Freitag, 19. Oktober 2007

தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு துணிவான தலைமை கொடுக்க முடிந்தது.

சாதியப் போராட்டம் சில நினைவுகள்



(தோழர். சண்முகதாசன் அவர்கள்
எழுதிய 'ஒரு கம்யுனிசப் போராளியின்
அரசியல்
நினைவுகள்' என்னும் நூலில்
சாதீயப் போராட்டம் பற்றி அவர்
குறிப்பிட்ட
கருத்துக்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.)


சாதி அமைப்பு என்பது இலங்கை
முழுவதிலும் சிங்களவர், தமிழர் இருசாரார்
மத்தியிலும் இருந்து வருகின்றது. ஆனால்
வடக்கில் உள்ள தமிழர்களைப் பொறுத்த
வரையில் இதனுடன் தீண்டாமை என்ற
நாசமும் சேர்ந்து இருக்கின்றது. அங்கு
சில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக
கருதப்படுகின்றன. ஆவர்கள் மனிதர்களாகவே
கருதப்படவில்லை. சமுதாயத்தின் கீழ்தட்டில்
அவர்கள் கிடந்து நசிகின்றார்கள். ஆவர்கள்
உயர் சாதியினரின் வீடுகளுக்குள் செல்ல
முடியாது. அவர்களுடன் ஒன்றாக கலந்து
பழக முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுடன்
கலந்து திருமணம் செய்து கொள்வது
என்ற பேச்சுக்கே இடமில்லை. தாழ்த்தப்பட்ட
மக்கள் பொதுக் கிணறுகளில் இருந்து
தண்ணீர் அள்ள முடியாது. ஒரே கிண்ணத்தில்
தேநீர் பருக முடியாது. மிகவும் மோசமானது
என்னவென்றால் கடவுளைக் கும்பிடக்கூட
கோயிலுக்குள் அவர்கள் செல்ல முடியாது.
தீண்டாமை என்பது மனிதன் மனிதனுக்குச்
செய்யும் மிக மோசமான கொடுமை என்று
உண்மையில் கூறமுடியும்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள்
இச்சாதீய அடக்குமுறைக் கொடுமைகளுக்கு
எதிராக திரண்டெழுந்து பல கிளர்ச்சிகளை
மேற்கொண்டார்கள். ஆனால் இவை
கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டன.
சாதி அடக்குமுறைகள் சிலவற்றின்
காட்டுமிராண்டித்தனத்தை உண்மையில் நம்ப
முடியாது. கிளர்ச்சி செய்யத் துணிந்த
தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள் உடனே
தீக்கிரையாக்கப்பட்டன. அவர்களுடைய
கிணறுகளில் நஞ்சு ஊற்றப்பட்டது.
காணிகளில் இருந்து அவர்கள் துரத்திக்
கலைக்கப்பட்டனர். (தீண்டத்தகாதவர்களுக்கு
பெரும்பாலும் சொந்தமாக காணி இருக்க
வில்லை). மார்புக்கு மேல் மறைக்கத்
துணிந்த தாழ்த்தப்பட்ட பெண்களின்
சட்டைகள் கத்தியால் கிழித்தெறியப்பட்டன.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண்கள்
தோளில் சால்வை போட அனுமதிக்கப்பட
வில்லை. சால்வை போட்டால் உயர்
சாதியினihக் கண்டதும் அவர்கள் அதனை
அகற்ற வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகளின் திரிபுவாதம்
சீர்திருத்தவாதம் ஆகியவற்றால்தான் இந்த
மிருகத்தனமான சமூக ஒழுங்கிற்கு எதிரான
போராட்டம் சரியாக நடத்தப்படவில்லை.
உயர் சாதியினர் மக்கள் தொகையில்
பெரும்பான்மையாக இருக்கின்றபடியால்
எந்தப் பாராளுமன்றக் கட்சியும் அவர்களைப்
பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்த
நிலைமை எமது மார்க்சிய - லெனிய
கம்யுனிஸ்ட் கட்சியின் தோற்றத்துடன்
மாறியது. எமது கட்சி பாராளுமன்றத்தின்
மூலம் சோசலிசத்தை அடையலாம் என்ற
கருத்தை நிராகரித்தது. பாராளுமன்ற
திரிபுவாதம் என்ற சகதியில் அதன் தலை
புதைந்து இருக்கும் வரை ஒரு கட்சி எந்த
வெகுஜனப் போராட்டத்திற்கும் வெற்றிகரமாக
தலைமை தாங்க முடியாது என்பதை
எவரும் இலேசாகப் புரிந்து கொள்வார்கள்.

Mao and N. Shanmugathasan

பாராளுமன்ற சந்தர்பவாதம் என்ற திரிபுவாத
தளையில் இருந்து விடுபட்ட நாம்
தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு
துணிவான தலைமை கொடுக்க முடிந்தது.
1966ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம் திகதி
சாதி அடக்கு முறைக்கும் தீண்டாமைக்கும்
எதிரான வெகுஜன இயக்கம் கம்யுனிஸ்ட்
கட்சியின் தலைமையில், சுன்னாகத்தில்
இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளிக்கு
வெகுஜன ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை
ஒழுங்குபடுத்தியது. முற்றவெளியில்
இந்த இயக்கத்தின் நோக்கங்களுக்கு
ஆதரவாக ஒரு பொதுக்கூட்டம் நடைபெற
இருந்தது.

பொலிசார் ஊர்வலத்தை
தடுத்து நிறுத்தினார்கள். பொலிசார்
எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்களின்
எந்த இயக்கத்தையும் நசுக்கினார்கள்
என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். இதற்குக்
காரணம் பொலிசாரும் உயர் சாதியினர்
என்பதே. ஆனால் ஊர்வலக்காரர்கள்
கலைய மறுத்தார்கள். இறுதியில் ஒரு
வரிசையில் யாழ்ப்பாணம் செல்ல பொலிசார்
அவர்களை அனுமதிக்க வேண்டியதாயிற்று.
முற்ற வெளியில் மிகுதியும் வெற்றிகரமான
கூட்டம் ஒன்றை நாம் நடத்தினோம். இக்
கூட்டத்தில்தான் புகழ் பெற்ற அமெரிக்க
நீக்ரோ பாடகர் போல் போப்சனுக்கு
அவருடைய சகோதரர் கூறிய புத்திமதியை
நான் மேற்கோள் காட்டினேன். "ஒருபோதும்
அடிபணிந்து போகாதே. ஏதிர்த்து நின்று
அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக
அடி. அவர்கள் படிப்பினையைப் பெற்றதும்
விடயங்கள் வித்தியாசமாக இருக்கும்."


சாதி அடக்குமுறைக்கும் தீண்டாமைக்கும்
எதிரான இயக்கம் சில வெற்றிகளைப்
பெற்றது. பல ஆலயங்கள் திறக்கப்பட்டன.
பல இடங்களில் தேநீர் கடைகளில்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி
கிடைத்தது. மாவிட்டபுரம் கோயிலுக்குள்
பிரவேசிப்பதற்கான போராட்டம் இவற்றில்
முக்கியமானது. யுhழ்ப்பாணத்தில் உள்ள
இந்த பிரசித்தி பெற்ற கோயிலுக்குள்
தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதைத்
தடுக்க உயர்சாதியினர் அழுங்குப் பிடியாக
நின்றார்கள். ஆவர்கள் இந்த ஆலயத்தின்
உள் மண்டபத்தைச் சுற்றிப் பாதுகாப்புக்
கம்பிகள் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களை
தடுத்து நிறுத்தும் அளவிற்குச் சென்றார்கள்.
கொஞ்சக் காலம் அவர்கள் ஆலயத்தை மூடி
வைத்திருந்தார்கள். ஆனால் உயர் வருமானம்
பெறும் இந்த ஆலயத்தை அவர்கள் நீண்ட
காலம் பூட்டி வைக்க முடியவில்லை.
இறுதியில் மக்கள் நெருக்கத்தினாலும்
நேரடிப் பேராட்டத்தினாலும் இந்த ஆலயத்தின்
கதவுகள் திறக்கப்பட்டன.


தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த
போராட்டத்திற்கு ஆதரவாகப் பல வடிவக்
கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன
என்பதைக் குறிப்பிட வேண்டும். அற்புதமான
பாடல்கள் பல தோன்றின. நூற்றுக்கு
மேலான தடவை அரங்கேற்றப்பட்ட கந்தன்
கருணை என்ற சிறப்பான நாடகம் ஒன்றை
எமது தோழர்கள் தயாரித்தளித்தார்கள்.
உயர்சாதியினர் இந்த நாடகத்தை
எதிர்த்தார்கள். இந்த நாடகம் பெரும்
வெற்றியாகியது. கொழும்பில் கூட அது
பல தடவை அரங்கேற்றப்பட்டது. புரட்சிகர
கலை எப்படி பரட்சிகர இயக்கத்தை
முன்தள்ளிவிட முடியும் என்பதற்கு அது
நல்லதோர் உதாரணம் ஆகும்.

புரட்சிகரநடைமுறையின்றி புரட்சிகர கலை பிறக்காது
என்பதையும் அது தெளிவாக்கியது.
நடைமுறைதான் பிரதானமானது. ஆனால்
புரட்சிகர நடைமுறையில் இருந்து தோன்றும்
புரட்சிகர கலை புரட்சிகர இயக்கத்தை
மேலும் முன்தள்ளிவிட உதவுகின்றது.
சூன்யத்தில் நாம் புரட்சிகர கலையை
உருவாக்க முடியாது. புரட்சிகர இயக்கத்தின்
அங்கமாக அது உருவாகின்றது.
சாதி அமைபபு; முறைககும தீண்டாமைக்கும்
எதிரான எமது கட்சியின் இயக்கம் அதன்
மாபெரும் சாதனைகளில் ஒன்றாகும்.
ஆதனைஒட்டி நாம் என்றும் பெருமைப்படுவோம்.


அது வடக்கு இலங்கையில் உள்ளுர்
நிலைமைகளுககு; ஏறப் மாhக் ச் pய-லெனியதi; த
பிரயோகம் செய்ததாகும். இதனால்
ஆயிரக்கணக்கானோர் புரட்சிப் பாதைக்கு
வந்தார்கள். சகல பகுதி மக்கள் மத்தியிலும்
(வடக்கிலும் தெற்கிலும்) இதனால் கட்சியின்
செல்வாக்கு பரவியது. யாழ்ப்பாணத்தில்
தாழ்த்தப்பட்ட சாதியில் கணிசமான
தொகையினர் தொழிலாளர் வர்க்கத்தைச்
சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற் கொள்ள
வேண்டிய விடயமாகும். உழவர்களும்
உழைப்பாளிகளும் அவர்கள்தான்.


அவர்கள் உடல்ரீதியிலும் பலமானவர்கள்.
இதனால்தான் யாழ்ப்பாணத்தில் எமது
கட்சி ஒழுங்குபடுத்திய எமது கூட்டத்தை
எவராலும் குழப்ப முடியவில்லை. இந்த
நம்பிக்கையில்தான் நான் பின்னர்
1975இல் சுன்னாகம் சந்தைக்கு முன்னால்
பொது மேடையில் மானிப்பாய் தொகுதி
தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
தருமலிங்கத்துடன் பகிரங்க விவாதம்
நடத்தினேன். தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள்
தொகையில் கூடுதலானவர்கள். ஆனால்
எம்மை யாரும் தொட்டுவிடமுடியாது.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பலர்
எம்முடன் இருந்ததுதான் எமக்குக் கிடைத்த
பாதுகாப்பாகும்.



நன்றி தலித் சிறப்பிதழ்

5 Kommentare:

Anonym hat gesagt…

நன்றி தோழர்

தமிழ்பேசும் மக்களின் ஐக்கியமே உடனடித் தேவையாகும்.

லெனினின் 1912 ஆண்டுக்கட்டுரையையும் எடுத்துப் போடுவீர்களா? விடுதலைப்புலிகள் சாதியை வளர்ப்பதை நன்றாகத் தெளிவுபடுத்தி எழுதப்பட்ட கட்டுரை. தமிழச்சி மேற்கோள் காட்ட உதவும்.

நிர்மாணத்தின் உடனடித்தேவை
தமிழ்பேசும் மக்களின் ஐக்கியம்

நன்றி

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

//நன்றி தோழர்

தமிழ்பேசும் மக்களின் ஐக்கியமே உடனடித் தேவையாகும்.

லெனினின் 1912 ஆண்டுக்கட்டுரையையும் எடுத்துப் போடுவீர்களா? விடுதலைப் புலிகள் சாதியை வளர்ப்பதை நன்றாகத் தெளிவுபடுத்தி எழுதப்பட்ட கட்டுரை. தமிழச்சி மேற்கோள் காட்ட உதவும்.

நிர்மாணத்தின் உடனடித்தேவை
தமிழ்பேசும் மக்களின் ஐக்கியம்//


ஏன் தோழர் உப்பிடிப் புலம்புகிறீர்கள்? நீங்களே புலிகளைப் போட்டுக் குடுக்கிறீங்களே!அவங்கள் தங்கட பாட்டுக்குத் தமிழீழத்துக்க அனைத்தையும் தீர்க்கிறதெண்டுறாங்கள்.அவங்களை ஏன் உப்பிடிக் கழுத்தறுக்கிறீங்க?நாங்க பேசுறதெல்லாம் அன்றைய நிலமை இன்றும் தொடர்கிறதென்பதைத்தான்.யாழ்ப்பாணம் போங்க,அங்கே நிலைமை புரியும்.வன்னிக்குள்ளாலை தலையைப்போட்டு,அமெரிக்காவுக்குள்ளால உடலை நுழைத்து,ருஷ்சியாவுக்குள்ளால கண்ணைப்போட்டு,சீ இதெல்லாம் என்னே ஒரு பிழைப்பு?கொஞ்சமாவது தாழத்;தப்பட்டவர்களின் சுய கௌரவத்துக்காவது அடங்குங்கோவன்ரா பிள்ளைகள்?தேசியக் குடைக்குள்ள மட்டும் வரச் சொல்லுறியள்.ஆனால் வீட்டுக்க எட்ட நில்லுவோய் என்றபடி.

தமிழச்சியை உதுக்க வேற கொண்டு வந்து வம்பு பேசுகிறீரே,உமக்கு உலகம் இன்னும் யாழ்ப்பாணத்துக்க விரிகிறதாக எண்ணமோ?-அவவின்ர பதிவில நம்ம பதிவுப் பெயரில பின்னூட்டிய மேதாவி நீரோ?:)

Anonym hat gesagt…

இதே சண் தனது கடைசி காலத்தில் நடைமுறை தேவையை உணர்ந்து தமிழ் தேசியப் போராட்டத்தை ஆதரிதது இருந்தார்

நிர்மாணம் Sri Rangan hat gesagt…

//இதே சண் தனது கடைசி காலத்தில் நடைமுறை தேவையை உணர்ந்து தமிழ் தேசியப் போராட்டத்தை ஆதரிதது இருந்தார//


உதென்ன கதை?நாங்க மட்டும் "தமிழ்த் தேசியப் போராட்டத்தை" எதிர்த்தா நிற்கிறம்?உப்பிடிப் புலம்பித்திரிஞ்சா நாங்க பொறுப்பில்லை.நாங்க பேசுவதெல்லாம் இன்றும் தமிழர்களுக்குள் ஆதிக்கம் செய்யிற வேளான்கள் சாதிய ஒடுக்குமுறையோடுதான் தமிழ்ச் சமுதாயத்தைப் பார்க்கிறாங்கள்.உவங்கள் எவ்வளவோ அழிவையுங்கண்டும்"திருந்தாத ஜென்மங்கள்"எனவே,உந்தக் கோதாரி புடிச்சவங்களின் மனித விரோதப் போக்கை அம்பலப்படுத்தி,ஒரு பண்பாட்டு மாற்றத்தைக் கோரி,தாழ்தப்பட்ட நம்மையும் உங்களப் போல வாழ அனுமதியுங்கோவன் எண்டுறம்.உதுக்கும்"தமிழ்த் தேசியத்துக்கும்"என்ன கேடு?

Anonym hat gesagt…

//அவவின்ர பதிவில நம்ம பதிவுப் பெயரில பின்னூட்டிய மேதாவி நீரோ?:)//

உம்மைக் கேள்வி கேட்டல் உவ்வளவுதான் உமக்கு அந்தபக்கம் கட்ட ஏலுமே?

நானில்லை. உம்மட பெயரோ ஊராக்கட பெயரோ போட வேண்டிய அவசியமில்லை. அதுக்கு மேல அவவின்ரை பதிவில போய் கையெழுது வக்கிரதுக்கு உம்மோட ஒருக்கா சண்டை பிடிக்கிரது பெர்ரர் எண்டு நம்புரன். :)

கவலப்படாதயும் உம்மட பெயரில நான் பதியமாட்டன்.

Blog-Archiv