கூடல் அழைப்பிதழ்
இரண்டின் அமைப்பிலும் ஒற்றுமையைக் கவனிப்பவர்களுக்கு இவற்றினை நடத்துகிறவர்கள் ஒரே ஆட்களே என்று சொல்லித் தெரியத் தேவையில்லை.//
சாதியத்துக்கு எதிராகவோ அன்றித் திக்குத் தெரியாமல் விழும் கொலைகளுக்கெதிராகவோ குரல் கொடுப்பதற்குச் சிறியளவு மனிதர்களே இருக்கிறோம்.பெருந்தொகையானவர்கள்"பிச்சை வேண்டாம் நாயைப் பிடி"என்று ஆயுதங்களுக்குமுன் மண்டியிடும்போது,இத்தகைய மனித விரோதிகளுக்கெதிராகத் தொடர்ந்து ஒரு வட்டமே குரல் கொடுக்கும்.அதைப் போட்டுக் குழப்பிக்கொண்டு,இன்ரநசனல் லெவலுக்குக் கொண்டுபோய் முடிச்சுப்போட்டு,நீங்களும் குழம்பி,எங்களையும் குழப்பி... ஏன் உது உங்களுக்குத் தேவையா?
||ப+சுகிறதா||
பூ=ப+
எங்கேயோ பார்த்த ஞாபகம்.
தீவு வேளாளர் என்று தன்னைப் பிரகனப்படுத்தியவர் இல்லையே நீங்க?
||ப+சுகிறதா||
பூ=ப+
எங்கேயோ பார்த்த ஞாபகம்.
தீவு வேளாளர் என்று தன்னைப் பிரகனப்படுத்தியவர் இல்லையே நீங்க?//
உங்க துப்பறியும் அறிவிருக்கே அது பொட்டு அம்மானையும் உங்கள் காலடியில் வீழ்த்திவிடும்.அவ்வளவு அறிவு உங்களுக்கு-போங்க கூசுது!வோர்ட் பேட்டில் எழுதிச் சுரதாவின் பொங்கு தமிழுக்குள் திணித்தெடுக்கிறபோது உந்த "ப+"பேத்தலாகிறது.சுரதாவிடம் போய் சரி செய்யச் சொல்லுங்கோ.எங்களுக்கு உந்த "ஏ கலப்பை-அஞ்சல்!எல்லாம் சரிவருவது கிடையாது.ஆமா,என்ன அண்ணாச்சி உந்த அரிப்பெல்லாம் உங்களுக்கு அரிக்கிறது?ரயாவின்ர பதிவில கூட இப்படி வரும்.அதுக்காக நானும் அவரும்...?
Are vellalars this bad? I think if someone sees a snake and a vellalan he/she should beat the vellalan first and leave the snake alone.
Kommentar veröffentlichen